Forum

Notifications

அத்தியாயம் 1  

  RSS

Sivaranjani
(@sivaranjani)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 5
26/11/2019 7:03 pm  

 வணக்கம் மக்களே!🙏 நான் சிவரஞ்ஜனி. 😁 ஒரு புது கதையோட வந்திருக்கேன். 😍காதல்❤, சஸ்பென்ஸ்😲, த்ரில்லர்😱, கொஞ்சம் காமெடி😛😜😃 இப்படி எல்லாம் கலந்த கதை. படிச்சிட்டு உங்களோட கருத்துகள் சொன்னா சந்தோஷமா இருக்கும்...😁😁😁

                   அத்தியாயம் 1   ரோடியாலா:

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது,  ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை என்றாலும் லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.
*****************************

   “தமிழகத்தில்  தொடரும் மர்மக் கொலைகள்! இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம். கடந்த சில வாரங்களில் தமிழகத்தில் மர்மமான  முறையில்   அடுத்தடுத்து கொலைகள் நிகழ்ந்து வருகின்றன.
     இவை தமிழகத்தின்  வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்திருந்தாலும் கொலை செய்யப்பட்ட விதம் ஒரே மாதிரியாக இருப்பதால், இவற்றை செய்வது ஒரே நபர்  அல்லது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சைக்கோ கில்லராகக் கூட இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

      கொலை செய்யப்பட அனைவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னால் காணாமல் போனவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் காணாமல் போவோரின் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே  பெரும் அச்சத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தொடரும் கொலைகள், காணாமல் போனோரின்  குடும்பத்தாரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
     இது குறித்து காவல் துறை தனி பிரிவு அமைத்து  புலன் விசாரணை நிகழ்த்தி வருகிறது. இது தொடர்பாக இன்று, காவல் துறை ஆணையர்  செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இதுவரை கொலையாளி குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்றும், ஆனால், இது பணத்திற்காக நிகழும் கொலைகளா, சைக்கோ கொலைகளா, அல்லது அரசியல் பின்னணி எதுவும் உள்ளதா என்று பல கோணங்களில்  தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், கூடிய விரைவில் கொலையாளியைப் பிடித்து விடுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
      இத்துடன் அவர், பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை எனவும், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.”
      இவ்வாறாக ஒரு பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சியில், தகுந்த ஏற்ற இறக்கங்களுடன், கொலையைப் பற்றி,  கலை நயத்துடன் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார் அந்த இளம் செய்தி வாசிப்பாளர்.

   அந்தத் தொலைக்காட்சியின்  டி.ஆர்.பி யை ஏற்றியதில் இவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. இவர் செய்தி வாசிக்கத் துவங்கியதில் இருந்து நிறைய பேருக்கு செய்திகள் கேட்கும் ஆர்வம் அதிகரித்தது என்றால் அது மிகை ஆகாது. (அவங்களோட தமிழ் உச்சரிப்பு அப்படி.  கன்னா பின்னான்னு கற்பனை செஞ்சா கம்பெனி பொறுப்பேற்காது). ஆனால் பாவம் அவரே ஒரு நாள் செய்தியாகப் போகிறார் என்று அப்போது அவர் அறிந்திருக்க நியாயமில்லை.
      இதனைத் தங்கள் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர் 60 வயது நிரம்பிய ராமநாதனும் அவரது மனைவி சீதாலட்சுமியும். இவர்கள் காவிய ராமன் சீதா போன்று, அதிக துயருறாமல் மகிழ்வாக, அன்யோன்யத்துடன் வாழும் தம்பதியர்.

      இவர்கள் இச்செய்தியினைக் கேட்டு முடிக்கவும், அழைப்பு  மணி அடிக்கவும் சரியாக இருந்தது. ராமநாதன் எழுந்து சென்று கதவைத் திறந்தார். அவர்களின் தவப்புதல்வவன் சஞ்சீவ் தனது  காலுறையைக் கழட்டிக்  கொண்டிருந்தான்.

    முகத்தில் குழப்ப ரேகைகள் தவழ்ந்தாலும், இவரைக்  கண்டவுடன்  புன்னகையுடன், “சாப்டீங்களாப்பா?”  என்று கனிவுடன் கேட்டான். 

“இன்னும் இல்லப்பா. வா!  சேர்ந்தே சாப்பிடலாம்”  என்று கூறியவர், அவனது குழப்ப முகத்தினைக் கண்டு, “ஏம்ப்பா? எதுவும் பிரச்சனையா? உன்னோட முகமே சரியில்லயே?”  என்று அக்கறையுடன் விசாரித்தார்.
    தன் தந்தையின் அக்கறையில் மனம் கனிந்தவன் சற்று ஆயசத்துடன், “ஆமாம்ப்பா!  நீங்க கூட நியூஸ்ல பார்த்திருப்பீங்க. அந்த சீரியல் கில்லிங் கேஸ்”

   “ஆமா!”
“அதை என்கிட்டத்தான் கொடுத்திருக்காங்க. இந்தக் கேஸ் ரொம்பவே சேலஞ்சிங்கா இருக்கும்னு தோணுது. இதுவரை ஒரு சின்னக் க்ளூ கூடக் கிடைக்கல. கொலை நடந்திருக்குற விதம்லாம் பார்த்தா, கில்லர் சாதாரண ஆளா இருப்பான்னு தோணலை. அவ்ளோ ஈஸியா அவனை ரீச் பண்ண முடியும்னும் தோணல.”  என்றான் கவலையுடன்.

   “ஆமாம்ப்பா!  எனக்குமே அப்டித்தான் தோணுது!  அதோட இந்தக் கேஸ் உன்னோட  வாழ்க்கையவே புரட்டிப்  போடும்னு என்னோட உள்ளுணர்வு சொல்லுது. சரி! எல்லாம் நல்லதாவே நடக்கும்னு நம்புவோம்.”  என்றார் ஒரு பெருமூச்சுடன்.   
அவர் அதிகம் இவ்வாறு கூறுபவர் அல்லர். எனினும் அரிதாக இவ்வாறு ஏதேனும் கூறினால், அது அப்படியே நிகழ்ந்துவிடுவதுதான் வழக்கம்.
   எனவே சஞ்சீவ் சற்று அதிர்ந்துதான் போனான். அவனது அன்னை சீதாவும் அதிர்ந்தாலும், சூழலின் இறுக்கத்தை சிறிது தளர்த்த எண்ணியவராக,
   “வாழ்க்கையப் புரட்டரதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பசில எனக்கு வயித்தப் புரட்டுது. வாங்க சாப்பிடலாம்”  என்று அவர்களை சாப்பிட அழைத்தார்.

     அவர் எதிர்பார்த்தது போலவே, இருவரும் சிரித்துவிட்டனர். பின்னர் அனைவரும் அனைத்தையும் மறந்துவிட்டு, மகிழ்வுடன் சிரித்துப் பேசி இரவு  உணவருந்தினர்.

   அதே மகிழ்வுடன் தனதறைக்குச் சென்றான் சஞ்சீவ். அறை வாயிலைத் தாண்டியவுடன், அவன் கழுத்தில் கத்தி வைத்தது அந்த மர்ம உருவம்.

     “இந்தக் கேஸை நீ எடுத்தா, கொலை   ஆனவங்களோட லிஸ்ட்ல, உன்னோட அன்புக் காதலியும், அம்மா அப்பாவும் இருப்பாங்க. நீயே முடிவு பண்ணிக்கோ!” என்று மிரட்டியது.

    மிரட்டியது யார்? சஞ்ஜீவ் என்ன செய்யப் போகிறான்? அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

(தொடரும்)

அன்புடன்,
சிவரஞ்ஜனி குமாரவடிவேலு

 


Ezhilanbu liked
Quote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
26/11/2019 7:13 pm  

Welcome Ranjani❤️❤️


ReplyQuote
Sivaranjani
 Sivaranjani
(@Sivaranjani)
Guest
Joined: 3 months ago
Posts: 2
27/11/2019 9:56 am  
Posted by: @admin

Welcome Ranjani❤️❤️

😊😊😊


ReplyQuote
சங்கரேஸ்வரி குருசாமி
(@sankareswari)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 65
30/11/2019 9:31 am  

wow semma epi wating for your next epi...staring information romba arumiayaa iruku madam


ReplyQuote
Sivaranjani
 Sivaranjani
(@Sivaranjani)
Guest
Joined: 3 months ago
Posts: 2
30/11/2019 11:02 am  
Posted by: @sankareswari

wow semma epi wating for your next epi...staring information romba arumiayaa iruku madam

Thank you so much sis. Very happy to see your comment. 😍😍😍Madam laam vendaam. Per solliye kooppidunga😃


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: