Forum

Notifications

மனம் கொய்த மாயவனே - 5 precap  

  RSS
Ezhilanbu
(@admin)
Member Admin

#மனம்_கொய்த_மாயவனே - 5 precap

நடு வீட்டிற்குள் நின்று அவனைத் தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லிராணி.

அவளும் தலைக்குக் குளித்துத் தலையை உலர்த்தி நுனியில் மட்டும் ஒரு முடிச்சை போட்டு இருந்தாள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் குங்குமமிட்டு, அதற்கு மேலே திருநீற்றை லேசான கீற்றாக வைத்திருந்தாள்.

சிவப்பு நிறத்தில் பாவாடையும், ரவிக்கையும் அணிந்து மஞ்சள் நிற தாவணி அணிந்திருந்தாள்.

அவளின் உடையின் நிறம் கண்ணைப் பறிக்க "அம்மாடியோவ்... என் கண்ணு அவிஞ்சு போயிருச்சு..." என்று சத்தமாகச் சொல்லி அவளை நக்கலாகப் பார்த்தான் வெற்றி.

'அவியும்டா அவியும். இரு உன்னை ஒரு நாளைக்கு அவிச்சுத் திங்கிறேன்...' என்று மனதிற்குள்ளேயே முனங்கி அவனை முறைத்துப் பார்த்தாள்.

***
அவன் கிளம்பி முடித்த போது முருகனும், காளியும் வர, "என்னடா துணி மூட்டையை எடுத்திட்டு வராம கையை வீசிட்டு வர்றீங்க?" என்று விசாரித்தான் வெற்றி.

"அம்மன் கோவிலில் கூல் ஊத்துறாங்களேடா. முதலில் அதைப் போய் வயித்துக்கு ஊத்திட்டு வருவோம். அப்புறமா வந்து மூட்டையை எடுத்துக்கிறோம்..." என்ற முருகனை முறைத்தவன் "சரியான தின்னி பண்டாரம்டா நீங்க..." என்றான்.

"ஆமாடா நாங்க எல்லாம் தின்னி பண்டாரம். நீ மட்டும் தின்னாத பண்டாரம். என் வாயை புடுங்காம வாடா டேய்..." என்று வெற்றியையும் இழுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றனர்.

Quote
Posted : 17/12/2019 3:56 pm

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: