Forum

நிலா 4  

  RSS

யஷ்தவி
(@yashdhavi)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 45
24/02/2020 8:24 pm  
 • கட்டிலில் மறுபக்கம் புரண்டுத் தூங்கும் போது,

  அடிடா அவள
  உதடா அவள
  கொல்லுடா அவள
  தேவையே இல்ல...

  என்று அந்த மொபைல் பாட, "காலங்காத்தால இவங்களுக்கு இதே வேலையா போச்சு" என முணுமுணுத்தவாறே கண்களை திறக்காமலே மொபைலை தடவி தேடி எடுத்து,

  "good morning"  என்றாள் அவள்.

  "என்னடி இன்னும் தூங்குறியா?" என்று எதிர் முனையில் ஒலிக்க

  "தூங்குற ஆளைப் பார்த்து தூங்குறியான்னு கேக்குறியே சாவி. இது உனக்கே நல்லா இருக்கா? உன்னை எல்லாம் என் அப்பா எப்படி கல்யாணம் பன்னிகிட்டாரு? அந்த காலத்து ஆளுங்க சொல்கிறது போல எந்த சொக்கு பொடி போட்டு என் அப்பாவை மயக்கின? சரியான இம்சை" என கண்களை மூடியே பேசினாள் அவள்.

  "உனக்கு கொழுப்பு கூடி போச்சு டி, பெத்த அம்மா கிட்ட பேசுற பேச்சைப் பாரு   உன்னை கொட்ட பக்கத்துல நான் இல்லை என்கிற தைரியத்துல பேசுறியா? வீட்டுக்கு வருவ இல்லலையா? அப்போ பார்த்துக்குறேன்" என்றார் ஜமீன் வீட்டு மூத்த மருகள் சாவித்ரி.

  "என்னடி அமைதியா இருக்க? மறுபடியும் தூங்கிட்டியா?" என்க,

  "அட போ மா எந்த நாளும் இதே டையலோகை கேட்டு காதுல இரத்தம் வராத குறை தான்" என்றாள் அவள்.

  "யேன்டி பொம்பளை புள்ளையா காலையிலேயே எந்திரிகாம இவளோ நேரம் தூங்குற? நல்லாவா இருக்கு? உன் புருஷன் வீட்டுக்கு போனா உன்னைப் பற்றி என்ன நினைப்பாங்க? என சாவி கூறும் போதே,

  இந்து "அக்கா" என்று கூற

  அதன் பிறகே தான் என்ன கூறினோம் என்று சாவிக்கு நினைவு வந்தது.

  அவள் மறந்த விடயத்தை மீண்டும் தானே ஞாபகப்படுத்தி விட்டேனே என தன்னையே நொந்துக் கொண்டார் சாவித்ரி.

  எதிர் புறம் அமைதியாக இருக்க "கிறுஸ்தி" என்று கலங்கிய குரலில் சாவித்ரி அழைக்க,

  "என் புருஷனையும் எழும்ப விடாமல் அவனையும் கட்டி பிடிச்சிட்டு தூங்கினா போச்சு" என்றாள் குறும்பாக.

  "நீ..." என்று சாவித்ரி ஆரம்பிக்க,

  "அம்மா நீ எதையும் யோசிக்காத, எவளோ நாள் தான் மா இப்படியே இருக்கிறது. நான் எதையும் தைரியமா பேஸ் பன்னலாம்னு இருக்கேன். எனக்கு பழசை ஞாபகபடுத்திட்டேன்னு பீல் பன்னாத. OK" என்று கிறுஸ்தி கூற,

  சாவியும் "சரி" என்றார்.

  "நீ என்னை திட்டினதால் நான் ஊருக்கு வாரதா இருந்த ஐடியாவ கென்சல் பன்னிட்டேன்"என்றாள் கிறுஸ்தி.

  "யாரு உன்னை வர சொன்னா? நீ அங்கேயே இரு" என்றார் சாவி.

  "நெஜமா நான் வர மாட்டேன்" என்று அவள் கூற,

  "வராத"என்றார் சாவித்ரி.

  "என்னடா இது இந்த கிறுஸ்திக்கு வந்த சோதனை" என்று அவள் தன்னுள்ளேயே புலம்பினாள்.

  "நீ தானே என்ன வர சொல்லி கெஞ்சின இப்போ என்ன வேனாங்குற?" என்று கேட்க,

  "என் அண்ணா, தேவி பசங்க, அஸ்வின் அவனோட பிரன்ஸ் எல்லாருமே வாராங்க அதனால தான். நீ அங்கேயே இரு" என்று அழைப்பை துண்டித்தார் சாவி.

  அடித்துப்பிடித்து எழுந்தவள்,'ஒரு வேளை கனவா இருக்குமோ' என்று மொபைலை பார்க்க, அதில் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது உறுதியாயிற்று.

  'அப்பா கிட்ட பேசியாகனுமே' என்று அவசரமாக பாத்ரூம் சென்று முகம் கழுவி தந்தைக்கு Skype ல் வருமாறு மெசேஜ் செய்தாள். அவரும் ஸ்கைப் மூலமாக வந்தார்.

  "ஹாய் அப்பா, என்ன உங்க பொன்டாட்டி என்ன வர வேனாங்குறா? என்னோட ஈகோவ ரொம்ப டச் பன்றாங்க கொஞ்சம் அடக்கி வைங்க" என்று அரவிந்திடம் கூறினாள் கிறுஸ்தி.

  "அப்போ நீ வரமாட்ட? என்று அரவிந் கேட்க,

  "அப்பா; அம்மா திரும்பி என்ன கூப்பிட்டா நா கண்டிப்பா வருவேன்" என்றாள் கிறுஸ்தி.

  "ஹாய் குட்டிமா" என்று அங்கு வந்து அமர்ந்தனர் ராம் மற்றும் இந்து.

  "ஹாய் ராம் பா ஹாய் இந்துமா" என்றாள் அவள்.

  "என்னாச்சு அண்ணா?" என்று ராம் கேட்க,

  "எப்பவும் போல தான் பொன்டாட்டிக்கும் பொண்ணுக்கும் நடுவுல மாட்டிட்டு முழிக்கிறேன்" என்றார் அவர்.

  மற்ற இருவரும் சிரித்தனர்.

  "என்ன மிஸிஸ் ராம் பிரசாத்? உங்க அக்கா பின்னாடி வால் மாதிரி சுத்திட்டு இருப்பிங்க, இப்போ இவங்க கூட இருக்கிங்க" என்று வினவ,

  "அக்கா சொன்னது போல உனக்கு கொழுப்பு ஜாஸ்தி டி" என்று சிரித்தார் இந்து.

  "இந்து மா இந்த சாவி என்னை பொருட்டாவே மதிக்குது இல்லை. நீங்க உங்க அக்கா என் கிட்ட கெஞ்சுறது போல ஒரு ஐடியா கொடுங்க  please" என்று கெஞ்ச,

  "நானா?" என்று அவர் கேட்க 

  "ஆம் தாயாரே, நான் என் தந்தைமார்களுடன் சற்று உரையாடி விட்டு வரும் வரை தங்களுக்கு நேரம் தரப்பட்டுள்ளது" என்று கூறி

  ராம், அரவிந் பக்கம் திரும்பினாள் கிறுஸ்தி.

  'இப்போ எதுக்கு நம்ம பக்கம் தாவுறா' என அண்ணன் தம்பி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

  "ரொம்ப பயப்படாதிங்க உங்க இரண்டு பேரையும் கோத்துவிட மாட்டேன், ஒரு விஷயம் பேசனும்" என்றாள்.

  மீண்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

  "அப்பா" என்று அவள் அழைக்க,

  'என்ன இவ பாசமா பேசுறா' என்று தம்பியின் காதில் கிசுகிசுத்தார் அரவிந்.

  "அங்க என்ன குசுகுசுன்னு?" என்று அவள் கேட்க,

  "சே சே ஒன்னும் இல்லையே" என்று தோளை குலுக்கினர் இருவரும்.

  "நான் என்னோட திங்ஸ் எல்லாவற்றையும் எடுத்து அங்கேயே வரட்டுமா?" என்று ஏக்கமாக கேட்க,

  மூவருக்குமே கண்கள் கலங்கி விட்டது.

  இவர்களைப் பார்க்க வந்த சாவியும் இதை கேட்க நேர்ந்தது. அவரின் இதயத்தில் யாரோ ஈட்டியைப் பாய்ச்சிய வலியை உணர்ந்தார் அவளைப் பெற்றவள். உடனேயே சாவி அவளது மொபைலில் அழைக்க மொபைல் ரிங்கை கேட்ட மூவரும் திகைத்தனர்.

  "அப்பா, அம்மா எதுக்கு இப்போ எனக்கு கோல் பன்றாங்க?" என௧் கேட்டாள் கிறுஸ்தி.

  "என்னது அம்மாவோட கோலுக்கு போட்ட ரிங்டோனா இது?" என்று மூவரும் உச்சகட்ட அதிரச்சியில் இருக்க லெப்டொபின் திரையில் அவர்களுடன் காளி வடிவத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தார் சாவி.

  இப்போது அதிர்ச்சியாவது கிறுஸ்தியின் முறையாயிற்று.

  "வீட்டுக்கு வா" என்று கூறி கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்தார் சாவி.

  "இந்து மா' என்று அவள் அழைக்க

  "செத்தடி நீ" என்று கூறி அக்காவை சமாதானபடுத்தச் சென்றார் இந்துமதி.

  "அப்பா" என்று அழைக்க

  "ஆளை விட்றுமா என்னை தூது போக சொல்லாத, நீ வேண்டும் என்றால் உன் ராம் அப்பா கிட்ட பேசி பாரேன்" என்றார் அரவிந்.

  "யேன் அண்ணா?" என்று அங்கிருந்து ஓடி விட்டார் ராம்.

  இவள் முகத்தை தொங்க வைத்து இருந்தாள். உலகத்தில் எந்த தந்தைக்கு தான் தன் மகள் கவலையாக இருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கலாம், அதுவே அரவிந்தையும் ஆட்கொள்ள,

  "குட்டிமா" என்றார் அரவிந்.

  "நான் அம்மா கிட்ட கோபம் குறைஞ்சதுக்கு அப்பொறமா பேசுறேன் நீ இப்போ ஊருக்கு வாரதுக்கு உனக்கு தேவையான திங்சே எல்லாம் எடுத்து வை, டைமுக்கு சாப்பிடு" என்று தன் மகளை சமாதானபடுத்தி விட்டு அழைப்பை துண்டித்தார் அரவிந்.

  அரவிந்நாதன் மற்றும் சாவித்ரி திருமணம் ஆகி பத்து வருடங்களிற்கு பிறகு பிறந்த தவப் புதல்வியே கிறுஸ்திகா. தாய் அவளிடம் கொஞ்சம் கண்டிப்பாக நடப்பார். அரவிந்திற்கு மகள் என்றால் அவர் உயிர். மற்ற அனைவருக்குமே அவள் செல்லம்.

  கிறுஸ்திகா ஐந்தடி உயரமானவள், வெண்பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் இட்ட நிறம், வானவில் போன்ற இரண்டு புருவங்கள், கயல் போன்ற காந்த விழிக் கண்கள், அலையாக முழந்தாளைத் தொடும் அடர்ந்த கருங்கூந்தல், ரோஜா இதழ்கள், பஞ்சுமிட்டாய் கண்ணங்கள், சிறிய மூக்கு ,அளவான உடல் பருமன், பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் 21 வயதுப் பெண்.

  அன்றைய நாள் அனைவரும் தத்தமது வேலைகளை அவசரமாக முடிக்க, ஆரவும் அவனது வேலைகளை செய்து முடித்து விட்டு நாளை ஊருக்கு செல்வதற்காக தேவையான அனைத்து பொருட்களையும் பெக் செய்து விட்டு உறங்கினான். 

  கனவில், "கண்ணா என்னை விட்டு திரும்பவும் போய்ருவியா? என்று அந்த குரல் கேட்க திடுக்கிட்டு எழுந்தான் ஆரவ்.

  இக்குரல் தொடர்ந்து ஐந்து வருடங்களாக கேட்கின்றதே, இக்குரலே என் தனிமையையும் போக்குகின்றது, என்னை இம்சிக்கின்றதே, அத்தோடு இது எனக்கு பரீட்சையமான குரல், ஆனால் யாருடையது?  ஒரு வேளை இது அவளுடையதாக இருக்குமோ என்று நினைத்து குழப்பத்தில் மறுபக்கம் திரும்பி உறங்கினான் ஆரவ் கண்ணா.

   


Quote
Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 4 months ago
Posts: 68
25/02/2020 9:07 am  

கிறுஸ்தி சுட்டி பெண்ணா இருப்பாள் போல, ஏன்னா கடைக்குட்டி அதான் எல்லோருக்கும் செல்லம் போல 👌👌👌🌹🌹🌹


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: