Forum

Notifications

பாயுமொழி நீ எனக்கு 10  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 46
12/02/2020 2:28 pm  

ஜெர்ஸி ஜானியிடம் காயத்திரி பத்தி கேட்டாள்..." அண்ணா அவங்க எப்படிருந்தாங்க குள்ள வாத்து மாதிரியா....." 

" இல்ல குட்டிமா அவ...... " என்று அவளை நினைக்கலானான்,.....

 

" கறுப்பருவியாய் கூந்தல்

வெள்ளை நதியென 

அவள் நெற்றி 

வளைந்த வில்லாய் 

அவளின் புருவம் 

தொடுத்திடும் விழிபார்வையொன்றை 

அம்பென...

நடனமாடும் 

இருகருவிழிகள்...

தென்றலே 

அவளது மூச்சுகாற்று.....

பூவிதழோ அவ்விதழ் 

அனல் கொண்ட தேகம் 

கண்ணைபறிக்கும் பாயுமொளியவள்

இதயத்தை திருடும் 

வழிபறியவள்..." 

 

என்று கூறி முடித்தும் அமைதியாய் அவனிருக்க......

 

" அண்ணா டேய் அண்ணா.... " அவனை உலுக்கிட,..." இன்னா டி...." 

 

" ஒரு வரில அழகா இருப்பா இல்லைனா சுமாரா இருப்பாருனு சொல்லுறத விட்டு வைரமுத்து மாதிரி கவித சொல்லிட்டு இருக்க.என்ன அண்ணா மறுபடியும் காதல் ஆஆஆஆஆ,...." 

 

" ஐய்யோ இல்லடி கவித எழுத டரைபன்றேன் டி அதான் அந்த ஸ்டையில சொன்னேன் குட்டிமா,நானாவது மறுபடியும் காதலிக்கிறதாவது,....நம்ம அப்பாவ பத்தி தெரியாதா உனக்கு...நாம கிருஷ்டின் அவ ஹிந்துடா எப்படிடா..போரபோக்குல ஒரு சைட் மாதிரி நினைச்சுக்கோயேன்..இனி அவள பார்க்கவே போறதில்லை....

காதல் கன்றாவினு  " 

 

" ம்ம்....அது அண்ணா இல்லேனா அப்பா கொல்ல கூட தயங்கமாட்டாரு பார்த்திரு,,." 

 

" தெரியும் குட்டிமா நமக்கு படிப்பு குடும்பம் தான் முக்கியம்......" 

 

" சரி அண்ணா அந்த வேலைக்கு யாரு தான்வருவா...... " 

 

" தெரியலைடா.... " 

 

" வாவ்.... " அக்கா உன்னைய அந்த வேலைக்கு,கூப்பிடுறாங்களா..... தேவ் கேட்க

 

" ம் ஆமா தேவ்,...." 

 

" சூப்பரு அக்கா நீயும் நானும் ஒன்னா காலேஜ் போலாம் அக்கா,,..." 

 

" தேவ் கொஞ்சம் சும்மா இரு நானே யோசிக்கிறேன்...." 

" இதுல யோசிக்க என்ன இருக்கு மா...." அப்பா இடையில் நுழைந்தார்....

 

" அப்பா என்ன சொல்லுறீங்க... " .

 

" இது ஒரு நல்ல வாய்ப்புடா உனக்கு,,...திறமையிருந்து உபயோகிக்காத மனிதன என்னானு சொல்லுறது.....மிருங்களே தன்னோட திறமைய இப்ப காட்டுதுங்க....நம்ம திறமை மறைத்து வைத்து என்ன பன்ன....காயூ மா.....வீட்டுகுள்ள அடைந்திருக்கிறது தான் உனக்கு பிடிச்சுருக்கா...அப்படி இல்லப்பா இருந்தாலும் என்னால இது முடியுமா அப்பா...உனக்கு உன்மேலையே நம்பிக்கை இல்லையாடா..." அவளோ தலைகுனிய,..

 

" காயூ...வாழ்க்கை பாடம் கற்பது எளிதானது அல்ல.....அடிப்பட்டு தான் பாடத்தை கற்க வே முடியும்......உனக்கு நடந்த நினைச்சு வீட்டுகுள்ளே முடங்கி இருக்க சொல்லுற பெரண்ஸ் நாங்க இல்லயா...எதோ உன்வாழ்க்கை இப்படிஒரு சம்பவம் நடந்துருச்சு அத பத்தியே நினைக்காம...கடந்து அடுத்த கட்டடதிற்கு போணும் டா......நீ செய்ய போற ஆசிரியர் வேலை மாணவர்களுக்கு மட்டுமில்ல உனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கத்துக்கொடுக்கும்டா....." 

 

" இங்க நான் உன் அம்மா பாட்டி தேவ் யாரும் தடையா இல்லைடா...உனக்கு நீயே தடையா இருக்காத....உனக்கு நிறையா நேரமிருக்கு நாளைக்கு சொல்லு அப்பா கூட வரேன்...." 

 

" சரிப்பா.,... " 

" நாங்க எதையும் திணிக்க மாட்டோம் டா உன் சந்தோசம் உன்முடிவு தான் எங்களுக்கு வேணும் நாயகி கூற...." 

 

" அக்கா நல்ல முடிவா எடுக்கா,..."

" அதெல்லாம் நல்ல முடிவா எடுப்பா.....வாங்க சாப்பிடலாம்,...."  அனைவரும் பேசி சாப்பிட்டு உறங்கச் சென்றனர்.

 

ஜானி பிரேயர் பண்ண கண்மூடிட அவளேவந்தாள்....  " என்ன இது கொடுமை கர்த்தரே...." கஷ்டபட்டு தன்னை அடக்கி பிரேயர் பண்ணிமுடித்தவன்....பெட்டில் விழுந்தான்...விட்டத்தை பார்க்க மின்விசிறிகள் தன்னைமறந்து வேகமாய் சுத்திக்கொண்டிருந்தது....அதே கண்டவனுக்கு இன்றைய நாளின் நினைவுகள் சுழன்றது....' ஒருநாள் தானே பார்த்தேன் இந்த பாதிப்பு வர காரணமென்ன....' 

 

" ஒரு நாள் தான் ஆன நீ ஓராயிரம் தடவ பார்த்துட மகனே அவளையே நானே சாட்சி...." என்று மனச்சாட்சி குற்றம்கூற...." இல்லையே ஒருதடவ தான் பார்த்தேன்...." அவன் கூற 

 

" பொய்சொல்லாத உன் 'பொய் மத்தவங்களுக்கு பொய்யினு தெரியாது ஆன,எனக்கு மட்டுமே தெரியும் பொய்யென்று..." 

 

" வந்துடாரு வக்கில் வாதாடா அடங்குடா " என்று அடக்கிவைத்து கண்மூடலானான்....அவனின் தேவதை இருக்க நித்திரைதேவி தழுவ மறுத்தாள்....

" சரி அவள பார்த்த நாம தூங்கமா இருக்கோமே..நம்மல பார்த்து அவ தூங்காம இருப்பாளா...." 

 

" பேராசை மகனே " என்று மீண்டும் மெல்லிய ஓசை வர குப்பற படுத்துகொண்டு தூங்கமுயற்சித்தான்,..

 

அக்கதிரவன் எழுப்பதல் வேளை சிறப்பாய் செய்ய.....வாசலில் கோலமிட்டாள்

 

கடவுளை தொழுதால் தன் அழகிய குரலால்...

 

" குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா,... " மனமுவந்து பாட அவ்வீட்டாருக்கு அதுவொரு புத்துணர்ச்சியே..பின் சமையற்கட்டுகுள் தன் அன்னைக்கு உதவி புரிந்தாள்....

 

" ஏன்டிமா என்ன முடிவு எடுத்துருக்க....." 

அவளோ சிரித்துகொண்டு "  மீண்டும் பள்ளிக்கு போகலாம் சொல்லறது மாதிரி மீண்டும் கல்லூரிக்கு போகலாம்...." அவளின் முகத்தை வழித்தவர் " என் ராசாத்தி நல்ல படியா போய்ட்டு வாடிதங்கம்,,...இனி உனக்கெல்லாம் நல்லகாலம் தான்டா...போய் கிளம்புடா...." 

 

 

அவளும் தன் தங்கையோடே கிளம்பினாள்,...உடையை நேர்த்தியாக அணிந்தாள்..முகம் சுழிக்காதவாறு உடுத்தினாள்....மூவரும் விடைபெற்றனர்,,...

 

கல்லூரிக்கு வர,..அங்கே ஆபீஸ் இருவரும் அமர்ந்திருந்தனர்....நாராயணனும் காயூவும்..தேவ் தன் வகுப்பிற்கு வந்தாள்.....

 

இருவரும் வெங்கட் ரூமிற்கு உள்ளே சென்றனர்...." வணக்கம் சார்.." " வணக்கம் உட்காருங்க.." 

 

" .நான் சூர்யநாராணன் காயத்திரி அப்பா சார்...அவளுக்கு இங்க வேலை வர சம்மதம்,,,...பட் இதர விசயங்கள் பேசனும் அதான் நான் வந்தேன்..." 

 

அவர் யோசித்தவர்   " காயத்திரி நீங்க போய் ஆபிஸ் பார்ம் தருவாங்க பீல் கொடுங்கமா "  என்றார் வெங்கட்.....சரியென்று அவளும் வெளியேறினாள்,...." இப்ப சொல்லுங்க நாராயணன் சார் சம்பளத்த பத்தியா....ஐய்யோ இல்ல சார் அவ சம்பாரிச்சு வாழனும் அவசியம்இல்ல சார்.அவள வேலைக்கு அனுப்பிரதே அவ வீட்டுலே முடங்கி இருக்க கூடாதுனு சார்...அவளுக்கு நடந்தை கூறினார்..." 

 

" இன்னுமா சார் இப்படியல்லாம் இருக்கு....கஷ்டமா இருக்கு..இந்த சின்ன வயசுல... " 

 

" அப்பறம் இங்க அவளுக்கு எந்த பிரச்சினையும் வராதுல சார்..." நாராயணன் கேட்க

 

"  நீங்க கவலை படாதீங்க நாராயணன் காயத்திரி இங்க ஒரு ஆசிரியரா இருந்தாலும் எனக்கு அவ பொண்ணு மாதிரி.,.நான்,பார்த்துபேன் சார்...இங்க இருக்குற.மாணவர்களுக்கும் எனக்கு அப்படிதான்...நீங்க தைரியமா இருங்க நாங்க பார்த்துபோம்.." 

 

பின் அனைத்தும் பேசி முடித்து சென்றார் நாராயணன்,....வெங்கட் சிவில் மூன்று ஆண்டு மாணவர்களுக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணினார்...அனைவரும் ஆடிடோரியத்தில் கூடினர்,,......

 

 " டேய் மச்சி சிவில் பிள்டிங் அமைதியா இருக்கு எங்கடா போனாங்க எல்லாரும் "  ஜானி கேட்டான்....வகுப்பில்லாததால் அங்கே அரட்டை அடித்தனர்.." .மீட்டிங் டா...." தாமஸ் கூற " தெரியாத உனக்கு விசயமே..." பைசல்வினவ..." என்னாதுடா..." 

 

 

 

" நம்ம தேவ்வோட அக்கா வந்தாங்களா அவங்களே அந்த சப்ஜட்டிற்கு ஆசிரியரா போட்டாங்க தியாகு கூற....." ஜானியின் உலகம் நின்றது,,.

 

' ஆத்தி ஒருநாள் பார்த்ததுக்கு நான் தூங்கலையே,....இதுல தினமும் நான் ..கர்த்தரே இது என்ன சோதனை உன்பிள்ளைக்கு,.....இனி அந்த பிள்ளை இருக்க சைடே தலைவச்சு படுக்க கூடாது ஜானி....' தனக்கு தானே தன் மனதிற்கு கட்டளைபோட்டான் அடங்கி போகிறதா...திமிறி எழுகிறதா..என்றே பொருந்திருந்து காணலாம்....

 

பாயுமொளி நீ எனக்கு.....

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: