Forum

Mullum malarai thondrum 19  

  RSS

(@1)
Writer
Joined: 9 months ago
Posts: 4
07/02/2020 4:45 pm  

அக்‌ஷரா அச்சிறுவனிடம் அன்பாய் பேசியே அவன் நம்பிக்கையைப் பெற்றாள். முதல் நாள் அவளும், சீ.ஓ வும் மட்டும் அவனுடன் அவர்களது குடியிருப்பு பகுதிக்குச் சென்றார்கள்..

அங்கே அடர்காட்டில் நடப்பதே சிரமமாய் இருந்தது. அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து நடப்பதென்பது மிகவும் கடினமான காரியமாய் இருந்தது.

அக்‌ஷராவின் தடுமாற்றத்தைப் பார்த்த சிறுவன் பின் அவனது வேகத்தைக் குறைத்து இவர்களுக்கு வழி காட்டினான்.

அடர் காட்டின் நடுவே சிறு சமதளமாய் செப்பனிட்டு அங்கே மிகச் சிறிய குடிசைகள் சில இருந்தன.

குடிசைகளை அங்கே கிடைக்கும் சில வகை புற்களை செப்பனிட்டு பாய் போல பின்னி, அவற்றை வைத்து பின்னியிருந்தார்கள்.

ஒவ்வொரு குடிலிலும் இருவர் அல்லது மூவர் உறங்க மட்டுமே இயலும். பெரும்பாலும் விலங்குகள் அல்லது காய்கறிகளை மொத்தமாக சுட்டு அனைவரும் பங்கிட்டு உண்பவர்களாக இருந்தார்கள்.

அதனாலேயே, அவ்விடுதியின் உணவுப் பொருட்கள் அவர்களுக்கு புதிராகத் தெரிந்தது போல.. சிலர் அங்கே வேலை பார்த்து உணவு கொண்டு வருவதால் அனைவருமே அவ்வுணவிற்கு கிட்டத்தட்ட அடிமையான நிலையில் தான் இருந்தார்கள்.

இந்நிலையில் உடனே அவர்களிடம் பயத்தை உருவாக்க விரும்பாத அக்‌ஷூ அவர்களிடம் அன்பாக பழக முயற்சித்தாள்.

அடிப்படையில், வெளியாட்கள் யாரையும் நம்பாத குணமுடையவர்களாக இருந்தாலும், அவளின் அன்பான பேச்சும், கண்களில் தெரித்த நேர்மையுமே அவர்களிடம் இவ்விருவரையும் ஒட்ட வைத்தது.

இருவரும் மனமுடித்த இளம் தம்பதிகள் என அச்சிறுவன் அவர்களிடம் சொல்லவும் அங்கிருந்த பெரியவர்களெல்லாம் இவர்களை ஆசிர்வதித்தார்கள்.

ஆதிவாசி மக்கள் தாய்வழி மரபை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். குழுவின் தலைவி அங்கிருப்பதிலேயே அதிக பிள்ளைகள் பெற்ற வயது முதிர்ந்தவளாக இருந்தாள்.

முதலில் இவர்களை நம்பாது குறுகுறுவென பார்த்தவள் அதன் பின் இவர்களை வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டாள்.

அம்முதிய பெண்மணியிடம் ஜாரவா மக்களின் நிலையைப் பற்றிய வீடியோக்களை காட்டியவர்கள் அம்மக்களின் உடல்நிலையை சோதனை செய்ய அனுமதி கேட்டனர்.

அவர்கள் சம்மதித்ததும், சீ.ஓ தன் பத்திரிக்கையாள நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கே சென்றான், உடன் மருத்துவக் குழுவும், ராணுவ குழுவும்.

அங்கே சிலருக்கு போதை மருந்தின் தாக்கம் அதிகம் இருந்தது. மற்றபடி யாருக்கும் அவ்வளவு பாதிப்பு இல்லை.

இவர்களெல்லாம் ஒரு சிறு குழு என்றும் இன்னும் அடர்காட்டினுள், பெரிய மரங்களின் குகைகளுக்குள்ளும், பாறைகளின் குகைகளிலும் வேறு சில குழு மக்கள் வாழ்வதாக சொன்னார்கள்.

அவர்களுக்கு இந்த விடுதியைப் பற்றி தெரியாது எனவும் அவர்கள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை என்பதும் அறிந்து சீ.ஓ வின் குழுவிற்கு நிம்மதியானது.

ராணுவ அதிகாரிகள் ஹோட்டல் பணியாட்களிடம் தீவுப் பெண்கள் வேண்டுமென கேட்க, இவர்கள் போதை சாக்கலேட்டுகளை சில பெண்களுக்கு அளிக்க முயல, எல்லாம் கேமராவில் தெளிவாக படம்பிடிக்கப்பட்டது.

அப்பெண்களை அழைத்து அவர்களுக்கு நிலமையை விளக்கி அக்‌ஷரா குழுவினரிடம் ஒப்படைத்தனர் ராணுவத்தினர்.

இதற்கு மேல் தாமதிக்க விரும்பாத சீ.ஓ தகுந்த ஆதாரங்களை க்ளவுட் ல் சேமித்துவிட்டு இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்தான்.

இப்படி ஒரு தீவு இருப்பதும், இங்கே ஹோட்டல் நிர்வாகத்தினர் செய்யும் செயல்களும் அம்மக்களைப் பற்றிய தகவல்கள் கசிந்தால் இதுவும் ஒரு ஜாரவா தீவாகும் அபாயம் இருந்ததால், அதை அரசாங்கத்திடம் தெரிவித்தான்.

அவனுக்கு உயர் பதவியில் இருந்தவருக்கும் அம்மக்களை தொல்லை செய்யாமல் விட வேண்டும் என்றே எண்ணம் இருந்ததால்.., அவ்விஷயத்தை மறைத்து போதை சாக்கலேட் என்பதை மட்டும் வைத்து ஹோட்டல் நிர்வாகத்தை முடக்க முடிவு செய்தனர்.

ஹோட்டலில் தங்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு போதை சாக்கலேட்கள் பரிமாறியதாக கூறி ஹோட்டலின் லைசென்ஸ் கேன்சல் செய்தான் சீ.ஓ.

மேலும், அத்தீவில் புரியாத ஆட்கொல்லி நோய் பரவுவதால் .. (சமூகத்தைப் பற்றிய கவலை இல்லாத பலரின் மனமும் கூட ஒரு ஆட்கொல்லி வைரஸ் தான்) அத்தீவையே சீல் செய்யும் படி அரசாங்கத்திடம் இருந்து உத்தரவு பெற்றான்..

ராணுவ கப்பலுக்கும் தகவல் தரப்பட, ராணுவத்தின் உதவியுடன் ஹோட்டல் சீல் வைக்கப்பட்டு , சுற்றுலா பயணிகளுக்கு நோய் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

ஹோட்டல் நிர்வாகத்தினர், ஊழியர்களையும் கைது செய்தவன்.., அந்நிறுவன தலைவனுக்கு வீடியோக்களின் பிரதியை அனுப்பி , ஏதேனும் பிரச்சினை செய்தால் இதை கசியவிட்டு மானத்தை வாங்கிவிடுவதாக மிரட்டினான்.

இந்த பிரச்சினையில், சர்வதேச பத்திரிக்கை நிறுவனங்கள் இருப்பதை உணர்ந்த அத்தொழிலதிபர் இந்த பிரச்சினையை அத்தோடு விட்டுவிடவே விரும்பினார்.

ஆனால், அத்தோடு அவரை விட்டுவிட்டால் அவர் செய்த பாவம் தீருமா? தொடர்ந்து அவர் நடத்தி வந்த நிறுவனங்களில் வருமான வரி சோதனைகளுக்கும் மேலும் பல அரசு கிடுக்கிப்பிடிகளுக்கும் வழிவகுத்தான்.

அவனது வேகம் கண்டு அவன் நண்பர்களே திகைத்து தான் போனார்கள்.

அக்‌ஷரா குழுவினருடன், மற்ற மருத்துவக் குழுவினரும் வரவழைக்கப்பட்டு போதைக்கு அடிமையான ஆதிவாசிகளுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன..

எல்லாவற்றையும் அவன் சரி செய்த விதத்தை அருகிலேயே இருந்து பார்த்து அவள் வியந்தாலென்றால், அவளது அயராத மருத்துவ சேவையை கண்டு அவன் உருகினான்..

எல்ல நல்லபடியாக செய்து முடித்து தீவில் இருந்து கிளம்பும் போது அம்முதிய தலைமைப் பெண் இருவரையும் வாழ்த்தி விடை கொடுத்தனுப்பினாள்..!!

கப்பலிலேயே அந்தமான் சென்றவர்கள் அங்கிருந்து விமானத்தில் ஊர் திரும்பினார்கள்...

அக்‌ஷரா அவள் கூட்டிற்கு திரும்ப அவன் தன் கடமையை செய்ய பறந்தான் .

இனி எப்போது சந்திப்பார்கள்??

-தொடரும்

 


Quote
Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 2 months ago
Posts: 56
09/02/2020 1:37 am  

அருமையான பதிவு, நான் தொடர்ந்து இந்தக்கதையை படித்து வருகிறேன், update போடா தாமதம் ஆகிவிட்டது போலவே, மீண்டும் update கூடுததற்க்கு மகிழ்ச்சி, அருமையா செயல் பட்டு  ceo ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து அந்த தீவையும் தீவு மக்களையும் கபாடறிவிட்டான், அவர்கள் தங்கள்   ஊர்திருப்பினர், இனிமே அக்சரா மற்றும் ceo எப்பொழுது சந்திப்பார்கள், அவர்கள் விருப்பம் நிறைவேறுமா, காத்திருகேறேன் நானும் 👌👌👌👍👍👍 🌹🌹🌹🌹🌹


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: