Forum

Notifications

பாயுமொளி நீ எனக்கு 13  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 46
14/02/2020 11:09 am  

வகுப்பில்லாத நேரம் என்பதால் அவள் நூலகத்தில் அமர்ந்து தனக்கு தேவையானவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தாள்...அன்று மாணவர்கள் அதிகம் அங்கிருந்ததால்.....இடமற்று இருந்தது,,..ஜானியும் அங்கேவர இடம் காயூவின் எதிரே இருக்க அதில் அமர்ந்தான் அவனும் படித்துக்கொண்டே நிமிடத்திற்கு அவளை காண...

 

அவளோ கண்ணெடுத்து பாரேன் என்றிருந்தாள் அவனை பார்க்கவே இல்லை....தன் கடிகாரத்தை பார்த்தவள் புத்தக்கத்தை மூடி எழுந்து திரும்பி நடக்கும் போது எதிரே பேசிக்கொண்டு வந்த சக்தியை மோதினால் நெற்றியில் முட்டியதால் தலைகுனிந்து கொண்டு தேய்தவளின் முகத்தை அவனும் பார்க்க சரியாக தெரியவில்லை இவளும் பார்க்கவில்லை...." அவன் சாரி"  என்றான்..தேய்த்துகொண்டே தன் கைகளை உயர்த்தி பரவாயில்லை என்பதுபோல காட்டிச்சென்றாள்....ஓருகையால் தேய்த்துக்கொண்டு மறுகை அவனுக்கு காட்டிச்சென்றதால் அவனால் அவளின் முகத்தை சரியாக பார்க்கவில்லை ...அவள் சென்றுவிட இவனோ பார்த்துக்கொண்டே நின்றான்.... ' யாரிவள்.....' 

 

" சக்தி சார் இமயமலை இருந்து எப்பவந்தீங்க  " என்று கேட்டு சக்தியின் யோசனை கலைத்தான் ஜானி,.....

 

" இமயமலையா...என்னடா சொல்லுற,...." 

" ரஜினிசார் அப்பஅப்ப அங்க போயிட்டு வரமாதிரி நீங்களும் அப்பப்ப கோயில்குளம் போயிருங்க...." அதான் கேட்டேன்......

 

" அடப்பாவி...சரி அதவிடு யாரிது புதிதா....." 

" யாருசார்...." ஜானி வினவ...

" இப்பதானேடா என்னை இடித்து விட்டு போனாள்...." 

" யாருசார் இடிச்சா....." அவன் நக்கலாக கேட்க,..." நான்தான் இடித்தேன் பார்க்காமல் தான்,,.சரி அத விடு யாரவள்...." 

 

" சார் அவங்க உங்க டிபார்ட்மெண்ட் தான், மேத்ஸ் சப்ஜட் எடுக்க  வந்துருக்காங்க..... " 

" வாட் 

ஆதிசார் எடுத்தார்அவளை,... " 

 

" இல்லை அது என்னாச்சு னா..... " முழுகதையும் சொல்ல...." பார்ரா நீ பெட்கட்டி  ஒரு ஆளை உள்ளே சேர்த்துட ...

நீ தோற்று உன்னிடம் அவங்க காசுவாங்களே ஆச்சரியம் தான்டா,,.." 

 

" இதுக்கே இப்படி சொல்லுறீங்க..இவ்வளவு நேரம் அவங்க முன்னாடி நான் உட்கார்ந்து இருக்கேன் ஒருநிமிடம் கூட பார்க்கவே இல்லை....." 

 

" ஹாஹா ரொம்ப சோகமா சொல்லுறீயே நீ.....இடித்த என்னையும் தான் பார்க்குவே இல்லை....." என்றான் சக்தி

 

" என்னவோ சார் என்னைவிட வயசு கம்மிதான் ஆன அவங்கள மேல மரியாதை அப்பறம் எதோ ஒரு உணர்வு தோணுது.... " 

 

" மரியாதை சரி அது என்ன எதோ ஒரு உணர்வு....கொன்னுடுவேன் மெல்லினா வச்சுட்டு இன்னாபேசுர.... " 

 

" சார் விசயம் தெரியாத நானும் அவளும் பிரேகப் பன்னிடோம்...." 

 

" ஏன்டா....அவளுக்கு என்னவிட,அடம்பரமும் அதற்கு தேவையான பணமும் முக்கியமாச்சு சார் அது யார்கிட்ட இருக்கோ அவங்க,முக்கியம் போயிடா...." 

 

" சரி விடுடா....உனக்கு அவ இல்லைனு ஆண்டவர் கணக்கு என்றவன்..சரிடா நான்கிளம்புறேன் வகுப்பிற்கு,முதல் நாள் போனும்...." 

 

" சரி சார்"  என்றான் ஜானி....

 

வகுப்பு இருந்தது....சக்திக்கும் காயூவிற்கும் அவரவர் வகுப்பில் முழ்கினர்....நேரமும் கடக்க சக்தி முதலில் நுழைந்தான்...." என்ன ராமன் மாம்ஸ் நம்ம குடும்பத்துல உறுப்பினர் வந்ததைகூட தெரிவிக்கவில்லை...." 

 

" மகனே நீ எங்கடா இங்க இருக்க பக்திபலம்டா நீ ஊரு ஊரா கோயிலா சுத்திரியே நீ.... " சுந்திராம்பாள் கூற 

 

" அதானே இந்த கோயில சுத்திருந்தா இவனுக்கு கல்யாணமாவது ஆயிருக்கும்.... " ராமன் கூற...

 

" அட நான்என்ன கேட்டா நீங்க என்ன சொல்லுறீங்க..." 

 

" அண்ணா நீங்க வரல அதான் அவள பத்தி சொல்லல..இப்ப சொல்லுறோம் பெயரு காயத்திரி பி.இ முடிச்சுருக்கா....இங்க மேத்ஸ் எடுக்க வந்துருக்கா....இதோ அவளே வந்துடா... " என்று கௌசி கூற....திரும்பினான்....அவளும் வாசலில் சிலைபோவே நிற்க..." இதுவரை எந்த பெண்ணை பார்க்காதவன்....இன்று அவளை கீழிருந்து மேலாக பார்க்க....தெய்வீக கலையாக இருந்தாள்.....விட்டாள் இவன் அம்மனென்று காலில் விழுந்தாலும் விழுந்திருப்பான்.... 

 

" வாயா காயூ "  என்றார் ராமன்..." காயூ இது சக்திடா...." என்றார் சுந்தரம் வணக்கம்....என்றாள் அவனும் வணக்கம் வைத்தான்...தன் இருப்பிடத்தில் அமர்ந்தாள்,.." ஏன் இவங்க வரல.." அவள் கேட்க,.

 

" அட தங்கச்சி இவன் பேண்ட் டிஸ்ர்ட் போட்ட சாமியார்,,....ஆசிரியர் பெயர் கொண்ட அருள்வாக்கு ஜோசியர் என பல பெயரு வச்சு கூப்பிடலாம்....ஏன்னா சக்திமான் இவன் ரொம்ப பக்திமான்...கோயில் குளம் சுத்துவான் மா...." 

 

" நல்லதுதானே அண்ணா...." 

 

" என்னமா சொல்லுற...." 

 

" இந்த காலத்துல இப்படியாரையுமே பார்க்க முடியாது,அண்ணா,..மன நிம்மதி ஒன்னு இல்லாதனால பல பேர் அத தேடுறேன் தவறான பாதையில் போறாங்க....ஆன இவரோட பாதை சரிதானே...முதலாவது கோயிலுக்கு போறதே வேண்டுதல் நிறைவேறுதோ இல்லையோ மன நிம்மதி கிடைக்கனும் தான் போறாங்க...அது அவருக்கு கிடைக்குதுனா...சந்தோசமா இருப்பாரு..ஆரோக்கியமாவும் இருக்கலாம்...." காயூ கூற அவளை ஆச்சரியமாக பார்த்தான்.... 

" அதுக்கு இந்த சின்னவயசிலையெவா இப்படி இருக்கனும்...." ராமன் கூற 

 

" அப்பா..காலம் வேறப்பா....அந்தகாலம் மாதிரி இந்தகாலம் இல்லை.... இப்படி உங்களால பசங்கள பார்க்க முடிரதே இல்லை காரணம் அதான்பா....காலம் மாறுது மனிதனும் மாறிடுறாங்க....நிம்மதி தவறான பாதையில தேடுறாங்க...கிடைக்கிறது என்னவோ அற்ப சந்தோசம் தான்...." 

 

" ஆத்தி நீ பெண்சக்திமா... அண்ணாவும் இப்படிதான் பேசுவான்,,.." கௌசிக்கூற அவனை பார்த்து அழகாய் ஒரு புன்னகை புரிய விழுந்துதான்போனான் அவனும்....

 

" இந்தாங்க காயத்திரி " அவள் முன்னே குங்குமமும் திருநீரையும் கொடுக்க அவள் திருநீரை மட்டும் எடுத்து வைத்தாள் ...." குங்குமத்தையும் வைங்க...." 

 

" இல்லங்க வேணாம்.... " 

 

" ஏன் என்னாச்சு நான் கொடுக்கிறதுனால ஒன்னில்லைங்க வைச்சுங்கோங்க.." 

 

" இல்லை நான் வைக்க கூடாதுங்க என்றாள் எல்லாருக்கும் ஒரே சங்கடமாய் போனது.... " 

 

" அப்பறம் மாப்பிள உன்கிட்ட கொஞ்சம் பேசனும்  "  விக்னேஷ் இழுத்துச்சென்றான்...

 

" டேய் ஏன்டா  இழுத்துட்டு வந்தா...." 

" அவங்க தான் வேணாணு சொல்லுறாங்கள சக்தி ஏன் கம்பல் பண்ற..." 

 

" அவங்க வைக்கல அதான் கம்பல் பண்ணேன்.." 

" அவங்க வைக்க கூடாதுடா..." 

 

" ஏன்டா ,.."  சக்தி கேட்க

 

அவனும் அவளின் கதையை கூற சற்றுகண்கலங்கியது..." ஏன்டா கணவன் போனா வைக்க கூடாதுனு இருக்கா....இந்த பூ பொட்டெல்லாம் சிறுவயதுலருந்து பெண் வைத்துக்கொண்டுதான் வளர்கிறாள்.....இடையில் வரும் கணவன் அதை கொடுப்பதில்லை...அவன் இறந்தாலும் அந்த பெண் அதையும் ஏன்டா இழக்கனும்....அப்படியும் ஒருசிலர் வைத்தாள் அப்பெண்ணை தூற்றும் இச்சமூகம்...ச்ச்ச....தன்னை அழகுபடுத்து கொண்டு வாழும் வயது

அவளுக்கு  பூவையும் பொட்டையும் பறித்து வாழ சொல்லி அழகுபார்கிறார்களா அவளது பெற்றோர்கள்,... " 

 

" மாப்பிள ஏன்டென்சனாகுற...." 

 

" இதெல்லாம் பார்த்தா  கோபமா வரூது..." என்று கூறி சென்றான்....

 

சக்தி,....பெயருங்கேற்றார் போல் சக்தியுடையவன்....சிவன் பக்தன்.காலையில் ஆரம்பிக்கும் மந்திரங்களை இரவுதான் முடிப்பான்....வேலையில்லா நேரமிதில் சிவ மந்திரங்களை படிப்பான்..கண்ணியமானவன் மாரியாதைக்குரியவன்..தவறென்றால் யாரென்றுகூட பார்க்க மாட்டான் பட்டென்று கூறிவிடுவான்..ஆதி இவனிடம் சற்று ஒதுங்கி தான் இருப்பார்....வெங்கட்டிற்கு செல்லபிள்ளை....தந்தை ஆறுமுகம் தாய்,ராதா,.......ஒரே அக்கா கணவனை இழந்து ஒரு பெண் குழந்தையோடு தாய்வீட்டிற்கு வந்துவிட்டாள்..சிறு வயதிலே இப்படியாயிற்று என்ற கவலைமட்டும் தான் அக்குடும்பதிற்கு,...அவர்களை விட்டு தனியாக வந்து இந்த ஊரில் விக்னேஸ் அவனுடன் தான் தங்கிருக்கிறான்....கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டும் திரியும் தன்மகனை நினைத்து பெற்றோருக்கு கூடுதல் கவலை வேறு....அந்த கவலை மாறுமா..இவனின் எண்ணம் தான் மாறுமா....பாப்போம்

 

பாயுமொளி நீ எனக்கு...

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: