Forum

Notifications
Clear all

முக்கோணம் அத்தியாயம்-3  

  RSS

Thuvas
(@thuvas)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 17
26/02/2020 10:11 pm  

அத்தியாயம் 3 
கடவுள் தான் இருப்பதை காண்பிப்பதற்காக ஒரு மாட்டை வேகமாக சென்று கொண்டு இருந்த பஸ் முன்னே அனுப்பினார். பாவிகள் நிறைந்த இந்த உலகில் யாருக்கு தான் பாரபட்சம் பார்ப்பார் கடவுள்.....போட்டு தாக்கினார் என வைத்து கொள்ளுங்களேன்.
பட்டமளிப்பு விழாவில் தன் தமைக்கைகாக காத்து  இருந்தாள் அனுபமா. வரவில்லை.அவளது ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு பார்த்தாள். ஆஃப் செய்ய பட்டிருந்தது. அவளது பதற்றத்தை பார்த்த ராஜ்மோகன் " விடு கண்ணா,வருவதனால் மோகி எப்படியும் வந்து விடுவாள். உன்னோட கனவு நனவாகும் நேரத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்காமல் அனுபவி கண்ணா,அக்கா நிச்சயம் வருவாள் " என சமாதானம் சொன்னார். ஆனால் மனதின் ஓரத்தில் ஒரு கண்ணுகுட்டி உதைக்க தான் செய்தது.மோகினி சாதாரணமாக வரமா டாள் ஆனால் வருகிறேன் என்று சொன்னால் அவள் நிச்சயம் வருவாள்,சரியான நேரத்துக்கும் வருவாள். ஆனால் ஏன் வரவில்லை என குழம்பினார். அனுவும் சமதானமடயவில்லை. மனம் குழம்பி தவித்தது. ரேவதி தொடர்ந்து அவள் எண்ணுக்கு முயன்று பார்த்து கிடைக்காமல் அனுவிடம் வந்து நின்றார். நேரம் நில்லாமல் ஓடியது. பட்டமளிப்பு விழா முடிந்தது.எல்லோரும் புகைப்படம் எல்லாம் எடுத்து முடித்து வெளியே வரும் போது அனுவின் ஃபோன் பாடலை வெளியிட்டது.பார்த்தல் மோகினியின் எண். உடனே எடுத்து அனு" அக்கா இங்கே சென்றாய்? என்னை ஏமாற்றி விட்டாயே கா?" என அழு குரலில் பேசினாள்.உடனே அடுத்த பக்கத்தில்," நான் சுரேந்தர் பேசுகிறேன். உங்கள் அக்காவை திருமணம் செய்து கொள்ள போபவன்.இங்கே ஒரு விபத்து.நேரில் வாருங்கள் ,தயவு செய்து..."என்று ஆஸ்பத்திரி யின் முகவரி சொன்னான்.அடுத்த கேள்விகளை கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அனு உடனே தாய் தந்தைக்கு தந்தி மொழியில் விஷயத்தை சொல்லி அழைத்து கொண்டு புறப்பட்டாள்.
ஆஸ்பத்திரியில் மோகினி நிலமை மோசமாக இருந்தது. ரேவதி அழுது அழுது ஓய்ந்து போய் ராஜ்மோகன் மேல் சாய்ந்து இருக்க, ராஜ்மோகன் அதிர்ச்சியின் உச்சியில் பேசவும் திரானியற்று அமர்ந்து இருந்தார். இதுவரை பார்த்திராத புதியவனான சுரேந்தர் இடம்  நடந்தது என்ன என்று கேட்கலாமா வேண்டாமா என அனு யோசித்து கொண்டு இருந்தாள். ஆனால் சுரேந்தர் தான் குழம்பி போனான்.மோகினி தன் உறவுகள் பற்றி என்னிடம் சொன்னதென்ன இங்கே நடப்பதென்ன?.அவர்களை பார்த்தால் நடிப்பது போல தெரியவில்லையே?. அவளுக்காக உண்மையாகவே துடிக்கிறார்கள் . என்று யோசித்து கொண்டே அனுவை பார்த்தான்.அவள் கண்ணிலேயே அவள் மனதை படித்தவன் தானாகவே அவளிடம் சென்று நடந்த வற்றை விவரிதன்." நான் சுரேந்திரன். என்ஜினீயர்.ராம் constructions வேலை செய்கிறேன். மோகினி யும் நானும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வருகிறோம்.உங்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு பஸ் இல் புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது மாடு வண்டிக்கு குறுக்கே பாய்ந்து விபத்தாகி விட்டது. யாருக்கும் பெரிய சேதம் எதுவுமில்லை வெறும் ரெத்த காயங்கள் தான். ஆனால் மோகினி எசகு பிசகாக விழுந்ததில் முதுகில் அடிபட்டிருகிறது. உங்களுக்கு செய்தி அனுப்ப அவள் போனை தேடி எடுத்து பார்த்தால் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆக இருந்தது. பின்னர் சார்ஜ் செய்து செய்தியை அனுப்ப நேரமாகி விட்டது" என்று கோர்வையாக இயம்பி முடித்தான்.அவன் பேசும் நேரம் முழுவதும் கண்ணில் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அனு முதல் கேள்வியை கேட்டாள்." உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே,நீங்கள் கோயம்புத்தூர் இதற்கு முதல் வந்து இருக்கிறீர்களா? " என்றாள். பதில் உடனே வந்தது." ஆம், ஒரு இலக்கிய விழா வில் பங்கேற்க வந்தேன்." என்றான்.அனு நெஞ்சை கைகளால் அழுத்தி கொண்டு கேட்டாள்" இலக்கிய விழா? ஏன்?" என்று நிறுத்தினாள். அவன் சொன்னான்" நான் ஒரு கவிஞன். பகுதி நேரமாக கவிதை எழுதுவேன். புனைபெயர் சுசி" என்றான். அனு ஆயிரம் பேர் உள்ள ஆஸ்பத்திரியில் தன்னை முழுமையாக தொலைத்தாள். காலடியில் பூமி நழுவியது. அப்படியே சரிந்து அமர்ந்துவிட்டாl. சுரேந்திரன் காரணம் தெரியாது யோசித்து, தமகைக்காக அழுகிறாள் என்ன விலகி சென்று அமர்ந்து கொண்டான்.அனு ,"அய்யோ ஏன் இப்படி எல்லாம் நடந்தது? நான் என்ன செய்தேன்? அவன் கவிதைகளில் மேல்  தொடங்கிய காதல் அவனை இலக்கிய விழா வில் தூரத்தில் இருந்து பார்த்தபோது அவன் மேலும் பிரவாகம் எடுத்தது எதற்காக? இப்படி கலங்கி அழ தானா? ஏன் கடவுளே, எத்தனையோ கவிதைகளை வாசித்திருக்கிறன், எத்தனையோ ஆண் களை கடந்திருகிறேன். ஆனால் இவன் போல யாரும் என்னை தாக்கியது இல்லையே.. தூரத்தில் தானே பார்த்து என் மனதை பரிகொடுதேன்" என்று அனுவின் மனம் புலம்பி தீர்த்தது.
ரேவதியின் மனம்" என்னால் தான் எல்லாமா? நான் நல்ல தாயாய் இருக்க எல்லா முயற்சியும் செய்தெனே? ஏன் இப்படியானது?" என புலம்பியது.இப்படி எல்லாரையும் புலம்பவிட்டு கலங்க விட்டு மோகினி கண் விழித்தாள். ஆனால் யாரும் எதிர் பார்க்காத மாற்றங்களுடன்...வைத்தியர் மேலும் கலங்க வைக்க ரிப்போட் களுடன் காத்திருந்தார்.


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: