Mullum malarai thondrum 9  

  RSS

(@raji-krishna)
Writer Moderator
Joined: 8 months ago
Posts: 18
23 Dec 2019 9:56 pm  

அந்தமான்... அழகிய கடல் எல்லைகளை கொண்ட இந்தியாவின் யூனியன் பிரதேசம்.. போர்ட் ப்ளேர் தலைநகர்..

இப்போது அலுவல் காரணமாக, சுற்றுலா காரணமாக இன்னும் அந்த இயற்கை பிடித்துப்போய் என அங்கே நம் மக்கள் பலர் குடியேறிவிட்டார்கள்..

ஆனால், அந்தமான் தீவுக்கூட்டம் என்பது 576 தீவுகளை உள்ளடக்கியது.. அதில் 6 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்வதாக சொல்லப்படுகிறது...

இங்கிருந்து குடியேற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆதி அந்தமான் பழங்குடியின மக்கள் 5 வகை உள்ளனர்...

ஆதி அந்தமான் பழங்குடியினர், ஜவாரா மக்கள், ஒன்கே மக்கள், மற்றும் செண்டினல் மற்றும் ஷோம்பென் இன மக்கள்..

அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த போதிலும் ஒன்கே இன மக்களை தவிர மற்ற இன மக்களின் டி.என்.ஏ இந்தியர்களுடன் ஒத்துப்போகவில்லை..

ஆப்ரிக்க, மலேசிய, வியட்நாமிய மரபணுக்களை கொண்டவர்களாக அவர்கள் உள்ளனர்..

மேலும் ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு வகையான மொழி பேசும் மக்களை கொண்டது..

இதில், ஜவாரா இன மக்கள் நம் சுற்றுலா நிறுவனங்களின் கைப்பாவையாக மாறி விட்டன...

ஆதி அந்தமானிய பழங்குடியின மக்கள் அடர்ந்த காடுகளில் பதுங்கியே வாழ்கிறார்கள்..

ஒன்கே, மற்றும் ஷோம்பென் இன மக்கள் நம் நாகரீக மனித சமூகத்தின் கண்களில் பட்டாலும் நம்மிடம் இருந்து விலகி, அவர்கள் வாழ்வை வாழவே விரும்புகிறார்கள்..

செண்டினல் பழங்குடி இன மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை.. செண்டினல் தீவில் வசிக்கும் இவர்கள் அத்தீவு அருகில் கூட வேற்று மனிதர்களை வர அனுமதிப்பதில்லை..

பழங்குடிகளின் உடல் நம்மைப் போன்றது கிடையாது.. அவர்களுக்கு இயற்கையான சூழலிலேயே வாழ்வதால் பெரும் வைரஸ், பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளுக்கான பயம் இல்லை.. எனவே அவர்கள் உடலில் இயற்கைக்கு தகுந்தாற்போல் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவே!!

நமக்கு சாதாரணமாக வரும் காய்ச்சல் அம்மக்களுக்கு மரணவியாதி!! உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டாலே மரணம்..

வெளியுலக தொடர்பு இல்லாத போது ஆயிரங்களில் இருந்த அம்மக்களின் மக்கள் தொகை இப்போதோ நூறுகளில் குறுகியதற்கு நம்மிடம் இருந்து தொற்றிய நோய்களே காரணம்..

இருக்கும் அரிய வகை உயிரினமான அத்தீவுகளின் பழங்குடிகளை காப்பது அரசின் மிக முக்கிய கடமையாகிறது...

இல்லையேல், உலக நாடுகளின் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுமே!! எனினும் அரசாங்கம் சிறிதும் யோசியாமல் அனுமதித்த சுற்றுலாவும், மக்களின் உலகம் சுற்றும் ஆர்வமும், பெரு வணிகர்களின் லாபம் காணும் நோக்குமாய்.. அம்மக்கள் தினம் தினம் செத்துப்பிழைக்க வேண்டிய நிலைதான்..

இப்போது கூட நம் பயணம் அப்படி ஒரு நிலையில் இருக்கும் மக்களை பார்க்கவே...!! 6 தீவுகளில் மட்டுமே மக்கள் இருப்பதாய் அரசாங்கம் நம்ப... பிற தீவுகளை வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டது அரசு..

அப்படி ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்ட தீவில் சமீபத்தில் அந்நிறுவனத்தினர் அறியாமல், பழங்குடிகளை ஆய்வு செய்யும் ஒரு ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்ட போது அத்தீவில் முற்றிலும் புதிய பழங்குடிகளை கண்டார்..

ஆனால், அவர்கள் தமிழக மரபணுவை கொண்டவர்கள் போல தோன்றினார்கள்.. மேலும் அவர்கள் தமிழ் மொழியிலேயே பேசினார்கள்.. ஆயினும் அம்மக்களும் ஜவாரா பழங்குடிகளைப் போல சுற்றுலா நிறுவனத்தின் காட்சிப்பொருளாக மாற்றிவிட்டிருந்தனர்...

அத்தீவில் அம்மக்கள் இருப்பதை முறையாக அரசாங்கத்திற்கு தெரிவிக்காதது அந்த நிறுவனத்தின் தவறே!!

எனினும் பெரு வணிக நிறுவனத்தையும், அதன் உடமையாளனான பெரும் வணிகனையும் நேரடியாக எதிர்க்க விரும்பாத அரசு.. தக்க ஆதாரம் தேடியும், அம்மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டியும் இந்த மருத்துவ குழுவை அமைத்தது...

இதில் தேவையான தகவல்களை மட்டும் அழுத்தமாக சொல்லி அவர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான்.. சீ.ஓ என அன்பாக அழைக்கப்படும் சீப் ஆபிசராகிய அவன்..

அவர்கள் இருந்தது கடலில் மிதக்கும் அந்த அரசாங்க கப்பலின் கான்பரன்சிங் அறையில்... கப்பல் புறப்பட்ட பின், அனைவரையும் தீர பரிசோதித்து அவர்களின் அலைபேசிகளையும் வாங்கி பத்திரப்படுத்திய பின்பே இந்த மீட்டிங் நடந்து கொண்டிருந்தது..

கப்பல் முழுவதும் ராணுவ வீரர்கள் சுற்றி வந்த காட்சியே சொல்லியது.. இது அரசாங்கத்திற்கு எவ்வளவு முக்கியமான வேலை என்பதை...

அவன் பேசுவதை அழகாய் உள் வாங்கியவளுக்குள் ஏகப்பட்ட எண்ண சுழல்கள்...

அத்தீவின் ஆதி மக்களை நினைத்து அவளறியாமலே கண்ணீர் பெருக்கெடுத்தது அக்‌ஷராவிற்கு..

அவள் ஜவாரா மக்களின் துயரத்தை, சுற்றுலா நிறுவனங்களும் அரசாங்க அதிகாரிகளும் அம்மக்களை பயன்படுத்தும் விதத்தை என எல்லாம் தான் யூட்யூப்பில் பார்த்திருக்கிறாளே!

உலகறிந்த அங்கீகரிக்கப்பட்ட ஜவாரா இன மக்களுக்கே அந்த கதியென்றால்.., வெளி உலகிற்கே தெரியாத இந்த மக்களின் நிலையை சொல்லவும் வேண்டுமோ?

அனைவரும் கடமை உணர்ச்சி மட்டுமே முகத்தில் ஏந்தி அவனது உரையை கேட்டுக்கொண்டிருக்க இவளது உணர்ச்சிமயமான முகம் அவனுள் எதையோ தடம் புரளச் செய்தது..

உரையை முடித்தவன் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விடை பகர்ந்தான்.. பின் அனைவரும் கலைந்து செல்ல... மோனம் கலையாத தேவதையாய் அவள் மட்டும் தன் இருக்கையை விட்டு எழும் எண்ணம் சிறிதும் இல்லாமல் துவண்டு போய் அமர்ந்திருந்தாள்..

அவளது கரத்தை எடுத்து லேசாக அழுத்திக் கொடுத்தவன்... அவள் திடுக்கிட்டு திரும்பவும் அவளை பார்த்து ஆறுதலாய் ஒரு புன்னகையை சிந்தினான்...

"நீ நினைக்கிற மாதிரி இன்னும் அவங்க நிலமை மோசமாகி இருக்காது.. ஏன்னா அந்த நிறுவனத்துக்கு தீவ குடுத்தே ஒரு வருசம் தான் ஆகுது.. அதுக்குள்ள பல கோடி வருசமா இருக்கற பழங்குடிகளை அவங்க அடையாளம் காணவே ஒரு ஆறுமாதம் ஆகிருக்கும்.. மிஞ்சிப் போன ஒரு 10 பேர் அல்லது ஒரு சிறு குழு மக்கள் இவங்க கிட்ட சிக்கிருக்கலாம்..

ஆனா, அதையும் தான் நாம போய் சரி செஞ்சிடலாமே!! மருத்துவர்கள் தைரியமா இருந்தா தானே நாங்க எஙக வேலையை சரியா செய்ய முடியும்?" என்றான்..

தன் உள்ளத்தை பிரதி எடுத்தது போன்ற அவனது கணிப்பில், தனக்கான ஆறுதலாய் வெளிப்பட்ட அவன் மொழியில் சிறிது ஆசுவாசமானவள் அவனைப் பார்த்து மென்னகை புரிந்தாள்..

"இது..!! எப்பவும் இப்டி சிரிச்ச முகமா இரு" என சட்டென ஒருமைக்கு தாவி அவள் தலையை லேசாக கலைத்தவன் வேகமாய் அவ்விடம் விட்டு அகன்றான்..

அவனது அக்கறையில்,  ஆறுதலில் இவள் இதயம் தாளம் தப்பி இன்னிசை வாசித்தது..!!

பிறர் கவனத்தை முக்கியமாய் மீடியாவின் கவனத்தை கவரக்கூடாதென நள்ளிரவில் ஆரம்பித்திருந்தது இவர்கள் பயணம்... சிறிது தொலைவு சின்னஞ்சிறிய எஞ்சின் படகுகளில் சவாரி செய்து ஆழமான கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவ கப்பலில் ஏற்றப்பட்சிருந்தனர் அனைவரும்...

நள்ளிரவு என்பதால் அனைவரையும் சோதித்து விட்டு உறங்க அனுமதித்தவன் அதிகாலையிலேயே தன் கூட்டத்தை கூட்டி இருந்தான்...

அவர்களுக்குத் தேவையான தகவல்களை சொல்லியவன் நகர.., இப்போது காலை காபி அனைவருக்கும் வழங்கப்பட்டது...

இன்னும் 3 நாட்கள் கடல் பயணம் என சொல்லப்பட்டிருந்தது... முதன்முதலில் வீட்டை விட்டு தனியாய் ஒரு பயணம் , அதுவும் கடலில் கப்பலில்.. அவள் இதயம் துள்ளி குதித்தது...!!

ஆனால், அடுத்த நொடியே அத்தீவிற்கு செல்லும் நோக்கத்தை எண்ணி அவள் மனம் வாடியது... சோகமாய் கடலை பார்த்துக் கொண்டு நின்றவளின் அருகே நெருங்கினார்கள் அவளது நண்பர்கள்..

பின், அவளை அதிகம் சிந்திக்க விடாமல் கலகலப்பாய் பார்த்துக் கொண்டர்னர்... தூரத்திலிருந்து கவனித்த சீ.ஓ வின் முகம் கனிந்து..., அவள் மீது வாஞ்சையாய் ஸ்பரிசித்து நகர்ந்தது அவனது கூரிய விழிகள்..!!

தீவுக்கு செல்லும் முன் அவளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அவனது இளமை உந்த.., தன் பதவியும் தான் ஏற்ற கடமையும் அதற்குத் தடை போட.. இரு பக்க மத்தளமாய் தவித்தவன்... தனிமையை நாடினான்..!!

நீண்டு யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் இதழ் கடை புன்னகையோடு வேலையில் கவனம் செலுத்தலானான்..!!

........

(பழங்குடிகள் பற்றிய தகவல்கள் உண்மையானவை.. ஆனால், நான் இப்போது சொல்லப்போகும் தீவு, மக்கள், அது தொடர்பான தகவல்கள் அனைத்தும் கற்பனையே..)


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 2 months ago
Posts: 76
16 Jan 2020 7:52 pm  

பழங்குடியினர் பற்றிய தகவல்கள் சூப்பர்.


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: