Notifications

கரைந்தக் காதல் - நர்மதா சுப்ரமணியம்  

  RSS

Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 275
9 Aug 2019 9:42 am  

கரைந்தக் காதல்

அவன் தான் வேண்டுமென
ஓராயிரம் ஜபம் செய்து
விரதமிருந்து
அவனைப் பெற்றேன் நான்
கணவனாய்!!

 

அவன் மட்டுமே போதுமென
பெற்றோருடன் போராடி
வாழ்வின் விளிம்பு
நிலைக்கு சென்று
உயிர்பற்றிக் கொண்டு
அவனைச் சரணடைந்தேன்
மனைவியாய்!!

 

அவனும் நானும்
மட்டுமே
ஓர் உலகமென
சுற்றம் மறந்து
அவனையே
என் ஜீவனாய்
எண்ணி
வாழ்ந்திருந்தேன்!!

 

ஊர் போற்றும் உத்தமன்
உலகறிந்த பண்பாளன்
கணவனாய் கிட்டியதாய்
எண்ணி பெருமிதம்
கொண்டிருந்தேன்!!

 

என் எண்ணங்கள்
அனைத்திலும்
மண்ணள்ளி போட்டான்
எனை மணந்தவன்
நான் வேலையை
விட்டதாய் தெரிந்த
அந்நாளில்!!

 

பணத்திற்காக எனை
அவன் நேசித்ததை
காலம் எனக்கு
பறைச்சாற்றியது
அவனின்
வாள்வீச்சு பேச்சில்!!

 

பெரிய அடி
மனதில்!!
பெரிய இடி
தலையில்!!

 

அவன் இருக்கும்
இருமாப்பில்
அக்கறையாய்
என்னிடம் அறிவுரை
உரைத்த
அனைவரையும்
உதறிய பாவத்திற்கு

தோள் சாய்ந்து அழவும்
தோழிகளற்று
நிற்கதியாய் நின்றேன்!!

 

போதும் வாழ்வென
முடிவெடுத்து
வாழ்வை முடிக்க
எத்தனித்த சமயம்
நான் இருக்கிறேன்
உன்னுள்ளென
என் வாழ்வின் பிடியாய்
என்னுளிருந்து
என் வயிற்றை
உதைத்தாய் நீ!!

 

காதல் மணம் புரிய
தன்னுடன்
தன்னவனை
அழைத்து வந்து
உத்தரவு கேட்டிருந்த
தன் மகளிடம்
முதன் முறையாய்
தன் பரிதாபமான
காதல் கதையை
உரைத்திட்டாள் அந்த தாய்!!

 

நீயும் என்னைப்போல்
ஏமாந்திடாதே
என மகளுக்கும்...
அவளை ஏமாத்திடாதே
என அவனுக்கும்
கண்ணில் வலியுடன்
உரைத்தாள்
தன் மகளின் நல்வாழ்வை
தன் வாழ்நாளின்
லட்சியமாய் கொண்டு
வாழ்ந்திருந்த அத்தாய்!!

 

-- நர்மதா சுப்ரமணியம்


Nila liked
Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: