Forum

பூங்காற்று 48  

  RSS

(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 321
13/02/2020 8:03 am  

நீரஜாட்சி அன்று காலையில் எழும் போதே அவளுக்கு மனது சரியில்லை. முதல் வேளையாக முகம் கழுவி விட்டு வராண்டாவில் சென்று காற்றாட அமர்ந்தவள் டியூசனுக்கு செல்லும் விக்கிக்கு டாட்டா காட்ட அவன் சைக்கிளில் ஏறியவன் "நீருக்கா! நான் இன்னும் ஒன் ஹவர்ல டியூசன் முடிச்சு வந்துடுவேன். அதுக்கு அப்புறம் மேட்சை ஸ்டார்ட் பண்ணுவோம்" என்று அறிவிப்பு விடுத்தபடி சென்றான்.

அவன் செல்வதை பார்த்துவிட்டு வனஜா "என்னமோ போ நீரு! இவன் பப்ளிக் எக்சாம்ல என்ன மார்க் வாங்குவானோனு அவனுக்கு பயம் இருக்கோ இல்லையோ எனக்கு டென்சனா இருக்கு. ஹாஃப் இயர்லில எய்ட்டி பர்சன்டேஜ் தான் வாங்கியிருக்கான்" என்று வருத்தமாக கூற

நீரஜாட்சி "அக்கா எய்ட்டி பர்சண்டேஜ் உங்களுக்கு கம்மியா தெரியுதா? பப்ளிக் எக்சாம் மார்க் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறது இல்லக்கா. அதை தவிர அவனோட மத்த பழக்க வழக்கங்கள் தான் அவனை நல்ல மனுசனா காட்டும். வெறும் மார்க்கை வச்சு அவனை எடை போடாதிங்க. இப்போ இல்லைனாலும் வருங்காலத்துல அவன் ஒரு நல்ல நிலமைக்கு வருவான்" என்று விக்கியை புகழ்ந்து தள்ள

வனஜா "அது சரி! நீ அவனை விட்டுக்குடுத்தா தான் ஆச்சரியம்" என்று கேலி செய்தவாறு வீட்டினுள் சென்றார். அவர் சென்றதும் நீரஜாட்சி அன்று காலையிலேயே பட்டாபிராமன் சீதாலெட்சுமிக்கு போன் செய்து நலம் விசாரித்துவிட்டு அனைவரிடமும் இரண்டு வார்த்தை பேசிவிட்டு தான் போனை வைத்தாள்.

வேங்கடநாதன் ரகுநந்தன் பற்றி பேச வரும் போது மிகக் கவனமாக அவன் சம்பந்தப்பட்ட பேச்சைத் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு போனை வைத்தாள்.

இப்போது மற்ற வேலைகள் அனைத்தையும் முடித்தால் தான் விக்கி வரும் போது விளையாடச் செல்ல சரியாக வரும் என்று மடமடவென்று வீட்டை சுத்தம் செய்து காலை மற்றும் மதிய உணவு தயாரிக்கும் வேலையை முடித்தவள் காலையுணவை முடித்துவிட்டு விக்கியின் வருகைக்காக காத்திருந்தாள்.

சும்மா இருக்க பிடிக்காமல் கண்கள் போனின் தொடுதிரையை பார்த்துக் கொண்டிருக்க விரல்கள் அதை தட்டிக் கொண்டிருக்க மனமோ சலனத்துடன் இருந்தது. எதனால் இப்படி உணர்கிறோம் என்று அவளுக்கே புரியாத புதிராக இருக்க அவளையும் அறியாமல் கணவனின் நினைவு மனதை ஆக்கிரமித்தது.

ஆஸ்திரேலியா சென்று இத்தனை நாட்கள் ஆகியும் தனக்கு ஒரு போன் கூட செய்யாத அவனது  பிடிவாதம் அவளுக்கு சினத்தை வரவழைத்தாலும் அவளது மனசாட்சி "அவன் கூப்பிட்டா மட்டும் நீ உடனே எடுத்து பேசுற மாதிரி ஃபீல் பண்ணுற" என்று அவளை மட்டம் தட்டியது.

அவள் மனக்கலக்கத்துடன் இருக்கும் போதே "நீருக்கா" என்ற அழைப்புடன் விக்கி வந்துவிட நேரம் இவ்வளவு சீக்கிரமாக ஓடிவிட்டதா என்ற திகைப்புடன் வீட்டை பூட்டிவிட்டு அவனுடன் கிளம்பினாள்.

வழக்கமாக விளையாடும் இடத்தில் தான் அன்றும் கூடியிருந்தனர் தெருவிலுள்ள குட்டி வாண்டுகள். ஒரு வழியாக டாஸ் போட்டுப் பார்த்து பவுலிங் யார் பேட்டிங் யார் என்று முடிவு செய்துவிட்டு விளையாட ஆரம்பிக்க சூரியன் உச்சிக்கு சென்றதும் தெரியவில்லை. வெயில் சுட்டெரித்ததும் அவர்களுக்கு உறைக்கவில்லை.

நீரஜாட்சி பந்தை மட்டையால் விளாசிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்த ஒரு சிறுவன் "அக்கா உங்க வீட்டு வாசல்ல யாரோ நின்று வீட்டை உத்து உத்து பார்த்துட்டிருக்காங்க" என்று கூற நீரஜாட்சி அவன் கிருஷ்ணமூர்த்தி அனுப்பிய ஆளை தான் சொல்கிறான் போல என்று எண்ணிய நீரஜாட்சி விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் "டேய் நீங்க கண்டினியூ பண்ணுங்கடா. அக்காக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று கூறிவிட சரியென்றனர் அவர்கள்.

அந்த சிறுவன் ஒரு கையில் கிரிக்கெட் மட்டையை பிடித்துக் கொண்டு நடந்து வந்தவளிடம் பேட்டிங் பற்றி கேட்க அதை விளக்கிக் கொண்டே வந்தவள் வீட்டை அடையும் போது அங்கே தோளில் பேக்குடன் நின்று கொண்டிருந்த ரகுநந்தனை கண்டதும் ஒரு கணம் கோபம் வெறுப்பு அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியில் உறைந்துவிட்டாள். முதல் முறை ஏற்பட்ட பிரிவு அல்லவா!

வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்க்கையில் அங்கே ஒரு சிறுவனுடன் கிரிக்கெட் மட்டை சகிதம் நின்ற மனைவியைக் கண்டதும் அவனுக்கும் சில்லறை கோபங்கள் அனைத்தும் மறந்து போக கைகள் அவளை அணைக்க பரபரத்தது.

நீரஜாட்சியின் மகிழ்ச்சி நிலைத்திருந்தது சில கணங்கள் மட்டுமே., அவன் திரும்பி கண்ணில் காதல் பொங்க அவளை பார்த்த அடுத்த நொடி அவளுள் இருந்த சோகம், கோபம், பிரிவுத்துயர் எல்லாம் இதோ வெடிக்கப் போகிறேன் என்று அபாய எச்சரிக்கை கொடுக்க தன் அருகில் நின்ற சிறுவனிடம் குனிந்தவள் "மீதி டெக்னிக் எல்லாம் நான் நாளைக்கு உனக்கு சொல்லி தர்றேன். நீ போய் விளையாடு" என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு தன் பக்கவாட்டில் நின்றவனை ஒரு  பொருட்டாக கூட மதியாது கேட்டை திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

விறுவிறுவென்று அவள் முன்னே செல்ல ரகுநந்தன் அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்தவனாய் அவளைத் தொடர்ந்தவன் அவள் வராண்டாவை அடைந்ததும் நிற்க அவனும் நிதானித்தான்.

அவள் திரும்பி அவனை பார்க்கவும் மெதுவாக "நீரு...." என்று ஆரம்பிக்க நீரஜாட்சி கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை நங்கென்று சுவரில் வீச அது எழுப்பிய சத்தமே அவளின் கோபத்தின் அளவை சொல்லாமல் சொல்லியது. மட்டையின் சத்தம் அடங்கவும் அவன் மீண்டும் "நீரு" என்றபடி பேச ஆரம்பிக்க

நீரஜாட்சி "எதுக்கு வந்த?" என்றாள் வெடுக்கென்று.

ரகுநந்தன் "அப்பா தான் நீ தஞ்சாவூர்ல இருக்கேனு சொன்னார்., அதான் உன்னை பார்க்க...." என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இடை மறித்தவள்

"பார்த்து என்ன பண்ண போற? ஸ்ரீனிவாசவிலாசத்துல பேசுன பேச்சு பத்தாதா? இன்னும் எதாச்சும் பாக்கி இருக்கா?" என்று இறுகிய குரலில் கூறிவிட்டு வீட்டினுள் நுழைய

அவளைத் தொடர்ந்தவன் "நீரு நீ இப்போ கோவத்துல இருக்க., அதனால நான் என்ன சொன்னாலும் உனக்கு அது குதர்க்கமா தான் தெரியும்" என்று கூறிவிட்டு பேக்கை கழற்றினான்.

"அப்போ உனக்கு கோவம் இல்லையா?" என்று கேட்டு விட்டு வெட்டுவது போல நோக்கியவளை உறுதியாக பார்த்தபடி "இல்லை" என்றான் ரகுநந்தன்.

நீரஜாட்சி ஏளன உதட்டுவளைவுடன் "சரி! வந்தாச்சு, பார்த்தாச்சு. இனிமே இங்கே உனக்கு என்ன வேலை? கிளம்பு" என்று கூறிவிட்டு செல்ல முயல

அவனோ "நான் இங்கே இருந்து சென்னை கிளம்புனா உன் கூட தான் கிளம்புவேன். இல்லைனா நானும் இங்கே தான் இருப்பேன்" என்று பிடிவாதக்குரலில் கூற

நீரஜாட்சி எரிச்சலுடன் "ஒரு பத்து நாள் உன் மூஞ்சியை பார்க்காம இருக்கலாம்னு நினைச்சா அது உனக்கு பொறுக்கலையா?" என்று அவன் கூறிய அதே வார்த்தைகளை அவனிடம் திருப்பி கூற ரகுநந்தன் செய்வதறியாது திகைத்தான்.

"உனக்கு என் மேல கோவம் வேணும்னா போயிருக்கலாம். ஆனா நீ பேசுன வார்த்தை எதையும் என்னால மறக்க முடியாது. அதனால தயவுபண்ணி அடுத்த பஸ்ஸுல சென்னைக்கு போயிடு. என் மனசு சாந்தமானதுக்கு அப்புறமா நான் சென்னைக்கு வர்றேன். ஆனா அப்போவும் என்னால உன் கூட மனசு ஒப்பி வாழ முடியுமானா அது சந்தேகம் தான்" என்று தீர்க்கமாக கூறிவிட்டு அவள்  உள்ளே செல்ல முயல

ரகுநந்தன் "நீரு நடந்தது ஒரு ஸ்மால் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். இதுக்கு நீ ஓவர் ரியாக்ட் பண்ணுற மாதிரி உனக்கு தெரியலை?" என்று எவ்வளவோ முயன்றும் அடக்க முடியாமல் தோற்ற ஆற்றாமையுடன் கேட்டுவிட

நீரஜாட்சி "நீ பேசுன எதையும் என்னால மறக்க முடியாது" என்று மட்டும் மொட்டையாக கூற

அவன் எரிச்சலுடன் "ஏன் நீ பேசுனதை நான் மறக்கலை? மறந்துட்டு இதோ உன் முன்னாடி வந்து நிக்கலை? நீ மட்டும் ஏன் பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்க நீரு? இந்த செயினை பாரு" என்றபடி அவன் அணிவித்து அவள் கழற்றி எறிந்துவிட்ட வந்த செயினை பாக்கெட்டினுள் இருந்து எடுத்தவன்

"எந்த சூழ்நிலையிலயும் இதை கழட்டக் கூடாதுனு நாம பேசிக்கிட்டோம். நான் கட்டப் போற தாலியை விட இது புனிதம்னு சொன்னேன். இதை கழட்ட உனக்கு எப்பிடி மனசு வந்துச்சு?" என்று வலியுடன் பேச

"அது எனக்கு தேவையில்லனு தோணுச்சு. கழட்டிட்டேன்" என்று அவளிடம் புயல்வேகத்தில் பதில் வர

அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி "ம்ம்ம்..தேவையில்லனு தோணுனது அது மட்டும் தானா? இல்ல இதை போட்டுவிட்டவனுமா?" என்று கேட்க

அவள் "ரெண்டும் தான்" என்று நடுங்கும் குரலில் கூறிவிட்டு அவனை பார்க்க ரகுநந்தனின் பொறுமை அவளது பதிலில் காற்றில் பறந்துவிட்டது.

எரிச்சலுடன் "இந்த மாதிரி ஈஸியா தூக்கிப் போடுற பார்த்தியா, இது தான் என்னோட சந்தேகத்துக்கு காரணமே., எப்பிடி உன்னால முடியுது? நான் சண்டை போட்டாலும் உன் கூட வாழ்க்கை முழுக்க இருக்க ஆசைப்படுறேன் நீரு. பிகாஸ் சண்டை போடாத மனமொத்த தம்பதிகள்னு இங்கே யாரும் இல்ல. ஆனா நீ ஒரு சின்ன பிரச்சனைக்கும் ரொம்ப பெரிய முடிவா எடுக்கிற" என்று கூற

நீரஜாட்சி "சின்ன பிரச்சனையா? சரி அது சின்ன பிரச்சனையாவே இருக்கட்டும். பட் இருபத்து நாலு மணி நேரமும் என் எதிரே ஒருத்தன் முகத்தை தூக்கிட்டு சுத்துறத பார்க்கறதும், என்னை வார்த்தையால ஹர்ட் பண்ணுறதை கேக்கறதையும் விட தனியா இருக்கிறது பெட்டர்னு நினைச்சு தான் நான் விலகிப் போறேன். இப்போவும் நான் அப்பிடி தான் இருக்கேன். அண்ட் லைஃப் லாங் நான் அப்பிடி தான் இருக்கவும் போறேன். நீ எனக்கு வேண்டாம்" என்று பட்டென்று கூறிவிட

ரகுநந்தன் "ஆனா எனக்கு நீ வேணும் நீரு., அப்பிடி உன் இஷ்டத்துக்குலாம் உன்னை விலகி போக விட முடியாது. இதுக்கா நான் உன்னை காதலிச்சேன்? ஐ அக்ரீ, நான் நிறைய வார்த்தைகளை விட்டுட்டேன் தான். என் இடத்துல யார் இருந்திருந்தாலும் அப்பிடி தான் ரியாக்ட் பண்ணிருப்பாங்க நீரு.

உன்னை பத்தி யாரோ சொல்லி குடுத்து நான் உன் கிட்ட கோவப்பட்டேனா? இல்லையே! நீ பேசுன வார்த்தையை நானே என் காதால கேட்டுட்டு தான் கோவப்பட்டேன். என்னோட கோவத்துல நூறு சதவீத நியாயம் இருக்கு நீரு. ஏன்னா நான் அவ்ளோ காதலிச்சிருக்கேன், இப்போவும் காதலிக்கிறேன் அண்ட் எப்போவும் காதலிப்பேன். சோ இனிமே என்னை விட்டு விலகப் போலாம்னு யோசிக்காதே. நான் அதுக்கு அலோ பண்ண போறது இல்ல. நீ என்னோட சென்னை வர்ற வரைக்கும் நானும் இங்கே தான் இருப்பேன். பை த வே இதுல நம்ம ரூம் எது?" என்று சாதாரணமாக கேட்க நீரஜாட்சி அவனை எரிப்பது போல முறைத்துவிட்டு பின்வாசலுக்கு சென்று விட்டாள்.

அவன் தனது தரப்பு நியாயத்தை விளக்கிவிட்ட திருப்தியில் ஒவ்வொரு அறையாக தேடி கடைசியில் அவளது அறை இருந்த இடத்தில் தனது பேக்கை கொண்டு சென்று வைத்தான்.

பயணக்களைப்பில் சோம்பல் முறித்தவன் "நீரு நான் குளிக்கணும்" என்று அறிவிப்பு கொடுத்தபடி பின்வாசலுக்கு வர

கிணற்றுப்பக்கத்தில் துணி துவைக்கப் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்திருந்தவள் கடுப்புடன் "அதுக்கு நான் என்னடா பண்ணனும்?" என்று வினவ

ரகுநந்தன் "நான் என்னவோ உன்னை முதுகு தேய்க்க சொன்ன மாதிரிலா நீ கோவப்படுறே., அட பாத்ரூம் எங்கேனு சொல்லு, நானே போய் குளிச்சிக்கிறேன்" என்று சலிப்பாய் கூற நீரஜாட்சி குளிக்கும் அறையை நோக்கி கை காட்டினாள்.

ரகுநந்தன் குளிக்க சென்றதும் அவள் எழுந்து அவளது அறைக்குச் சென்றுவிட்டாள். அங்கே அவனது பேக் இருக்கவே "இவன் பேக்குக்கு என் ரூம்ல என்ன வேலை?" என்று முகத்தை சுருக்கியபடி கூறியவள் அந்த பேக்கை கையில் தூக்கி வெளியே வீச தயாராகவும் அவன் குளித்துவிட்டு டவலுடன் வரவும் சரியாக இருந்தது.

அவனைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டவள் "கொஞ்சம் கூட உனக்கு மேனர்ஸ் கிடையாதா? அங்கேயே டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரவேண்டியது தானே" என்றபடி திரும்பி நின்று கொண்டாள்.

அவன் அதை கண்டுகொள்ளாமல் அவள் அருகில் வர திடுக்கிட்டவளாய் திரும்பி "இங்கே பாரு! நான் ஆல்ரெடி எரிச்சல்ல இருக்கேன். இப்போ நீ கிட்ட வந்தேனு வைச்சுக்கோ உன் மண்டையை உடைச்சிடுவேன்" என்று அவன் மீது பார்வையை பதிக்க இயலாதவளாய் தவிப்புடன் கூற

ரகுநந்தன் "ஐயோடா! நீருகுட்டிக்கு ரொம்ப தான் ஆசை..என் பேக் உன் கையில இருக்கும்மா. அதை வாங்க தான் வந்தேன். பேக்கை குடு" என்க தன்னை மனதிற்குள் கழுவி ஊற்றியபடி அவனிடம் பேக்கை நீட்டிவிட்டு வெளியேற முயன்றவளின் கையைப் பிடித்தான் ரகுநந்தன்.

கையை உதற முயன்றவளை பின்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள நீரஜாட்சி திமிறியவளாய் "உனக்கு நேரம் சரியில்லனு நினைக்கிறேன். லீவ் மீ இடியட்" என்று வார்த்தைகளை கடித்து துப்ப

ரகுநந்தன் அதை சட்டை செய்யாதவனாய் "நேரம்லாம் நல்லா தான் இருக்கு நீருகுட்டி. எனக்கு சேர்க்கை தான் சரியில்ல" என்றபடி அவள் கழுத்துவளைவில் முகம் பதித்தான்.

அப்போது தான் குளித்துவிட்டு வந்திருந்தான் என்பதால் தலையில் இருந்து சொட்டும் நீர்த்துளிகளில் சில நீரஜாட்சியின் தோளிலும் பட்டு தெறிக்க அவளுக்கு அவனது அணைப்பு அவஸ்தையாக இருந்தது.

கையை விலக்க முயன்று தோற்றவளிடம் "எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுற நீ?" என்று அவன் இலகுகுரலில் கேட்க அவள் பதில் சொல்லும் அவசரத்தில் சட்டென்று திரும்ப கழுத்துவளைவில் முகம் பதித்திருந்தனின் மூக்கில் நீரஜாட்சியின் மூக்கு உரசிக் கொள்ள மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வில் பேச இயலாதவளாய் கணவனின் கண்களில் தன் கண்ணை கலக்க விட்டாள் அவள்.

ரகுநந்தன் அவள் மனதை படித்தவனாய் "இதே மாதிரி குட் கேர்ளா இருந்தா என்னாவாம்? ஏன் அடிக்கடி கோவப்படுற? பட் கோவப்படுறது கூட ஒரு விஷயத்துல நல்லது தான். நீ கோவப்பட்டா தானே நான் சமாதானம் பண்ணுறேனு சொல்லி உன்னை இப்பிடி ஹக் பண்ணிக்க முடியும்?" என்று கூறி அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

தன் கன்னத்தில் அவன் இதழின் பிரசன்னத்தை உணர்ந்து கரைந்தவள் சில நிமிடங்களில் சுய உணர்வு பெற்றவளாய்  இவன் என்ன தான் நினைப்போடு இங்கே வந்திருக்கிறான் என்று எண்ணியபடி அவனை விலக்கி தள்ளிவிட்டாள்.

"இனிமே நீ என் கிட்ட இப்பிடி பிஹேவ் பண்ணுனேனு வை..." என்று ஆவேசமாய் அவள் ஏதோ கூற வர

அவன் கேலிச்சிரிப்புடன் "போய் தாத்தா கிட்ட சொல்லிடுவியா? என்ன சொல்லுவ நீருகுட்டி? பட்டு இந்த நந்து பையன் என் கன்னத்துல கிஸ் பண்ணி வச்சிட்டான்னா? அடியே இது ஒன்னும் ஸ்ரீனிவாசவிலாசம் இல்ல. அங்கே நீ கம்ப்ளெயிண்ட் பண்ணுனா என்ன ஏதுனு கூட விசாரிக்காம என்னை அட்டாக் பண்ண ஒரு படையே வரும். இது என்னோட அத்தை வீடு..கரெக்டா சொல்லணும்னா மாமியார் வீடு. இங்கே என்னை கேக்கறதுக்கு யாரும் கிடையாது. சோ இப்பிடி அடிக்கடி கத்தாம லஞ்ச் எடுத்து வை. பயங்கரமா பசிக்கறது" என்று கூற அவள் எரிச்சலுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

ரகுநந்தன் கத்தினாலோ சண்டை போட்டாலோ அவளால் பதிலடி கொடுக்க இயலும். இப்போது அவன் செய்து வைத்த காரியத்துக்கு அவளால் திகைத்து மட்டுமே நிற்க முடிந்தது. என்ன தான் கோபம் இருந்தாலும் அவன் அருகாமையில் மனதில் இருக்கும் காதல் விழித்துக் கொள்வதை அவளால் தடுக்க முடியவில்லை.

 

தொடரும்....

பூங்காற்று 49

 

 


Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 2 months ago
Posts: 56
13/02/2020 9:04 am  

ரகு நீருவ சமாதானம் பன்ன வந்துடன், இப்பாவது ரகு உனக்கு தெளிவு வந்துச்சே, நீரு சமாதான படுத்தி சென்னை அழைத்து செல்வனா, நீரு சமாதானம் அவளா 👌👌👌👍👍👍💕💕💕💕


ReplyQuote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 2 months ago
Posts: 81
13/02/2020 10:07 am  

Interesting ud


ReplyQuote
Nithyamariyappan
 Nithyamariyappan
(@Nithyamariyappan)
Guest
Joined: 1 month ago
Posts: 30
13/02/2020 11:00 am  

😊 😍 😛 😊 😊 😊 😊 😊 😊 👍wow wow ragu payan supara handle panran neeruva


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: