Forum

Notifications
Clear all

பாயுமொளி நீ எனக்கு 12  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 73
13/02/2020 8:11 pm  

தான் படித்ததிலிருந்து தனக்கு நடந்தைவைகளை கூறினாள் காயத்திரி....அவர்களுக்கு அது அதிர்ச்சியாகவும் கஷ்டமாகவும் இருந்தது....

 

" இந்த சின்ன வயசுல இப்படி ஒரு கஷ்டத்த அனுப்பவிக்கனுமா மா நீ..."  சுந்திராம்பாள் கேட்க.....

 

" வாழ்க்கையை கஷ்டமில்லாம நகர்ந்திட்டா வாழ்க்கையில எதையும் கற்றுக்கொள்ள முடியாது மா இந்த கஷ்டம் முதல் என்ன முடக்கிதான் போட்டது ஆன இதுமட்டும் பெண்ணுக்கு முக்கியம் இல்ல.கல்யாணம் வாழ்க்கை அனுப்பவிக்காத பெண்களும் சாதிக்காம இல்லையே,

விதவை  சொல்லிட்டு வெளியுலகத்தால அமங்கலி சொல்லி தள்ளி ஓரமா முடக்கிதான் வைக்கிறாங்க....." 

 

" இன்னகி அப்படி,இல்லைமா...யாரு என்ன சொன்னாலும் தன்பிள்ளைக்காக புருசன் இல்லாத சில பெண்கள் போராடுறாங்க 

உலகம் எவ்வளவு பேசினாலும் தன்னோட வாழ்க்கை தான் முக்கியம்னு வாழ்றாங்க....

 

அதுல நானும் விதிவிலக்கல்ல,...

முடக்கி நம்மல ஆளுவது இந்த சமூகம் அதுவும் சுயநலம் வாய்ந்தது தனக்கு நேரும் வரை எதுவும் தப்புதான் முக்கியமா பெண்கள் செய்வது..அதுவே தன்வீட்டு பெண்கள் என்று வரும்போது அதை தவறென சொல்லமறுக்கிறார்கள்...

இதான் நான் கற்ற பாடம் சமூகம் எப்படினு முடிந்தளவு நான் அச்சமூகதோட ஒன்றகூடாதுனு வாழ்றேன்..." 

 

" ஆத்தி இது பிள்ளையில்லை தெளிவால பேசுது சுந்தரம்...." ராமன் கூற " ஆமாடா ராமா அண்ணா....இது குழந்தையினு நினைச்சா,....இது என்ன  ஔவையார் மாதிரி பேசு "  அவர்கூற சிரித்துவிட்டாள்....

 

" சிரிச்சா நீ ரொம்ப அழகாயிருக்கீங்க " விக்னேஷ் கூற கௌசல்யா அவனை முறைத்தாள்.

 

" அடப்பாவி பக்கதுலே காதலிய வச்சு எப்படி வழியுறான் பாருங்களேன்,.." சுந்தரம் கூற 

 

" காதலியா..." காயத்திரி கேட்க " "

" ஆமாடா இவரும்,நானும் காதலிக்கிறோம்  மூனுவருசமா....." 

" அப்படியா அப்ப உங்களா நான் அண்ணினு கூப்பிடட்டுமா..... " எல்லாரும் சிரித்தேவிட்டனர்.....

" காயூமா...சரியா சொன்ன போ....." ராமன் சிரித்துக்கொண்டே கூற

 

விக்கேனஷ் முகம் சற்றே வாடியது போலே தெரிய..." என்னாச்சு அண்ணா தப்பா சொல்லிடேனா....." 

 

" ஒன்னில்லமா இவள கடுப்பாக்காக நான் அப்படிசொன்னேன் கடைசில எனக்கு அது ஆப்பா வந்திட்டு....சரிமா இன்னைலருந்து நீயும் நானும் அண்ணன் தங்கச்சி..சரியா " என்று கேட்க " அப்பாடா இப்பதான் கௌசல்யா முகம் பிரைட்டாகுது....." சுந்திரம் கூற 

 

" போங்கமா காயூமா நீ என்ன எப்படிவேணாலும் கூப்பிடு அந்த அண்ணியும் நல்லாருக்கு,....நாங்களெல்லாரும் முறைவச்சு தான்கூப்பிடுவோம் இந்த சார் இல்லாதப்ப... அவர்தான் டேரர் ரொம்ப சிக்குனோம் அவளோதான் ஆன அதிகம் நேரம் இங்க இருக்க மாட்டார் நாங்க ஹாப்பியா இருப்போம் நீயும் பார்த்து இரு..." கௌசி சொல்ல 

 

கொஞ்சம் பயம் அவள் கண்ணில் தெரிந்தது....." பயப்பிடாத காயூமா நாங்க இருக்கோம்ல....." ராமன் கூற சரிப்பா என்றாள்.....

 

பிரஜனோ அதை கேட்டவன்....யோசித்துகொண்டே வந்தான்......

இங்கே பட்டாளாமாய் அமர்ந்து தேவ்வின் சமையலை சாப்பிட்டுகொண்டிருக்க...." ஹேய் பிரஜன் இங்க வா"  ஜானி அழைக்க அவனும் அங்கே சென்றான்....." வாடா வந்து சாப்பிடு..." 

 

" பபசிக்கல அண்ணா நீங்க சாப்பிடுங்க,.." 

" ஏன் சீனியர் நாங்க கொடுத்தா சாப்பிடமாடிங்களா..." தேவ் கேட்க " அப்படியல்லாம் இல்ல தேவ்.... " 

" டேய் அப்படி என்னாச்சு உனக்கு இவ்வளவு சோகமா இருக்க....." 

 

" அது...அது...வந்து அண்ணா...." 

" அடேய் சொல்லுடா....." தியாகு கூற...." ஸ்டாப் ரூம் போனேன் அங்க தேவ் அக்கா அவங்க வாழ்க்கையில நடந்தை சொன்னாங்க கஷ்டமா இருந்தது....எங்க அம்மா நியாபகம் வந்தது...அதான்.." 

தேவ் அமைதியனாள்....

 

" சாரி தேவ்....." 

" எதுக்கு சீனியர் சாரி எல்லாம்....எங்க அக்காவே சொன்னாலா...." 

" ஆமா தேவ் ...." அவள் முகம் சோகமாகியது...." உங்க அக்காக்கு என்ன தேவ் என்று"  ஜானி கேட்க அவளுக்கோ அழுகை வந்தது...

 

" தேவ் அழதா  "  என்று அனைவரும் ஆறுதல் கூறினார்கள்...." சரி விடு தேவ் சொல்லாத எதையும் பீளிஸ் அழதாமா "  என்று தியாகு கெஞ்சினான்..

 

தன் கண்களை துடைத்தாள் 

" அக்காக்கு எம்.இ படிக்கனும் லெக்சரர் ஆகனும் ஆசை ஆன கல்யாணம் பண்ணிட்டு படிக்க வைக்கிறோம் சொல்லி மாப்பிள்ளையும் வந்தாரு,கல்யாணமும் நடந்தது.....

ஆன அவளோட ஜாகத்தில தாலிகட்டினா மாப்பிள்ளை இறந்துடுவான் இருந்தது...

 

அதுக்கு பரிகாரம் பண்ணுறேன் ஒரே வீட்டுலையும் பிரிச்சுதான் வைத்திருந்தாங்க...மாமா அமேரிக்கால வேலைப்பார்த்தாரு......அவர அங்க வேலைக்கு வர சொல்லி கூப்பிட்டாங்க மனசேஇல்லாம மனுசன் போனாரு,..திரும்பி ஒருவாரத்துல பிணமா தான் வந்தாரு ஜாதகம் பலிச்சுருச்சு,..அக்காவா ஊரே பேசுத்து மாமியாரும் சண்ட போட்டு வீட்டுக்கு அனுப்பிவைச்சுடாங்க....அதுல இருந்து அவ வீட்டுகுள்ளே முடங்கி போய்டா....இப்ப தான் நாங்க தேற்றிகொண்டுவறோம்...என்றாள் நாலுவருக்கும் பெரும் அதர்ச்சிதான்....ஜானி எழுந்தே சென்றுவிட்டான்....யாரும் அதை கவனிக்கும் மனநிலை இல்லை.....மதிய உணவுவேலை முடிய....அனைவரும் வகுப்பிற்கு சென்றனர்...

 

முதல்முறையாக வகுப்பெடுக்க போகிறாள்...தனது இஷ்ட,தெய்வத்தை வணங்கிச்சென்றாள்.....இரண்டாம் ஆண்டு அமர்ந்திருக்க உள்ளே வந்தாள்...அனைவரும் எழுந்தனர்.....

அவர்களை அமர வைத்து ஒருபார்வை அனைவரையும் பார்த்தாள்.... " 

 

" ம்ம்,..நல்ல சாப்பிட்ட மயக்கம் இப்போ வகுப்பறை அமைதியா இருந்தா பாடம் எடுத்தா அப்படியே தூங்குவீங்க தானே,...." 

 

அவர்கள் சிரித்தார்கள்...." ஒகே வேற டாபிக்பேசலாமா...." என்றாள்...

ஆர்வமாகினர்...இப்படியே கொஞ்சநேரம் பேசினார் பின் வகுப்பை எடுத்தாள் யாருக்கும் தூக்கமும் வரவில்லை அனைவருக்கும் அதே ஆர்வம் இருந்தது....

 

ஜானிக்கு தான் கவனம் இங்கில்லை...அவன் மனதுமுழுக்க தேவ் கூறியதே இருந்தது...யாரும் எதுவும் கேட்டிடவில்லை.....மாலை கல்லூரி முடிய....தேவ் காயூ வீட்டிற்கு வந்தனர்...

 

" பாட்டிடுமா  காலேஜ் எப்படி இருந்தது என்று அனைத்தையும் கூறினாள்.... "  " " ஏன்டிமா உன் வாழ்க்கை நடந்த விசயச்ச கூட சொல்லனுமா...." 

 

" அப்படி கேளுபாட்டி..அக்கா இதையேன் அங்கெல்லாம் சொல்லுற...." 

" எப்படியும் தெரியதான்டா போகுது.....அப்ப சொல்லி பேசி கஷ்டபடுறத விட முன்னாடியே சொல்லிட்டா அத பேச மாட்டாங்கடா....." 

" என்னமோ அக்கா இனி அந்த விசயத்த நடந்தமாதிரியே காட்டிக்காதா யார்கிட்டையும் சொல்லாத...." 

 

" சரிங்க மேடம் தங்கள் உத்தரவு படியே நடக்கிறேன்..." சிரித்துவிட்டாள்....சந்தோசமே நிலவியது..

 

கனத்த மனதுடனே வந்தான் ஜானி...." வாடா ஜெனிபர் "  வரவேற்றார்....சோபாவில் தன் பாட்டி அருகே அமர்ந்தான்...அவர் தோற்பட்டையில் சாய்ந்துக்கொண்டான்,..." ஜானி எனக்கு கூட வேலைபார்க்குரவங்களோட பொண்ணு எம்,இ முடிச்சுருக்க அவள வேணா வர சொல்லவா நல்ல பொணீணுடா இன்டர்வூயூ பண்ண சொல்லுடா சார்கிட்ட...." 

 

" தேவையில்லமா..ஆல்ரெடி ஆள் வந்தாச்சு...  " என்றான்

" யாரு அண்ணா?..... " 

காயத்திரி,...

 

" யாரு குள்ளவாத்து அக்காவா,... " 

" ம்ம் ஆமா...." என்று ரூமிற்கு சென்றான்...அவளும் உடன் சென்றாள்....

 

" அண்ணா நிஜமாவா அண்ணா....." " ஆமா குட்டிமா...." 

 

" ஐய்யோ ஒருநாள் பார்த்ததுக்கே கவித எழுத ஆரம்பிச்ச இப்ப டெய்லி பாப்பியே கவிதை புக் போட்டு கவிஞர் ஜானினு பட்டம் வாங்கிடுவியே...." 

 

" குட்டிமா அண்ணணுக்கு தலைவலிக்குநான் தூங்கிறேன்"  என்று மெத்தையில் படத்தான்..சரியென்று வெளியே வந்துவிட்டாள்...இரவு சுகமாய் விடிந்தது....

 

மறுநாள் காலை பரப்பபாக வேலை செய்து கல்லூரி அடைந்தனர்...

 

" டேய் சக்தி எங்கடா போயிட்டு வர... " வேண்டுதல் சார்......

 

" எதுக்குடா கல்யாணம் ஆகனும்னா.." வெங்கட் கேட்க

 

" அதெல்லாம் இல்ல சார்,.." என்று பிரசாதத்தை நீட்டினான்....

 

அவரும் பூசிக்கொண்டார்..

" என்னடா இது,,.." எது சார்....

 

" டேய் உன் வயசுல அவனவன் காதல் பொண்ணு பீச் சுத்துரான்...நீ ஏன்டா சாமி சாமி சிவன் சொல்லிட்டு கோயில்கோயிலா சுத்துற...." 

 

" சார் எனக்கு பிடிச்சத தானேசார் செய்யமுடியும்.... " 

 

" இதுல என்ன டா உனக்கு பிடிக்குது...." 

" சார் மனநிறைவா இருக்கு சார்...." 

" உனக்கெல்லாம் கல்யாணம் ஆச்சுனா நீ பூஜை அறை தவிர எந்த அறைக்கும் போகமாட்டா போலையே." " சார் கல்யாணம் வாழ்க்கையில ஈடுபட தயாராகவில்லை சார்...எனக்கு இஷ்டமில்லை...." 

 

" பாப்போம்டா உனக்குனு ஒருத்திய பார்க்குறவர இப்படிதான் சொல்லுவ பார்ப்போம். அவள பார்த்ததும் என்ன சொல்லுறேனு...." சிரித்தவன் பார்க்கலாம் என்று வெளியே வந்தான்,...

 

ஜானி லைப்பேரிக்கு வந்தான்,...அங்கே நிறைய மாணவர்கள் அமர்திருக்க அவனோ இடத்தே தேட அங்கே காயத்திரி அமர்ந்திருந்தாள்,...அதற்கு எதிரெ தான் இருக்கை இருக்க உட்கார்ந்து தான் அவளின் கவனம் புத்தக்கதிலிருந்தது...இவன் கவனமோ அவள் மேல் இருந்தது....ஒரு பார்வை பார்ப்பாள் என்று நிமிடத்திற்கு ஒருமுறை இவனே பார்த்தான்...அவளோ பார்க்கவே இல்லை சிறிது நேரம் கழிய அவளோ மணியை பார்த்தாள்...இப்போதாவது தன்னை பார்ப்பாள் என்றவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது அவனை பார்க்காமல் எழுந்து செல்ல அங்கே வந்த சக்தியிடம் மோதிநின்றாள்....இருவரும் மோதிக்கொண்டனர்...

 

பாயுமொளி நீ எனக்கு...

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: