Forum

Notifications
Clear all

பாயுமொளி நீ எனக்கு 23  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 71
28/02/2020 3:32 pm  

" காயூவிற்கு  இன்னும் மூன்றுவரூடத்தில்  கல்யாணம் செய்து வைக்க போவதாக " பாட்டி கூற அதற்கு மாலதியோ " இன்னோரு ஆளை காவு வாங்க போகிறேளா " என்றுகேட்க  காயூவிற்கு அழுகை வர உள்ளே சென்றுவிட்டாள்.....

 

" மாலதி நோக்கு அறிவு இருக்கா இப்படி தேளாட்டம் உன் பேச்ச வைத்து கொட்டிரீயே,.... " கேசவன் கூற நான் உண்மையை தானே சொன்னேங்க அவ ஜாதகம் அப்படிதானேங்க....

 

" இந்த காலத்துல ஜாதகம் மன்னாகட்டினு,....." கேசவன் கூற " அதானே உண்மையா நடந்தது,...." 

" இங்க பாரு மாலதி காயூ வீட்டுகாரர் இறந்தது ஆக்சிடென்ட் ஏன் அவரு கல்யாணம் ஆகலைனா கூட அங்க இருந்தாலும் இறக்கறதுக்கு வாய்ப்பிற்கு.....சும்மா சும்மா பிள்ளைய குத்தி காட்டாதடி...." என்றார் கேசவன்..

 

" நான் அப்படி என்னங்க சொல்லிண்டே... " 

" நீ இப்படி பேசுவேனுதான் உன்னை எங்கையும் அழைச்சுட்டு போறதே இல்லை,..." 

 

" உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலமையான இப்படி பேசுவீங்க... " " லட்சுமி கேட்க,......" அவர் தலைகுனிய 

ஏன்உங்களுக்கு இந்த நிலமைனா உங்களுக்கு எப்படி இருக்கும்..." அனிதா கேட்க...." அனிதா..." கத்தினார் மாலதி 

 

" சும்மாசொன்னதுக்கே கத்திரீங்க,...ஆன காயூ நம்ம வீட்டு குழந்தை அண்ணி அத போய் இப்படி பேசுறீங்க..... " அனிதா கேட்க.....

 

" என்னமோ பண்ணுங்க உண்மை பேசுனா இங்க கோபம் தான் வரும் எழுந்து சென்றுவிட சூரியா மன்னிச்சுருபா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்,..." 

 

" ஐயோ மாமா விடுங்க அக்கா அப்படிதானே விடுங்க " என்றார் இருந்தும் அனைவரும் கனத்த இருதயதோடே சென்றனர்.....

 

மறுநாள் காலையானது...அவரவர் தங்களின் வேலைக்கு செல்ல தயாராகினர்....காயூவின் முகம் வாட்டமாகவெ இருந்தது,....

 

" காயூமா உன் அத்தை சொல்லுறத பெரிசா எடுத்துகாத,....." நாயகி கூற 

 

" அம்மா அத்தை சொல்லுறத உண்மைதான மா....என் ராசி அப்படிதானே மா...." 

 

" நம்முடைய எதிர்காலத்த தீர்மானிக்கிறது இந்த ஜாதகம் இல்லடிமா....நம்முடைய நல் எண்ணங்களும் செயல்களும் தான்,.." .

 

" அப்பறம் ஏன் பாட்டி ஜாதகம் பார்த்தீங்க....அக்காவுக்கு....." 

 

" ஜாதகம் பார்க்கிறதெல்லாம் ஒரு கணிப்புக்காக தான்டா அப்படியே நடக்கும் சொல்லமுடியாது....இன்னும் சிலரு அதையே தான் முன்னிருத்தி எல்லாம் செயலையும் செய்யிறாங்க..ஜாதகத்து மேல  நம்பிக்கை மட்டும் வச்சா போதுமா எல்லாம் நடந்துமானா சந்தேகம் தான்....நம்மமுயற்சி மட்டுமே போது எல்லாத்தையும் சாதிக்கலாம்,.... " பாட்டி கூற

 

இருவரும் விடைபெற்றுக்கொண்டு கல்லூரிக்கு வந்தனர்...

 

" அக்கா நீ அத யோசிக்காத அக்கா....அதெல்லாம் ' பொய் அக்கா...என்பதற்கு " வெறும் சிரிப்பையே பதிலென்று கொடுத்து தன் இடத்திற்கு சென்றார்,.....

 

" தேவ்க்கோ மாலதியின் மேல் கோபம் பொத்திக்கொண்டு வந்தது....அதை தன் தோழிகளுடன் பகிர்ந்தாள்....

 

" இந்தமாதிரி ஆட்கள் இருக்கிறதுனால தான் சொந்த பந்தத்தை வெறுக்கிறாங்க டி....அவங்க வரலைனு யாரு அழுதா தர்ஷினி குறைபட...." 

 

" ஆமாடி எதாவது விஷேசம் போது மூக முட்ட திண்ணுட்டு நம்மலையும் குறை சொல்லிட்டு போற கேரக்டர் தான்டி அதுங்களாம்..." லத்திகா கூற

கரேட்டி வந்ததுக்கு நல்லா வச்சுட்டூ போயிருச்சு..

 

" என்ன குள்ளவாத்து காலை இவ்வளவு டென்சன் என்னாச்சு.... " 

 

" ஓன்னில்லை ஜானி.." 

 

" அப்படி தெரியவில்லை எதோ இருக்கு...." 

" அது ஜானி "  என்று அனைத்தையும் கூற ஜானி கோபம் சுள்ளென வந்தது,....டெபிளை குத்தினான்,....

 

ஜானி..... மூவரும் அதிர...

 

" தன்னை கட்டுபடித்தியவன்.....

உங்க அக்காவ தான் சொல்லனும் இன்னும் எல்லாரும் பேசுராங்க பேசுராங்க மூலையில் உட்கார்ந்தே அழுதுட்டு இருக்கா பாரு அவள தான் சொல்லனும்....ஏன் எதிர்த்துபேச வேணாமா எவ்வளவு தெளிவா மத்தவங்கட பேசுவா இதுல எங்க போச்சு அவ பேச்சு,தைரியம் எல்லாம்..சும்மா சும்மா எல்லாரும் பேசிடே இருக்காங்க சொல்லி அழுதுடே இருந்தா அழுதிடே இருக்க வேண்டியது தான் அவங்களும் மாற மாட்டாங்க நாமளும் மாறமாட்டோம்....

கத்த..." ஜானி,.....

 

" போய் சொல்லு உங்க அக்காகிட்ட சமூகம் பேசுர பேச்சுக்கேல்லாம் செவி சாய்த்து வாழ்ந்த தினமும் கண்ணீர் சிந்தனும்....." 

 

கோபத்தோடே சென்றான்....." இவன் ஏன் இவ்வளவு கோபம் படுறான்,..... " அவனை பார்த்துகொண்டிருந்தாள்

 

" இங்கோ ஏன்டிமா உன் முகம் இப்படி வாடிருக்கு..." சுந்தராம்பாள் கேட்க.." அப்படிலாம் இல்லைமா....." 

 

" காயூ சொல்லுடி " கௌசி கேட்க 

" ஒன்னில்ல அண்ணி..." 

 

" தினமும் சிரிச்சே பூமாதிரி இருக்குமே இன்னகி வாடிருக்கு..." ராமன் கேட்க,....." அட சொல்லு தங்கச்சி..." 

 

அனைத்தையும் கூற,.... " லூசாடி நீ வாய் எம்முட்டு பேசுற அவங்கள பேசமாட்ட....ஜாதகம்,மன்னாகட்டினு...இதெல்லாம் இன்னும் அதுவும் இந்த காலத்துல பார்த்தா வேஸ்ட் டி....நம்ம வாழ்க்கை தேலையில்லாத ஒன்னு இந்த ஜாதகம்..." 

 

" எம்மா மாமி நேத்து அவ்வளவு தெளிவா சொன்னீங்க....இன்னகி பேச்ச கேட்டுட்டு வந்து சோக கீதம் வாசுக்கிறீங்க...பாம்புலருந்து எல்லா மிருகம் தனக்கு ஒன்னுனா தன்னை துன்புருத்துரவங்களகிட்ட சண்டை போடுத்து,...நீ மனுசிதானே அப்பறம் ஏன் பேசல.....

இந்தா மாதிரி ஆட்கள்கிட்ட அவங்களமாதிரி தான் இருக்கனும்....உன்னை எப்படி நடத்தறாங்களோ பேசுராங்களோ அப்படியே நீயும் பேசு அவங்களை நடத்துரல தப்பு ஒன்னில்லை.... " சக்தி கூற

 

" ஆமா தேளாட்டாம் குத்துரவங்கட தேளாத்தான்டா இருக்கனும் இல்லைனா காயம் நமக்கு தான் அதிகம் வரும்..நீ அதை நினைக்காம கிளாஸ் எடுக்கனும் அதுக்கு பாரு..வாழ்க்கை எல்லாத்தை கடந்து போகனும்.... " ராமன் கூற 

 

சரிப்பா என்றாள்....

 

" ஏன்டா இங்க தனியா உட்கார்ந்து இருக்க...கிளாஸ் ஏன் வரல...." தியாகு கேட்க மனசு கஷ்டமாயிருந்தது..அதான்டா...

 

" ஏன் என்னாச்சு...." தேவ் கூறியதை கூற..." பாவம் காயூ ஒவ்வொரும் ஒவ்வொரு  விதத்துல அவங்கள கஷ்டபடுத்துருங்கடா,..அவ எத தான்டா நினைச்சு வருந்துவா.....சந்தோசமாவே அவ இருக்க கூடாத....சின்ன பொண்ணுடா.....பேசுரது கூட கம்மியாதான் பேசுவா...இதுல இப்படிவேற எல்லாரும் ஏன்டா அவள முடக்கி போடுறாங்க...." 

 

" நீஏன்டா அவங்களுக்காக பீல் பண்ற...." 

 

" தெரியல மச்சி அவ கஷ்டபடுறத என்னால ஏத்துக்கவோ தாங்கிக்கவோ வேடிக்கைபார்க்கவோ முடியல... அவ கூட இருந்து அவள பேசுர எல்லாரையும் நல்லா நாளு வார்த்தை கேட்க  தோணுது......" 

 

" டேய் என்னடா பேசுர நீ காயூ வ......" அவனை பார்த்தவன்  " தெர்ல ஆன அவ கஷ்டபடும் போது மனசுதுடிக்குது...." என்றான் கண்ணீர் பட...." டேய் இதெல்லாம்,சாத்தியம் ஆகாதுடா,..." 

 

" தெரியும்டா..நம்ம மனசு ஆசைபடுறதெல்லாம் கிடைக்காதுனு தெரிஞ்சது தானே...." 

 

" வேணாம் மச்சி....பெரிய பிரச்சினை முடிந்துடும்....." 

" தெரியும் டா...என்னை நானே கட்டு படுத்திட்டு இருக்கேன்,..இதை காதலுனு சொல்லி அவ பின்னாடியே சுத்துறது,....நான் இருக்கேன் நான் கடைசிவர இருப்பேன் நம்பிக்கை கொடுத்து அவள மேலும் நான் கஷ்டபடுத்த போறதில்லை டா....அவளோட சந்தோசம் எதுவோ அதையே அவ செய்ய தூரமா நின்னு பார்த்தா போது அவள கஷ்டபடுத்தரது யாரா இருந்தாலும் அவங்கள நான் சும்மா விடமாட்டேன்...காயூ சந்தோசத்துக்காக அவளுக்கே தெரியாம என்ன வேணா பன்னுவென்...." என்றான் தீர்க்கமாக....

 

" மச்சி உன் வாழ்க்கை,..... " 

 

" தெரியல இப்ப வாழர வாழ்க்கை எனக்கு சந்தோசமா தான் இருக்கு  அவள தூரமா இருந்து பார்க்குறது....கொஞ்சம் பேசினாலும் அதுல ஒரு திருப்திகிடைக்குது....." 

 

" மச்சி நீ உண்மையாவே லவ் பண்றீயா.... " 

 

" இதுக்கு பெயரு லவ்னு நான் பெயர் சூட்ட விரும்பலா....." ஆன எதோ ஒரு உணர்வு அழகான உணர்வு... மெல்லினாவ லவ் பன்ற இந்தமாதிரி உணர்வ உணர்ந்ததே இல்லை,..இது வித்தியாசமா இருக்கு..." 

 

" என்னமோ இது போடா....இப்படியே இரு.....அத அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனா....உனக்கு தான் ஆபத்து என்று சொல்லிட்டூ சென்றான்... " 

 

இங்கோ வெங்கட் mbc ஹெச்சோடியை திட்டிக்கொண்டிருந்தார்.. " என்ன இது வகுப்பிற்கு ஒழுங்க வராதவனக்கு பிரசண்ட் மட்டும் கரேட்டா போட்டுருக்கீங்க,...எப்படி சார்..." 

 

" சார் நாங்க என்ன பண்ண அவன் யாருனு யாரோட பையன் உங்களுக்ககுகே தெரியும் அவ யாரையும் மதிக்க  மாட்டிக்கிறான் சார்....நாங்க வயசானவங்க பசங்க முன்னாடி அவமானபட்டா நல்லாருக்குமா சார் அவன் யாரையும் மதிக்கவே மாட்டிகிறான் சார்....நீங்க பிரசண்ட் போடுறீங்களா இல்லை,நானே போடவா கேட்கிறான்....என்ன பண்ண சொல்லுங்க, கிளாஸ் வந்தா பாடம் எடுக்க விடமாட்டிகிறான் சார்,.....பொண்ணுங்க பயந்து இருங்குங்க சார்....அவனை ஏன் சார்,சேர்த்தீங்க இப்பகூட நான் சொன்னேன் உண்மை எதுவும் தெரிஞ்சா என்னை எதாவது சொல்லி அசிங்க படுத்துவான் சார்....." 

 

" நீபோங்க சார் நான் பார்த்துகிறேன் இனி கிளாஸ் வரலைய,ஆப்செண்ட் போடுங்க,...இந்த மாதிரி பண்றவங்கள அடிச்சு தான் திருத்தனும்.. " 

 

" சரி சார்.... " பியூனை அழைத்து ஸ்ரவனை வர சொல்லுமாறு சொல்ல அவனும் வந்தான்,,.மரியாதை இன்றி அவர் முன் சேரில் அமர்ந்தான்

 

பாயுமொளி நீ எனக்கு..

 


Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: