Forum

குளிர்கா(ல)தல் பயணம...
 
Notifications

குளிர்கா(ல)தல் பயணம்  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 48
06/02/2020 8:57 am  

அடர்ந்த கறுவானம்

காற்றை சூழ்ந்து 

சிறையெடுத்த 

பனியும் கொண்ட 

குளிர்காலமோ....

விடிந்து விடியா 

அந்நேரம்  மலர்களும் 

கண்விழித்து 

மொட்டவிழ்த்து 

குளிக்கும் 

நேரமே பனியில்.

இன்னும் காதலில் 

கரையாதிருக்கும் 

இலையும் சிலபனித்துளியும்....

.சில்லேன்ற சாலை

பாதமதை இழுக்க 

சாலையில்,

திரையாய் 

எங்கும் பனிமூட்டமே....

 

ஆள்அரவமற்ற சாலை 

ஒரே பயணம் 

இரு மனங்கள் 

கொண்டு 

இருவரும் 

காதலோடு மூவராய் 

நான்குகால்களும் 

ஐவிரல் 

கோர்த்தொரு பயணம்...

 

ஆதரவாய் சாய்ந்த 

அந்நெஞ்சின்  

என்னவனின் 

இதயத்துடிப்பு

தாலாட்டாய் 

இசைத்திட 

கேட்டுக்கொண்டே 

அவனணைப்பில் 

நானும் நடந்திட 

கண்ணிற்கு புலப்படா 

சாலை மூளைக்கு 

புலப்படாத பயணம் 

இடைவிடாத சென்றது....

 

இருவரது

உதடுகள் யாதொரு வார்த்தை உதித்தது உதிக்கிறதென்றே அறியா பேச்சுகளை

பேசிசெல்கின்றோம்...

 

ஆடைக்குள் பதுங்கிய 

குளிருக்கும்

சூடேற்றிச் செல்லும்

என்னவனின் 

விரல் தீண்டலும்.

 

மயக்கும்

வித்தை

கண்ணுடையவனோ

மயங்கிச்செல்லிகிறேன்

அக்கள்ளச்சிரிப்பில்

மயக்கிச்செல்பவனுடனே...

 

உரையாடல்

எதற்கென்று

அறியாது

இப்பயணமெதற்கென்று

அறியாது

அவனது சிறு

அழைப்பில்

அடைக்கலமென

ஆனேன்

 

இறுதியில்

நின்ற பயணம்

இருகோப்பைக்குள்

சூடேற்றும்

தேநீரு பருகவே

இப்பயணமோ

இல்லை

இருவரை

பருகிச்சென்ற

குளிர்கால

காதல் பயணமோ

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: