Forum

Notifications

மனம் கொய்த மாயவனே - 3 Precap  

  RSS
Ezhilanbu
(@admin)
Member Admin

மனம் கொய்த மாயவனே - 3 precap

'நாலு காசு சேர்த்து மகளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து விட வேண்டும்' என்பது மட்டுமே இப்போது அவரின் கனவாக இருந்தது.

அன்னை அவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கக் காத்திருக்க, மகளோ ஒருவனைப் பிடித்துக் கொள்ளக் காத்திருந்தாள்.

ஆம்! வெற்றியைத் தனியாகப் பிடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

🙂🙂

"என்னங்க... என்ன வேணும்? டாப்ஸ், லெக்கின்ஸ், நைட்டி..." என்று அவளை அறியாதவன் போலக் கேட்டான் முருகன்.

"வெற்றி வேணும்..." அவனின் அறியா பாவனையில் முறைத்துக் கொண்டே சொன்னாள்.

'ஆஹா... மேடம் ஒரு மார்க்கமா தான் இருக்காங்க போலயே. வெற்றி வேணுமாம்ல வெற்றி...' என்று உள்ளுக்குள் கிண்டலாக நினைத்துக் கொண்டவன், "வெற்றியா? வெற்றி எல்லாம் இங்கே விற்கிறது இல்லைங்க..." என்று அப்பாவியாகச் சொல்லி வைத்தான்.

💐💐
எபி எப்போ??

2வது படிச்சு முடிச்சுட்டு வாங்க😁😁😉😉

Quote
Posted : 12/12/2019 2:45 pm

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: