Forum

Notifications

பாயுமொளி நீ எனக்கு 28  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 69
24/03/2020 7:49 pm  

முதல் வகுப்பு இல்லை என்பதால் காயூ நூலகம் வர அங்கே ஜானி தியாகுவை தவிர யாருமே இல்லை....தியாகு எதையோ தேட ஜானிஅமர்ந்து படித்துக்கொண்டிருந்தான்......அவன் முன் அமர்ந்தாள் காயூ....அவன் அவளை பார்க்கவே இல்லை......அவளும் தன்னை பார்ப்பான் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமே பார்க்கவே இல்லை...தியாகு அவளை பார்த்தவன்,,,..குட்மார்னிங் மேம் என்றான் ஜானி அருகில் அமர்ந்து,....அப்போது தான் ஜானி அவளை பார்த்தான்....குட்மார்னிங் என்று அவளும் கூறி ஜானியை பார்த்தாள்....

அழகான நெற்றில் நாமதிலகமும் குங்குமும் அவளது அழகு கூந்தலில் மல்லிகை பூ அழகுபடுத்திக்கொண்டிருந்தது...

அவன்காண அவள் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்,,.

 

" மேம் நீங்க உண்மையாவே அழகா இருக்கீங்க....இந்த பூவும் பொட்டும் அழகுதான் உங்களுக்கு.இந்த தோற்றமும்

உங்க மாற்றமும் உங்களுக்கு எப்பையும் சந்தோசத்தை கொடுக்கும் மேம்... " தியாகு கூற அவள் புன்னகைத்தாள்

 

" தோற்றம்  ஒகே தான்ஆன மாற்றமில்லையே தியாகு..." 

 

இருவரும் அவனை புரியாமல் பார்த்தனர்,..

 

" என்னடா சொல்ல வர... " 

 

" பூவும் பொட்டும் வச்சா போதாது,மனசையும் மாத்தனும். " 

 

" இன்னும் ஏன் அந்த தயக்கம் யாராவது எதாவது சொல்லிருவாங்களேனு பயம் அந்த கண்ணுல இருக்கே அதுதானே மாறனும்." 

 

" சும்மா பூவும் பொட்டுவைக்கிறதால நோ யூஸ் டா தியாகு 

நம்ம மனசையும் மாத்தனும்  

எப்பையும் போல திமிர் கொண்டு பார்வையும் நெஞ்சல தைரியத்தை சுமந்து யாரு என்னசொன்னாலும் கவலை இல்லைனு போய்டே இருப்போம் என்று தெளிவான மனதா வைக்கனும் அதான் உண்மையான மாற்றம்  "  என்றுகூறி எழுந்துசெல்ல தியாகுவும் எழுந்துசென்றான்.....அவளோ அவன் கூற்று உண்மையெனவும் எப்படி சரியாக சொல்லுகிறான் என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

 

" டேய் அவங்க தான் மாறிடாங்களே டா....இன்னும் என்னடா பண்ணணும் அவங்க,... " 

 

 

" டேய் உனக்கு புரியல டா நான் முதல் முறையா அவ கண்ணுல ஒரு திமிர பார்த்தேன் ஆன இப்ப அது இல்ல.....பூவைபொட்டையும் வச்சுகிட்டாலும்  இன்னும் யாராவது எதாவது சொல்லுவாங்களோனு தயக்கம்.......அவகிட்டா நிறையாவே இருக்கு அதான் நான் அப்படி பேசினேன்..." 

 

" சரிதான் உனக்கு மட்டும் அவ பார்வை புரியுதா என்ன,.." 

 

" நிச்சயமாக அவளை என்னால் படிக்க முடியும்....முதல் வர செம்க்கு ஒழுங்கா படிப்போம்டா,.." 

 

" டேய் பர்ஸ் வைச்சுண்டு வந்துடேன் டா எடுத்துட்டு வந்துறேன்டா... " தலையில் கைவைத்த படி..,,

 

" நீ நடத்துடா நடத்து... " என்றான் தியாகு...ஈஈஈஈ....

 

" மீண்டும் அவளிடம் வந்தவன்....அவளோ யோசனையில் இருத்தாள்..அதை சொடக்கிட்டு கலைத்தான்....அவளோ அவனை பார்க்க.... " நீ ரொம்ப அழகு உனக்கு முன்னாடி இந்த பூவும் பொட்டும் தூசு தான்....நான் இத வைக்க சொன்னதே உன்னோட திமிரும் தைரியமும் குறையாம இருக்க இன்னும் அதிகமாக இருக்கவேண்டும் தான்..

 

ஆன அது இரண்டுஇல்லாதப்பவே நீ தைரியாம இருந்த ஆன இப்ப இல்லை..தோற்றத்தை மாத்துனது போல உன் மனசையும்   மாத்திடு....

 

முதல் நாள் பார்த்த திமிர் அந்த கண்ணுல இப்போ இல்லை வெறும் தயக்கம் தான் இருக்கு...

சோ பீளிஸ் மனசையும் மாத்து காயூ...

 

மத்தபடி நீ ரொம்ப அழகா இருக்க..பார்த்துடே இருக்கனும் போல இருக்க " என்று கூற அவளோ அவன் கூறியதில் ஒற்றைபூர்வத்தை உயர்த்தி அவனை பார்க்க

 

." ப்ப...ப்ப.பர்சை எடுக்க வந்தேன் என்று "  கூறி எடுத்துகொண்டு கிளம்ப....அவளோ சிரித்து விட்டாள்..சென்றவன் அவளை பார்க்க  அவளோ சிரித்துக்குகொண்டிருப்பதை....பார்த்தவன் தன் முதல் வெற்றியென குதித்தான் சந்தோசமாக சென்றான்..

 

அன்றைய நாள் நன்றாக சென்றது,....அடுத்து வந்த நாட்களில்  செம் வர மாணவர்கள் யாவரும் பரீட்சைக்கு தயாராகினர்..இதில் ஜானிக்கும் தியாகுக்கும் தான் பெரும் வருத்தம் செம்மிலும் அவளைகாண முடியாது  லீவிட்டாலும் அவளை பார்க்க முடியாது என்று தியாகுக்கும் தான் தேவ்வையும் பார்க்க முடியாது என்று,.....

 

இப்படியே ஒவ்வொரு பரீட்சை யாக எழுத...ஒரு பரீட்சையில் ஜானி அறைக்கு  காயூ சூப்பர்வைஸ்ராக வந்தாள்.....

 

வாய் முழுதும் பல்லானது ஜானிக்கு தியாகு தாமஸ் பைசல் தலையில் அடித்துக்கொண்டனர்...

 

ஒவ்வொரு பேப்பர் கொடுத்தாள் முதலில் பின் வினாத்தாளையும் கொடுத்தாள்..அவனே,விரைவாக பரீட்சை எழுதி முடித்துவிட்டு அவளை சைட்டடிப்போம் என்று நினைத்து வேகமாக பரீட்சை எழுதினான்...யோசிக்கிறேன் என்று அவளை பார்த்துகொண்டு இருப்பான் அவளோ ஹாலை சுற்றி வட்டம் போடுவது..டெபில் அமர்ந்து அங்குமிங்கும் பார்ப்பது,...என்றையே பொழுதைகழித்தாள்,..அவன் பேப்பர் கேட்டால்  மெல்லியதாய் புன்னகை செய்துகொடுப்பாள்,....இப்படி சென்றது,...நேரமும் முடிந்தது அவன் மட்டும் எழுதிகொண்டிருக்க பேப்பரை.அடிக்கவைத்து அவனருகில் வந்து நின்றாள்,,.... " சாரி மேம் டூமினிட்ஸீ..." 

 

" ம்ம் ஒகே "  என்றாள்....எழுதி முடித்தவன் கட்டிகொடுத்தான்..மீண்டும் அடுக்கிவைத்துவிதட்டு கிளம்பினாள்,

,அவள் பின்னே சென்றான்,,....

 

" என்னா மச்சி எக்ஜாம் எழுதியா..." பைசல் கேட்க...." எங்க ஜொல்லுவிடவே நேரமில்லையே அவனுக்கு  " தாமஸ் கூற " ச்சீ போங்கடா  " வெட்கபட.." ஐய்யோ கடவுளே இத எங்களால பார்க்க முடியலையே...." என்றார்கள் கோரசாக....." போங்கடா அவடெய்லியும் வந்தா நல்லாருக்கும்ல...." 

 

" இருக்கும் நீயும் எழுதமா ஹரியர் வச்சு இங்கனையே கதினு கிடப்ப...." தியாகு கூறினான்...

 

கல்லூரியில் பரீட்சை முடிந்து வீட்டிற்கு அனைவரும் விடுமுறை விட்டனர்....ஒருவாரம் விடுமுறை என்பதால் தேவ்வும் காயூ பெங்களூர் சென்றனர்.....சக்தி அவன் ஊருக்குச்சென்றான்... 

 

அன்று சனிகிழமையாக இருக்க ...தியாகுவும் ஜானியும் கோயில் சென்றனர்,..அன்று போல் இன்று அவர்களை காணலாம் என்று எண்ணினான்,,..ஆனால் ஏமாந்துதான் போனான்,,..

 

" யாரா தேடுற காயூவையா..." ம்ம்..

" அவங்க வரமாட்டாங்க, " 

 

ஏன்டா..

" அவங்க பெங்களூர் போயிட்டாங்க.." 

 

" உனக்கு எப்படிதெரியும் " 

 

" தேவ் சொன்னா,.." 

" தேவ்வா எப்போ...." 

" மெசேஜ்ல சொன்னா.." 

" மெசெஜ்ஆ,...இத எப்போ.." 

 

" நாங்க மெசெஜ்ல பேசுவோம் பிரண்டிலியாதான்டா,... " 

 

" அடப்பாவி எங்கிட்ட இருந்தே மறச்சுடியே...." 

 

" இருடா மொத்தமா குரூப் போடுவோம் அதுல உன்னையும் காயூவோம் ஆட் பண்ணுவோம்...." அவ்வாறே செய்ய எல்லாரும் பேசிக்கொள்ள காயூமற்றும் இப்பவேணாம்என்று மறுத்துவிட்டாள்....

 

பெங்களூரில் பெரிய மாலுக்கு அங்குள்எ டூரிஸீட்பிலேக்கு எல்லாம் சென்றாள்...அங்கே அவள் ஆதியுடன் ஒரு நாற்பது வயது நிரம்பிய பெண் அவரோடு இருந்தார். இருவரும் சாபிங் செய்ய அதை புகைபடமாக பிடித்தாள் காயூ...தன் சித்தப்பா..அவர்களுடன்பேசுவதை பார்த்தவள்.....

 

சித்தப்பாவிடம் விசாரித்த ஆட்ரசையும் வாங்கிகொண்டு அவர்களை காணச்சென்றாள் அந்த பெண்ணை.....

 

இங்கோ சக்தி தன் மனதில் உள்ளநெருடலை போக்க தன் தமக்கையிடம் பேசுவதற்காகவே வீட்டிற்குவந்தான்,....ஆனால் அப்போதுதான் தன் தமக்கை எவ்வாறு தங்கள் வீட்டில் இருப்பதை உணர்ந்தான்....இன்னும் சக்தி திருமணத்திற்கு ஒத்துகாது இருப்பது தன்னால் என்று அவனின் தமக்கையும்,,.தன் மகளால் தான் தன் மகன் கல்யாணம் செய்துகொள்ள நினைக்க மாட்டிக்கிறான் என்று அவரும் அப்ப அப்ப தன்மகளை சாடிக்கொண்டிருந்தால்....தாய் வீடெ இன்று அவருக்கு நரகமாகிக்கொண்டிருந்தது.எதுவும் பேசாது தனக்கும் தன் குழத்தைக்கும் அடைக்கலமே என்று அமைதியாக இருக்கிறார்...

இது சக்திக்கு பெரும் வலியைதந்தது.அவள் வெளியே ஏதும் சொல்லாமல் தன் மகள் ஆசைபட்டதை கூட வாங்கிகொடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.....தன் கணவரோட இருந்திருந்தால் இந்த நிலமை நமக்கு வந்திருக்காது,,...உண்ண உணவும் இருக்க இடமும் கிடைத்தால் மட்டும் போதுமா வாழ,....தன்மானம் ஒன்று இருக்கிறேதே பெற்றவர்கள் ஆனாலும் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு நாம சுமையாக தான் தெரிந்திவோமா தெரியாது ஆனால் நமக்கே ஒர் எண்ணம்  வந்துவிடும் அல்லவா,......தனித்து வாழ்ந்திடுலாம் இவ்வாறு வாழ்வது கொடுமையே இவ்வண்ணம் அவளுக்கு வந்தது,.,,.தன் மகனேன்று வரும் பொழுது பெற்றவர்களுக்கு தன் மகளும் வேறொருவளுடைய மனைவியாக தெரியகிறதோ....இருந்தும் அவளுக்கு அங்கே வாழ்வது கொடுமையாகவே இருந்தது,,,.,இதை சக்தி அங்கே சென்ற இரண்டு நாளில் அறிந்துகொண்டான்,,,,,

 

பாயுமொளி நீ எனக்கு

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: