Forum

Notifications

என்னுள் யாவும் நீயாக - 13 Precap  

  RSS
Ezhilanbu
(@admin)
Member Admin

என்னுள் யாவும் நீயாக! - 13 Precap

திருமணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டவள் அவனிடம் ஒரு வித ஒதுக்கத்தை வெளிப்படுத்தியதையும் உணர்ந்தே இருந்தான் பிரசன்னா.

ஆனாலும் ஆசை கொண்ட மனதின் வெளிப்பாடாக அவள் சொன்னது உண்மையாக இருக்கக்கூடாது என்று அவனின் மனம் தவித்ததோ? இல்லை நான் சொன்னது அனைத்தும் பொய் என்று சொல்லி விட மாட்டாளா என்று உள்ளம் துடித்ததோ? ஏதோ ஒன்று உள்ளுக்குள் இருந்து அவனை அந்தக் கேள்வியைக் கேட்க தூண்டியிருந்தது.

***

"மனதில் தாக்கம் இருந்த உன்னால் எப்படி நம்ம திருமண நிகழ்வில் இயல்பாக இருக்க முடிந்தது?" என்று கேட்டான்.

'இதைச் சொன்னால் இன்னும் வருத்தப்படுவானே' என்பது போல் தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"இனியும் தனியா வலிக்க ஒன்னுமில்லை. சும்மா சொல்லு...!" என்றான் மரத்துப் போன குரலில்.

***

என்னால அப்போ சொல்லவே முடியலை. அதுக்குக் காரணம் எனக்கே தெரியலை. சொல்லிடணும் சொல்லிடணும்னு எனக்குள்ள உருப்போட்டு என்னை நானே தயார் படுத்திக்கிட்டு சொல்ல நினைப்பேன். ஆனா உங்களை நினைச்சதும், உங்களோட பேசினதும் என்னால் அந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் அப்படியே விட்டுவிட தான் முடிந்தது. ஏன் உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லாம இப்படித் தள்ளி போடுறேன்னு என்னை நானே கேட்டுப் பார்த்தேன். எனக்கே பதில் கிடைக்கலை..." என்று உதட்டை பிதுக்கி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

Quote
Posted : 20/02/2020 6:23 pm
 Nithya Mariappan
(@Nithya Mariappan)
Guest

🙄 🙄 yeppo samathanam aaguvanga

ReplyQuote
Posted : 20/02/2020 6:30 pm
Ezhilanbu liked
Ezhilanbu
(@admin)
Member Admin
Posted by: @Nithya Mariappan

🙄 🙄 yeppo samathanam aaguvanga

இன்னும் முட்டிக்கவே இல்லையே 😜

அதுக்குள்ள சமாதானம் எப்படி 😁

ReplyQuote
Posted : 20/02/2020 9:44 pm

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: