Forum

அழகி 7  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
24/03/2020 10:22 am  

மொட்டாய் மலரும் வண்ண பூந்தோட்டமாய் ஒவ்வொரு நட்சத்திரமும் பூத்தது வான்தோட்டத்தில்...அப்பூக்களின் காவலாய் ஒற்றை நிலவும் நின்றிட அழகானது அவ்விரவும் வானமதில்....

 

கல்லூரி முடிந்ததும் தன் தோழிகளோடு பஸ்ஸில் பயணித்தாள் .வீட்டில் யாருமில்லாத காரணத்தால் சாப்பிட்டு கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தாள்.பின் நான்கு முப்பது அளவில் தன்னுடையை மாற்றி வேலைக்கு சென்றாள்...

 

அங்கே அனைவரும் அவளது தோழிகளென மாறின...வயது வித்தியாசமின்றி பழகினர்....அவளும் கல்லூரியில் நடந்ததை பற்றி கூறினாள்...பின் வேலை பார்த்து முடிந்திட இரவு ஒன்பதரை ஆனது வீட்டிற்கு வர சந்தோஷ்ஷே இறக்கிவிட்டு சென்றான்.

 

வீட்டிற்கு வந்தவள் அவளன்னை தேன் அவளுக்காக தோசை வார்த்து வைத்திருந்தார்...உள்ளே வந்தவள் ஒரு குளியலிட்டு இரவுடைக்கு மாறி வந்தாள்...மூவருமாகவேஅமர்ந்தனர் சாப்பிட்டனர்..

 

" அக்கா காலேஜ் எப்படி இருந்தது.வழக்கம் போல உன் இரண்டு தோழிகளோடு அலப்பறைய போட்டிருப்பீயே..." என்றான் தீனா.

 

" இன்னுமில்லடா இனி தானே போய் இருக்கோம்...மெதுவா மெதுவா ஆரம்பிப்போம்..,வந்ததும் ஆரம்பிச்சா முளையில கிள்ளி ஏறிஞ்சிடுவாங்க...நம்ம சேட்டை மெதுவா தான் டா ஆரம்பிக்கனும். " என்றாள். தன் மகளை பார்த்து முறைத்தார் தேன் மொழி.

 

" சேட்டை பண்ணதான் போறீயா நீ, ஒழுங்க ஒழுக்கமா படிச்சுட்டு வெளிய வரனும் பாரதிமா.உன்னால உனக்கு மட்டும் இல்ல உன்னை வளர்த்த எனக்கோ,உன்னை நம்பி சேர்த்த ரங்கநாதன் அண்ணனுக்கோ தலைகுனிவு வர கூடாது...மூனுவருசம் எப்படி போறீயோ அப்படியே வரனும் என்னால யார் முன்னாடியும் உனக்காக தலைகுனிந்து நிற்கமுடியாது...படிப்பு இரண்டாவது விசயம் ஆன ஒழுக்கம் ரொம்ப முக்கியம் டா பார்த்து நடந்துக்க...." என்றார்.

 

இதுனால் வரைக்கும் தான் அவ்வாறு ஒரு போதும் நடந்தில்லை.ஏன் பள்ளியில் கூட பாரதியை பற்றி நல்விதமாகத்தான் கூறியிருக்கிறார்கள்..இதுவரை பாரதி  ஒழுக்கம் தவறியதில்லை...தன்னிடம் வந்த காதல் சொல்லுபவரிடம் எதுவும் பேசாது கடந்திடுவாள்..அதையும் தன் தாய்யிடம் கூறியும் விடுவாள்...என்னதான் தன்னை பற்றி முழுதாய் தெரிந்த தாயும் அந்த ஒழுக்கத்தில் அழுத்தம் கொடுத்து பேசுவது அவளுக்கு சிறு வலியை கொடுத்தாலும் இந்த மூன்று வருட கல்லூரி வாழ்க்கை இப்போது அக்னி பரீட்சை போலத்தான் தான் ஒழுக்கமற்றவள் என பெயரெடுக்காது காதல்கீதல் என சென்றிடாது வாழ்ந்து காட்டவேண்டிய காலம்..பாரதிக்கு மட்டுமல்ல படிப்பு மட்டுமே முக்கியமென குடும்பம் சூழ்நிலை அறிந்து வாழும்பெண்கள் எல்லாருக்கும் அது ஓரு அக்னி பரீட்சை தான்...

 

காதல் பெயரில் கல்லூரி வாசில் நின்று வலைவிரித்து வைத்திருக்கும் கயவர்கள்...பஸ் ஸ்டாப்,பஸ், தெருக்களிலும் நிற்பது என மட்டுமில்லாமல் பேஸ்புக் , டூவிட்டர் என போனிலும் வலைவிரித்து காத்திருக்கத்தான் செய்கின்றனர்...அவர்கள் வலையில் சிக்காமல் போராடி வரும் பெண்களுக்கு அக்னி பரீட்சை தான்...இதற்காகவே பாரதி போன் கூட வாங்கிக்கொள்ளவில்லை அவளுக்கென்று போனும் இல்லை....தன் தம்பிகூட உன் முதல் மாத சம்பளத்தில் (இன்ஸ்டால் மெண்டில் )செல்போன் வாங்கிக்கொள்...நீ பயன்படுத்தவில்லை என்றாலும் என்னிடம் கொடு என்று கெஞ்சினாலும் மறுத்து புத்தங்களை வாங்கி வைங்க அதைவைத்தே அடிவாங்கினதும் உண்டு....இவ்வாறு தான் வாழ்கிறாள் பாரதி...இவ்வாறு தன் அன்னையின் அறிவுரை சிறுது வலித்தாலும் வழக்கம் போலவே ஏற்றுக்கொண்டாள்,.

 

தான் கல்லூரி ஆபீஸ்பேரராக(office bearer) இருப்பதாகவும்.வாலிபால் டீமில் சேர்ந்திருப்பதாகவும் வாரத்தில் மூன்று நாள் விளையாடி விட்டுவருதாகவும் அனைத்தையும் கூறினாள்...கே.கேவிடம் வாக்குவாதத்தை மட்டும் கூறவில்லை மறைத்து வைத்தாள்....பின் இரவு தன் தம்பியுடன் வம்பிழுத்துக்கொண்டு,தாயை அணைத்துக் கொண்டு உறங்கினாள்..

 

ஆனால் கே.கேவிற்கு உறக்கம் தூரமானது...அவளது அந்த வார்த்தைகள் "என் சுயமரியாதை விட உங்கள் மானத்தை பெரிதாக எண்ணுகிறேன் மிஸ்டர் கே.கே .அதனால் உங்கள் கையில் வாங்கிய இந்த பரிசை என் கையில் வைத்திருக்கிறேன்.இல்லை என்றால் இந்நேரம் இதை வீசி ஏறிந்திருப்பேன் உங்கள் மானத்தை போல இந்த பரிசு எங்கேனும் விழுந்து கிடக்கும்  " என்ற அவளின் வார்த்தைகள் கண்ணில் விழுந்த தூசியாய் அவனது சிந்தனையில் உருதிக்கொண்டிருந்தது...அவளை எதாவது செய்ய வேண்டும் சிந்தித்துக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கலானான்...

 

மறுநாள் அழகாய் காலை புலர்ந்தது...முதல் நாள் போலவே கல்லூரிக்கு வந்தாள்...கிருஷ்ணன் சிலைக்கு பூவை வைத்தவள் வணங்கிவிட்டு செல்வாள்...முதல் இரண்டு வகுப்பில் யாரும் வரவில்லை அதனால் இவளே வகுப்பில் அனைத்து தோழிகளின் பெயரை தெரிந்து கொண்டு நட்பானாள்...இவளாகவே முன்வந்து பேசி பொழுதை போக்க அவர்களுக்கு அவளை பிடித்தது....

 

பின் மேத்ஸ் டிப்பார்மெண்டை மட்டும் தனியாக அழைத்தனர்.முதலாமாண்டு  மாணவர்களை மட்டும் அழைத்து கல்லூரி ஆசிரியர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்...மாணவர்கள்  யார் யார் என்ன எடுப்பார்கள் என்று தெரிந்தும் கொண்டனர்..

 

பின் வகுப்பில் அந்த நாளைகழிக்க கஷ்டபட்டனர்,..பேப்பரை கிளித்து ஜூட் விளையாடுவதும்...பின் அரட்டை என்று போக லஞ்சு டைம் வந்தது...சாப்பிட்டனர் பின் ஒரு குட்டி தூக்கம் இரண்டு மணிவரைக்கும்,..இன்னும் அரை மணி நேரம் இருக்கே...சின்ன அரட்டை போட்டுக்கொண்டிருந்தாள்...

 

" இங்க திவ்யபாரதி யாரு? " வேறு டிப்பார்மெண்ட் பெண்ணோருவள் வந்து கேட்டாள்.

 

" நான் தான் அக்கா " என்றவள் எழுந்த நின்றாள்..." உங்கள ஆபீஸ் ரூம்ல கூப்பிடுறாங்க போங்க  " என்றாள்...

 

" சரி " என்றவள்.தன் தோழியிடம் " வந்திடுவேன்,அப்படி பள்ளி முடிந்தாள் தனது பையை எடுத்துவாருங்கள்  " என்று கூறி  விட்டு சென்றாள்...

 

உள்ளே வரவேற்ப்பாளரிடம் கூறினாள் அழைத்த விசயத்தை...அவரும் இப்போது தான் கே.கே சாப்பிட சென்றிருப்பதாகவும் வந்ததும் போய் பார் என்றார்..

 

கல்லூரி முடிய அவளுக்கு துணையாக மூனு மணிவரை தோழிகள் இருந்தனர்....பின் நேரமாக அவர்களை போகச்சொன்னாள்..அப்பொழுது தான் சாப்பிட்டு வந்தான் கே.கே.அவன் வந்ததும் எழுந்து நின்றாள்...

 

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னறைக்கு விரைந்தான்....பாரதி மீண்டும் ஒருமுறை வரவேற்ப்பாளரிடம் சென்று நியாபகப்படுத்த அவரும் அலைபேசியில் நியாபகம் அவனுக்கு படுத்தினர்...அவளை காத்திருக்க சொன்னார்...நாலரை மணிஆனது...நெஞ்சில் ஓரு பயம் சூடிக்கொண்டது...

 

அலுவலகத்தில் அனைவரும் தங்களின் பணியை முடித்து கிளம்ப தயாராகினர்...அப்பொழுதான் கே.கேவும் வெளியே வந்தான்...

அங்கே ராகவனும் வந்தான்,அவனை வரவேற்க வெளியே வந்தவன்..அவனை மீண்டும் தன்னறைக்கு அழைத்து செல்வதை பார்த்த பாரதி அவனை அழைத்தாள்..

 

" சார் " என்ற அவள் அழைப்பில் நின்றான்...

 

" சார், என்னைய எதுக்காக கூப்பிட்டீங்க ரொம்ப நேரமாக நான் இங்க இருக்கேன்  " என்றாள்..

 

" மிஸ்.திவ்யபாரதி நீங்க இன்னும் வீட்டுக்கு போலையா...ஓ..நான் இன்னும்  உன்னை அழைத்த காரணத்தை சொல்லலையோ.." என்று யோசித்தவன்....தன் ஒற்றை விரலை நெற்றியில் அழுத்தியவன்.

 

" மிஸ் .திவ்யபாரதி என்ன விசயம் கூற வந்தேன் என்பதை மறந்துவிட்டேன் நாளைக்கு  சொல்லுகீறேனே .இப்போ நீங்க கிளம்புங்க என்று அமர்த்தலாக கூறிவிட்டு தன் நண்பனை அழைத்துச்சென்றான்...

ராகவன் அவள் முகத்தை ஆராய்ந்தான்....அதில் கோபம்,ஆத்திரமும் இயலாமை எப்ப வேண்டுமானாலும் வரும் கண்ணீர் அவளது முகம் இருந்தது மீண்டும் ஓரு முறை திரும்பி பார்த்த கே.கே சிரித்துவிட்டு போக...

 

அவன் இவ்வாறு செய்வான் என்று எதிர்பாராத பாரதிக்கு இந்த செயல் அழுகையை தந்தது....அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்தாள்...

 

" ஏன் மா இவ்வளவு லேட்  " என்று தன் அன்னை விசாரிக்க ....தன் அன்னை கட்டியணைத்து அழுதாள்....அவர் பதறி போய் மீண்டும் கேட்டார்...

 

" பஸ் வர லேட்டாச்சு மா அதான் லேட்மா  " என்று அவரை கட்டிக்கொண்டு அழுதாள்..." ச்சீ இதுக்கு தான் அழுகுறீயா ?  பயந்துடீயா ?"  என்றவர் கேட்க " ஆமா " என்று தலையாட்டினாள்.

 

" பாரதி தைரியமான பொண்ணாச்சே இதுக்கெல்லாமா பயப்பிடுவாங்க...விடுடா இதெல்லாம் ஓன்னில்லா போய் முகத்த கழுவிட்டு வேலைக்குப் போ " என்றார்..

 

" நான் இன்னைக்கு போலமா  " என்றாள்." இவளது செயலில் வித்தியாசத்தை கண்டாலும் எதவும் கேட்காது அவள் போக்கிலே விட்டார்.அவளும் வேலைக்கு செல்லாது வீட்டிலே இருந்தாள்..

 

தன் நண்பனின் கடிந்துகொள்ளுதளையும் பொருட்படுத்தாது அவளை அழ வைத்த சந்தோசத்தில் வீடுவந்து சேர்ந்தான் கே.கே....

 

" என்ன கண்ணா  இவ்வளவு சந்தோசமா இருக்க என்ன விசயம் ? " என்றுசிந்தியா கேட்க...

 

" அதெல்லாம் ஒன்னில்லை அண்ணி சும்மா எப்பையும் போலத்தான் இருக்கேன். " என்றவனை சந்தேகமாக பார்த்தவள் மீண்டும் கேட்டாள்..." அப்படி தெரியல எதோ சாதிச்சுட்டு வந்த மாதிரில நீ இருக்க உண்மை சொல்லு மேன்  " என்றாள்..

 

தோழி போல் பழகும் அண்ணியிடம் எதையும் மறைக்க மாட்டான்...அதனால் எல்லாத்தையும் கூற சிந்தியாவுக்கு கோபமே வந்தது...

 

" நீயா கண்ணா இது ! ஆச்சரியமாக இருக்கு.ஒரு பொண்ண அழவச்சுட்டு நீ சிரிச்சுட்டு இருக்க....என்ன மனுசன் நீ கண்ணா....உன்னால அந்த பொண்ணு,எவ்வளவு வேதனை பட்டிருப்பா நினைச்சு பார்த்தியா நீ...கண்ணா நீ இப்படி நடந்துபேன்னு நான் நினைக்கல...அப்பா அடிக்கடி அந்த காலேஜ் பத்தி பெருமையா பேசுவார் இலவசமா படிக்கிறவைக்கிறது தன்னோட பாக்கியமா நினைப்பார்...உன்னை நம்பி கொடுத்த வேலையா இப்படி தான் பார்த்துப்பீயா... அந்த சின்ன பொண்ணு தான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன் சொல்லுற அளவுக்கு உன் வார்த்தைகள் எவ்வளவு அவள காயப்படுத்திருக்கும்...சேம் ஆன் யூ கண்ணா,என் கிட்ட பேசாத  " என எழுந்து சென்றாள்,...

 

" அண்ணி அண்ணி " அவன் அழைக்க சட்டை செய்யாது சென்றுவிட்டாள்...

சாப்பிடும் போது கூட அவனுக்கு அவள் பரிமாறவில்லை அவனாக தான் போட்டு சாப்பிட்டான்...இதை கவனித்த நாதனும், கமலும் புரியாமல் பார்த்தனர்...

 

" என்ன சியாமா,கண்ணனுக்கு பரிமாறமா இருக்க " என்றான் கமல், " ஏன் அவனுக்கு கை இருக்குல பரிமாறிப்பான்.." என்றாள்.

 

" அண்ணி,ஐ யம் வெரி சாரி நான் பண்ணது தப்பு தான்.நான் என்ன பண்ண சொல்லுங்க பண்றேன் அதுக்காக பேசாம இருக்காதீங்க

பீளிஸ் .." என்றான்..

 

" இதுவரைக்கும் என்னை கேட்டுதான் செஞ்சீயா இப்ப மட்டும் ஏன் கேட்கிற உன் இஷ்டம் நீ எப்படி வேணா நடந்துக்கோப்பா எனக்கென்ன " என்றாள்..

 

" இப்ப இரண்டும் பேரும்,ஏன் முட்டிட்டு இருக்கீங்க சொல்லுங்களேன்.." என்றார் நாதன்..

 

" அப்பா " என்று அனைத்தையும் கூறினான் கே.கே...

 

" இத்தனை வருசமா நாம செய்த நல்லகாரியத்தால கிடைத்த புண்ணியத்தை ஒருவார்த்தை கேட்டு அழிச்சிட்டீயே கண்ணா,இதுக்கு தான் உனக்கு பொறுப்பை கொடுத்தேன்னா..இப்படி நீ செய்வேன் தெரிஞ்ச நானே கல்லூரி பார்த்துருப்பேன் .இப்படி நீ பண்ணுவேன்னு நினைக்கல கண்ணா...நீ அங்க போனது போதும் உன் பிஸ்னஸ் பாரு.நானே என் காலேஜ் பார்த்துகிறேன்...என்னா சொல்லு உன் அம்மா புத்தி வரத்தான் செய்து..." என்று வருத்தம் கொண்டார்...

 

" சாரி டாட் ,நானே அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.அவகிட்ட பேசி இலவசமாக நானே படிக்க வைக்கிறேன்...என்னைய மன்னிச்சிருங்க  பீளிஸ் என்றவன் சாப்பிடாமலே சென்றுவிட்டான்..

 

அதனால் அவனையாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் யாரும் பேசவில்லைவுமில்லை..

கஷ்டமாகத்தான் இருந்தது.

மறுநாள் வேகமாக கிளம்பினான் கே.கே. கல்லூரிக்கு..

 

வழக்கம் போலவே பாரதியும் கல்லூரிக்கு கிளம்பிவந்தாள்...கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தாள்...வந்து இரண்டு மணிநேரம் கடந்திருக்க..

 

அவளை மீண்டும் நிர்வாகி அழைப்பதாக கூற...இந்த முறை அவளுக்கானதல்லவா.

 

கீழே இறங்கி வந்தவள் யோசித்தாள் முதலில்.' இந்த தடவ ஏமாறுவேன் நினைச்சியா  கே.கே.இந்த முறை நீ காத்திரு  '  என்றவள். கேண்டீனுக்கு சென்றாள்.அவனோ அங்கே அவளுக்காக காத்திருந்தான்...

 

திமிரழகி....

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: