Forum

அழகி 5  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
19/03/2020 2:10 pm  

கல்லூரி சேர்வதற்கான படிவம் அனைத்திலும்  ஹேச்.சோ.டி மற்றும் முதல்வரிடம் கையெழுத்து வாங்கினாள்.ரங்கநாதன் இலவச படிப்பிற்கான படிவத்தையும் நிரப்பிகொடுத்திடலாம் என்று அவளை   அனுப்பிடாது வைத்திருந்தார் கல்லூரியில்.பின் முதல்வர் சௌபாக்கியம் முன் அவள் அந்த படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தாள்.அப்போது அங்கே கே.கே கடுகடுவென வந்தவன் அவளுக்கெதிரே அமர்ந்தான்.அவளின் அழகு மச்சமும் காதணியும் அவனை ஈர்க்க தன்னை மறந்து ரசிக்கலானான்.

 

" உன் அப்பாவோட இறப்பு சான்றிதழ் இருந்தா,கொடுமா. " என்றார் பாக்கியம்.தனது சான்றிதழ் வைத்திருக்கும் பைலில் இருந்து அதனை எடுத்தவளுக்கு ஒரு நிமடம் மனம் கனத்தது.இதுவரை சிரிந்துகொண்டிருந்த  அந்த விழிகள் ஒரு நிமிடம் சோகம் கொண்டிருப்பதையும் பார்த்தான் கே.கே...

 

" உன் அப்பா,எப்படி இறந்தார் மா ?" என்றவர் மீண்டும் அப்பாவை பத்தி பேச...ஒரு நிமிடம் அவள் முகத்தில் வியர்வை பூத்து முகம் கறுத்தது...தயங்கி தயங்கி வார்த்தைகள் அவளிடமிருந்து வர அதனை கண்டவனுக்கு ஏதோ போல் இருந்தது.அதனை மாற்றுவிதமாக வேறு பேச்சை பேசினான்.

 

" மேம், எப்ப  முடியும் இந்த பார்மாலிட்டிஸ்.சீக்கிரமா முடிங்க ஐ வாண்ட் டூ கோ.சீக்கிரம் பாருங்க மேம். " என்றான்.

 

" ஒ.கே சார் " என்றவர் அடுத்த கட்டத்தை நிரப்ப சொல்ல பெருமூச்சை விட்டவளின் முகத்தில் நிம்மதி பரவியது.

 

" இந்த சான்றிதழோட நகல் வேணும் நம்ம அலுவலகத்தில இருந்து எடுத்துட்டு வாங்களேன். " சௌபாக்கியம் ரங்கநாதனிடம் சான்றிதழை கொடுத்து அனுப்பினார்.அவர் செல்ல சற்று அமைதி நிலவியது " தம்பி,ஒரு போன்கால் பேசிட்டு வந்திடுறேன்  " என்று அவரும் நகர்ந்தார். 

 

இருவரும் மட்டும் தனித்திருந்தனர்...அவள் முன்னே தண்ணீர் கிளாஸை நகர்ந்தினான்...அது அவளுக்கு தேவையாக இருக்க மடக்கு மடக்கென்று குடித்தாள்.

 

" மிஸ். திவ்ய பாரதி,நீங்க தப்பு ஒன்னும் பண்ணலையே !  ஏன் உங்கள் முகத்தில் வியர்வை பூத்திருக்கு. " என்றவனை பார்த்தவள்.

 

" இலவச படிப்புகான படிவத்தை நிரப்புறேன்.இதுனால நாம போட்ட ஒப்பந்தம் வெளிய தெரிய வந்திடாதே ! " என்றவள் பயந்து கேட்டாள்.

 

" நீயோ, நானோ வெளியில் சொன்னால் தவிர இது தெரியவரும்.மத்த படி இது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை  " என்றான்.

 

" ம் " என்றவள். தனது பைலில் இருந்து இரு தாள்களை எடுத்தாள்.அதில்  இருவர் இட்ட ஒப்பந்தத்தை கைப்பட ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்திவைத்தவள்.அதனை,அவனிடம் கொடுத்தாள்.

 

" அதனை வாங்கி பார்த்தவனுக்கு கடுப்பானது. என்ன ? இதெல்லாம் ." என்றான் அதனைகாட்டி.

" தெரியல, நம்ம ஒப்பந்தம்  இது.நீங்க பாட்டுக்கு நாளா பின் இவ கூட நான் ஓப்பந்தம் பண்ணலை காசையும் வாங்கிட்டு,நான் வாங்கல இவ இலவசமாக தான் படிக்கிறாள்ன்னு சொல்லிடீங்கன்னா அதான் முன்னேச்சரிக்காக இந்த ஒப்பந்தம் படிச்சு பார்த்து கையெழுத்து போடுங்க " என்றாள் பாரதி.

 

அவளை திட்டியவாறே இருதாளிலும் கையெழுத்திட்டு கொடுத்தான்.இரண்டில் ஒன்னை,அவனிடமும் இன்னொன்றை தானும் வைத்துக்கொண்டாள்.அங்கே அமைதி நிலவியது.

 

இருவரும் வர தாமதமானது.அவளது விரல்கள் மேஜையில் தாளமிட்டுகொண்டிருந்தது.

விழிகளிரண்டும் அறையை அளவெடுக்க அவளறியாது அவளை ரசித்தான்.

 

அவளை பார்த்தாவறே," உன் அப்பா எப்படி இறந்தார் ? "  என்று கேட்டான்.

 

அவனை காணாது தரையை பார்த்தவாறே  " ஆக்சிடென்ட்  " என்றாள்." எப்போ நடந்தது ? "  

" ஏப்ரல் 26  நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது இறந்தார். " என்றாள்.மீண்டும் அமைதி நிலவியது.

 

" சரி,உன் வீட்டுக்கு ரங்கநாதன் சித்தப்பாக்கும் இந்த ஒப்பந்தம் தெரியகூடாதென்று சொன்னாய்.அப்பறம் எப்படி எனக்கு மாதம் மாதம் பணத்தை கட்டுவாய் ? "என்று கேட்டான் கே.கே.

 

" வேலைக்கு  போவேன்  " என்றாள்.

 

" என்ன வேலை ?  எங்கே ? " 

 

"அது உங்களுக்கு தேவை இல்லாத வேலை.நான் எங்க வேணா வேலைக்கு போவேன்.உங்க கிட்ட இதெல்லாம் சொல்லனும் அவசியமில்லை மிஸ்டர். கே.கே " என்றாள்.

 

அவளை முறைத்தவன்.வாய்குள்ளே முணங்கினான் இல்லை திட்டினான்." திமிரு,திமிரு உடம்பு முழுக்கத்திமிரு இங்க தானே வந்தாகனும் உன்னை அடக்கி காட்டுறேன் டி. " என்று கூறிக்கொண்டான் தனக்குள்ளே.

 

பின் ரங்கநாதனும் சௌபாக்கியமும் வர பார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்தனர்.கே.கே கண்கள் அவளை விட்டு அகலாது இருந்தது. சௌபாக்கியத்திடமும் அவனிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்,ரங்கநானோடு பாரதி.சௌபாக்கியமும் சொல்லிகொண்டு அவனிடமிருந்து விடைபெற்றுகொண்டார்.

 

தனித்திருந்தவனுக்கு அவள் சென்றது பின் வெறுமையாக உணர்ந்தான்.' என்ன கே.கே ஓருகண்ணில் கோபமும் மறுகண்ணில் ரசனையும் தென்படுகிறதே  ' என்று கேட்டது அவனது மனசாட்சி. அந்த மச்சம்,என்று மீண்டும் அதனை யோசித்தவன்.சிறுது நேரத்தில் தலையை ஆட்டிகொண்டவன். " ஆமா,நான் ஏன் அவள ரசிக்கன்னும் அவ என்னோட எதிரியாச்சே அவள போய் ரசிக்கிறேன் இது தப்பாச்சே " என்று தனக்குதானே பேசியவன்.மீண்டும் மச்சத்தில் அவன் நினைவு சென்று மீண்டது...புன்முறுவல் செய்தவன் தன் மனநிலை என்னவென்று அறியாது எழுந்து சென்றான்.

 

தானும் மறைந்து தன்னில் மறைத்து நின்ற நிலாமகள் வர இருள் சூழ்ந்த வானில் தன்னொளி பரப்பும் நேரமானது. வழமை போல தன் தாயிடம் அனைத்தையும் கூறினாள்.அவளுக்கு அறிவுரையே வழங்கப்பட்டது. பின் பாட்டு கேட்டுக்கொண்டு  பாடிக்கொண்டு மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

 

" இங்கோ தனது அனைத்து வேலைகளையும் முடித்தபின் அனைவரும் உறங்கச்செல்ல கே.கே தன் தாயிடம் வந்தான்.

 

" அம்மா,ஆர் யூ ப்ரி நவ்  " என்று  சாருவின் அலுவலக அறையின் வாசலில் நின்றுகொண்டே"  கேட்டான்,கே.கே.

 

" வாடா கண்ணா வா " என்று அழைத்தவரின் அருகே நாற்காலி இட்டு அமர்ந்தான்.

 

" அம்மா,நான் பிஸ்னஸ் பண்ணலாம் இருக்கேன் மா. "  என்றான்.

 

" ரொம்ப நல்லவிசயம் கண்ணா,உனக்குன்னு ஒரு அடையாளம் வேணும் டா.ஆல் தி பெஸ்ட் கண்ணா ! " என்றார்.

 

" டேங்கி யூ மா " என்றான்.

 

" எனக்கு நீ அந்த காலேஜ் பொறுப்பேற்றது சுத்தமா பிடிக்கலை கண்ணா,உனக்கு இந்த வேலை பிடிக்கலைன்னு தெரியும்  ஏன் வேணான்னு சொல்லலை நீ.ஏன் பிடிக்காத விசயத்தை செய்ற நீ  " 

 

" அம்மா,எனக்கு பிடிச்சு தான்மா இந்த பொறுப்பை ஏற்றேன்.இந்த காலேஜ் நம்ம பூரிவீக சொத்துமா,அப்பாக்கு அடுத்து இதை நானோ,கமலோ தான் பார்க்கனும்.அப்படியே போகட்டும் விட முடியாது மா " என்றான்.

 

" நீயும் உங்க அப்பா மாதிரியே பேசு கண்ணா ! . எனக்கு அந்த காலேஜ் சுத்தமா பிடிக்கலை அத விக்க சொல்லிட்டேன் கேட்கமாட்டிகிறார்,ஏன் என்னோட பிஸ்னஸ் இருக்கு கமலோட இன்ஜினியரிங் காலேஜ்  இருக்கு இப்ப நீயும் பிஸ்னஸ் பண்ண போற,இது போதாத நமக்கு ஏன் இன்னும் அந்த காலேஜை கட்டியே அழுகனும்.அதுனால தான் அவருக்கு

உடம்பு சரியில்லாம போனதே  " என்றார்.

 

நாதனின் இன்னிலைக்கு காரணம் சாரு தான் எனத்தெரிந்தும் அந்த கல்லூரில் மேல் பழியை போட்டார்.

 

" மா, நம்ம எல்லாரும் பிடிச்சவிசயத்தை பண்ணும் போது அவருக்கும் ஆசை இருக்குமே அவருக்கு பண்ணணும் தோணும் ஆன உடல் தான் ஒத்துழைக்க மாட்டிக்கிது 

அதனால் தான் அவர் என்னை இந்த கல்லூரியை பார்த்துக்க சொன்னாரு மா.நீங்க அப்பா கூட இருந்தா கண்டிப்பா,அப்பா பழைய மாதிரி வந்திடுவார் மா கொஞ்சம் அப்பாக்காக எங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்க மா." கெஞ்சியவாறே கேட்டான்.

 

" எனக்கு நிறைய வேலை இருக்கு கண்ணா அடுத்து அடுத்து பிராஜக்ட் வருது போதாக்குறைக்கு உங்க அம்மா ஆஸோசியேசன் ஹேட் வேற அந்த வேலையும் பார்க்கனும் சுத்தமா டைமே இல்லடா.இதுல எப்படி உங்க கிட்ட அப்பாகிட்ட உட்கார்ந்து பேச சொல்லு அதான் அவருக்கு நீங்க இருக்கீங்களே அவருக்கு ஆர்ஜூன் இருக்கான்.அவன் கூட இருந்தாளே நல்ல பொழுது போகுமே...என்னால முடியாது கண்ணா,உங்க அப்பா கிட்டையும் நான் சொல்லிட்டேன். " என்றார்.

 

" மா,நீங்களும் அப்பாவும் சேர்ந்திருக்கனும் ஹாப்பியா இருக்கனுமா அதான் எங்களுக்கு வேணும் மா .சோ பீளிஸ் உங்க பொறுப்பு எல்லாம் எங்க கிட்ட கொடுத்திட்டு நீங்க அப்பாகூட இருங்களேன். " என்றான்.

 

" சாரி,கண்ணா இது என்னோட ப்பேசன் சோ யாருக்காவும் எதற்காகவும் விட்டு தர மாட்டேன் கண்ணா." என்று உறுதியாக கூறிவிட்டு தனது பைல்களை காண கண்களை நகர்ந்தினார்.

 

இதற்கு மேல் பேச வேண்டாம் என்று நினைத்தவன் எழுந்து சென்றுவிட்டான்.எதற்கோ பேச

எங்கோ சென்றது பேச்சு.தன்னறைக்கு வந்தவன்.தன் அன்னை பற்றி யோசிக்க அப்படியே உறங்கி போனான்.

 

அடுத்த வந்த நாட்கள் விறுவிறுப்பாகவே போனது.கல்லூரி தொடங்க நாட்கள்இருப்பதால்.பாரதி முழுநேர வேலைக்கு சென்றாள்.அது பெரிய ஹோட்டல் தங்கும்வசதி உள்ள ஹோட்டல்...கீழே ரெஷ்டாரண்ட்,பார்,

வசதியும்.மேலே தங்கும் வசதிக்கொண்ட ஹோட்டல் அது...ரெஸ்டாரண்ட் தனியாட்கள்.பார்க்கென்று தனியாட்கள்.ரூம் சர்விஸ்க்கென்று தனியாட்கள் வேலை பார்த்தனர்.அவர்களிடத்தில் அதிகமாகவே கற்றுக்கொண்டாள் பாரதி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.அவர்கள் வந்த அமர்ந்ததிலிருந்து செல்லும் வரை எவ்வாறு உபசரிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தனர்.ரெஷ்டாரண்டில் பெண்களும் மற்ற இடத்தில் ஆண்களும் வேலைபார்த்தனர்.அனைவரிடமும் நட்பு பாராட்டினாள்.அனைவருக்கும் அவளை பிடித்தது...அவளுக்கு அவ்வேலை,பிடித்து விட்டது.

 

கே.கே வோ தன் நண்பர்களுடன் தொழில் தொடங்க முடிவு செய்தான்.அதற்கான தகுந்த இடத்தையும் தேர்வுசெய்தார்கள்.தன் தொழிலுக்கு தேவையான லைன்சஸ் என அணைத்து வேலைகளையும் பார்த்தனர்.விசிட்டிங் கார்ட் தனது தொழிக்கு தேவையானவை பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தனர்..

இதற்கிடையே கல்லூரியும் தொடங்கியது..

 

" பாரதி,கிளம்பிட்டியா ? டிபன் சாப்பிட்டியா ?  " என்றுதேன்மொழி கத்தினார்.இன்று தன்மகள் கல்லூரி செல்வதால் ஒரே பரப்பராகவும் சந்தோசமாவும் இருந்தது அவருக்கு தன்மகன் பள்ளிக்கு செல்வதையும் மறந்து பாரதியை கவனிப்பதை கண்டுகொண்டே இருந்தான்,தீன...

 

அழகிய மஞ்சள் நிற சூடியை அணிந்துவந்தவள் ஷாலை நேர்த்தியாக அழகாக குத்தி இருந்தாள்....

தேன்மொழி அவளை திருஷ்டி வழித்தார்...அதைகண்டு சிரித்தவள்.தன் தந்தையின் புகைபடத்திற்கு முன் நின்றாள்...

 

" பா,இன்னகி கல்லூரி முதல் நாள்..இன்னகி எல்லாரும் தன்னோட பெற்றோகளோடத்தான் வருவாங்க நான் மட்டும் தான் யாருமில்லாம தனிய போறேன் கஷ்டமா இருக்குப்பா..நீங்க இல்லை அம்மா இருந்தும் வர முடியல...யாருமே இல்லாத மாதிரி இருக்குப்பா..." என்று கண்ணீர் வடித்தாள்.அதனை தன் அன்னை அறியாத வகையில் துடைத்துக்கொண்டாள்.பின் தேன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்...." ஆல் தி பெஸ்ட்  " அக்கா என்றான் தீன. " டாங்கி யூ டா " என்றவள் இருவரிடமும் சொல்லிவிட்டு சென்றாள்.

 

தேன்மொழிக்கு அழுகையே வந்தது தான் இருந்தும்  அனாதை போல மகள் தனியே செல்வதை கண்டு,எவ்வளவு சொல்லியும் கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டனர் தேன்மொழி வேலை செய்யும் இடத்தில். 

 

தன் கல்லூரிக்கு வந்தவள் கால்கள் நேராக கிருஷ்ணன் சிலைக்கு முன்னின்றது அவர்காலடியில் பூவை வைத்தவள் வேண்டிக்கொண்டாள்...அதே நேரம் சரியாக அந்த ஆடிகார் உள்ளே நுழைய கார் கண்ணாடியை இறங்கிவிட்டவனின் கண்ட முதல்காட்சியே  மஞ்சள் நிற சுடிதார்  அணிந்த பாரதியே அவளை கண்டதும் இதழ் தானாக அவனை அறியாமலே விரிந்தது...

 

பின் அங்கே மாணவர்கள் பெற்றோர்கள் என தனி தனியே அமர முதல் நாள் வரவேற்பு விழா தொடங்கியது தமிழ்தாய் பாடலோடு ஆரம்பித்தது....பின் அடுத்தடுத்து பேசிசென்றனர் வந்தனர்...பின் அங்கே பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மூவருக்கு கல்லூரி சார்பாக பரிசு கொடுக்க நினைத்தனர்..முதல் பரிசே,பாரதிக்கு தான்.அந்த பரிசை நிர்வாகி தரவேண்டும் என்றிட கீழே இருந்த பாரதியும்  மேடையில் அமர்ந்த  கே.கே வும் எழுந்தனர்....மேடையில் பாரதி ஏறி வந்தாள்

 

பரிசை பாரதியின் கையில் கொடுத்த கே.கே அவளை வம்பிழுக்க.அவளிடம்

 

" முதல் நாளே என் கையில இலவசமாக பரிசொன்றாய் வாங்கிவிட்டாய்.இனி உன் சுயமரியாதையை பத்திரமாக பார்த்துக்கொள்  " என்றான் சிரித்துகொண்டு.

 

அவளும் சிரித்துக்கொண்டே " என் சுயமரியாதை விட உங்கள் மானத்தை பெரிதாக எண்ணுகிறேன் மிஸ்டர் கே.கே .அதனால் உங்கள் கையில் வாங்கிய இந்த பரிசை என் கையில் வைத்திருக்கிறேன்.இல்லை என்றால் இந்நேரம் இதை வீசி ஏறிந்திருப்பேன் உங்கள் மானத்தை போல இந்த பரிசு எங்கேனும் விழுந்து கிடக்கும்  " என்று கூறிவிட்டு செல்ல மூக்கு உடைந்து நின்றான் கே.கே.

 

திமிரழகி...

 

ஹாய் மக்களே,காலை வணக்கம் வழங்கம் போல கேட்பது உங்கள் கருத்தும் வோட்டுமே இந்த நான்கு யூடிகிடைத்த  ஆதரவை போல இன்னும் வரும் யூடி ஆதரவைதாருங்கள்....

 

நன்றி.இன்னாள் இனிய நாளாகட்டும்...

 


Quote
Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 3 months ago
Posts: 68
19/03/2020 2:46 pm  

நிறைவான பதிவு, kk, பாரதி ரெண்டு பேரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர், இருவரும், வேலை, பிசினெஸ்னு ஆரம்பித்து விட்டனர், கல்லுரியில் சந்தித்து முட்டிக்கொண்டனர்,  இனி அடுத்து 👌👌👌👍👍👍🌺🌺🌺


ReplyQuote
Ayesha
 Ayesha
(@Ayesha)
Guest
Joined: 1 week ago
Posts: 3
19/03/2020 4:49 pm  

Story super


ReplyQuote
Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
22/03/2020 10:38 am  

@jothiru     நன்றிமா

 


ReplyQuote
Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
22/03/2020 10:38 am  

@jothiru     நன்றிமா

 


ReplyQuote
Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
24/03/2020 10:24 am  

@Ayesha நன்றிமா 

 


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: