Forum

Notifications
Clear all

பாயுமொளி நீ எனக்கு 1  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 71
27/01/2020 4:02 pm  

அழகிய காலையோ அது...கேட்டிமேளங்கள் தாளங்க முழங்க அவ்வீட்டின் சுவருகளோ வண்ணப்பூக்களை அலங்கரிக்க வீடோ கல்யாணக்கலை கொண்டிருந்தது......சேலை கட்டும் பெண்கள் அழகுதான் மடிசார்
கட்டிய பெண்கள் என்றாளே பேரழகுதான்,,...அந்த வீடுமுழுவதும் அவ்வாறே வயதுவித்தியாசத்திலிருந்து மடிசார் அணிந்த பெண்களே இருந்தனர்....ஆடவர்களும்  வெற்றுடம்பில் குறுக்கே அணிந்த பூணூலுடையோறே.
அதிகம் மந்திரங்களை பல ஓத பெண் தோப்பானார் என்று சொல்லபடகூடிய பெண்ணின் தகப்பனார் அமர மாப்பிள்ளை பல மந்திரங்களை ஓதி காத்திருக்க நாளியகிறது பெண்ணை அழைத்து வாருங்கோ...என்ற எல்லா கல்யாணங்களில் ஐயர் கூறும் அதே டயலாக் கூற பெண்ணும் வந்தாள்,....கார்கூந்தல் அதில் அவளின் கூந்தல் வாசித்தில் மலர்த்தது மல்லிகை பூக்களும் சரமாய் அவள்கூந்தலை அலங்கரிக்க,,....அழுகுநேற்றில் நாமம் திலகமிட்டு கண்ணிலோ மையிட்டு எவ்வித ஒப்பனையின்றி பேரழகாய் நகைபல இட்டு மடிசார் புடவை பேரழகொன்று புகுந்திருக்க அங்கே யாருக்கனும் கண்ணும்
படவில்லை என்று கூறவே முடியாது...தன் தந்தையின் மடியில் அமர மாப்பிள்ளை தாலியை மேலே தூக்கி காண்பித்து அவளழகு கழுத்தில் காட்டினார்,.மாப்பிள்ளை ..கீழே அணைபோலிட்ட மையை தாண்டியும்
அவள்கண்ணும் கண்ணீர் விட....தாலிகட்டும் பொழுதில் மேளதாளங்கள் கொட்டபடுவதே புதியதாய்
வாழ்க்கை தொடங்கும் மணமகனும் மகளும் எந்த வித குறைகளையும் கேட்க கூடாதென்று அதே போல் இங்கே மேளதாளங்கள் இட்டும் சிலரின் செவி எட்டாமளில்லை.....

" ம்,,..எண்ண பன்னி என்னா பிரோஜனம் மாப்பிள்ளை தான் இறந்துவிட போகிறானே..., "

" என்ன அக்கா சொல்லுறேள்..."

" நோக்கு விசயம் தெரியாதடி இந்த பெண்ணோட ஜாகத்தில கல்யாணம் பன்னினா மாப்பிள்ளை செத்துருவானாடி..."

" ஐய்யோ அப்புறம் ஏன் அக்கா இந்த கல்யாணம்...."

" நீவேற மாப்பிள்ளை பொண்ண எங்கோபார்த்து பிடித்திடுத்து கட்டுனா இவளைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதம் நான் பல தடவ சொல்லிடேன் பிடிகொடுக்கல டி இந்த பிள்ளையாண்டா நினைத்தாள் தான்
கஷ்டமா இருக்கு அவ அம்மா அப்பா...என்ன பன்ன போறாளோ...."

இத சடங்குகள் முடிய பெண் தன் புகுந்த வீட்டிற்கு செல்லவேண்டுமல்லவா...தன்தந்தை கட்டிபிடித்து அழுதாள் தாய் பாட்டி தங்கை என்று தன் இரத்த உறவுகளை கட்டியனைத்து சென்றாள்....போகும் . வழியெங்கும் கனத்த இதயமே இருந்தது அவளுக்கு....

அவள்கையை எடுத்து தன் கையோடு வைத்தவன்...." காயூ நீ அழுவது இது தான் கடைசியாக இருக்கட்டும் இனி நான் தான் உனக்கெல்லாமே....நாம நல்ல நண்பர்களா இருக்கலாம் அப்பறம் கணவன் மனைவியா வாழலாம் உனக்கு விசா கிடைத்ததும் உன்னை அமேரிக்கா கூட்டிபோகிறேன்,நாம் புதியதாய் புது .வாழ்க்கை  வாழலாம்.... " என்றவனுக்கு தலையசைத்துவைத்தாள்,..அவளின் நாணம் அவனுக்கு பிடித்தது,...இங்கையும்சடங்குகள் முடிந்தது,...உள்ளே அழைத்து வந்தார் அவளை....என்ன தான்மருமகள் வந்தாலும்....தன் மகனை விழுங்கும் ராசிகொண்டவல்லவா கொஞ்சம் கோபம் தயக்கம் வேற அவளிடத்தில்..பாலும் பழமும் கொடுத்தனர்,,.பின் இரவு வர ஏனோ அவள் ஜாகத்தில் அப்படி ஒரு விசயம் இருப்பதால் பரிகாரங்கள் கேட்டிட....மூன்றுமாதம் தாம்பத்தியம் இல்லாது கல்யாணத்திற்கே முதன்மை கொண்ட சாமிக்கு விளக்கிட வேண்டும் என்று கூறியதால்,...மாப்பிள்ளை பொண்ணை பிரித்து வைத்தார் மாப்பிள்ளை தாயார்,,..,இருவரும் வேற வேற அறைக்குள் செல்லும் பொழுது
மெலியதாய் சிரித்துவிட்டு உள்ளே சென்றாள்...

காலை அழகாய் விடிய மாட்டு பொண்ணாச்சே...வாசல்தெளித்து கோலமிட்டு பல மந்திரங்களை ஓதி வீட்டையே கோயிலாக மாற்றிய தன் மருமகளை எண்ணி மேச்சிக்கொண்டாளும் வெளியில் காட்டாது விரப்பாக நின்றார்,,.,இருவரும் கோயிலுக்கு சென்றனர்...இருவரும் சகஜாமாகினர்,..விதி வலியதல்லவா ஆர்டர் என்ற பெயரில் தன் விளையாட்டை தொடங்கிய அவ்விதி.....மணமகனின் உதவி பெரிதும் தேவைபடுவதால் கண்டிப்பாக வரவேண்டும் வேலைக்கு என்ற கட்டாயத்தில் வேறு வழியின்றி மனமின்றி அமேரிக்கா செல்ல தயாரானான்.,,.சந்தோஷ்

அவளோ அவனுக்கு உதவிட அவளை அமரவைத்து சாரி காயூ உன்விட்டு இவ்வளவு சீக்கிரம் பிரிவேன் தோணல....அவளோ அவனின் வாயடைக்க....குட்டிமா ஏற்கனவே கஷ்டமா இருக்கு ஒரே வீட்டுல தனி தனி அறையில் இருக்கிறது.இப்ப இதுவேற மன்னிச்சுருமா.....உன்கூட வாழ அசைப்பட்டேன்,..ஆனால்....

உங்களுக்காக காத்திட்டு இருப்பேனா நீங்க பத்திரமா போய்டுவாங்கோ...அவள் நெற்றியில் மெல்லியதாய் முத்தமிட்டவன்,...இருக்க கையை பற்றினாள்,,..அவனோ அவளை பார்க்க அவளின் பார்வை புரிந்து...உன்ன பிரிய மாட்டேன்..அப்படியே எனக்கு எதாவது ஆச்சுனாலும் உனக்காக சாகறதுல சந்தோசம் தான்டா,....அவளோ அவனின் வாயை மீண்டும் அடைத்தாள்,..

அவனை வழியனுப்பிவைத்தனர்,....பின் நாட்கள் சென்றது...போனிலே பேசிக் கொண்டே இருந்தனர்....

பின் ஒருநாள் டிவியில்  செய்தி ஒன்று ஓடியது அமேரிக்கா நாட்டில் குண்டுவெடிப்பு.....தீடிரென்றுஅலறல் சத்தத்தைகேட்டவள் ஓடிவந்து காண அச்செய்தியை கேட்டு ஸ்தம்பித்துபோனாள்..சிறிது நேரத்திற்கு பின் போன் வந்தது அதில் தங்கள்மகன் இறந்ததாகவும் வீட்டுற்கு அவரது உடல் கொண்டுவர போவதாகவும் கூற வீடே கல்யாணம் கலை கொண்ட வீடு துக்ககலை கொள்ள அவளோ பெரும் வார்த்தை உதிர்காதவள் வேடித்து அழுதாள்...அவனின் உடலும் வர  எல்லாரும் அழுதனர்,...பொதுவாக வீட்டில் நேரம் சரியில்லை என்றாள் கூற பெண்களை சாடும் காலம் இது எக்காலத்திலும் மாறாது..இங்கோ சாவே விழுந்தது சாடலில்லாமல் இருக்குமா அவளை மறைமுகமாக திட்டிதீர்த்தனர்....அவனுக்காக ஈமச்சடங்குகள் முடிய......அவள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதை மதிப்பு அன்பு வற்றிபோய் கோபம் வெறுப்பே வந்தது....திட்டிதீர்த்து மீண்டும் தன் பிறந்த வீட்டிற்கே அனுப்பி வைத்தனர்அவளது மாமியார்,...அவள் தன் வாழ்க்கை தொடங்கிய ஒருமாதமே முடித்து வீட்டிற்கு வந்துவிட்டாள்...

விதிகள் ஆட மதிகளும் மனங்களும் அதில் மாய்வது விதிவிலக்க..

பாயுமொளி நீ எனக்கு....

 


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 3 months ago
Posts: 87
25/02/2020 4:55 pm  

கொஞ்சம் கனமான ஆரம்பம் தான்.


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: