Forum

Notifications
Clear all

பாயுமொளி நீ எனக்கு 5  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 71
01/02/2020 9:30 am  

கல்லூரியில் தேவ் தர்ஷினி லத்திகா வை மூன்றாம் ஆண்டு மாணவிகள் ராக் செய்ய அப்போது வந்த ஜானி அவர்களை காண அவர்களோ சிறுபிள்ளை போலே வணக்கம் வைக்கத்தை கண்ட தேவ் சிரித்தாள்...அவர்களை அனுப்பிவைத்து விட்டு 

ஜானி தேவ்விடம் "  ஏன் சிரித்தாய் "  என்று கேட்க அவளோ காரணத்தை கூறினாள்..,

 

" ராக்  செய்தால் பயப்பிடக்கூடாது "  என்று ஜானி கூற

" பயமா எனக்கா அதெல்லாம் இல்லை "  என்று தேவ் "கூற " அப்படியா அப்ப வா மகளே எங்க கேங்கை உன்னை ராக் பன்ன சொல்லுறேன்....வா வா.." என்று மூவரையும் அழைத்துச்சென்றான்....

 

" அடியே இப்படியா  டி  சொல்லுவ....சின்ன மீனோடே தப்பிச்சிருக்கலாம் இப்ப பேசிடி பெரிய திமிங்கிலம் மாட்டிவிட்டியே டி,.,," லத்திகா கூற.....

 

" அடியே நான் இவன் இப்படி பேசுவான் தெரியாதே டி...,," தேவ் பயந்திட

 

" என்னடி தெரியாது மூஞ்ச பாரு.,,,இதுங்களாவது பொண்ணுங்க....ஆன அவனுங்க பசங்க டி..ஏடா கூடமா எதாவது ராக் பன்னிட்டா இன்னாடி பன்னுவ.... "  தர்ஷூ கேட்க

 

" அதெல்லாம் எதுவும் பன்னமாட்டாங்க...,அப்படி எதாவது பன்ன கத்தி ஆர்ப்பாட்டம் பன்னிருவோம்...எல்லாரும் அப்ப கேட்பாங்கள,....." 

 

" ஆத்தி தேவ் செம டி...." 

 

" எதற்கு தைரியமா இருக்கனும் சரியா,..வா " என்று படைவீராங்கனியாய் அவள் முன்னே செல்ல இருவரும் பின்னே சென்றனர்....வரும் வழியெல்லாம் ஜானிக்கு வணக்கம் வைக்கதாவரென்றொ யாருமில்லை....எல்லாரும் மரியாதை கொடுத்தனர்....அவனும் தான்..தன் கையை அசைத்தவாறே....

 

" ஏன்டி பெரிய ஆள இருப்பானோ.....இவ்வளவு பேரும் மரியாதை கொடுக்கிறாங்க....,அந்த சீனியர்ஸ் பேசிகிட்டத கேட்டியா தேவ்....இந்த காலேஜ்ஜோட பிளே பாய் இருப்பானோ...." 

 

" ஆங்...,இருக்கலாம் ஆன பசங்களும் வணக்கம் வைக்கிறாங்களே.." தேவ் கூற

 

" அப்போ கேங் லீடர் இருக்கலாம் இல்ல காலேஜ் பிரசிடேன்ட்....இல்லைனா காலேஜ் அவனோடா கூடதா இருக்கலாம்....,சரி இதெல்லாம் நமக்கு எதுக்கு சும்மா வாங்கடி அதட்டினால் தேவ்....." 

 

" அங்கே ஆறுபேறு கொண்ட குரூப் இருக்க....ஆத்தி அங்க பாரு டி எல்லாரும் பல்க்கா இருக்கானுங்க  டி" .....,,

 

" ஸ்ஸூ.....சும்மா வாடி...." 

 

" வா ஜானி,யாருடா இவங்களெல்லாம்...தியாகு கேட்க

" நம்ம சீவில் ஜூனியர்ஸ் டா...,, " 

 

" எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்துருக்க....." பைசல் கேட்க...

 

" இருடா இங்கவாங்க,....." ஜானி அழைக்க...மூவரும் அவர்கள் முன்,வந்து நின்றனர்....

 

" டேய் இவங்க பாரதி கண்ட புதுமை பெண்கள் டா....ராக் பன்ன பயப்பிட மாட்டாங்களாம்.....அதான் அதையும் பாப்போம் தான் இங்க கூட்டிட்டு வந்துருக்கேன்....ராக் பன்னுவோமா.." 

 

" ஆமாடா போர் அடிக்குதுடா சும்மாவே உட்கார்ந்து இருக்கிறது...ராக் பன்னலாம் டா ஜானி.." தாமஸ் கூற....

 

" ம்ம்....ஆரம்பிங்க காய்ஸ்...." 

 

" ஹலோ நீங்க நோட்டிஸ்போர்ட் பார்க்கல இங்க நோ ராக்கிங்,....மீரினால் சஷ்பண்ட் யூ நோ....என்று சட்டம் பேசினாள்... " .தேவ்

 

" அடெங்ப்பா இந்த ரூல்ஷ் நமக்கு தெரியாம போச்சே தாமஸ்....,,," ஜானி கூற...

 

" அதான் சொல்லிடேன்ல ....இப்ப தெரிஞ்சுங்கோங்க.... " 

 

" ஓ....நாங்க மீறி பன்ன என்ன பன்னுவாங்க,,...." 

 

" சஷ்பண்ட் பன்னுவாங்க " தேவ் பதிலுக்கு...,

 

" பன்னா பன்னிட்டு போட்டும் இன்னகி உங்கள ராக் "  ஜானி உறுதியாக கூற 

 

" அடியே அந்த வாய வச்சுட்டு,சும்மா இரேன்டி......அண்ணா சாரி னா பீளிஷ் விட்டுருங்கனா நாங்க ஜூனியர் புதுசா வந்துருக்கோம்....எங்கள விட்டிடுங்க..." தர்ஷினி கூற

 

" ஆமா அண்ணா விட்டிடுங்க கிளாஸ் போனும் பீளிஸ்..." என்று லத்திகா கெஞ்ச தேவ் மட்டும் திமிரா நிற்க...." சரி நீங்க மட்டும் போங்க இந்த குள்ள வாத்து இங்க இருக்கட்டும் " என்று ஜானி தேவ்வை பார்த்து கூற...

 

" எது  நான் வாத்தா நீதான் ஒட்டகசிவங்கி.. " என்று அவள்கூற  " என்னது நீ யா.......மரியாதை யா பேசு...." 

 

" நீ எனக்கு மரியாதை கொடுக்கல அதான் நானும் கொடுக்கல...." 

 

" கொஞ்சமாவது சீனியர் கிட்டா பேசுறோம் பயமிருக்கா பாரேன் இவளுக்கு....." 

" பயமா எனக்கா சேன்சே இல்ல." 

 

" பார்த்தேல வரும் போது எல்லாரும் என்னைய பார்த்து எப்படி பயந்தாங்கனு....ஆஹான் அது பயம் இல்ல உங்கமேல வச்சிருக்க மரியாதை பயத்துக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாத ஆள் இல்லை நான்....." 

 

" அப்ப எனக்கா தெரியல .." 

" " ஆமாம் தெரியல ...." 

 

" ,ஒய் குள்ள வாத்து...."  

"ஒய் ஒட்டக்கசிவங்கி...." " இன்னா...இன்னா..." 

இருவரும் சண்யிட்டு நிற்க....

 

" அண்ணா அண்ணா "  என்று இருவரும் கெஞ்ச.... " .சரி போங்க "  என்று கூறி " சீவில் பிளாக் அங்க இருக்கு " கூற அவளை அழைத்து இல்லை,இல்லை இழுத்துச்சென்றனர்...அவளோ அவனை பார்த்து உதட்டை சூழித்துக்கொண்டு சென்றாள்...." பார்த்துமா சுழுக்கிக்க போது ஆள பாரு குள்ள வாத்து...." 

 

" டேய் என்ன டா முதல் நாளே சண்டையா... " 

" ஹாஹா....சும்மாடா.." 

 

" அவள பார்த்ததும் வம்பிழுக்க தோணுச்சு அதான் தாமஸ்....." 

 

" பார்ரா அப்படி என்ன இருக்கு அவகிட்ட...." பைசல் கேட்க .... " தெரியவில்லை " என்பது போல தோளை குலுக்க...." என்னடா அடுத்தா....." தாமஸ் கேட்க 

 

" டேய் அவள பார்க்க என் ஜெர்ஸி மாதிரி தெரியுதுடா...அதான் வம்பிழுத்தேன்....." 

" ஜெர்ஸி மாதிரியா...." தாமஸ் கேட்க " " ம்,.....ஆமாடா..." 

சரிதான்...

 

" இனி என் வாழ்க்கையிலும் இதயத்திலும் காதல் அறை பூட்டிவிட்டேன் மகனே....திறக்கலாகாது..." என்று திமிரா கூறினான்.ஜானி....

 

" அடேய் தியாகு நாங்க இவ்வளவு பேசுரோம் நீ அமைதியா இருக்க "  தாமஸ்கேட்க...

 

" ஆமால டேய் நீ இங்க தான் இருக்கியா..." .ஜானி,.

 

" ஆமாடா கொஞ்ச நேரம் முன்னாடி வர..... " 

 

" அப்ப இப்ப....." பைசல் கேட்க.....

 

" அது அவர்கள் போன திசை காட்ட.... " 

 

" டேய் இங்க ஒரு காதல் அறை ஓபனாயிருச்சுடா..... " தாமஸ் கூற 

 

" மச்சான் காதல் வேணாம்டா....பாதிக்கபட்டவன் சொல்லுறேன்.....

இந்த ஜானி சொல்லுறேன்.." .

 

" டேய் ஜானி நான் காதல் வேணானு பாதிக்க பட்டத்துக்கு அப்புறமா சொல்லுறேன்...இப்ப வேணும் சொல்லுறேன்..... " தியாகு சொல்ல

 

" ஆஆ....வாய் பிழக்க...." 

 

" அந்த மூனுல யாருடா தியாகு" 

 

" வேற யாரா இருக்கும் அந்த குள்ள வாத்தாதான் இருக்கும் அவதானே டா... " ஜானி கேட்க 

 

" ம்ம்...ஆமாடா அவதான்....நினைச்சேன்"  

 

" என்னடா இவ இப்படி பேசுறாளேனு யாரு மாட்டிட்டு கஷ்ட பட போறானு....ஆன அது நீயா இருக்க போறேனு நினைக்கும் போது வருத்தமா இருக்குடா......" ஜானி கூற 

 

" ச்ச...சும்மாஇருங்கடா முதல் டீடெய்ல்ஸ் கேதர் பன்னுங்க,....பாய்ஸ் "  

 

" உன்தலையெழுத்து என்னபன்ன...பன்றோம்...." ஜானி கூற நண்பேன்டா.அவனை அணைத்தான் தியாகு......

 

இவையாவும் தெரியாத தேவ்வோ அங்கே தன்னை தன் வகுப்பில் அறிமுகம் படுத்திக்கொண்டாள் அவளின் தோழிகளும் தான்...,,இன்னும் புது புது நண்பர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டாள்,....சந்தோசமாக இருந்தாள்....

 

" என்ன ஆதி சார்...இப்ப இதுக்கு ஒரு தீர்வில்லையா சார்...." 

 

" இருக்கு வெங்கட் சார் ஆன நீங்க தான் ஒத்துக்கமாட்டிகிறீங்க சார்...,," 

 

" நீங்க நான்  இங்கவேலை செய்ய எல்லாருமே சம்பளத்துக்கு வேலை பார்க்குறவங்க...ஒவ்வொருவருக்கும்  அவங்க படிப்பு தகுதிக்கு ஏற்ற வேலைக்கெற்ற சம்பளம் கொடுக்கிறோம்.ஆன நீங்க அதிகமா கேட்கிறீங்க...இது நம்ம காலேஜ் சார் நாம தான் அட்ஜஸ்ட் பன்னும் சார் பீளிஸ்..! சொன்னா கேளுங்க நீங்க சீனியர் ஹேச் சோடி வேற....." 

 

" அப்ப வேற யாரையாவது வேலைக்கு சேருங்க..." 

 

அத தான் செய்யமாட்டிகீறிங்களே,.....வந்த வங்க சரியில்லை சொல்லி அனுப்பிவிடுறீங்.நாங்க என்னதான் பன்ன ஆதி சார்...." 

 

" சார் வந்தவங்க நாம எதிர்பார்த்த மாதிரி இல்லை...நான் என்ன பன்ன.... " 

 

" சரி இனி வர போகுற ஆளை நாங்க எடுத்தா உங்களுக்கு பிராபலம் இல்லையே... " 

 

" தோளை குலுக்கியவர் சிரித்துக்கொண்டே பார்க்கலாம் யாருவராங்கனு " என்றே கூறி எழுந்து சென்றார்...

 

பாயுமொளி நீ எனக்கு

 


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 3 months ago
Posts: 87
25/02/2020 6:29 pm  

Nice


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: