Notifications

அந்தாதி நீ! _ 3  

  RSS

Sivaranjani
(@sivaranjani)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 5
29 Jan 2020 10:51 am  

ஆதளம்

இந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும், அந்தப்பாலுடன் கரும் பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த ஆபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. 

**************************

    கழுத்தில் கத்தி என்றதும்       படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்நேரம் தித்.திக் என்று இருக்கும். ஆனால் கழுத்தில் கத்தி  வைக்கப்பட்ட சஞ்சீவோ, துளியும் பதட்டமின்றி, ஒரு மென் முறுவலுடன், மென்மையாக அக்கையினைப் பற்றி, கையில் இருந்த கத்தியை உருவி விட்டு, முன்னால் இழுத்தான்.

“அடியே ஜர்னலிஸ்ட் ஜக்கம்மா! முதல்ல அந்த முகமூடியக் கழட்டு. ரொம்ப மொக்கையா இருக்கு.” என்றான்

  “என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு ராஸ்கல்! கொலை மிரட்டல் விட்டுருக்கேன் நானு! அதுக்கு மரியாதை குடுத்துக் கொஞ்சமாவது பொறுப்பா பயப்படுறியா நீனு?” என்று வடிவேலு பாணியில் முகமூடியைக் கழட்டிக் கொண்டே பேசினாள் சஞ்சனா.

  “ஆமா அப்படியே பயப்படுவாங்க. நீ எல்லாம் ஜர்னலிஸ்ட்னு வெளியே போய் சொல்லிறாத.” என்றான் நக்கலாக.

   “கஷ்டப்பட்டு, பிக் பாஸ் போல கரகர வாய்ஸ்ல மிமிக்ரி எல்லாம் பண்ணியிருக்கேன் நானு. அதுக்காகவாச்சும் கொஞ்சம் பயந்த மாதிரி நடிச்சிருக்கலாம்.” என்றாள் பாவமாக   

   “நீ எப்பவும் போடுற பர்ஃப்யூம  ஃபுல்லா போட்டுக்கிட்டு இவ்வளவு பக்கத்துல வந்தா, குழந்தை கூடக் கண்டுபிடிச்சிடும்.” என்றான் சஞ்சீவ்.

  “அப்போ பர்ஃப்யூம் வச்சுதான் கண்டுபிடிச்சிருக்கீங்க. நான் மாத்திப் போட்டிருந்தா என்ன பண்ணிருப்பீங்க?” என்றாள் சஞ்சனா.

  “அப்பவும் கண்டுபிடிச்சிருப்பேன். உன்னோட வாசம் எனக்குத் தெரியாதாடி?” என்றான் குறும்பான குறுநகையுடன்.

அவளுள் பாய்ந்த குற்றாலக் குளுமை, மெலிதான நாணச் சிரிப்பை வெளித் தள்ளியது.

  அதனை ரசித்தவாறே, “சரியான அரைவேக்காடுடி நீ. ஹைட் பத்தாம, கஷ்டப்பட்டு எக்கி கழுத்துல கத்தி வச்சு…. செய்ற வேலைய ஒழுங்கா செய்ய மாட்டியாடி நீ?” என்றான் சிரித்துக்கொண்டே.

   “போதும் போதும். ஓவராக் கிண்டல் பண்ணாதீங்க. நீங்க கண்டுபிடிக்கனும்னு பிளான் பண்ணிதான் பர்ஃப்யூம் எல்லாம் போட்டுட்டு வந்தேன். நீங்க பாட்டுக்கு கிரிமினல்னு நினைச்சு ஆக்ஷன்ல இறங்கி அடி வெளுத்துட்டா, சேதாரம் பலமாப் போய்றாது? அதுக்குதான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை! எப்படி என்னோட ராஜ தந்திரம்?” என்று வினவிக் கண்ணடித்தாள்.

    அவனோ விழுந்து புரண்டு சிரித்துவிட்டு, “அவ்ளோ பயம் இருக்குறவளுக்கு, எதுக்குடி இந்த விபரீத வேலை?” என்றான்.

  “எனக்கு உங்ககூட விளையாடனும்னு ஆசையா இருந்துச்சு. போலீஸ்கார்கிட்ட, அதுக்கேத்த மாதிரி விளையாடனும்ல? அதுக்குதான். ஆனாலும் நான் உங்க ரூமுக்குள்ள வர வரைக்கும் நீங்க கண்டுபிடிக்கலதானே? நீங்களும் கொஞ்சம் மக்கு போலீஸ்கார்தான்!” என்றாள்.

   “ம்ம்ம்! நீ பூனை மாதிரி பதுங்கிப் பதுங்கி வந்து, எதுவும் சொல்லிடாதீங்கன்னு வாயில விரலை வைச்சு அம்மாகிட்ட ஜாடை காட்டிட்டுப் போறப்பவே நான் பாத்துட்டேன்!” என்றான் கெத்தாக

“ஓ பாத்துட்டீங்களா? ஆனா எப்படிப் பார்த்தீங்க? நீங்க அந்தப்பக்கம் திரும்பில்ல உக்காந்து இருந்தீங்க?” என்று  ஆச்சரியத்துடனும் அசட்டுப் புன்னகையுடனும் வினவினாள்.

  “தாங்கள் அங்கே இருந்த கண்ணாடியை மறந்துவிட்டீர்கள் தேவி!” என்றான் நக்கலாக.

“தட் மண்டை மேல இருக்கிற கொண்டைய மறந்த மொமன்ட்!” என்றாள் பல்பு வாங்கிய பாவத்துடன்

  “ஹா ஹா கககபோ!” என்றான்  சிரிப்பு மாறாமல்.

   “சரி அது போகட்டும். நமக்கு எங்கேஜ்மெண்ட் மட்டும்தான் ஆயிருக்கு; இன்னும் கல்யாணம் ஆஆக! அதுக்கு முன்னாடி உனக்கு என்னோட ரூம்ல என்னடி வேலை?” என்றான் கிண்டலாக.

  நான் சொன்ன டயலாக்கை எனக்கே திருப்பி சொல்றியா, என்று மனதில் எண்ணிக் கொண்டவள், வெளியில்,
“அய்ய! இவரு பெரிய மன்மதன்; அப்படியே மயங்கிப் போய் வந்தாங்க; நான் ஒன்னும் உங்களப் பார்க்க வரல; அத்தை மாமாவுக்கு இன்னைக்கு வெட்டிங் ஆனிவர்சரி. அவங்களப் பார்த்து விஷ் பண்ணிட்டு, பிளஸ்ஸிங் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்.” என்றாள் மிடுக்காக.

  “இவ்ளோ நேரம் வெயிட் பண்ணி இப்போ ஏன் வந்த? என்னையும் பாத்துட்டுப் போலாம்னுதானே?” என்றான் கரைக்கும் குரலில்.

  “இல்லையே!” என்றாள் கெத்தாக.

  இருப்பினும் அவளது நயனங்கள் காதல் நர்த்தனங்கள் ஆடிக்கொண்டிருந்தன.

   “நோ மீன்ஸ் நோன்னு சொன்னாங்களேடி. ஆனா நீ சொல்ற நோவ உன்னோட கண்ணு எஸ்னு டிரான்ஸ்லேட் பண்ணுதே!” என்றான் காதலுடன்

   அவள் குறும்பாகச் சிரித்துவிட்டு, “காதல்ல மட்டும் கொஞ்சமா கள்ள ஆட்டம் ஆடிக்கலாம்!” என்று கூறிக் கண் சிமிட்டினாள்.

    “கள்ளி!” என்று கூறி, அவள் தலையில் மெலிதாகக் கொட்டிவிட்டு, “இப்போக் கிளம்பு! சீக்கிரமே பொண்டாட்டியா வா!”  என்று ஏக்கம் தெறிக்கும் கண்களுடன் அவளைத் துரத்தினான். 

  “நீங்க சொன்னா, நாங்க உடனே போயிடனுமா?” சஞ்சனா.

“பின்ன, இங்கயே குத்தவச்சு உக்காரப் போறியா?” சஞ்சீவ்.

“இல்ல. நானா முடிவு பண்ணி நானாதான் போவேன். இப்போ முடிவு பண்ணிட்டேன்; கிளம்புறேன்.” என்று கூறி, பெரிய நகைச்சுவையை உதிர்த்துவிட்டது போல் சிரித்தாள்.

  “ப்பாஹ்! எங்க இருந்துதான் இப்டி பரம மொக்கைலாம் பிடிக்குறியோ? இதுக்கு பதில் நீ அந்தக் கத்திலயே கழுத்தறுத்திருக்கலாம்!” என்றான் எள்ளாக.

  பழிப்பம் காட்டிவிட்டு நகர எத்தனித்தவளைக் கரம் பற்றி நிறுத்தி, “என் கழுத்துலயே கத்தி வச்சுட்டல? இதுக்கு நீ வட்டியும் முதலுமா அனுபவிப்ப பாரு! நானும் சீக்கிரமே உன்னோட கழுத்துல…” என்று கூறி நிறுத்தினான்.

“கழுத்துல? கத்தி வைக்கப் போறீங்களா?” என்று வினவினாள் அலட்சியமாக

“இல்ல! தாலி கட்டப் போறேன்! ரெண்டும் ஒன்னுதானே!” என்று கூறிச் சிரித்தான்.

அவளும் இவ்வார்த்தைகளால் தோன்றிய நாணப் புன்னகையுடன், “ஐ அம் வெய்ட்டிங்க்!” என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.

  ஆனால் அவன் உண்மையாகவே அவள் கழுத்தில் கத்தி வைக்கும் நாளும் வரும் என்று அப்போது இருவருமே அறிந்திருக்கவில்லை.

    அவளும் சிரித்துகொண்டே வெளியேறி, அவளது அத்தை மாமாவிற்கு வாழ்த்துக் கூறி, அவர்களிடம் வளவளத்துவிட்டு, அவர்களுக்குப் பரிசு வழங்கி விட்டு, அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

    சற்று நேரத்தில் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.  “என்ன ஏசிபி சார். என்னைய இந்தப் பக்கமாத் துரத்திவிட்டுட்டு, அந்தப் பக்கமா, ‘என் வீட்டில் வரும் உன் பாதம்..இதுபோதும் எந்நாளும்' அப்படின்னு மைண்ட் வாய்ஸ்ல பாட்டு பாடி ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்கதானே.” என்று இருந்தது அது.

   “ஹேய் கேடி! கேமரா எதுவும் செட் பண்ணிட்டுப் போயிருக்கியா?” என்று பதில் அனுப்பினான்.

    “உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்காகலாம் செலவு பண்ணி கேமரா செட் பண்ண முடியாது ஏசிபி சார்.” என்று அவள் அனுப்பினாள்.

  “பின்ன எப்படித் தெரிஞ்சுக்குவீங்க மேடம்?” இது அவன்.

  “ஐ நோ யு வெரி வெல். அணுஅணுவா ஆத்மார்த்தமா தெரியும். நீங்க என்கிட்ட இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!” என்று கூறி, அத்துடன் கண்ணடித்து, நாக்கை நீட்டும் ஸ்மைலிக்களையும் அனுப்பினாள்.

“ஆஹான்!” என்று  அனுப்பியவன், ஏதோ நினைவு வந்தவனாக அவளை அழைத்தான்.

   “கேக்க மறந்துட்டேன் சஞ்சு.  நான் இன்னைக்குதான் இந்தக் கேஸ் எடுத்தேன். இன்னும் யாருக்கும் தெரியாது. அதுக்குள்ள உனக்கு எப்டித் தெரிஞ்சுது?” எனக் கேட்டான்.

  சில நொடி அமைதிக்குப் பின், “இப்பவாச்சும் நான் ஒரு நல்ல ஜர்னலிஸ்ட்னு ஒத்துக்கோங்க. நீங்களே அசந்து போற அளவுக்கு ஒரு விஷயம் கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?” என்றாள் கெத்தாக.

   “விளையாடாத சஞ்சு. எப்டித் தெரியும்?”  என்றான் தீவிர பாவத்துடன்.

  “நான் நீங்க பேசிட்டு இருந்தப்பவே வந்துட்டேன் ஜீவா. உங்களுக்குத் தெரியாம உள்ள எப்டி வர்றதுன்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க பேசினது எதார்த்தமா காதுல விழுந்துச்சு. அவ்ளோதான். ஏன் எதுவும் பிரச்சனையா ஜீவா?” என்றாள் கவலையுடன்.

  “அதெல்லாம் ஒன்னும் இல்ல சஞ்சு. இது கொஞ்சம் கான்ஃபிடென்ஷியலா வச்சிருக்காங்க. அதான் கேட்டேன். நீயும் யார்கிட்டயும் இது பத்தி டிஸ்கஸ் பண்ணாத. ஓ.கே.வா?” என்றான்

   “ஸ்யூர் ஜீவா” என்றாள் அவளும் நம்பிக்கையாக.

  அதன் பின் அவர்கள் வழக்கமான காதல் மொக்கைகளைப் போட்டுவிட்டு, மகிழ்வுடனே உறங்கச் சென்றனர் இருவரும். இந்த மகிழ்வும்,  நிம்மதியும் நீடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்…

(தொடரும்)

நட்புடன்,
சிவரஞ்ஜனி குமாரவடிவேலு

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: