Forum

Notifications

தொலை தூரக்காதல்  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 48
04/02/2020 6:16 pm  

உயிரிலிருந்து

பிரித்து

நமக்கொரு உணர்வை

உடலை உயிரை 

கொடுத்த 

அவள்குருதியுற்றி

உணவென 

கொடுத்து

அடையாய் காத்த

அன்னையும்

 

அறிவை புகட்டி

அறமதை சொல்லி

நெஞ்சில்

சுமந்து

தோளையும்

தந்து

கைகள்பிடித்து

உலகம் கற்பித்த

ஆசான் தந்தையும்

 

விடுத்தென்னை

ஈன்ற வளர்த்த

தன்னுயிரின் பாதியென்னை

உயிரென நாளும் சுமந்த

அவ்வுயிரை தாரைவார்த்து

எனக்கென துணைக்கொடுத்து

பிரிந்து நிற்கும்

இவ்விருக்கடவுளின் அன்பு

எனக்கு தொலைதூரக் காதலே.....

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: