Forum

மலர்கள் செய்த மாயம்
 
Notifications

[Sticky] மலர்கள் செய்த மாயம்  

  RSS

Narmadha Subramaniyam
(@narmadha-subramaniyam)
Writer Moderator
Joined: 6 months ago
Posts: 3
14/12/2019 3:56 pm  

வெண்பனிப் புகையில்
வெள்ளை மனிதர்கள் உலாவரும்
மேற்கத்திய தேசம் அது!!

விடியற்காலை பொழுதில்
அமைதியின் திருவுருவாய்
நுழைந்தாள் அவள்
மனிதர்களின் மூளை
இயந்திரமாய் உழைக்கும்
மென்பொருள் நிறுவனத்திற்குள்!!

தன் மேஜையின் கணிணியை
ஒளிரவிட்டு திரும்பியநொடி
கண்டாள் ஓர் பூங்கொத்து
தன் இருக்கையில்...

"சிரிப்பை மறந்த சித்திரமே
மனம் விட்டு சிரிப்பாயா எனக்காக,
இப்படிக்கு, N "
என்றிருந்தது அக்குறிப்பேட்டில்!!

ஒளிர்ந்தது அவள் கண்கள்
N என்றதும்...

மென்நகை புரிந்தாள் மாயவளும்!!

தொடர்ந்த நாட்களில்
பூங்கொத்தின் குறிப்பேட்டில்

"உன் மென் சிரிப்பு
பெருச்சிரிப்பாய் மாறிட
வரம் வேண்டும் எனக்கு
தருவாயா இன்று" என்றிருக்க
இதழ் விரிய சிரித்தால் அன்று!!

"இதழ் சிரிப்பால்
உன் விழி நீர் சிந்த
ஆசைக் கொண்டேன் நான்
தருவாயா அச்சிரிப்பை எனக்கு"
என்றிருக்க,

வரவிருக்கும் பிறந்தநாளிற்காய்
ஆச்சரியப் பரிசனுப்புவிக்கும்
தன் தோழியின் நினைவில்
விழி வழிய சிரித்தாள் அவள்!!

ராம் லட்சுமணனின்
பெண் பாலாய்
சகோதரியாய் உருமாறி
தன் இன்பத்தை
மட்டுமே எண்ணும்
தோழியின் நினைவில்
உருகித்தான் போனது
அவளின் மனம்!!

பணிக்கான வேலை
அத்தேசத்தில் முடிவடைய,
பயணிக்க தீர்மானித்தால்
அவள் நாட்டிற்கு!!

மேகத்தினூடே பறவையாய்
பறந்த விமானம்
தரை இறங்கிய நேரம்
அவளின் பிறந்தநாளின்
துவக்க மணித்துளிகள்
அவள் நாட்டு நேரப்படி!!

வானிலைய பணியாளர்கள்
ஒவ்வோர் பூங்கொத்தாய்
அளித்து வரவேற்றனர் அவளை!!

முழங்காலில் மண்டியிட்டு
கையில் ஒற்றை ரோஜாவுடன்
தன் இரு கைகளையும் விரித்து
அவளை நோக்கி
பார்த்திருத்தான் அவன்!!

திகைத்து விழித்து
இமை மூட மறந்த
நிலையில் அவள்!!

அச்செந்நிற ரோஜாவை நீட்டி
விளித்தான் அவளிடம்
"என்னை உன்னவனாய்
ஏற்பாயா கண்மணியே"

தனக்காய் பார்த்திருக்கும்
மாப்பிள்ளையென
இவள் பெற்றோர்
அனுப்பிய புகைப்படம் விரிகிறது
அவளின் மனத்திரையில்!!

அக்கணம் அவள் நினைவில்
மணி அடிக்கிறது
அந்த N இவன் தானென்று!!

பூங்கொத்தில்
அன்பை விதைத்து
புத்துணர்வளித்த
அன்பாளன் இவன் தானென்று!!

N நிலாபெண் என
இவள் நினைத்திருக்க
N நிலவன் என
நிரூப்பித்தான் அவன் இன்று!!

"நீ நீயாய் இருக்க
ஆசை உனக்கு
உன்னை அப்படியே
ஏற்றுக் கொள்ள
ஆசையுண்டு எனக்கு

என்னையே
என் காதலையே
உன் பிறந்தநாள் பரிசாய்
அளிக்கிறேன் இனியவளே!!

உன் புன்னகை இப்படியே
இதழில் உறைந்திட
வாழ்த்துகிறேன் கண்ணம்மா

இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சாருலதா!!!!!"
அவனுரைக்க....

மெய் மறந்து சிலையென
நின்றாள் அவள்!!

தனக்காய் தன்
பெற்றவர்கள்
நிச்சயித்த ஒருவன்!!

தனக்காய் தன்னை
நேசிக்கும் ஒருவன்!!

தன் இன்பம் மட்டுமே
முதன்மையாய்
எண்ணும் ஒருவன்!!

இதயம் படபடக்க
தாறுமாறாய் துடிதுடிக்க
நாடி நரம்பெல்லாம்
மகிழ்ச்சியில் திளைத்திருக்க
பெற்றுக் கொண்டாள்
அவ்வொற்றை ரோஜாவை
அவன் காதலின் அச்சாரமாய்
அவள் பிறந்தநாளின் பரிசாய்!!

இருவரும் திருமண பந்தத்தில்
இணைந்து மகிழ்வுடன் வாழ
வாழ்த்துவோம் நாமும்!!

-- நர்மதா சுப்ரமணியம்


Ezhilanbu liked
Quote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
14/12/2019 3:59 pm  

🙂 😍 👍


ReplyQuote
Narmadha Subramaniyam
(@narmadha-subramaniyam)
Writer Moderator
Joined: 6 months ago
Posts: 3
14/12/2019 8:14 pm  

@admin

😍😍😍


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: