Forum

Notifications
Clear all

முடிச்சுகள் அத்தியாயம் 2  

  RSS

Thuvas
(@thuvas)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 17
25/02/2020 3:05 am  

அத்தியாயம் 2

பாரதி ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதை ஜெகநாதனுக்கு மட்டும் தெரிவித்தாள். ஜெகநாதன் அவளுக்கு தைரியம் சொல்லி தன்னுடைய காரையும் டிரைவரையும் அனுப்பினார்.அவளிடம் தனியாக இரண்டு வயது பிள்ளையை தூக்கிக்கொண்டு பஸ்ஸில் போக வேண்டாம் என்று வற்புறுத்தி காரை அனுப்பினார் .ஜெகநாதன் இடம் நன்றி சொல்லி விட்டு காரில் ஏறி அமர்ந்தாள் பாரதி. கார் ஓட ஆரம்பித்தது மதுரையை நோக்கி. ஏற்கனவே தூக்கக்கலக்கத்தில் இருக்கும் மகனை மடியில் போட்டு தட்டிக் கொடுக்க அவன் தூங்க ஆரம்பித்தான். அவளுடைய பழைய நினைவுகள் எழும்ப ஆரம்பித்தது.

மூன்று வருடத்துக்கு முன் மதுரையில் இருக்கும் ஒரு கல்லூரியில் பிகாம் படித்துக் கொண்டிருந்தாள் பாரதி. பாரதிக்கு மறுபெயர் குரும்பு எனலாம் . அவர்கள் இருந்தது மதுரையை ஒட்டியிருக்கும் ஊரான கருவூரில்.அவர்களது ஊரில், இவர்கள் வீடு இருக்கும் வீதியில் முழுவதுமாக இருப்பவர்கள் அனைவருமே இவர்களுக்கு சொந்தக்காரர்கள் மட்டுமே. ஒன்றுவிட்ட சித்தப்பா ,ஒன்றுவிட்ட பெரியப்பா ,அவர்கள் அத்தை என்று அந்த வீதியில் இருப்பவர்கள் அனைவருமே உறவினர்கள் தான். அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்த அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரி மீனா தான் அவளுடைய பிழைகளின் கூட்டாளி. மூன்று வாரத்திற்கு முதல் இவர்கள் மூன்று பேராக இருந்தார்கள். அதாவது வினோதினி யையும் சேர்த்து .வினோதினி அங்கே அவளுடைய பாட்டியுடன் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தாள்.மூன்று வாரத்திற்கு முன் அவளுடைய தாய் இறந்து விடவே கொடைக்கானலிலேயே ஒரு கல்லூரியில் சேர்ந்து கொள்வதாக சொல்லி தனது தகப்பனிடம் சென்றுவிட்டாள்.மீனாவும் பாரதியும் கல்லூரியிலிருந்து வந்து அவர்களுடைய பழைய சைக்கிளை எடுத்தார்கள் என்றால் அந்த தெருவில் இருக்கும் அனைத்து வாண்டுகளும் இவர்களுடன் சேர்ந்து கொள்ளும். அந்த ஊரில் இவர்கள் செய்யாத அட்டூழியமோ குறும்புத்தனமோ இல்லை . 

பாரதிக்கு இரண்டு அக்கா .இரண்டு பேரும் குணத்தில் பாரதிக்கு அப்படியே எதிர் துருவங்கள். மூத்தவள் வாணி இரண்டாவது இரண்டாவது அக்கா லட்சுமி. அவர்கள் இருவருமே அம்மா நாயகியின் பிள்ளைகள். முற்றுமுழுதாக இரண்டு அக்காவிற்கும் பெயர் வைத்ததில் இருந்து இன்று வரை அவர்கள் சம்பந்தப்பட்ட எல்லா முடிவையும் அம்மா மட்டும் தான் எடுத்து இருக்கிறார்கள். ஆனால் பாரதி பிறந்ததிலிருந்து அவளுடைய பெயரில் இருந்து தற்போது அவள் சம்பந்தப்பட்ட அனைத்துமே அப்பா சிவராமன் கையில்.ஏனெனில் அவள் தான் அவரின் செல்ல மகள் .ஏனோ தெரியவில்லை அம்மாவிற்கு மூத்த 2 மகள்களை பிடிக்கும் அளவுக்கு பாரதியை அவ்வளவாக பிடிக்காது. எப்பொழுதுமே திட்டிக்கொண்டே இருப்பார். அதற்கு ஏற்றாற்போல் பாரதியும் குறும்புத்தனம் செய்து கொண்டிருப்பாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தால், அதற்கு பாரதி காரணம் ஆகி விட்டால் ,அம்மா எடுக்கும் முதல் ஆயுதம் பாரதியின் பெயராக தான் இருக்கும்." ஏதாவது ஒரு நல்ல பெயர் வைத்திருக்கலாம். உங்களால்தான் பாரதி என்ற பெயர் வைக்க வேண்டியதாயிற்று. அவள் பேர் போலவே அவளிலும் பெண்மையும் மென்மையும் கம்மியா ஆகிவிட்டது. அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம் .ஆண் பிள்ளை போல் வளர்க்கிறேன் என்று அவளை தறுதலை ஆக்கி விட்டீர்கள் " என்று அம்மா அப்பாவை திட்டி பாரதி கேட்டிருக்கிறாள்.அப்பா ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ள மாட்டார். பாரதியைப் பார்த்து கண்ணடித்துவிட்டு சிரித்துக்கொண்டே சென்று விடுவார். அவளுடைய தாய் நாயகி இவள் பிறந்த சமயத்தில் ஜன்னி கண்டு இருந்ததனால், இவளுக்கு பால் கொடுக்கவும் இவளை கவனிக்கவே முடியவில்லை .அதனால் இவள் பிறந்ததில் இருந்து இவள் தந்தையின் கையிலே தான் .அதனால் முற்றுமுழுதாக தகப்பனின் மகளாகவே வளர்ந்தாள் பாரதி. அப்பாக்கு பாரதியை கண்டிப்பது பிடிப்பதில்லை. விளையாட்டுத்தனமாக" அம்மா கோவிக்கிறாள் பார். இனிமே இப்படி செய்யாதே" என்று விட்டு சென்று விடுவார்.ஆனால் அடிக்கடி பாரதிக்கு அம்மா, அக்கா இருவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனக்கு தரவில்லை என்பது வேதனையாக தான் இருக்கும். ஆனால் அவளுடைய இயற்கையான குறும்புத்தனம் அதை மிகவும் சுலபமாக மனதிலிருந்து ஒதுக்கிவிடும் . அக்காமார் அவள் மேல் பாசமாக தான் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு அருமையான குட்டி தங்கையாக இவள் தெரிந்தார். இவள் ஏதாவது தவறு செய்தால் கூட அதை கண்டு கொள்ள மாட்டார்கள்.அவர்களுடைய படிப்பு அம்மாவினால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. அம்மாவை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் அந்த இரு வெள்ளேந்திகளுக்கும் இல்லை. அவர்களுக்காக பாரதிதான் பேசினாள். அதனால் பாரதிதான் மேலும் கெட்டவளானாள். அவர்கள் இருவரும் வந்து பாரதிக்கு தான் சமாதானம் சொன்னார்கள்." விடு பரவாயில்லை, எங்கள் தலையெழுத்து அவ்வளவுதான் நீ நன்றாகப் படி" என்று விட்டு சென்றார்கள் . பாரதிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

இப்படி பாரதியின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போதுதான். கோவில் திருவிழாவில் இவள் அக்காமாரை பார்த்து அந்த ஊரின்  மிகப்பெரிய குடும்பமான திருநாவுக்கரசு குடும்பம் அவர்கள் இருவரையும் பெண் கேட்டு வந்தார்கள். அம்மா நாயகி குதி குதி என்று குதித்தாள். அவள் வளர்ப்பின் பெருமையை எண்ணி பூரித்துப் போனாள். ஏனென்றால் மூத்த இரு மகள்களையும் விட தன்னுடைய கடைசி மகள் அழகி என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவள் இருக்கும் போது தன்னுடைய மூத்த மகளை பெண் கேட்டு வந்திருப்பது அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.அவ்வளவு பெரிய இடத்தில் இருந்து  சம்மந்தம் வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத நாயகியும் சிவராமனும் அவர்களை உடனே பெண் பார்க்க வரச் சொல்லி இருந்தார்கள்.

பெண் பார்க்க வந்தபோது மாப்பிள்ளைகளான கண்ணன் ,கிருஷ்ணன் இருவரையுமே பார்த்து இவர்கள் படிப்பு வாசனை அறியாதவர்கள் என்பதை தெரிந்து கொண்டாள் பாரதி.ஆனால் பெண்கள் அனைவரும் அணிந்திருந்த உடையையும் நகையையும் பார்த்து அவர்களுடைய செல்வ வளத்தை தெரிந்து கொண்டாள். நிச்சயமாக அம்மா இவர்களை விட மாட்டாள். எப்படியாவது அக்காமாரை இந்த குடும்பத்துக்குள் தள்ளிவிட தான் போகிறாள் என்பதை உறுதி செய்து கொண்ட பாரதி அதற்கு மேல் அதைப்பற்றி எதுவுமே பேசாமல் விட்டு விட்டாள். ஆனால் பெண் பார்க்க வந்துவிட்டு திருமணத்தை உறுதி செய்ய விரும்பினார்கள் திருநாவுக்கரசு குடும்பம். அவர்களில் மிகவும் பிடித்தது திருநாவுக்கரசின் மனைவியான சிவகாமியை. அமைதியான அன்பான பாந்தமான முகத்துடன் ஆர்ப்பாட்டமில்லாத அழகும் பந்தா இல்லாத நடை உடைகள் என்று அவர்களை பாரதிக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது திருநாவுக்கரசு பேசும் போது அவருக்குப் சிவகாமிக்கு மூன்று மகன்கள் எனவும் மூத்தவன் கிருஷ்ணன் இரண்டாமவன் கண்ணன் மூன்றாமவன் மதுசூதனன் என்றும் சொன்னார் .அவர்கள் குடும்பத்தில் மதுசூதனன் தான் நிறையப் படித்தவன் எனவும் அவன் ஒரு டாக்டர் எனவும் மேலதிகமாக படிப்பதற்காக அவன் வெளிநாடு சென்றிருக்கிறான் எனவும் சொன்னார். அவன் திரும்பி வர ஒரு வருடம் ஆகும் எனவும் வீட்டில் அனைவரும் அவன் வந்த பிறகுதான் திருமணமத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்தனர் எனவும் சொன்னார் . மதுசூதனனின் பெயர் வந்ததுமே அங்கு வந்த அத்தனை பேரின் முகத்திலிருந்த உணர்ச்சியை வைத்து பாரதியால் ஒன்றை யூகிக்க முடிந்தது. அவன் தான் இந்தக் குடும்பத்தின் பட்டத்து இளவரசன். அனைவரும் அவன் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. மேலும் பேசிய திருநாவுக்கரசு ,இதை மதுசூதனன் இடம் சொன்னபோது தனக்காக காத்திருக்க வேண்டாம் எனவும் ஒற்றை வார்த்தையாக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்தி விடுமாறும் கூறியதாகவும் அவன் அப்படி சொல்லி விட்டால் அதற்கு மேல் எந்த பேச்சும் எழ வாய்ப்பில்லை எனவும் திருமணத்தை சீக்கிரமாக வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்.  ஒருத்தனின் பேச்சுக்கு அந்தக் குடும்பத்தில் இவ்வளவு மரியாதை இருப்பதைப் பார்த்து அதிசயித்தாள் பாரதி. 

அவர்கள் சொன்னது போலவே அடுத்த மாதத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து அக்கா இருவருக்கும் திருமணம் நடந்தது.அந்த வீட்டு இளவரசன் இல்லாமல் திருமணம் நடப்பதை எண்ணி அந்த வீட்டின் தலைவர் தொடங்கி அந்த வீட்டு கன்றுக்குட்டி வரை கவலைப்பட்டார்கள். திருமணத்தின்போது சிந்து என்று ஒரு அழகான பெண் அங்கே வந்து இருந்தாள்.அவளைப் பார்க்கும் போதே அவளின் செல்வச் செழுமை கண்கூடாக தெரிந்தது.அவளை அந்த வீட்டு அங்கத்தினர் அனைவரும் விழுந்து விழுந்து கவனித்தார்கள். மெதுவாக அவள் யார் என்று விசாரித்ததில் மதுசூதனின் காதலி எனவும் அவளும் ஒரு டாக்டர் , மதுரையில் அவள் அப்பா பெரிய பணக்காரர் எனவும் அவன் படிப்பு முடிந்து வந்ததும் சீக்கிரமாகவே இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் எனவும் சொன்னார்கள்.அதற்குத்தான் அண்ணன்களுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைக்கச் சொன்னானா அந்த இளவரசன் என்று நக்கலாக நினைத்தாள் பாரதி.

பாரதியைப்பற்றி அக்காமார் மாமாக்களிடம் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை .அவர்களும் இவளை ஒரு குழந்தையை பார்ப்பது போல தான் பார்த்தார்கள். அதைவிட அந்த வீட்டின் தலைமைகளான திருநாவுக்கரசும் சிவகாமியும் கூட இவளை அன்பாகவே பார்த்தார்கள். சிவகாமி தன் மேல் காட்டும் பாசம் தன் தாயிடம் கூட கிடைத்ததில்லை என்று நினைத்துக்கொண்டாள் பாரதி. ஆனால் பாரதிக்கு திருநாவுக்கரசின் தங்கையான சரளாவையும் அவள் மகன் மோகனையும் பிடிக்கவே இல்லை. மோகனின் மனைவி வள்ளியை அவர்கள் ஒரு மனிதப் பிறப்பாகவே நடத்தவில்லை என்பதை உணர முடிந்தது.பாரதியின் கண்களுக்கு அவர்கள் நல்லவர்களாக தெரியவில்லை.சரளாவின் கணவன் சன்னியாசம் வாங்கிச் சென்று விட்டதாக மீனா சொன்னாள். தப்பி விட்டார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பாரதி.

அந்த மதுசூதனனை பார்க்கும்வரை பாரதியின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. அக்காமார் இருவரும் திருமணம் ஆகி போய் விட்டார்கள் என்பதால் அம்மாவும் பெரிதாக பாரதியை திட்டுவதில்லை. பாரதியின் வாழ்க்கை சலனமற்ற நீர் ஓடையாக ஓடி கொண்டிருந்தது .அப்பொழுதுதான் அக்காக்களுக்கு  தலைதீபாவளி வந்தது.தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முதல் அந்தப் பட்டத்து இளவரசன் மதுசூதனன் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வந்து விட்டான் என்று அப்பாவும் அம்மாவும் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். அவனைப் பார்க்க பாரதிக்கு அவ்வளவாக எந்த ஒரு உந்துதலும் இருக்கவில்லை.அக்காக்களுக்கு இது தலை தீபாவளி என்ற காரணத்தினால் அப்பா அவர்கள் அனைவரையும் தீபாவளியன்று விருந்திற்கு வீட்டுக்கு அழைப்பதாக இருந்தார். இதை பாரதி அறிந்த போதும் அவளுக்கு அதில் ஸ்வாரஸ்யம் பிறக்கவில்லை.....

ஆனால் அன்று தான் அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த மதுசூதனனை அவள் சந்திக்கும்படி ஆனது,.... சனி அவள் நாக்கில் விளையாடியது என்பதை இன்றுவரை அவள் அறியவில்லை.....

சந்திப்போம்.......


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: