Forum

Notifications
Clear all

முக்கோணம் - அத்தியாயம் 2  

  RSS

Thuvas
(@thuvas)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 17
25/02/2020 3:16 am  

அத்தியாயம் 2


சுரேந்திரன் .... தற் கால இளைஞன். நாகரீகமான அதற்காக கலையை மறக்காத  வேலை நல்ல சம்பளம் நல்ல மரியாதை. சொந்த கார் சொந்த வீடு....யார் பெண்ணை பெற்றவர் பார்த்தாலும் ஜாதகம் கேட்கும் அளவுக்கு அழகன்.கரு கரு முடியும்,டிரிம் செய்த தாடியும் மீசையும் அவனை வட மாநில ஆளோ என யோசிக்க வைக்கும். நடிகர் ஜீவா வின் பல பிரதிபலிப்புகள் இருக்கும் ஒரு அழகான தரமான ஆண்.
இதை எல்லாம் ஒரு பேட்டியில் மோகினி கண்டு கொண்டாள். இவன் மேல் தங்கைக்கு இருக்கும் மானசீக காதலை தெரிந்தவலயிற்றே..திட்டம் மனதுக்குள் உருவாக ஆரம்பித்தது. பேட்டிக்காக அவனது நடமாட்டங்களை ஓரளவுக்கு தெரிந்து வந்திருந்தது அவளுக்கோ இப்போது உதவியது.
ஒரு நாள் அவளுடைய வண்டி அவனது ஆபீஸ் வாசலில் பழுதாகி நின்றது.. நிற்க வைக்க பட்டது. வெளியே காரில் வந்த சுரேந்தர் அவளுக்கு உதவினான்.அவளை அவள் விடுதியில் கொண்டு போய் விட்டான்.  இரவில் தங்கைக்கு ஃபோன் செய்து " என்ன உன்னோட சுசி புதிதாக ஒன்றும் எழுதலய? அவரது கவிதைகள் எனக்கு புரிவதே இல்லை கருமம்" என்று அவளை தூண்டி விட்டு அவன் கவிதைகள் பற்றியும் அதன் கருத்துகளையும் தெரிந்து கொண்டாள்.
அதன் பின் அடிக்கடி அவள் வண்டி அவன் ஆபீஸ் முன்னர் பழுதாகி நின்றது. அவனும் அவளை விடுதியில் விடுவது தொடர்ந்தது.பயண நேரங்களில் தன் தங்கையின் மூலம் தான் அறிந்த விஷயங்களை தானே சொல்வது போல பேசி அவனை பாராட்டி அவனுடனான ஒரு நட்பை விருத்தி செய்து கொண்டாள் . மெதுவாக தன்னுடைய தனிமை தன்னுடைய பாவப்பட்ட நிலமை,பொறுப்பில்லாத அப்பா, ராட்சஸி சித்தி, பச்சோந்தி தங்கை என்று அவனுக்கு பூ சுற்றினாள். இயற்கையாகவே இளகிய மனம் படைத்த சுரேந்தர் உள்ளத்தில் இவளை தவிர அனைவரும் கெட்டவர்கள் ஆனர்கள்.அதிலும் தங்கை விஷமனாள். மோகினியின் நிலமைக்கு வருந்தினான்.உலகில் சந்தோஷத்தை உணராத அவளுக்கு எல்லா இன்பங்களையும் காட்ட ஆசை பட்டான்.பூப்போல பெண்ணை தீயில் இட்ட அனைவரையும் சபிதான்.ஒரு ஃபெப்ரவரி 14 தன் காதலை சொன்னான். மோகினி போலியாக அழுதாள்,ஆனந்தம் அடைந்தாள். ஆனால் அடி மனதில் அனு உன்னை ஜெய்து விட்டேன் டி..உன் மானசீக காதலன் என் மடியில்..சீக்கிரம் வந்து உன் முன் மார்தட்டி காட்டுகிறேன் பார் என்று கருவினாள். சித்தி உன் ஆசை மகள் உன் மடியில் விழுந்து கண்ணீர் விட போகிறாள்.காத்து கொண்டு இரு என்று சூலுறைதாள். கோயம்புத்தூர் செல்ல சந்தர்ப்பம் எதிர் பார்த்திருந்தால்.எல்லாம் எதேற்சை செயலாய் தெரிய வேண்டும் அல்லவா...அதற்காக...சந்தர்ப்பமும் வந்தது..

காலையிலேயே அனு ஃபோன் செய்தாள்." அக்கா என் doctor படிப்பு முடிந்து விட்டது. எனக்கு இரண்டு நாளில் பட்டமளிப்பு விழா..கண்டிப்பா வா கா" என்றாள். மோகினி மனதுக்கு முடிவெடுத்தாள். தான் விரும்பிய doctor படிப்பு முடித்து விட்டோம் என்ற மமதை இல் இருப்பாள். அன்று சுரேந்தரை கூட்டி சென்று அனைத்தையும் அடித்து நொறுக்கி போடுகிறேன் பார் என்று உள்ளே சிரித்து கொண்டாள்.வெளியே " கண்டிப்பா டி.ரொம்ப சந்தோஷம். உனக்காக ஒரு பரிசு கொண்டு வரேன்.நீ அசந்து போக பொறே பாரேன் "என்றாள்.அவள் எப்படி கேட்டும் surprise என்று விட்டு ஃபோன் கட் செய்தாள்.
மாலையில் சுரேந்தர் இடம் சொன்ன போது அவன் குழம்பினான்."ஹை அவங்க எல்லாரும் உன்ன மதிக்கல கஷ்ட படுதினங்கனு சொன்ன.அப்புறம் நாம ஏன் அவங்கள போய் பாக்கணும்? "
" இல்லப்பா நான் அவங்க எனக்கு குடுக்கத மரியாதை ய நான் குடுத்து காட்ட போறேன் பா.
உங்களை காட்டி எனக்கு கடவுள் நல்ல வாழ்க்கை குடுதிருக்கர்னு என் சித்திக்கும் தங்கைக்கும் கட்டணும் அதான் பா" என்றாள். அரை மனதாய் சுரேந்தர் சம்மதித்தான். இருவரும் கோயம்புத்தூர் கிளம்பினர். டிரெயின் வேண்டாம் பஸ் இல் போகலாம் என மோகினி சொன்னாள். இரவு பஸ் ஏறினர். மோகினி தனது வெற்றியை எண்ணி மகிழ்ந்த வரே சண்டை போட்டு ஜன்னலோர கட்டிலை கேட்டு தூங்கி போனாள். 
இப்படி எல்லாரும் நினைப்பதே நடந்து விட்டால் கடவுளை மறந்து விடுவோம் என்று கடவுளுக்கு நன்றாக தெரியும்.அதனால் தான் அடிக்கடி கடவுள் தான் இருப்பதை நமக்கு உணர்த்துவார்.அன்றும் உணரும் விதமாய் ஒன்றை செய்தார்....கடவுள்....


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: