Forum

Mullum malarai thondrum 11  

  RSS

(@raji-krishna)
Writer Moderator
Joined: 8 months ago
Posts: 18
31/12/2019 7:43 am  

பரபரவென்று இருந்த மனதை எப்படி அடக்குவது எவ்வாறு சமாதானம் செய்வது என தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான் அவன்...

பார்க்கப் போனால் இப்பொழுது இந்த முழு கப்பலுக்கும் அவனே தலைவனாக இருந்தான். அவன் ஒன்று கூறினால் அதை கப்பலோட்டிகளும், மாலுமிகளும், ஏன் உடன் வந்த இராணுவப் பிரிவு தலைவரும்கூட கேட்டாக வேண்டும் தான்..

அப்படித் தான் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது...
இப்படி ஒரு பதவியில் இருந்து கொண்டு தன் மனம் ஏதோ சிறு குழந்தை போல அவளை பார்த்ததும் துள்ளுவதும், அந்த குதூகலம் தன் முகத்தில் தெரிந்து விடுமோ என இவன் மறைப்பதும் ஆகப்பெரும் அவஸ்தையாக இருந்தது !!

வேலையையும் காதலையும் சேர்த்து பார்க்கலாம் என்று எந்த தைரியத்தில் தான் முடிவு எடுத்தோம் என்று அவனுக்கே புரியவில்லை

இப்போதோ தன் அறிவு சொல்வதை மனம் கேட்காமல் முந்திக் கொண்டு சென்று அவள் பாதங்களில் சுற்றி சுற்றி வருவதெல்லாம் என்ன டிசைன் என்று அவனுக்கே விளங்கவில்லை தான்..!!

இதெல்லாம் சரிப்பட்டு வராது என முடிவெடுத்தவன் எதுவானாலும் அவளிடம் பேச ஆரம்பித்து விட்டால் தன் மனம் மட்டுப் படும் என எண்ணி மெதுவாய் அவளை நெருங்கினான்...

அடர் இருளின் போர்வையில் வானும் கடலும் ஒன்றாய் தோன்ற.. வானில் நட்சத்திரக்கண் சிமிட்டல்களின் ஜாலமும், நிலவின் குளிச்சியும் மனதை ஏதோ செய்ய.. தன் நண்பர்களிடம் இருந்தும் பிரிந்து கப்பலின் மேல் தளத்தில் தனியாய் நின்று கொண்டிருந்தாள் அக்‌ஷரா!

அவள் நினைவுகளிலும் அவனின் ராஜ்ஜியமே... எவ்வளவோ ஆண்களை தினம் தினம் சந்திக்கிறாள்... யாரும் அவளிடம் சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தியதில்லை...

இவனானால் தன் உள்ளம் புகுந்து நெஞ்சை நெகிழச்செய்கிறான்.. அவன் பார்வையிலேயே தன் மனதில் காதல் பூக்கள் சாமரம் வீசும் விதம் அவளுக்கு பதட்டத்தை கொடுத்தது என்றால்.., அது அவளுக்கு பிடித்தும் இருந்தது..

அந்த சூழலும் மோனமும் அவள் பெண் மனதை இம்சிக்க.. ஏதும் யோசிக்கத் தோன்றாது நின்று கொண்டிருந்தவளின் அருகே வந்து அவளது சந்திர வதனத்தை பார்த்துக் கொண்டிருந்தவனின் நிலையோ அனலில் இட்ட புழுவாக இருந்தது..

கையருகில் காதல் பெண்.., கட்டி வைத்த இருள்.., தோரணம் கட்டிய வானம்.., அதில் மோகமூட்டும் நிலவு.. இவ்வளவும் இருக்க ஒருவனது உணர்வுகள் எப்படி துள்ளாட்டம் போடும்??

தன் மனதின் எண்ணப்போக்கை கட்டி வைத்துவிட்டு அவளை சும்மாவேனும் ரசித்துக் கொண்டிருக்கத் தூண்டிய மனதின் குரலில் அவளையே பார்த்தபடி நின்றான்...

எவ்வளவு நேரமானதென தெரியவில்லை.. எதேச்சையாய் திரும்பியவள் தனதருகே தன்னையே மொய்த்த விழிகளைக் கொண்டவனை கண்டு பதறிவிட்டாள் சில நொடிகள்..!!

அவளது முக பாவனைகளிலேயே கருத்தை வைத்திருந்தவன்.. அவளது பதற்றத்தையும் உடனே கவனித்து அவளை ஆற்றுப்படுத்தினான்..

"ஏய் அக்‌ஷூ ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. நான் சும்மா.. நீ தனியா நிக்கிறயேன்னு இங்க வந்தேன்.. ஏதோ யோசிச்சிட்டு இருந்தயா.. அதனால உன்ன தொந்தரவு செய்யாமல் நின்னுட்டு இருக்கேன்.." என்றான்.

"நான் நிலாவ பாத்துட்டு இருந்தேன்.. " என்றாள் மெல்லிய குரலில்..

"நானும் என்னோட நிலாவ தான் ரசிச்சிட்டு இருந்தேன்..." என்றான் ரகசிய குரலில்..

குப்பென முகம் சிவந்தது அவளுக்கு.. அவன் என்ன சொல்கிறானென புரியாமலா இருக்கிறது அவளுக்கு?

நிலாவை ரசிக்கிறேன் என்றால் சரி.. என் நிலாவை என குறிப்பிட்டால் என்ன அர்த்தமாம்..? இங்கு அவளைத் தவிர வேறு யாரும் இல்லாத போது.., அவன் கண்கள் அவளையே கட்டி எறும்பாய் மொய்க்கும் போது.. அவனது வார்த்தைக்கு அர்த்தம் அவளுக்கு புரியும் போது.. முகம் சிவக்காமல் என்ன செய்யுமாம்?

"செவ்வானம் போல.. சிவந்த நிலவும்.. கோடி அழகு..." என்றான் இன்னும் ரசனையாய்..

பெண்ணவள் தேகம் படபடப்பில் நடுங்க.. என்ன பதிலுரைப்பது என ஏதும் புரியாமல் அவனை வைத்த கண் எடுக்காது பார்த்தபடி இருந்தாள்..

"அக்‌ஷூ.. "

"ம்ம்ம்ம்ம்"

"பிடிச்சிருக்கா...."

"ம்ம்ம்ம்"...

திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவன் குறும்புச் சிரிப்பில் தன் தவறை உணர்ந்து ..

" என்ன கேட்டீங்க.."

"ஒன்னுல்ல இந்த இடம் பிடிச்சிருக்கானு கேட்டேன்.." என்றாம் சன்ன சிரிப்புடன்..

"அது.., வீட்ட விட்டு முதல் தடவை இவ்வளவு தூர பயணம்.. யார்ட்டயும் பேச கூட முடியல... கஷ்டமா இருக்கு.. ஆனாலும் பிடிச்சிருக்கு.." என்றாள்

"ஏன் நாங்கல்லாம் இல்லயா..?" என்றான் ஒரு மாதிரி குரலில்..

அதிலிருந்தது என்ன? கோபமா? ஆதங்கமா? ஏக்கமா? இல்லை ஆறுதலா? எல்லாம் கலந்த கலவையா??

என்னவென்று விளங்காமலே அவனை புரிந்துகொள்ளும் முயற்சியாக அவன் முகம் பார்த்தால்.. அங்கிருந்து எதயும் கண்டுகொள்ள இயலவில்லை..

"அக்‌ஷூ.., யாருமில்லைனு நினைக்காத.. நான் எப்பவும் இங்க தான் இருக்கேன்.. உனக்கு என்ன தேவைன்னாலும் என்கிட்ட தயங்காம சொல்லு.." என்றான்..

இது ஒரு தலைவனாய் அவன் சொல்லும் தேறுதலா? இல்லை அவளுக்கானவனாய் அவனது ஆறுதலா? என மீண்டும் மனம் குழம்பியது..!!

"அக்‌ஷூ.., வர்றிய கொஞ்சம் நடக்கலாம்.. ஒரே இடத்துல நிக்காத ரொம்ப நேரம்.. கால் வலிக்கும்.. அதோட உப்புக்காத்தும் உனக்கு சேருமோ இல்லயோ?" என்றான்.

சம்மதமாய் தலையாட்டி அவனுடன் நடக்க... மெல்ல நடந்தபடி கப்பலை ஒரு சுற்று சுற்றினான்.. ஒரு மேற்பார்வை போல.. எல்லாம் சரியாக நடக்கிறதா என்ற கண்காணிப்பு... அத்தோடு அனைவரிடமும் அவரவர்க்கு ஏற்றபடியான கேள்விகள் பதில்கள்.. இவ்வளவிலும் இவள் உடன் வருவதையும் கவனித்துக் கொண்டான்..

அவர்களது உரையாடலில் இவளையும் இணைத்தான்.. அனைவரும் தத்தமது அறைக்குச் சென்று விட்டனர் என தெரியவும் இன்னும் நடையின் வேகத்தை குறைத்தபடி ஊர்ந்து சென்றான்..

அவளை விட்டுப் பிரியும் நொடியை இதயம் வெறுக்கிறதே.. என் செய்வான் அவன்..??

இத்தனைக்கும் இருவருக்கும் அருகருகே அறைகளை ஏற்பாடு செய்திருந்தான்.. ஆயினும் அவ்வளவு தயக்கம்..!! அவளை பிரிய..!!

தனதறைக்கு அருகே வந்ததும்.. "அக்‌ஷூ சூடா எதாவது குடிக்கிறயா?" என்றான்.

இவள் விழிக்கவும்.. "என் ரூம்ல குட்டி அடுப்பும் பாத்திரங்களும் இருக்கு.. என் தேவைக்கு நான் எப்பவும் வச்சிருக்கது.. சுக்குமல்லி காபி குடிக்கிறயா? குளிருக்கு இதமா இருக்கும்" என்றான்..

இவள் மேலும் தயங்கவும் ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் நுழைந்து கொண்டான்... அவளுக்கு அவஸ்தை.. அவனுடன் உள்ளே சென்றால் யாரேனும் தவறாக நினைப்பார்களோ என...

அதையும் மீறி ஆசையும் வெடிக்கத்தான் செய்கிறது.. அவனுடனான நிமிடங்களுக்காக..

ஆசை மிஞ்ச.. பெண்ணின் கண்ணியம் காவல் போட அவள் தயக்கம் புரிந்தவன் போல.., கைகளில் இரண்டு கோப்பைகளுடன் வெளியே வந்தான்..

"வா.. என அழைத்துச் சென்று அவனது அலுவலக அறையின் பால்கனியில் கடலைப் பார்த்தவாறு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்..

இப்போது தயக்கமின்றி அவனருகே சென்று இவள் அமர... " நான் யாருக்கும் இப்டி காபிலாம் போட்டு குடுத்ததில்ல.. " என்றான்..

என்ன சொல்ல வருகிறான்? சீ.ஓ வாக பேசுகிறானா இல்லை அவளவனாக ஆறுதல் மொழிகிறானா என்ற இவளது குழப்பத்தை தன் செயலின் மூலம் தெளிய வைக்கிறான்..

அதாவது... 'நீ எனக்கு முக்கியமானவள்.. உன்னை மற்றவர்களை போல பார்க்கவில்லை' என்கிறான்..

சட்டென மனதுக்குள் பலகோடி சூரியன்களின் ப்ரகாசம் கூடுகிறது.. அது முகத்திலும் பிரதிபலிக்க... "அவள் தலையை மென்மையாக கலைத்து விட்டு... இப்டி சிரிச்சிட்டே இரு... நல்ல பொண்ணு நீ" என்றான்..

மேலும் மேலும் மனம் அவன்பால் தன்னை தொலைக்கிறதே..!!

"நான் அடிக்கடி இப்படியான பயணங்கள் செய்றதால அங்க என்ன கிடைக்குதோ அதைத்தானே சாப்பிட்டாகனும்..? அதனால அம்மாவோட ப்ரிபரேசன் இந்த சுக்குமல்லி பொடி...

எங்க போனாலும் இத எடுத்துட்டு போனா நான் ஒரு கப் ரெண்டு கப் இத குடிக்கிறப்போ.. அந்த உணவுப்பதார்த்தங்கள் என் குடலை பாதிக்காதுன்னு அவங்க செஞ்சி குடுத்தனுப்புறது.." என்றான்

உண்மையில் கோலாவும், கோல்ட் காபியுமாக நாடு எங்கெங்கோ போய்க் கொண்டிருக்க இவனென்ன சுக்குமல்லி என்கிறானே என சிந்தித்தாள் தான்..

அதற்கான அவன் விளக்கம் இவள் கேட்காமலே கிடைக்கவும் இன்னுமாய் கண்களில் மின்னல் தெறிக்கிறது பெண்ணிற்கு!!

"என் சுக்குமல்லி ரகசியத்த முதல்ல சொல்ற ஆளும் கூட நீ தான்..." என்றான் மேலும் ரகசியமாகிவிட்ட குரலில்... "நீ மட்டும் தான்" என சேர்த்தே சொன்னது இன்னும் ஹஸ்கியாய் ஒளிக்க... நாணம் நங்கையை நனைக்க.. எழுந்து அவளதறைக்கு ஓடியே விட்டாள்..!!


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 2 months ago
Posts: 81
16/01/2020 7:59 pm  

Nice ud


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: