ஊமைப் பெண்ணின் நாட்...
 
Notifications

ஊமைப் பெண்ணின் நாட்குறிப்பு  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 3 weeks ago
Posts: 38
11 Feb 2020 10:13 pm  

எழுதிவைத்தாளோ

எண்ணிவைத்திருந்தாளோ

கூறவேண்டியவையும்

கூறாது 

வேண்டியிருப்பதையும்

அக்குறிப்பில்..

 

சத்தமில்லாமல்

முட்டிகொண்டிருக்கும்

வார்த்தையெல்லாம்

வடித்தாள்

அக்குறிப்பில்....

 

கண்களில்

சுரக்கும் 

நீர் சேமித்திடலாகாது

காதுகள்

கேட்கும் 

சொற்களும்

சேமித்திடலாகாது

உதடுகள்

பேசா 

ஊமையின்

வார்த்தைகள்

மட்டும்

இங்ஙனம் மட்டும்

சேமித்திருகிறது

நாட்குறிப்பாக,....

 

 

ஆழ்ந்தநினைவுகள்

ஆளும் கனவு

ஆர்பறிக்கும்

ஆசைகளென

ஆட்கொண்டிருக்கிறது

அவளது

குறிப்பில்

 

சொல்லா

காதல்

பெண்ணின்

மனம்

வண்ணமாய்

வடித்திருக்கிறதே

கவிதாயாயிங்கு

இக்குறிப்பில்.....

 

பேசா

மங்கையின்

பேசும்

நாட்குறிப்பு

உணர்வகளோடே...

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: