Forum

அழகி 8  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
26/03/2020 9:45 am  

பாரதியை அழைத்தவன்,அவளுக்காக தன்னறையில் காத்துக்கொண்டிருந்தான். ஆனால் பாரதி ' இந்த முறை ஏமாற போவதில்லை இது எனக்கான முறை என்று நினைத்தவள் ஆபீஸ் ருமிற்கு செல்லாது நேராக கேண்டீனிக்கு சென்றாள்..,

 

" அக்கா,செம தலைவலி ஒரு காஃபி கிடைக்குமா ? " தலையில் கை வைத்தவாறே கேட்ட பாரதியை பார்த்தவர்..." மிஸ் கிட்ட சொல்லிட்டு வந்துடீயா பாப்பா " பாலை ஆற்றியவாறே கேட்டவரிடம் " ஆமாகா,சொல்லிட்டு தான் வந்தேன் " என்றவள் காசைக்கொடுத்து டோக்கனையும் இருவடையையும் வாங்கியவள்.டோக்கனை அந்த அக்காவிடம் கொடுத்துவிட்டு அருகில் உள்ள கதிரையில் அமர்ந்தவள் வடையை ருசிக்கலானாள்...

 

" இங்கே அவளின் வருகைக்காகவே காத்திருந்தான் " கண்ணா...

 

' இதற்கு அவள் சம்பதிப்பாளா ? இப்படி மாற்றி மாற்றி பேசினால் என்னை முதலில் நம்பவே மாட்டாளே ! ... அவளை எப்படி பேசி இதற்கு சம்பதிக்க வைக்கிறது...நிச்சயம் ஆடுவாள்.அதுவும் நான் இறங்கிபோவதென்றால் அவளுக்கு சலங்கை கட்டுவது போலத்தான் இருக்கும்...' என்றவன் அவனறைக்கு வெளியே நின்றவாரு யோசித்துக்கொண்டிருந்தான்...

ஆனால் அவளோ நிதானமாக வடையை பிய்த்து அங்கே ருசித்துக்கொண்டிருந்தாள்...

 

' இவ்வளவு நேரமா ? அவள் வருவதற்கு..' என்று நகத்தை பற்களால் கடித்து துப்பிக்கொண்டிருந்தான்...

 

" தம்பி,நம்ம ஆடிட்டோரியத்தில் புதுசா ஏதோ மாத்தனுமா நீங்க வந்து இன்ஜினீயரை பார்த்து பேசிடீங்க இன்னைக்கே வேலை ஆரம்பித்திடுவாங்களா வாங்க தம்பி  அங்க போலாம்...." என்று அழைத்தார் ரங்கநாதன்...

 

' ஐயோ, சும்மாவே அன்னைக்கு ஒருநாள் காக்க வைத்தற்கே வீட்டில் என்னென்னமோ ஆகிவிட்டது.இப்போது மீண்டும் காக்கவைத்தால் கே.கே உன் கதி ? ' என்றெண்ணியவன்.

 

" சித்தப்பா,அது என்னான்னு நீங்களே பார்த்து ஒகே பண்ணுங்களே நானும் வருனும் அவசியமா என்ன ? " என்றான்..

 

" சாரி,தம்பி இந்த கல்லூரியில் எனக்கான வேலை ஆலோசனை சொல்வது மட்டுமே உத்தரவு தருவது உங்கள் வேலை தம்பி " என்றார்.

 

' இவர் விடுவாதாக தெரியவில்லை சரி வரும் வழியில் அவளை பார்த்தாள் சொல்லவேண்டியது தான் சற்று காத்திருக்குமாறென்று ' நினைவத்தவன் . அவரோடு நடக்கலானான்...

 

வரும் வழியெல்லாம் அவள் வருகீறாளா ? என்றே நோட்டமிட்ட அவனது கண்ணகளூக்கு அவள் சிக்கவே இல்லை...கேண்டீனை தாண்டித்தான் அங்கே புதிதாக கட்டப்படும் ஆடிட்டோரியத்திற்கு செல்லவேண்டும்..

 

ரங்கநாதனிற்கு போன் வர அவரோ பேசிக்கொண்டே முன்னே வேகமாக சென்றார்.அவளை தேடி மெதுவாக வந்தவனின் கண்ணில் சிக்கியது கேண்டீனில் அமர்ந்த பாரதியே...

காதில் புகைவராத குறையாக தான் கோதித்து போனான் கே.கே.

 

" தம்பி,வாங்க " என்றழைத்தவரிடம் " சித்தப்பா,முக்கியமான போன் பேசிட்டு வரேன் நீங்க போய் முதல் பாருங்க  "  என்றான்.அவரும் சரியென்றே அங்கே விரைந்தார்...

 

அவளருகே சென்றான்...தன்னிருகைகளை மார்ப்பின் குறுக்கே கட்டியவாறே நின்றவனை கண்டாள். கடைசிதுண்டு வடையை வாயில் போட்டவள் குடித்த கப்பை குப்பையில் போட்டுவிட்டு அவனருகில் நின்றாள்...

 

" நான் உன்னை அழைத்தேன் நியாபகம் இருக்கா ? இல்லையா ? " என்றான்.

 

" எப்படியும் வெய்ட் பண்ண வைக்கதானே போறீங்க.அதான் அங்க வெய்ட் பண்றதுக்கு ஒரு நல்ல காஃபி வித் வடை சாப்பிடலாமேன்னு கேண்டீன் வந்தேன்..." என்று இழுத்தாள்.

 

" நான் உன்கிட்ட முக்கியமான விசயம் பேசனும் நீ ஆபிஸ் ரூம் போ. ஒரு வேலை இருக்கும் பார்த்துவிட்டு வந்திடுவேன். " என்று நகர போனவனிடம்...

 

" லன்ச் குள்ள வந்திடுவீங்களா ? இல்லை அதுவரைக்கும் வெய்ட் பண்ணவைப்பீங்களா ? நான் வேணா சாப்பிட்டு வெய்ட் பண்ணட்டுமா ? " என்றவளை என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.

சுற்றும் முற்றும் பார்த்து அவளருகில் வந்தவன்," அம்மா,தாயே நான் வந்திடுவேன் ஒரு பத்து நிமிஷத்துல போ போய் வெய்ட் பண்ணு " என்றான். தோலை குலுக்கியவள் ஆபீஸ் ரூமைநோக்கி நடைபோட்டாள்.

 

ஆடிட்டோரியத்தை பார்வையிட்டவன் என்ன செய்ய வேண்டும் என்று இன்ஜினீயரிடம் சொல்லிவிட்டு வேகமாக வந்தவன்.அவளை அழைத்தான் தன்னறைக்கு.அவளும் உள்ளே நுழைந்தாள்.

 

முதலில் சொல்ல தயங்கி நின்றவனுக்கு எப்படி அதை ஆரம்பிப்பதென்றே தெரியவில்லை...

 

" சார்,எதுக்கு வர சொன்னீங்க.இன்னைக்கும் மறந்துடீங்களா ? " என்றவளை பார்த்தவன்..

 

" பாரதி,நான் உன்கிட்ட சாரி கேட்டுகிறேன்...ஆரம்பத்துல உன்கிட்ட அப்படி பேசினதுக்கும் உன்னை வெய்ட் பண்ண வச்சத்துக்கும் சாரிமா...இந்த அக்கிரீமெண்ட் வேணாம் நீ இங்க இலவசமாகவே படி...நான் அத தவறாக சொல்லமாட்டேன்...ரியலி சாரி மா " என்றான் மிகத் தன்மையாக.,அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது,..

 

" சார், எந்த மரத்துக்கடியில் உட்கார்ந்து உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்ததுன்னு சொல்லுறீங்களா ! " என்றவளை பார்த்து முறுவலோடு நின்றவன்.." நான் உண்மைதான் சொல்லுறேன் பாரதி அக்கீரிமெண்ட் வாபஸ் வாங்கிடு நீ இங்க இலவசமாகவே படி நான் உன்கிட்ட பணம் வாங்கல" என்றான். 

 

" ரொம்ப நன்றி,நீங்க எத மனசுல வைச்சுட்டு பேசுறீங்க தெரியல.உண்மையா மனமிறங்கித்தான் பேசுறீங்களா,இல்லை இதுவும் என்னை பழிவாங்க எதுவும் பிளானா ? தெரியல கடவுளுக்கு தான் வெளிச்சம்...

 

இருந்தாலும் உங்கள் சாரியை நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன்.பட் அக்கீரிமெண்ட் வாப்ஸ் வாங்க முடியாது சார்....எனக்கு சுயமரியாதை ஓன்னு இருக்கு...இருக்கலாம் நான் சாரி கேட்டேனே சொல்லலாம் ஆனால் அதுக்கு முன்னாடி நீங்க சொன்ன வார்த்தைகள் இன்னும் அழியாம இருக்கே அத என்ன சார் பண்ண...

 

சோ அக்கீரிமெண்ட்ல எந்த மாற்றமும் இல்லை சார்,..அப்படி நீங்க கண்டிப்பா இலவச கல்லூரியில படிக்கனும் நினைத்தா என்னை போல தந்தை இல்ல மாணவிகள் இருக்காங்க அவங்கள படிக்கவைங்க சார்... உங்களுக்கே புண்ணியம் வரட்டும் " என்றாள்.

 

" அப்போ நீ என்னை நம்பவில்லையா பாரதி " என்றவனை... பார்த்தவள் நம்பிக்கை, இது நாம ஒருதர்கிட்ட எப்படி நடந்துகொள்வதை வைத்துதான் சார் வரும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல்,சொல்லுவாங்களே அதுபோல தான் சார் நம்ம முதல் அறிமுகமும்...எனக்கு உங்கள சுத்தமா பிடிக்காது சார்...இதுல உங்க மேல நம்பிக்கை வைப்பேன் நினைக்காதீங்க..இனியோட என்னை நீங்க அழைக்கிறதும் போதும்.மாதம் மாதம் உங்களுக்கு சரியாக பணம் வரும் அவ்வளவு தான் சார். நான் வரேன் " என்று சென்றுவிட்டாள்.

 

அவன் அப்படியே அமர்ந்துவிட்டான்..." எனக்கு உங்களை பிடிக்காது சார் "  என்றவார்த்தை அவனை உள்ளுக்குள் வதைத்தது...' உன்னை பிடிக்காது ' என்ற வார்த்தை மனமென்றும் ஏற்கா வார்த்தை தான்...யாராலும் இவ்வார்த்தைக்கு 

சந்தோசபடமாட்டார்கள்...அவனுக்கு அவள் அவ்வாறு கூறியது உள்ளுக்குள் பிசைந்தது. தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று எண்ண தொடங்கினான்...

 

அதன் பின் அவள் அவனையோ அவன் அவளையோ பார்த்துக்கொள்ளவில்லை.வீட்டிற்கு வந்தான் சோர்வாக... அவனது முகத்தில் சந்தோசமில்லை சோகமட்டுமே இருந்தது....

 

இங்கே தான் அவனுடன் யாரும் பேசவில்லையே...அதனால் அமைதியாக தன் ரூமில் சென்று அடைந்துகொண்டான்...இங்கே அண்ணி,அப்பா,அண்ணணின் ஒதுக்கலும் அவள் கூறி அவ்வார்த்தையும் அவனை தனிமைபடுத்தியது...

 

தனிமையில் அமர்ந்தவனுக்கு எழுந்த முதல் எண்ணமே யாருக்கும் நம்மை பிடிக்காதோ என்றே,அதன் பின் அவனுக்குள் பல சிந்தனைகள் ஓட ஒருகட்டத்தில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது...அமைதியாக எதையோ வெறித்து பார்த்தே அமர்ந்தான்...

 

" சியாமா,பாவம் கண்ணா.இப்படி நாம எல்லாரும் பேசாம ஒதுக்கம் காமிச்சா அவன் ஏதோ ஏதோ நினைச்சுட்டு இருப்பான்.. அவன்கிட்ட போய் பேசுமா...சின்ன வயசல அவன் எதுவும் தப்பு பண்ணா அம்மா அவன் கூட பேசாம ஒதுக்கம் காமிப்பாங்க,அது அவனாலதாங்கிக்க முடியாம தனியா அமர்ந்து அழுவான் ஏதோ நினைச்சுட்டிடு உட்கார்ந்து இருப்பான்.ஒதுக்கம் காட்டுற இந்த தண்டனை மட்டும் என் தம்பி கொடுக்காத பீளிஸ்..இப்படி அவன்கிட்ட பேசாம இருக்க வேணாமே அவன் தான் தப்ப உணர்ந்துடானே போய் பேசலாமே சியா..." என்று கமல் கூற.

 

" எனக்கு அவன் மேல கோபமில்லை,அவன் பண்ணது தப்புன்னு தெரியனும்ங்க.அதான் பேசாம இருந்தா உணர்வான்னு தான் நான்பேசலை.அவனும் ஒரு குழந்தைதான்..என்ன அப்பஅப்ப அவங்க அம்மா புத்தி வந்திடுது அத மட்டும்சரி பண்ணமுடியல...சரி நான் போய் பேசுறேங்க நீங்க கீழ ஹாலுக்கு போங்க நான் அவன அழைச்சுட்டு வரேங்க " என்றவளை பார்த்து புன்முறுவளோடு கீழே சென்றான்..

 

சியா,கண்ணனின் கதவே தட்டினாள்...கொஞ்ச நேரம் கழித்தே திறந்தான்....

 

" இவ்வளவு நேரமா கதவை,திறக்க அப்படி என்ன சார் பண்ணிட்டு இருந்தீங்க உள்ள " என்றவனை ஆராய்ந்தவாறே கேட்டாள்.

 

தன்கண்களை சரியாக துடைத்தவன்." ஒன்னும் பண்ணலை அண்ணி " என்றான்.

 

" சரி வா கீழ போலாம் " 

 

" வேணாம் நான் வரல அண்ணி,நீங்க போங்க " என்றவனை வம்படியாக கீழே அழைத்தவந்தாள்..

 

தன் பேரன் வரைவதை பார்த்து அமர்ந்திருந்தார் நாதன்...புத்தமொன்றை புரட்டியவாறே கமல் அமர அவர்கள் மத்தியில் அமரவைத்தாள் கண்ணனை சியா தானும் அமர்ந்துகொண்டாள்.

 

" வா,கண்ணா ஏன் ரூம்லே உட்கார்ந்திட்ட என்னாச்சு " என்று கமல் கேட்க..." அது ஒன்னில்ல கமல், சார் கில்டியா பீல் பண்றாராம் அதான் இப்படி தலைகுனிந்து இருக்கார்.." என்றாள் அமைதியாக இருந்தான்.

 

" அந்தபொண்ணுகிட்ட பேசுனீயா கண்ணா,என் சொன்னா அந்த பொண்ணு ஒத்துக்கிட்டாளா இலவசமாக படிக்க..." கமல் ஆர்வமாக கேட்டான்...

 

கே.கேவோ நடந்தை கூற மூவரும் சிரித்தனர்....அவர்கள் சிரிப்பதை பார்த்து கடுப்பானவன் தன்னறைக்கு செல்ல எழுந்தான்.அவனை கைப்பற்றி மீண்டும் அமரவைத்தாள்...

 

" கே.கேவையே அழைய விட்ட அந்த பொண்ண பார்க்கனுமே...." என்றாள் சிரித்துக்கொண்டு..

 

" அண்ணி, சிரிக்காதீங்க கடுப்பாகாது...வயசல மூத்தவன் சொல்லுறேன் கேட்டாளா!  உடம்பு முழுக்க திமிரு அண்ணி அவளுக்கு...தனக்கு தான் எல்லாம் தெரியும் தான் பேசுறது தான் சரின்னு இருக்கா...நானே இறங்கிவரேன் இவளுக்க என்ன அண்ணி,பேசாம ஓத்துக்க வேண்டியது தானே.பெரிசா பேசிட்டு போறா...இவகிட்ட ஏன் மன்னிப்பு கேட்டேன்ஆயிருச்சு..." என்றவனை பார்த்து முறைத்தாள் சியா..

 

" அப்பா,உங்கபுள்ள கமல்மட்டும் இப்படி பேசிருந்தா அவ்வளவு தான்.அப்டியே உங்க பொண்டாட்டி புத்தி மாத்த முடியாது...இவன் மனசா இறங்கி மன்னிப்பு கேட்ட மாதிரி தெரியல ஏதோ நானே இறங்கிவரேன் பேசுறான்...இன்னும்சார் பணத்திமிருல தான் இருக்கீங்களா இவன் திருந்த மாட்டான் மாமா.." என்றாள்

 

" என்ன பண்ண சிலரோட புத்திய எவ்வளவு அடிச்சாலும் மாத்த முடியாதுடா " என்று தன்மனைவியை தன் பிள்ளையும் கூறினார் நாதன்.அவ்வார்த்தை அவனை ஏதோ செய்தது அமைதியாக தலைகுனிந்து நின்றான்....

 

திமிரழகி...


Quote
Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 3 months ago
Posts: 68
26/03/2020 10:19 am  

நிறைவான பதிவு, kk நீ பாரதிகிட்ட உங்க அண்ணி சொன்னதற்காக மன்னிப்பு கேட்ட, மனவுந்த்து கேட்கல, பாரதி சொன்ன வார்த்தைகள் மனதில் காயம் பட்டிருக்கும் அது என்றும் மாறாது, அவள் உன்னை பிடிக்காதுன்னு சொன்ன வார்த்தை உனக்கு மனதிற்கு வருத்தம் அளிக்கிறதோ அது மாதிரிதான், உனக்கு பதில் அடி பாரதி கொடுத்துடா 👌👌👌👍👍👍🌺🌺🌺 


ReplyQuote
Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
28/03/2020 9:34 am  

@jothiru நன்றிமா 

 


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: