Forum

பூங்காற்று 50  

  RSS

(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 321
14/02/2020 3:09 pm  

நீரஜாட்சி வழக்கம் போல அன்று உறக்கம் கலைகையில் விடிந்து நேரமாகியிருந்தது. மெதுவாக கண்ணை திறந்தவள் தன்னை எதுவோ சூழ்ந்திருப்பதை உணர என்னவென்று எழுந்து பார்க்க நினைத்தவளுக்கு எழும்ப இயலவில்லை. என்னவோ ஏதோ என்று பதறியவளுக்கு தன்னை பொம்மை போல அணைத்து உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தை பார்த்ததும் தூக்கக்கலக்கம் அகன்றது.

இவன் எப்போது இங்கே வந்தான் என்ற குழப்பத்துடன் அவன் கரங்களை விலக்க முயல அவன் விடாக்கண்டனாக இன்னும் இறுக்கமாக அணைத்தபடி "தூங்கு நீருகுட்டி" என்று அரைத்தூக்கத்தில் கூற நீரஜாட்சிக்கு அந்த காலைப்பொழுதிலேயே இரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.

தன்னை சுற்றி வளைத்திருக்கும் அவனது புஜத்தில் நறுக்கென்று கிள்ள அவன் பதறியடித்துக் கொண்டு எழுந்து புஜத்தை தேய்த்தபடி "ஏய் எதுக்குடி இப்பிடி கிள்ளி வைச்ச?" என்று வலியில் முகத்தை சுருக்கிக் கொள்ள

நீரஜாட்சி "உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இங்கே வந்து தூங்குவ?" என்று  கூறிவிட்டு போர்வையை மடித்து அதாலேயே அவனுக்கு இரண்டு அடிகள் வைக்க ரகுநந்தன் "பிசாசு மாதிரி அடிக்காதேடி. ஒரு மனுசன் அவன் பொண்டாட்டியை ஹக் பண்ணிட்டு தூங்குனதுலாம் ஒரு குத்தமா?" என்று கேட்டபடி அவள் கையிலிருக்கும் போர்வையைப் பிடுங்கினான்.

"என்னடா குத்தமானு கேக்குற? ஆமா குத்தம் தான். சார் ஆஸ்திரேலியா போனப்போ என்ன பண்ணுனிங்க? அதே மாதிரி நினைச்சுட்டு வெட்டவெளியில ஆகாயத்தை பார்த்துட்டு தூங்கறதா இருந்தா இங்கே இரு. இல்லனா பெட்டி படுக்கையோட சென்னைக்கு கிளம்பு. திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்" என்று எச்சரித்துவிட்டு எழுந்தாள்.

ரகுநந்தன் ஏளனமான உதட்டு வளைவுடன் "போடி! நீ சொன்னா நான் கேக்கணுமாக்கும்" என்றபடி எழ நீரஜாட்சி "ஹலோ அப்பிடியே போனா என்ன அர்த்தம்? இந்த விரிப்பை யாரு மடிக்கிறது? ஒழுங்கா அந்த போர்வையை மடிச்சு வச்சுட்டு போ" என்று கட்டளையிட்டுவிட்டு தனது கையில் இருந்த போர்வையை மடித்தபடி தனது அறைக்குள் சென்றாள்.

அதை அலமாரியில் வைத்துவிட்டு திரும்ப அவனும் நல்ல பிள்ளையாக மடித்த போர்வையை அவளிடம் கொடுத்துவிட்டு "நீரு இந்த கை கொஞ்சம் வலிக்குது. இதுக்கு எதாவது மருந்து இருக்கா?" என்று வினவ அவள் சுற்றி முற்றி தேடியவள் தனது பேக்கில் இருந்து ஆயின்மெண்டை எடுத்து நீட்டிவிட்டு பற்பசை பிரஷுடன் கிளம்பினாள்.

ரகுநந்தன் வாய்க்குள்ளே "பாசம், அன்புலாம் இருக்கும். ஆனா மேடம்கு கொஞ்சம் ஆடிட்டியூட் பிராப்ளம். அதையும் தீர்த்து  வச்சிருவோம் நீருகுட்டி" என்றபடி ஆயிண்மெண்டை தடவினான்.

அதற்குள் அவள் பற்பசை சகிதம் திரும்ப "அதை குடு" என்று அவளிடமிருந்து பிடுங்கிச் செல்ல நீரஜாட்சி "ஏன்டா ஊர்ல இருந்து வர்றப்போ பேஸ்ட் கூடவா எடுத்து வைக்காம வந்த?" என்று கத்த

அவன் கிணற்றடியில் நின்றபடி "என் ஆத்துக்காரியை பார்க்க வர்ற ஆர்வத்துல பேஸ்டை மறந்துட்டேன் நீருகுட்டி" என்று சத்தமாக கூற நீரஜாட்சி எதுவும் கூறாமல் வழக்கமாக செல்லும் கடைக்கு பால்பாக்கெட் வாங்க சென்றுவிடாள்.

திரும்பி வந்தவளின் கையிலிருக்கும் பால்பாக்கெட்டை வாங்கியவன் "நான் காபி போட்டு நீ குடிச்சது இல்லையே! சூப்பரா போடுவேன். லண்டன்ல என் ரூம் மேட்ஸ் எல்லாரும் என் காபிக்கு அடிமை" என்று தன்னை தானே புகழ்ந்து கொண்டே பாலை காய்ச்ச ஆரம்பிக்க நீரஜாட்சி சமையலறை வாயில் நிலையில் சாய்ந்தபடி அவன் காபி போடும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் நிதானமாக பாலில் டிகாசனை கலந்து காபியை டம்ளரில் ஊற்றி அவளிடம் நீட்ட நீரஜாட்சி மறுப்பு ஏதும் கூறாமல் வாங்கிக் கொண்டாள். தயக்கத்துடன் வாயில் வைத்தவள் உண்மையாகவே காபி நன்றாக இருக்க மிடறு மிடறாக ரசித்துக் குடித்துவிட்டு டம்ளரை அவனிடம் நீட்டியவள் "ம்ம்..காபி நிஜமாவே சூப்பர். பத்து மாமி கைப்பக்குவம் உனக்கும் வாய்ச்சிருக்கு நந்து" என்று அமர்த்தலாகச் சொல்லிவிட்டு நகர மனைவியின் பாராட்டு தந்த மகிழ்ச்சியில் அவனுக்கு அந்த நாள் உற்சாகமாகவே ஆரம்பித்தது.

அதன் பின் வழக்கமான சண்டைகளுடன் அவளுக்கு சமைக்க உதவுகிறேன் என்று நீரஜாட்சியை தொல்லை செய்ததில் அவனுக்கு பொழுது நன்றாகவே போனது. கையோடு மதிய உணவையும் செய்து வைத்தவள் தன்னை விளையாட அழைக்க வரும் சிறுவர்களுக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் "அக்கா" என்ற கூவலுடன் அவர்கள் வரவுமே முகம் மலர வராண்டாவில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்தவள் அதன் கீழ்பாகம் கீறி மரத்துண்டு நீட்டிக் கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. அவள் கிளம்ப எத்தனிக்கையில் ரகுநந்தன் "நானும் கிரிக்கெட் விளையாட வர்றேன்" என்று கூறியபடி அவர்களுடன் சேர்ந்து கொள்ள

அந்த சிறுவர்கள் "அண்ணா உங்களுக்கும் விளையாட தெரியுமா?" என்று வளவளத்தபடி வர நீரஜாட்சி ஒன்றும் கூறாமல் அவன் அருகில் வந்தவள் "ஒழுங்கா வீட்டுக்கு போ. உன்னால வெயில்ல ரொம்ப நேரம் நிக்க முடியாது" என்று எச்சரித்தாள் ஒரு நல்ல மனைவியாக.

அவனோ அதை அலட்சியப்படுத்தியபடி "நீருகுட்டி நான் காலேஜ் டேய்ஸ்ல பெரிய ஃபுட்பால் பிளேயர். உனக்கு கூட நல்லா தெரியுமே. இந்த வெயில்லாம் எனக்கு ஜுஜூபி" என்று பேசியபடி அவளுடன் நடந்தான்.

இருந்தாலும் "அப்பிடினா நீ வேடிக்கை மட்டும் பாரு. அதுவும் என்னை விட்டு கொஞ்சம் தூரமா நின்னு தான் பார்க்கணும். பிகாஸ் விளையாட்டுல மூழ்கிட்டா எனக்கு அக்கம் பக்கம் யாரு இருக்கானு தெரியாது" என்று அவனுக்கு ஆயிரம் முறை சொல்லிவிட்டு தான் விளையாடும் கிரவுண்டுக்கு வந்தாள் அவள்.

ரகுநந்தனும் அவள் சொன்னதற்கு எல்லாம் சரியென்று தலையாட்டியவன் ஒரு ஓரமாக நின்று கொண்டான். ஆனால் மனதிற்குள் "என் பிளானே அது தானே.. என்ன கொஞ்சம் வலிக்கும்! ஆனா என்னோட நீருகுட்டி என் மேல இருக்கிற கோவத்தை விடணும்னா இந்த வலியை நான் தாங்கி தான் ஆகணும்" என்று கூறிக் கொண்டே தான் நினைக்கும் சமயம் வருவதற்காக காத்திருந்தான்.

நீரஜாட்சியோ அவனின் இந்த திட்டம் எதை பற்றியும் உணராமல் விளையாட்டில் மும்முரமானாள். அவன் கையைக் கட்டிக் கொண்டு வியர்வை வழிய விளையாடிக் கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது டீமில் சளசளப்பு உண்டாக நீரஜாட்சி "டோன்ட் ஒர்ரிடா! இப்போ நான் அடிக்கப் போற பால்ல நம்ம வின் பண்ணிடுவோம்" என்று உறுதியாக கூறியபடி பார்வையை பந்து வீசுபவனின் மீது பதிக்க ரகுநந்தன் தன்னை நோக்கி வருவதை அவள் கவனிக்கவில்லை.

வந்தவன் சரியாக அவள் மட்டையை ஓங்கும் போது அவள் பக்கவாட்டில் நின்று கொள்ள பந்தை நொறுக்கும் வேகத்துடன் வீசிய மட்டை அதற்கு சற்றும் குறையாத வேகத்துடன் அவன் நெற்றியை பதம் பார்க்க அதன் கீழ்பாகத்தில் துருத்திக் கொண்டிருந்த சிறிய மரத்துண்டு நெற்றியில் ஆழமாக கிழித்து உதிரத்தை வரவழைத்த வெற்றியில் கீழே விழுந்தது.

அவனது "ம்மா!....." என்ற வலியுடன் கூடிய குரலில் என்னாவாயிற்று என்று பதற்றத்துடன் திரும்பினாள் நீரஜாட்சி. மட்டை மோதிய வேகத்தில் திரும்பியவள் ரகுநந்தன் மரத்துண்டு கீறிய காயத்தில் கையை வைத்து பொத்திக் கொள்ள அவன் விரல்களை தாண்டி தெரிந்த இரத்தத்தை பார்த்ததும் தான் கவனக்குறைவால் அவனை காயப்படுத்திவிட்டோம் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

கிரிக்கெட் மட்டையை வீசிவிட்டு சுடிதார் துப்பட்டாவால் அவனது காயத்தில் வழிந்த இரத்தத்தை துடைத்தவளின் விழிகள் கண்ணீரை உற்பத்தி செய்ய அந்த சிறுவர்களிடம் "யாராச்சும் தண்ணி கொண்டு வாங்கடா" என்று அவசரமாக கூறியபடி அவனை குற்றவுணர்ச்சியுடன் பார்த்தவள் தண்ணீர் வரவும் முதலில் அவனுக்கு குடிக்க கொடுத்துவிட்டு மீதமுள்ள தண்ணீரில் காயத்தை கழுவி விட்டு அவனை கையைப் பற்றி அழைத்துச் சென்றாள்.

ரகுநந்தனுக்கு காயம் சற்று வலியைக் கொடுத்தாலும் தனக்காக அவள் பதறியவிதம், அந்த பதற்றத்திலும் என்ன முதலுதவி செய்ய வேண்டுமோ அதை செய்த அவளின் தெளிவு எல்லாமே மனதை இதமாக்க அவன் என்னவோ சந்தோசமாக தான் இருந்தான்.

வீட்டுக்கு வந்தவள் கையில் பர்ஸை எடுத்துக் கொண்டு "வா டாக்டர் கிட்ட போவோம்" என்று அழுகை கலந்த குரலில் கூற

அவனோ "இது சின்ன காயம் தான் நீருகுட்டி. டாக்டர் கிட்ட போக வேண்டாம். டிஞ்சர் வச்சா சரியாயிடும்" என்று கூற அவள் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அவனை பக்கத்து தெருவில் இருக்கும் சிறிய கிளினிக்குக்கு அழைத்து வந்து கட்டுப் போட்டப் பின்னர் தான் அமைதியானாள்.

டாக்டர் கேலியுடன் "எத்தனை நாள் ஆசைமா இது?" என்று கேட்டபடியே மருந்து எழுதிக் கொடுக்க ரகுநந்தன் அதை கேட்டு நமட்டுசிரிப்பு சிரிக்க நீரஜாட்சியின் கண்களில் மீண்டும் கண்ணீர் நிறைந்து எப்போது நான் கன்னங்களில் வழிய ஆரம்பிக்கலாம் என்று கேட்காத குறை தான். அதை அறிந்தவன் அவளை எழுப்பிவிட்டு டாக்டரிடம் சொல்லிக் கொண்டு வீட்டை நோக்கி நடைபோட்டான்.

வீட்டுக்கு வந்தவள் மருத்துவர் கூறிய "கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா கண்ணை பதம் பார்த்திருக்கும்" என்ற வார்த்தையை நினைத்து அழத் துவங்க ரகுநந்தன் "நீரு ஒன்னும் இல்ல. இங்க பாரு, நான் நல்லா தானே இருக்கேன்" என்றபடி அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.

நீரஜாட்சி அழுகையினூடே "சப்போஸ் டாக்டர் சொன்ன மாதிரி கண்ணுல பட்டிருந்தா என்ன ஆயிருக்கும் நந்து? எல்லாத்துக்கும் நான் தான் காரணம். நான் தான் கவனிக்காம இருந்துட்டேன். உனக்கு வலிக்குதா?" என்றபடி அவனது முன்நெற்றி கட்டை மெதுவாக வருட

ரகுநந்தன் "நீ விளையாடுறப்போ அதை உன்னால எப்பிடி கவனிக்க முடியும்? இப்போ என்ன ? ஐ அம் ஆல்ரைட்" என்று கூறிவிட்டு சிரித்தவன் "வலிக்குதானு கேட்டல்ல! யெஸ்., ரொம்ப வலிக்குது. பட் இந்த காயம் இல்ல. கொஞ்ச நாளா நீ என்னை விட்டு விலகி விலகி போறேல்ல, அது தான் ரொம்ப வலிக்குது நீரு. இங்க பாரு! நீ என் கூட சண்டை போடு. என்னை திட்டு, பட் இப்பிடி விலகி போகாதே நீரு" என்று மனதின் வலியை அவனது குரலில் வெளிப்படுத்திவிட நீரஜாட்சி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்னை வேற என்ன பண்ண சொல்லுற நீ? நான் உயிரா நினைச்சவன் என் கிட்டவே வந்து அவனை காதலிச்சதுக்கு ஆதாரம் கேட்டா நான் என்ன பண்ணுறது? உன் கூட நான் இருந்தப்போ ஒரு செகண்ட் கூடவா என்னோட காதலை உன்னால கண்டுபிடிக்க முடியலை? அதை விடு! நான் செஞ்சதை சரினு நியாயப்படுத்த உன் கிட்ட நான் பேச வரலை..நான் தப்பு பண்ணிட்டேனு சொல்லி சாரி கேக்க தான் வந்தேன். நீ எனக்கு பேசக் கூட வாய்ப்பு குடுக்கலை நந்து..

நீ என்னோட காதலை கூட சந்தேகப்பட்டப்போ எனக்கு மனசு விட்டுப் போச்சு. எனக்கு மத்தவங்க மாதிரி  டிரமாடிக்கா காதலை சொல்ல வராது நந்து..நான் நடிக்கலை..ஆனா இப்போவும் நீ கேக்குற ஆதாரம் எதுவும் என் கிட்ட இல்லை..உன்னால என்னை நம்ப முடியாதுல்ல?" என்று கண்ணீருடன் கேட்டவளை  பொறுக்க முடியாமல் அணைத்துக் கொண்டான் ரகுநந்தன்.

"உன்னை நம்பாம நான் வேற யாரை நம்புறதுடி..நான் பேசுனது தப்பு தான். எங்கே நீ உன் அக்காவுக்காக வேற வழியில்லாம என்னை கல்யாணம் பண்ணிட்டியோனு ஒரு பயம்..அது என்னை ஆட்டி வச்சதுல என்னால எதையும்  புரிஞ்சிக்க முடியலை..இன்னொரு தடவை என்னோட காதலை விளையாட்டா எடுத்துக்காதே நீரு..இட்ஸ் ஹர்ட்டிங்" என்று அவன் கூற அவள் மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

பின்னர் தெளிவான குரலில் "நான் இனிமே உன் காதலை வச்சு விளையாட மாட்டேன் நந்து. உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்" என்று வாக்களிக்க

அவளின் மூக்கை செல்லமாக நிமிண்டியபடி "அதான் மேடம் சொல்லாம கொள்ளாம தஞ்சாவூர் ஓடி வந்துட்டிங்களோ?" என்று கேட்க

அவள் உதட்டை சுழித்து அழகு காட்டியபடி "நான் ஒன்னும் உன்  மேல கோவப்பட்டு ஓடி வரலை. இந்த வீட்டுல சில ரினோவேசன் ஒர்க் இருந்துச்சு. கிச்சா தாத்தா போன் பண்ணி வீட்டு சொந்தகாரங்க இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னதால தான் நான் வந்தேன்" என்று கூறிவிட்டு விலக் முயல

"இப்போ தானே சொன்னேன், அதுக்குள்ள மறுபடி விலகி போறியேம்மா?" என்று அவளை இழுத்துக் கொண்டான் ரகுநந்தன்.

"உனக்கு வயிறு பசிக்கலையாடா?"

"மனசு நிறைஞ்சு போச்சு நீருகுட்டி! அதான் வயித்தோட பசி தெரியல"

"அஹான்! அப்போ இன்னைக்கு சமைச்சதுலாம் எனக்கு மட்டும் தான். நான் நேத்து பட்டினியா இருந்தேன்ல, சோ நீ இன்னைக்கு சாப்பிடாம இருந்துக்கோ"

"ஏய் என்ன சொல்லுற? நேத்து நீ லஞ்ச் சாப்பிடலையா? நான் கேட்டதுக்கு நீ எதுவுமே சொல்லலை?"

"அதுல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லடா.,நீ வருவேனு நான் எதிர்பார்க்கலை..சோ எனக்கு மட்டும் தான் சமைச்சிருந்தேன்.. நீ எனக்காக அவ்ளோ தூரத்துல இருந்து வந்திருக்க..உன்னை பட்டினியா விட மனசு இல்லை..அதான் நீயே கொட்டிக்கோனு விட்டுட்டேன்" என்று அவள் கேலி போல முடித்தாலும் ரகுநந்தன் மிதமிஞ்சிய கோபத்திலும் தன்னை பற்றி அவள் யோசித்திருக்கிறாளே என்ற எண்ணமே அவன் நெஞ்சை நிறைத்தது.

"சரி! நேத்து தான் நீ சாப்பிடலை..இன்னைக்கு வேற சமைக்கிற நேரத்துல நான் உன்னை ரொம்ப கடுப்பாக்கிட்டேன்..சோ சாப்பாடு எப்பிடி இருந்தாலும் ரெண்டு பேரும் சகிச்சுட்டு சாப்பிடுவோம்" என்று மனைவியை அழைத்துச் செல்ல

அவள் "அதுல்லாம் நல்லா தான் இருக்கும்டா! நாங்கல்லாம் ஆரிய கூத்தாடுனாலும் காரியத்துல கண்ணா இருப்போமாக்கும்" என்று அமர்த்தலாக மொழிந்தபடி கணவனுடன் சாப்பிட சென்றாள்.

தொடரும்...

 

பூங்காற்று 51 (Prefinal)


Quote
Nithyamariyappan
 Nithyamariyappan
(@Nithyamariyappan)
Guest
Joined: 1 month ago
Posts: 30
14/02/2020 3:43 pm  

Nithu baby Oru valiya rendaum sethu vachuta yeppa ipathan nimathiya iruku


ReplyQuote
(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 321
14/02/2020 3:51 pm  

KATHAI MUDIYA POGUTHU SIS 😀 😀 INIYUM SANDAI POTTA NALLA IRUKKATHULA


ReplyQuote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 2 months ago
Posts: 81
14/02/2020 6:44 pm  

Interesting ud


ReplyQuote
EswariSkumar
(@eswariskumareswariskumar)
Active Member
Joined: 2 months ago
Posts: 5
14/02/2020 8:21 pm  

V D special ud super 😍 


ReplyQuote
(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 321
15/02/2020 8:05 am  

@eswariskumareswariskumar thank you akka

 


ReplyQuote
(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 321
15/02/2020 8:05 am  

@Vgl thank you sis

 


ReplyQuote
Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 2 months ago
Posts: 56
15/02/2020 8:59 am  

அருமையான பதிவு, ரகு நீருவ சமாதானம் பன்னிட்டான், விழுப்புண்பட்டு  வீரதீர செயல் புரிந்து வெற்றிபெற்றுடன் 👌👌👌👍👍👍💕💕💕🌹🌹🌹


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: