Forum

அழகி 6  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
22/03/2020 10:37 am  

அழகிய காலை வேலை,அப்பெரும் பூத்தோட்டத்தில் பல கனவுகளை சுமந்த வரும் வண்ணத்துப் பூச்சிகளில் தானும் ஒரு பட்டாம் பூச்சியாய் பலவித எதிர்பார்ப்புகளோடு, கனவுகளோடு ,ஆசைகளோடு உள்ளே நுழைந்தாள் பாரதி...இருப்பினும் மனம் கனத்தது.எல்லோரும் தங்கள் தாய் தந்தையரோடு வந்ததிருப்பதை பார்க்க அவளுக்கு தனக்கு யாரும் வரவில்லை என்பது வருத்தமாகத்தான் இருந்தது மெல்ல நடந்தாள் அந்த வளாகத்தில்...

 

அதை பற்றி வருந்திக்கொண்டே வந்தாள்...அவள் தோள்மீது,யாரோ ஒருவரின் கரம் பட திடுக்கிட்டு பார்த்தாள் யாரென்று...

 

" ஹேய் பட்டாஸ்,ரிலாக்ஸ் நான் தான் சந்தோஷ்..." என்றான்." நீயா ஹாப்பி (அவனோட பட்ட பெயர் ) நான் வேற யாருடா கை வச்சுடாங்கன்னு பயந்துடேன்.

 

"ஆமா நீ ஏன் இங்க வந்த மாமா வர சொன்னாரா ? " என்றவள் கேட்க..." இல்லை என் பிரண்டு முதல்நாள் காலேஜ்க்கு போறா,அதுவும் என்கிட்ட சொல்லாம போயிட்டா அதான் அவள பார்த்து சண்ட போடலாம் வந்தேன்...  " என்றான்.

 

" சாரி, ஹாப்பி.உன்னை கூப்பிடக்கூடாதுன்னு இல்லை நீயே டயர்டா இருந்திருப்ப,அதான் உன்ன டிஸ்டார்ப் பண்ணவேணானு 

..அவனது முறைப்பில் அடங்கினாள்...

 

" அப்படியே  ஒன்னுவிட்டேன்னு வையேன். யாரு யார டிஷ்டர்ப்பா நினைக்கிறா ?.... ஏன் ஒருவார்த்தை கூப்பிட்டா வந்திட போறேன் இதுக்கு ஏன் இவ்வளவு பேசுர.தனியா வரோம் பீல் பண்ணிட்டு தானே வந்த. இதுக்கு என்ன கூப்பிட்டா வரமாட்டேனா..." என்றான்

பாரதியின் கண்கள் கலங்கின.

 

" ஹேய் பட்டாஸ்,என் பாரதி குட்டி,எப்பையும்  பட்டாசு போல பிரைட்டா துறுதுறுன்னு பேசிட்டே ஹாப்பியா இருக்கனும், இப்படி அழகூடாது ஒகேவா..." என்றான் தலையை ஆட்டினாள்.

 

" வா " என்று அழைத்து சென்றான்..அங்கே கிருஷ்ணன் சிலையை பார்த்து நின்றவள் தன்பேக்கில் இருத்த பூவை அந்த கிருஷ்ணனின் காலில் வைத்து வணங்கினாள்..அப்பொழுது சரியாக உள்ளே,நுழைந்த கே.கேவின் ஆடிக்கார் அவளை கடக்க கண்ணாயை இறக்கி பார்த்தவள் மெல்ல புன்னகைத்தான்...

 

வரவேற்பு விழா தொடங்கியது தமிழ்தாய் வாழ்த்தோடு...பின் விருந்தினரை வரவேற்றனர்...சௌபாக்கியம் கல்லூரியை பற்றி பேசினார்....கே.கேவை பேச அழைக்க அவனோட மறுத்துவிட்டான் பின் விருந்தினர் உரையாடலை தொடங்கினார்.

 

அடுத்து பொதுத்தேர்வில் அதிக மதிபெண்களை எடுத்த மூன்று பெண்களுக்கு பரிசுகள் வழங்க  அழைத்தனர்...முதலாக பாரதி மேடையேற அதே சமயம் கே.கேவும் எழுந்து வந்தான்....அவளிடம் பரிசைகொடுக்கும் பொழுது அவளை வம்பிழுக்க பதிலுக்கும் அவனிடம் பேசிட்டூ வந்தாள் அவனோ மூக்குடைந்து நின்றான்....

 

பின் அறிவுரைகள் வழக்கப்பட்டு தேசிய கீதத்தோடு அந்த விழாவை முடித்தனர்...பெற்றோர்களை கிளம்பிட மாணவர்கள் மட்டும் இருந்தனர்...

எல்லாப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினர்..

 

வி.ஐ.பிகளை அனுப்பிவைத்துவிட்டு கே.கேவும் ரங்கநாதனும் பேசிக்கொண்டிருந்தனர்...அவன் சுற்றி சுற்றி கைகாட்டி எதோ பேசிக்கொண்டிருக்கும் போது அவன் கண்ணில் பட்டது என்னவோ பாரதியும் சந்தோஷ்ஷும் தான்....அவள் யாருடன் பேசிகிறாள் தெரியவேண்டுமென்று  மூளை குறுகுறுத்தது.

 

" ஓய்,பட்டாஸ் நல்ல படி காலேஜ் லைப் நல்ல என்ஜாய் உன் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்....இந்த லைப் திரும்ப கிடைக்காது சோ நல்ல என்ஜாய் பண்ணு பட்டாஸ்...உன் சேட்டை செய்து இங்க இருக்க டீச்சர்ஸ் டயர்டாக்கிடாத பாவம் அத்தையால அடிக்கடி வர முடியாது பார்த்துக்கோ  " என்றான் .

 

" அதெல்லாம் கூடவே பிறந்தது கண்டாரோல்,பண்றது கஷ்டம்...இருந்தாலும் டரைபண்றேன்..." என்றாள்.

 

" வாலு வாலு, " என்று கதை திரிகினான்....இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கே.கேவுக்கோ கடுப்பானது.....கே.கே பார்க்கும் இடத்தை நோக்கி ரங்கநாதன் பார்க்க இருவர் நிற்பதையும் பார்த்தவர் அவர்களை அழைத்தார்..

 

"சித்தப்பா,அது யாரு ? " என்று கே.கே கேட்க..." அவன் என் புள்ளப்பா சந்தோஷ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்து,இப்ப ஒரு ஹோட்டல்வேலை பார்க்கிறான் தம்பி.." என்றார்.

 

இருவரும் அருகினில் வந்தனர்... " இங்க என்னடா பண்ற  " என்றவர் கேட்க..." இல்லப்பா,அத்தை இன்னைகி வேலைக்கு போயிருப்பாங்க லீவு போட முடியாது அதான் தனியா இருப்பா பீல் பண்ணுவான்னு நான் வந்தேன்ப்பா..." என்றான்.

 

" ஆமாடா நானே உன்னை வர சொல்லலாம் இருந்தேன் நான் வேலைலா இங்க இருப்பேன் பாப்பா கூட யாரு இருப்பான்னு யோசிச்சேன் நல்ல வேளை நீயே வந்துட்ட... " என்றார்.

 

" நீங்க வேற என் மருமகள நான் தான் காலேஜ்ல விடுவேன் அம்மாவேற  டார்சர் ப்பா...சமாதானம் பண்ணி நான் மட்டும் வந்தேன்..." என்றான்...

 

" ஏன்,பக்கி அத்தை கூட்டிட்டு வரவேண்டியது தானே உனக்கு அத விட வேற என்ன வேலை " என்றவள் கேட்க...

 

" உங்க அத்தை நான் கூட்டிட்டு வந்தேன் வை இங்க இருக்க எல்லா பொண்ணுங்களை அவங்க மருமகளாக்கிருவாங்க அப்பறம் ஏன் பாடு திண்டாட்டம் தான்..." என்றான்.

 

" சார்,பெரிய ஆணழகன் இங்க எல்லா பொண்ணுங்கள் உன்னையே கட்டிக்க போறேன் அழுகுறாங்க ஆசைதான்டா.மாமா பாருங்க உங்க பையன் பேச்ச..." என்றவள் மாட்டிவிட..

 

" நீ சொன்னாலும் சொல்லைனாலும் மீ அழகு தான் மா...ஏன் நாளாபின்ன நீ கூட இந்த மாமாவா தான் கட்டிபேன் கெஞ்சலாம்....." என்றவனை இடையில் கைவைத்து முறைக்க....

 

அவருக்கோ சிரிப்பு வந்தது..." கொஞ்சம் ஒவரா போய்டேனோ " என்றான் வாய்விட்டே..." ஓழுங்க ஓடிடு இல்லை எல்லா பொண்ணுங்க முன்னாடி அடிவாங்கிடாத..." என்று எச்சரித்தாள். " சரி தான் போடி..." என்றான்..

 

" சரி சந்தோஷ் டைம் ஆச்சு நீ கிளம்பு  " என்றார்..." சரி பா " என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்து பணத்தை கொடுத்தான் பாரதியிடம்...

 

அவனிடம் கை நீட்டி தடுத்தவள்..." என் கிட்ட இருக்கு ஹாப்பி நான் பார்த்துகிறேன் இதுவேணா...." என்றாள்.

 

" அதானே நீ கொடுத்தா என்ன வாங்க போற.ஒகே டேக் கேர்.." என்று சென்றான்...அவனுடன் பேசிக்கொண்டேன் ரங்கநாதனும் உடன் சென்றார்..இதுவரை இங்கு நடந்தை பார்த்துக்கொண்டு கே.கே பாரதியின் அருகில் வந்தான்.

 

" ம்ம்,மேடம் சுயமரியாதைக்கே பிறந்தவங்களோ இப்படி கட்டி காப்பாத்திறீங்க....என் பணத்தை வேணான்னு சொல்லுறீங்கன்னு பார்த்த யார்கிட்டையும் காசு வாங்க கூடாதுன்னு எதும் சபதம் போட்டிருக்கீங்களா....." என்றவன் கேட்க..

 

"இன்னோருத்தர் உழைப்பில் கிடைத்த காசை அன்பளிப்பாக கூட வாங்க கூடாதுன்னு நினைக்கிறவ நான் சோ இருக்கிறத வச்சு வாழனும் அதான் எங்கப்பா சொல்லிகொடுத்து வளர்த்திருகார்,..என்கிட்ட காசு,இருக்கு போதுமானளவு..இதுக்கு மேல வாங்கி நான் என்ன பண்ணபோறேன்...எங்க இரண்டு பேர்குள்ள நல்ல நட்பு இருக்கு அத இந்த பணத்தால கெடுக்க விரும்பல...." என்றவள் நகர்ந்தாள்..

அவளின் கூற்று வியப்பாய் பார்க்கவைத்தது அவனை...

 

" பாரதி " என்றவன் அழைக்க...அதே இடத்தில் நின்று திரும்பினாள்..." ஆல் தி பெஸ்ட்.." என்றான்....

 

மெல்லிதாய் புன்னகைசெய்தவள்  " நன்றி  " என்றுவிட்டு நகர்ந்தாள்...

 

தனிதனியே டிப்பார்மாண்ட் டிப்பார்மெண்டாக அமர்ந்திருந்தனர்....

அதில் மேத்ஸ் டிப்பார்மெண்ட் தனியாக வகுப்பறைக்கு சென்றிடாமல் மரத்தடியில் அமரவைத்திருந்தனர்....ஜூனியர்ஸை தெர்ட்இயர் சீனியர்ஸே வழி நடந்தினர்...

 

அவர்கள் ஜூனியர்ஸை வகுப்பிற்கு அழைத்து செல்லாமல் வரிசையாக அந்த காலேஜையே சுத்திகாமித்தனர்..

 

" ஆமா எங்கடி கூட்டிட்டு போறாங்க,...இவளுங்க  " என்று சத்தமாகவே கேட்டுவிட்டாள் சஹானா...

 

" அடியே நம்ம பின்னாடி தான் டி  சீனியர் அக்கா வருது அமைதியா வாடி...." என்றாள் கவிதா...

 

" அக்கா,எங்க அக்கா கூட்டிட்டு போறீங்க.."  பாரதி வாய் விட்டே கேட்டாள் அருகில் வந்த சீனியர் இடம்...

 

" காலேஜ் சுத்தி,காமிக்கிறோம் டா  " என்றாள்...

 

" ஏன்டி, இத நாமளே பண்ண மாட்டோமா இன்னும் இரண்டு நாள் விட்ட இங்க இருக்க மூலைமுடுக்கில என்ன இருக்குன்னு சொல்லுருவேன் நாளி பெரிய அரண்மனை சுத்திகாற்றாங்கலாம்....காலைலருந்து அவனுங்க படுத்துனானுங்க இப்ப இவளுங்களா முதல்னாலே இப்படியாடி...." சஹானா கூற..

 

" முதல் நாளே நீ பேசுர பேச்சுல சண்டைக்கு வந்திருவாளுங்க அமைதியா சொன்னத செய் டி..." என்றாள் கவிதா...ஆனால் பாரதியின் கண்களோ எதையோ தேடிக்கொண்டிருந்தது..

 

" என்னடி தேடுற பாரதி " என்று கவிதாகேட்க..." ம் வேற என்னத்த தேடுவா கேண்டீன் எங்க இருக்குன்னு தான்...." என்றாள் சஹானா..

 

அவளை முறைத்தாள்.." ஏன் டி நீ என் பிரண்டு டி நாங்க என்னத்த தேடுறோமோ அதையே தானே நீயும் தேடுனும்  இல்ல தேடுவனு சொல்ல வந்தேன்  " என்றாள் அவளது முறைப்பில்.....

 

" நான் லைப்பேரி எங்க இருக்குன்னு பார்த்தேன் டி லூசு" என்றாள்..." நீ மாறவே மாட்டியா ? " என்றாள் சஹானா

 

" அடச்ச ,வாய மூடுங்க நீங்க இரண்டு பெரும் தேடுறது அங்க இருக்கு பாருங்க " என்றாள் கவிதா.சாலை நடுவில் இருக்க இந்த பக்கம் நூலகமும் இன்னொரு பக்கம் லைப்பேரி இருந்து....நூலகத்தின் அருகில் இருக்கும் கட்டம் தான் மேத்ஸ் டிப்பார்மெண்டாக இருந்தது....

 

" அப்பாடா.." என்றாள் சஹானா. " ஏன் ?  என்னாச்சு ? " என்றுகவிதா கேட்டாள்...

 

" இல்லடி எங்க நம்ம டிப்பார்மெண்ட்க்கும் கேண்டீன்னுக்கும்  ரொம்ப தூரமா இருக்குமோனு நினைச்சேன்.நல்ல வேலை பக்கத்தில இறங்கினதும் ஒரு எட்டுல இருக்குடி..." என்றாள்...

 

" எப்ப பாரு சோறு சோறு சோறு தானாடி...." பாரதி கேட்க.உன்னை மாதிரி காகிதத்தை கூடிச்சு வாழுறவங்க நான் இல்லடிமா சோறுசோறு சோறு தான் முக்கியம் என்றாள் சஹானா...கவிதா அவளோடு ஒரு ஹைபை,போட்டுக்கொண்டாள்..

பாரதியோ தலையில் அடித்துக்கொண்டாள்...

 

கவிதா,பாரதி,சஹானா மூவரும் பள்ளியிலிருந்தே நண்பர் பாரதி சேர்வதாலும்  நல்ல மதிப்பெண்கள் எடுத்ததாலும் மூவருக்கும் ரெகுலரில் ,சீட் கிடைத்தது....இன்னோரு தோழி வினிதா அவளும் உடன் படித்தவர்கள்ஆன லெங்குவேஜ் (ஆங்கிலம் ) மேஜரை எடுத்துக்கொண்டாள்...

 

வகுப்பறையில் அமர தங்களுக்கான இடத்தை தேர்ந்தெடுத்தனர்...இடத்து புறத்தில் இரண்டாம் பென்ஜில் அமர்ந்தனர்....எல்லாரும் புதிதாக தெரிந்தனர்....

 

அவர்கள் முன் வந்து நின்றனர் சீனியர் அக்காக்கள்..

 

" ஹாய் ஹாய்,நல்ல சுத்தி பார்த்தீங்களா காலேஜ்...இதெல்லாம் எதுக்கு அக்கா கேட்காதீங்க ஏன்னா எங்க சீனியரும் இத தான் பண்ணாங்க...சரி விடு நாங்க சீனியர் என் பெயர் ஸ்ரீமதி.இந்த காலேஜ் பிரஸிடென்ட்...எங்க முகத்தை பார்த்து வைச்சுங்கோங்க எதுவும் சந்தேகம் பிரச்சனைனா எங்ககிட்ட கேளுங்க நாங்க கண்டிப்பா வருவோம்..அப்பறம் ராக்கிங் இல்ல சும்மா ஸ்கெண்ட் இயர்ஸ் வந்து கலாய்ப்பாங்க அவளோதான் பயப்பிடாதீங்க தைரியமா பேசுங்க எல்லா பங்கசன் போட்டி எதுவா இருந்தாலும் எங்க கூட கோஆப்பிரெட் பண்ணணும்..மூனுவருசத்த ஜாலியா என்ஜாய் பண்ணுங்க எக்ஜாம் விட பங்கசன் தான் அதிகமா இருக்கும்.ஆன,படிக்கவும் செய்யனும் மேத்ஸ் தான் எப்பையும் பர்ஸ்ட்இருக்கனும்..ஏன்னா நம்ம பிர்ன்ஸிபாலே நம்ம டிபார்மெண்ட் தான்...சோ அவங்க நம்மகிட்ட நிறைய எதிர்பார்ப்பாங்க நாம ஆத பூர்த்தி பண்ணணும்...மேம் எல்லாரும் நாளைக்கு தான் வருவாங்க....அவங்கள பார்த்து பயப்பிட வேணாம்  எல்லாருமே பிரண்ட்லி டைப் தான் பிரண்டிலி டைப் தான் எல்லாரும்...உங்கள பத்தி சொல்லுங்க என்றதும் பெயரை சொல்ல பாரதியும் பெயரை சொல்ல எழுந்து நின்றாள்..." ஹேய் நீ பாரதி தான் வாலிபால் பிளேயர் தானே " என்றாள்.

 

" ஆமா அக்கா என்னை நியாபகம் இருக்கா ?  " என்று அவள் கேட்க.உன்னை மறக்க முடியுமாடா?.."

 

 

" ஹேய் இது நம்ம வாலிபால் குரூப்ல நிஷாவரலைன்னு ரங்கநாதன் சார் மூலமா ஒரு பொண்ணு வந்து நல்ல விளையாண்டா எங்களுக்கு பர்ஸ்ட்  கிடைச்சது சொன்னேன்ல அதுஇவ தான் திவ்ய பாரதி..." 

 

" நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமாஇருக்குடா நீ நம்ம டீம் ல சேர்ந்து இனி காலேஜ் டீம் சேர்ந்திடு அக்கா உன் பெயர கொடுத்துடேன் ஒகே வாடா..." என்றிட அவளுக்கு சந்தோசமாக இருந்தது மீண்டும் வாலிபால் விளையாட போவதை எண்ணி...

 

அந்தநாள் சந்தோசமாக கழிந்தது பாரதிக்கு...ஏனோ கே.கே அவள் பேசியதே மனதில் ஓட அவளை அடுத்த என்ன செயலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.....

 

திமிரழகி....

 


Quote
Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 3 months ago
Posts: 67
22/03/2020 3:32 pm  

அருமையான பதிவு, பாரதியின் காலேஜ் வாழ்கை நடப்புடனும், அவள் விளையாட்டுடனும், தொடக்கமே அசத்தலா தொடங்கிருச்சு அருமை, இங்கு kkவுக்கு  தான் அவளை என்ன செய்யலாம் என யோசிக்கிறான் 👌👌👌👍👍👍🌺🌺🌺 


ReplyQuote
Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
24/03/2020 10:26 am  

@jothiru நன்றிமா 

 


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: