Forum

Notifications
Clear all

பாயுமொளி நீ எனக்கு 4  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 71
30/01/2020 8:07 pm  

" அக்கா அக்கா...சீக்கிரமா வாக்கா....." என்றவள் அழைக்க
" நான் எதுக்கடி நீ அம்மாடா சொல்லிட்டு கிளம்பேன்"

" அது நேக்கு தெரியும் இப்போ நீ வரபோறீயா இல்லையா.."

" சொன்னா கேளு தேவ் மாஅக்கா வரக்கூடாதுடி.,..."

" அதெல்லாம் தெரியாது நான் முதல் முறையா கல்லூரிக்கு போறேன் உன்ன பார்த்துட்டு தான் போவேன் வெளியவா..... "

" வேணாம் நீ முதல் முறையா கல்லூரிக்கு போற நான் வந்து நின்றா அபசகுணமாகும் செல்லம் நான் ....."

" என்ன அபசகுணமாகும்....."

" இதுக்கு முன்னாடி நான் பரீட்சை எழுதபோகும் போது  கூட உன்ன தானே பார்த்துட்டு போவேன். நீ பன்றது சரியில்ல கா ஒழுங்க வா என்முன்னாடி..... " என்று தன் அக்கா அறையின் முன்னின்று கத்திக்கொண்டிருந்தாள் தங்கை தேவ்....

இதுவரை கல்லூரி செல்ல அவளை அலங்கரித்தவள் கல்லூரியில் எப்படி இருக்க வேண்டும் என்று அவளுக்கு அறிவுரை கூறியவள் கிளம்பும் தருவாயில் கதவை சாதிக்கொண்டு உள்ளே இருக்கிறாள்.......தன்னை ஒர் அமங்கலி எனவும் தான் முன்னே வருது ஓர் அபசகுணம் என்ற நிலையில் அவளை நிருத்திவிட்டனர்.....அக்கம்பக்கத்தினர்....

" சரி நீ வரமாட்டேல, அப்ப நான் காலேஜ் போல,... " என்று அடம்பிடிக்க,தங்கை இச்செயலே அவளை வெளியே கொண்டு வந்தது.....

கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்......ஒப்பனை இல்லை நெற்றியில் சிறு தீருநீர் சிறு காதுகளை ஒட்டிய தோடு..மெல்லியதாய் கழுத்தில் ஒர் செயின் அவ்வகை கொண்ட அம்முகம் அழகாகதான் இருந்தது.....

" என்னடி வேணும் உனக்கு.... "
" நீ தான் வேணும்....."
" நான் ஒரு அமங்கலி நீ கல்லூரிக்கு போக போற முதல் நாள் இப்படி நான் வந்து நிக்கிறது தப்புடி,"

" லூசுக்கா நீ...நான் இப்பவும் சொல்லுறேன் தாலி மட்டுமே உன் கணவர் கட்டினது....
ஆன பூவும் பொட்டும் நம்ம அம்மா உனக்கு கொடுத்தது...புருசன் போனதும் அதெல்லாம் வைக்க கூடாது சொல்ல உரிமையாருக்கும் கிடைக்காது,,."

" அப்படி பேசமுடியாது தேவ்மா..
அதெல்லாம் ஏத்துக்காது இந்த சமூகம்.... "
" போ அக்கா அந்த சமூகம் என்ன நம்ம மாமான மச்சானா..அவங்க பேச்ச கேட்க....நான் நம்ம மாமா பேச்சையே கேட்கவே மாட்டேன்....தேவ்....அக்கா எனக்கு இத நீ பேசுர பாரு அத வருத்தம் இருக்கு.....
சரி சரி விட்டு தள்ளு இங்க வா " என்று அவளை வாசலில் நிருத்தியவள்,,...சற்று தள்ளி போய் நின்றுகொண்டாள்,,,.. " வாக்கா " ...என்று அவள் கூற அவளின் நினைப்புகளை பொய்யாக்கியது தங்கை பாசம் அவளே எதிரே வந்தாள்,,...தங்கையோ அணைத்து முத்தமிட்டாள்....வரென் கா என்று கூறி சென்றுவிட்டாள்.....

இதை எல்லாம் பார்க்க தவறவில்லை தன் முன்னே உள்ள கிருஷ்ணனின் பெரும் அறிவுரைகள் கூறும் அந்த கீதை கூறும் மொழியை படித்துக்கொண்டிருந்த சரஸ் பாட்டி,,,அதை படித்து முடித்தவர்,,..அதற்கே உண்டான இடத்தில் வைத்துவிட்டு அவளிடம் வந்தார்...செல்ல அடியொன்றை வைத்தவர்...... " ஆ...சரஸ் " ஏன்அடிக்கிற.

" காலம் இப்போ அப்டேட் ஆயிருத்துடி புருசனோட முழுசா காதல்கொண்டு தாம்பத்தியத்து முழுமை பெற்று நல்ல பிள்ளை பேர பிள்ளைகள் பெற்று முழுமையடைந்து சந்தோசமா வாழ்ந்து அப்ப கணவர் இறந்தாருனா...தாலியோட சேர்ந்து அவர் நினைவா அவர் வாங்கி தந்த பொட்டு அவர் வாங்கி தந்த பூ அதையேல்லாம் எடுத்து போட்டாங்க....

அதுக்காக நீ ஏன்அப்படி இருக்கனும் ஒருவாரம் கூட முழுமையாகல அதுக்கு உள்ள நீ அமங்கலியாம்...
போடி இந்தகாலத்து பெண்களை பார்....பழைய பஞ்சாகத்தை எங்களை மாதிரி பேசித்திரியவில்லை காலம் மாற்றதுக்கு ஏற்றவாரு மாறிகிறார்கள்,,..நீ  ஏன் பழைய பஞ்சாகம் பேசுற,...நியாயபடி பார்த்தா நான் தான் இத பேசிட்டு திரியனும் ஆன நான்அத ஏத்துகிட்டேன்-.....நீயும்
வாழு வாழ பழகு,,.....தன்முன் இருந்த பாட்டி ஆ...." எனபார்த்தாள் காயூ,.

" பாட்டி சொல்லுறது சரிதான் நானோ அப்பாவோ இல்ல தேவ்வோ பாட்டியோ உன்ன இன்னமும் எங்கவீட்டு மகாலட்சுமி பார்க்கிறோம்.....நீ அமங்கலி இல்லை....எங்க வீட்டு குலதெய்வம் காயூ மா..தன் தந்நை கூறி அறையில் இருந்து வெளியே வந்தார்...." சூரிய நாரயணன்..

." அப்பா,..ஆன ." .தயங்கி நிற்க

" ஏன் நம்ம வீட்குள்ள அவங்கள சேர்க்கிற....அபசாரமா இல்ல....நீயும் சமூகத்துல ஒருத்தி தான் உனக்கு எல்லா உரிமை இருக்கு வெளியே போக...இனி இப்படி நினைக்க கூடாது அப்பாகாக,,.."
.
" ம்ம் சரிபா..."

இங்கோ கல்லூரி முதல் நாள் தேவ்விற்கு கொஞ்சம் பதற்றம் பயம் எதிர்பார்ப்பு சந்தோசம்  என எல்லா உணர்வுகளும் அவளுக்கு தோன்றியது.....தன்னோடு சேர்ந்து மூன்று தோழிகள் அவளோடுவந்து சேர்ந்தார்கள்,...பள்ளியில் படித்த தோழிகள் அதனால் கொஞ்சம் தைரியமும் இருந்தது.... உள்ளே வந்தாள்.....அது பெரும் பொறியியல் கல்லூரி......பெரிய வளாகம் கொண்ட கல்லூரி,.நான்கு ஆண்டு கோர்ஸ்களும்,...mba mca m.e.....இதர கோர்ஸ்களும் சேர்ந்த கல்லூரிதான்....தன் பிளாக் எங்கே உள்ளது என்று ஆராய்ந்து "போதுதான் அங்கே கல்லூரியின் மூன்றாமாண்டு  மாணவிகள் அழைத்தனர்.....

" நீங்க எல்லோரும்  பிரஸ்சர்ஸ் ஆ...."

" ஆமாம் என்று தலையாட்டா.,,.."
" எந்த டிப்பார்ட் மெண்ட்..."

" சிவில்,....கோரஸ்ஆ......"

" ம்ம் அப்படியா,....நாங்க எல்லாரும் உங்க சீனியர்ஷ் விஷ் பன்னுங்க..." .

சரி சீனியர் குட்மார்னிங் சீனியர்ஸ் மூவரும் கோரஸ்ஆ...

" பள்ளியில் போட்ட அதே டூய்னை இங்கையும் போட்டனர்.,,,"

" இதுங்க பள்ளியில இருந்த நேரா இங்க வந்துடாளுங்க போலடி..." இன்னோருத்தி கூற  அங்கே அனைவரும் சிரித்தனர்...

மூவரும் திரு திரு என முழிக்க..ஒருத்தி ஓடிவந்தாள்....மூச்சு வாங்கி நின்றவள்....." ஹேய் விசயம் தெரியுமா ஜானிக்கு பிரேகப் ஆச்சாம் டி..."

" என்னடி சொல்லுற நிசமாவ..... "

" ஆமா அவன் தான் பிரெகப் பன்னா,அப்பாடா நம்ம ரூட் கிளியராச்சு,...
மெல்லினாவாம் என்னா மினுமினுக்கு மினிக்கிட்டு இருந்தா நான் ஜானிகாதலினு இப்ப வச்சான ஆப்பு அதான் என்ஜானி...."
" ஆஹான் அது என் ஜானி..."

" அப்ப எனக்கு,,,." அடச்சி.....சண்டபோடாதீங்க ஜானி எனக்கு மட்டும் தான்,...."

" நாலுவரும் அவனுக்காய் சண்டபோட,... அவனுக்கோ இவர்கள் யாரென்றே தெரியாது,,.....இங்கே நாலுவரின் சண்டை பார்த்துவளுக்கு சிரிப்பே வந்தது தேவ்விற்கு,... " தேவ் சிரிக்காத இல்லேன வச்சு செய்ய போறாளுக அவளின் ஒரு தோழி " லத்திகா கூற...." இத பார்த்தா சிரிப்ப அடக்க முடியலை டி...."

" வாய மூடிட்டு சிரிடி...." இன்னோருவள் தர்ஷனி.....

" ஹேய் ஜானி வரான்டி அமைதியா இருங்க...." என்று நால்வரும் அமைதியாக அவனுக்கு விஸ் பன்னினர்....குட்மார்னிங்  ஜானிசீனியர்..." என்று சற்றுமுன் அவர்களை சொல்லி இவர்கள் கோரஸ் பாட தேவ் வாய்விட்டே சிரித்துவிட்டாள்.....அதை பார்த்துவிட்டான் ஜானி.... கிளாஸ்க்கு போங்க எல்லாரும்,...என்றிட சரிசீனியர் என்று நகர " ஹேய் நீ இரு " என்று அவர்களுடன் சென்ற தேவ்வை அழைத்தான் ஜானி... " எதுக்கு சிரிச்ச...."

" சும்மா தான் சீனியர்..,,,"

" இல்ல உண்மை சொல்லு.... "

" அதுவந்து சீனியர் எங்கள விஷ் பன்னசொன்னாங்க....நாங்க விஷ் பன்னோம் என்ன பள்ளில இருந்து அப்பிடியே வந்துடியா கேட்டாங்க,...இப்ப அவங்களே அப்படிதான்  சொன்னாங்களா சிரிப்பு "
....." ஓ...அதுக்காக சரி என்ன டிபார்ட்மேண்ட் சிவில் சீனியர்....ராக்கிங் யாரும் பன்னமாடாங்க அப்படி யாராவது பன்ன என்கிட்ட சொல்லுங்க பயப்பிடாதீங்க " தன்மையாக அவன் கூற

" .ராக்கிங் போய் யாரவது பயப்பிடுவாங்களா சீனியர் என்று கெத்தா  " தேவ் கூற....

" ஒ...மேடமுக்கு பயமில்லையோ,,..அப்ப வாங்க எங்க கேங் வெய்ட் பன்னுது ராக் பன்ன வாங்களேன் போவோம் " ஜானி கூற....மூவரும் அதிர்ந்தனர்.பின் அவனை பார்த்து
இழித்தனர் பயத்தில்....
செத்தோம் டி....

பாயுமொளி நீ எனக்கு....

 


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 3 months ago
Posts: 87
25/02/2020 6:18 pm  

Nice ud


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: