பூங்காற்று 52 (Final)  

  RSS
(@nithya-mariappan)
Member Moderator

ஐந்து வருடங்களுக்கு பிறகு...

பட்டாசு சத்தம் செவிப்பறையை தாக்க கண் விழித்தான் ரகுநந்தன். உறக்கம் கலைந்ததும் அவன் விழிகள் தேடிய ஒருத்தி அவன் அருகில் இல்லையென்றதும் ஏமாற்றம் புயலாய் தாக்க விருட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான். கீழே அனைவரும் பண்டிகை நாளுக்கான உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டவனுக்கும் மெதுவாக அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது.

தூக்க கலக்கத்தோடு நேரே கீழே இறங்கி வந்தவனை பார்த்த பத்மாவதி தலையில் அடித்துக் கொண்டார்.

"ஏன்டா பண்டிகை நாளும் அதுவுமா இன்னைக்கும் லேட்டாவா எழுந்திருப்ப? போய் ஸ்நானம் பண்ணிட்டு வா! ம்ம்..சீக்கிரம்" என்று அவனை கங்காஸ்நானம் செய்ய அனுப்பிவைத்தார் அவர்.

அவனும் தாய் சொல் தட்டாத தனையனாக குளித்துமுடித்து வேஷ்டி சட்டையில் கீழே வர "சித்தப்பா" என்றபடி அவன் கையை பிடித்துக் கொண்டாள் ஒரு குட்டி தேவதை. அவளை கண்டதும் முகம் பூவாய் மலர அவளைத் தூக்கிக் கொண்டான் ரகுநந்தன்.

அவனிடம் "சித்தப்பா இந்த பட்டு பாவாடை நேக்கு நன்னா இருக்கா?" என்று வினவினாள் அந்த குட்டி தேவதை ஸ்ரீமதி; ஹர்சவர்தன் மற்றும் கிருஷ்ணஜாட்சியின் புத்திரி.

கிருஷ்ணஜாட்சியின் அழகும், ஹர்சவர்தனின் அழுத்தமும் சேர்ந்த பிம்பமாக பிறந்த அந்த ஐந்து வயது குட்டிப்பெண்ணுக்கு சித்தப்பா என்றால் பெரும் இஷ்டம். மதிவாணனின் நினைவாக அவளுக்கு ஸ்ரீமதி என்று பெயர் வைக்கலாம் என்ற ஆலோசனையை பத்மாவதி அவள் பிறந்ததுமே மகன், மருமகளுக்கு வழங்கிவிட அந்த வீட்டின் மூத்த இளவரசி அனைவருக்கும் மதிகுட்டி என்றால் ரகுநந்தனுக்கு மட்டும் ஸ்ரீகுட்டி.

அவளது கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டே "என் ஸ்ரீகுட்டிக்கு எல்லா டிரஸ்ஸும் அழகு தான்டி ராஜாத்தி. ஆமா உன் அப்பா அம்மா எங்கே போயிருக்கா?" என்று கேட்க

அவள் "மைத்தி அத்தையும், ராகவ் மாமாவும் வந்தாளா, அவா கூட சேர்ந்து பட்டு தாத்தா ரூமுக்கு போயிருக்கா" என்று மிழற்ற அவளை இறக்கிவிட்டவன் அர்ஜூனுடன் சென்று விளையாடுமாறு அவளை அனுப்பி வைத்துவிட்டு திரும்ப கரோலின் அவளது கணவர் ஜோசப் மற்றும் தாயார் மெர்லின் சகிதம் வர அவர்களை இன்முகத்தோடு வரவேற்று ஹாலில் அமர வைத்தான்.

கிருஷ்ணஜாட்சிக்கு இருக்கும் ஒரே ஒரு தோழி என்ற முறையில் ஸ்ரீனிவாசவிலாசத்தின் எல்லா பண்டிகைக்கும் கரோலினின் குடும்பத்துக்கு அழைப்பு இல்லாமல் இருந்ததில்லை. மெர்லினுக்குமே அங்கு வந்து பெரியவர்களிடம் உரையாடிவிட்டு போவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால் அவரும் அனைத்து பண்டிகைகளுக்கும் அங்கே வந்துவிடுவார்.

சிறிது நேரத்தில் வேங்கடநாதனும், கோதண்டராமனும் அங்கு வந்துவிட அவர்கள் அனைவரும் கலகலப்பாக உரையாட ஆரம்பித்தனர். பத்மாவதி "மதி..." என்று பேத்தியை அழைத்தவாறே வந்தவர் கரோலின் குடும்பத்தாரை கண்டதும் "வாங்கோ வாங்கோ! எல்லாரும் ஷேமமா இருக்கேளா?" என்று குசலம் விசாரித்துவிட்டு  வேங்கடநாதனிடம் திரும்பினார்.

"ஏண்ணா! மதியை பார்த்தேளா?" என்று வினவ ரகுநந்தன் அவள் அர்ஜூனுடன் விளையாடுகிறாள் என்று அவர்கள் இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு ஹாலில் நின்றபடி நீரஜாட்சி எங்கே என்று  நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

பட்டாபிராமன், சீதாலெட்சுமி தம்பதியினருடன் ஹாலுக்கு வந்து சேர்ந்தனர் கிருஷ்ணஜாட்சியும், ஹர்சவர்தனும். கூடவே மைத்திரேயி அவள் கணவன் ராகவனுடனும், ஸ்ருதிகீர்த்தி அவளது கணவன் ராகுல் மற்றும் மகள் சஹானாவுடனும் வந்தனர்.

அந்த ஐந்து வருடங்களில் முதுமையில் சிறிது தளர்ந்திருந்தாலும் பட்டாபிராமனின் குரலில் சிறிதும் பழைய கம்பீரம் குறையவில்லை. அந்த கம்பீரக்குரலில் ரகுநந்தனிடம் "நந்து! எல்லாரும் தம்பதி சமேதரா என்னண்ட ஆசிர்வாதம் வாங்கிட்டாடா. நீ மட்டும் தான் பாக்கி" என்று கூற

அவரது கரம் பற்றி அழைத்து வந்திருந்த சீதாலெட்சுமி அவரை சோஃபாவில் அமர சொல்லிவிட்டு தானும் அமர்ந்தவர் பேரனிடம் "நீரு எங்கடா நந்து?" என்று வினவ

கிருஷ்ணஜாட்சி "சித்தம்மா அவ கிருஷ்ணன் விக்கிரகத்துக்கு துளசி மாலை போடப் போயிருக்கா" என்று பதிலளிக்கவும் ரகுநந்தன் மனதிற்குள் "ஹப்பாடா! போய் அழைச்சிண்டு வந்துட வேண்டியது தான்" என்றபடி திரும்ப அதற்குள் அவனது தாய்மாமா ஆதிவராஹன் அவரது சகதர்மிணி விஜயலெட்சுமியுடன் மகள் வர்ஷா , மருமகன் அருண் மற்றும் பேரக்குழந்தை சகிதம் வர நீரஜாட்சியை அழைக்கச் செல்லும் எண்ணத்தை அப்போதைக்கு ஒத்திவைத்துவிட்டு அவர்களை கிருஷ்ணஜாட்சி,  ஹர்சவர்தனுடன் சேர்ந்து வரவேற்றான் ரகுநந்தன்.

"வாங்க மாமா! வாங்க மாமி! வர்ஷா அண்ணாவுக்கும் கொஞ்சம் சாப்பாடு கொடுடி" என்று அவர்களை கலாய்த்தவண்ணம் நலம் விசாரித்துவிட்டு இனியாவது நீரஜாட்சியை அழைத்து வரலாம் என்று அங்கிருந்து நகர ஹர்சவர்தனும் கிருஷ்ணஜாட்சியும் "ஸ்ரீமதி" என்ற அழைப்புடன் மகளை தேடி சென்றனர்.

ரகுநந்தன் வெளியே வந்தவன் நீரஜாட்சியை தேடி தோட்டத்தில் நடைபோட திடீரென்று கொலுசின் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தான்.

அங்கே இளஞ்சிவப்புநிற புடவை அணிந்து,  ஈரம் உலர விரித்து விட்டிருந்த கூந்தல் காட்டின் நடுவில் வெண்ணிற ஓடையாய் மல்லிகைச்சரத்தை சூடி வில்லினை ஒத்த வளைந்தப் புருவங்களுடன், கூரான எள்ளுப்பூ நாசியுடன், காதின் ஜிமிக்கி அவளின் கன்னங்களை உரசி விளையாட செவ்விதழ்களில் புன்னகை மின்ன, கதிரவனின் காலைக்கதிர் அவள் மேனியில் பட்டு அவளை தேவலோக அப்சரஸாக மாற்றியிருக்க, வளைகரங்களால் துளசிமாலையை எடுத்து கிருஷ்ணனுக்கு போட்டுக் கொண்டிருந்தாள் நீரஜாட்சி.

அவள் அருகில் நின்ற சின்ன கண்ணனோ "மா! நானும் போடறேன்" என்று மழலைமொழியில் கொஞ்ச

அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவள் "என் ராஜா! வா அம்மா உன்னை தூக்கிக்கிறேன்..நீ கிருஷ்ணனுக்கு இந்த துளசியை போடு" என்றவாறு அவனை இடுப்பி தூக்கி கொள்ள அவனும் ஆர்வத்துடன் துளசி இலையை கிருஷ்ணன் மீது தூவிவிட்டு "ஹை! நானும் அப்பா மாதிரி உயரமா வளர்ந்துட்டேனே" என்று குழந்தைக்கே உரித்தான குதூகலத்துடன் கை தட்ட

நீரஜாட்சி தன் செல்லமகனின் கன்னத்தில் முத்தமிட்டவாறே "ஆமா என் செல்ல கண்ணன் பெரிய பையனா வளர்ந்துட்டான்" என்று மகனை கொஞ்சியவள் மனதிற்குள் "உன் அப்பா உயரமா வளர்ந்து என்ன பிரயோஜனம்? அறிவு வளரலையே" என்று மானசீகமாக நொடித்துக் கொண்டாள்.

ஆனால் அந்த மனநிலையை அவள் பெற்ற சீமந்தப்புத்திரன் நீண்டநேரம் நீடிக்க விடவில்லை. அவளின் இடுப்பில் இருந்தபடியே  "மா! கிருஷ்ணாக்கு துளசினா அவ்ளோ இஷ்டமா?" என்று கண்ணை விரித்து அவன்  கேட்க

"ஆமாடா செல்லம்! துளசினா கிருஷ்ணாக்கு ஸ்பெஷல் தான். பக்தியோட ஒரு துளசி இலையை கிருஷ்ணனுக்கு நம்ம அர்ப்பணிச்சாலும் பகவான் அதை ரொம்ப சந்தோசமா ஏத்துப்பார்" என்று மகனுக்கு விளக்கினாள் நீரஜாட்சி.

பின் அவள் துளசி மாடத்தைச் சுற்றி விளக்கேற்றிவிட்டு மகனுடன் திரும்ப அங்கே அழகு தேவதையாய் நின்ற நீரஜாட்சியைக் கண்டு சுற்றம் மறந்து நின்றான் ரகுநந்தன்.

அவனைப் பார்த்ததும் நேற்றைய சம்பவங்கள் காதில் புகையை வரவழைக்க நீரஜாட்சி மகனிடம் "மது! உன் அப்பாவை இங்கே இருந்து அழைச்சிண்டு போடா செல்லம்" என்று காதில் கிசுகிசுக்கவும் அன்னையின் இடுப்பிலிருந்து இறங்கி தந்தையை நோக்கி ஓடினான் நான்கு வயது மதுசூதனன். நீரஜாட்சி அவள் அன்னையின் நினைவாக தனது செல்ல மகனுக்கு சூட்டிய பெயர் அது.

தன்னை நோக்கி ஓடி வரும் மைந்தனை தூக்கிக் கொண்ட ரகுநந்தன் நீரஜாட்சி அவன் காதில் முணுமுணுத்ததை கவனித்துவிட்டான். அவளுக்கு நன்றாக தெரியும் மதுசூதனன் கேட்டு எதையும் ரகுநந்தனால் மறுக்க இயலாது என்பது.

எனவே மனைவி இப்போது என்ன சொல்லியிருப்பாள் என்பதை ஓரளவுக்கு ஊகித்தவன்  மகன் காதில் "இப்போ அம்மா உன்னண்ட ஏதோ சொன்னாளோன்னோ அதை அப்பிடியே மறந்துடுடா ராஜா! இப்போ நீ என்ன பண்ணுற, ஆத்துக்குள்ள போய் சமத்து பையனா ஸ்ரீகுட்டி கூட விளையாடுற. அஜ்ஜூ அண்ணா உன்னை தான் தேடிண்டிருக்கான்" என்று ரகசியம் பேசி அனுப்பி வைத்தான்.

மகன் வீட்டுக்குள் ஓடுவதை பார்த்துவிட்டு மனைவியை நோக்கி வந்தான் ரகுநந்தன். காலை நேர குளிர்க்காற்றில் அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் ரகுநந்தனின் நாசியை நிறைத்தது. அதை உள்ளிழுத்தபடியே "அம்மாவும் பையனும் ராசி ஆயிட்டிங்க போல" என்று புருவம் உயர்த்தி கேட்க

நீரஜாட்சி "ஆமா! அவன் ஒன்னும் அவனோட அப்பா மாதிரி இல்லை..என்ன இருந்தாலும் அவன் நான் பெத்த பிள்ளை. அதான் அவனோட அம்மா திட்டுனது நல்லதுக்கு தான்னு புரிஞ்சுகிட்டு அவனே என்னண்ட வந்து பேசிட்டான்" என்று சொல்லிவிட்டு உதட்டை சுழிக்க

ரகுநந்தன் "நீருகுட்டி.." என்றபடிஅவளை சமாதானப்படுத்த அவள் அருகில் வர நீரஜாட்சி "என்னடா இப்போ மட்டும் நான் நீருகுட்டியா? நேத்து நீ என்னென்ன பேசுன? நான் பெத்த பிள்ளை தப்பு பண்ணுனா அதை கண்டிக்க கூட எனக்கு உரிமை இல்லையா?" என்று வெகுண்டு எழுந்தாள்.

ரகுநந்தன் "மது சின்ன குழந்தைடி..இப்போ நீ ஓவரா அவனை கண்டிச்சேனா அவன் உன்னை விட்டு விலகி போயிடுவான் நீரு" என்று தனது கோணத்தை கூற

நீரஜாட்சி "ஓகே! நான் ஒன்னே ஒன்னு கேக்கவா? இந்த வயசுலயும் நீ தாத்தா பேச்சை தட்டுறியா? பட்டு ஒரு சின்ன அதட்டல் போட்டா கூட நீ அதுக்கு ரெஸ்பாண்ட் பண்ணுற. அது பயம் இல்லை. பட்டு மேல உனக்கு இருக்கிற மரியாதை. அதே மரியாதை உன் மகனுக்கு உங்க அப்பா  அம்மா மேல வரணும் நந்து. நேத்தைக்கு மாமி குடுத்த புது துணியை அவன் வீசி எறிஞ்சது எனக்கு சுத்தமா பிடிக்கலை. இப்போ நம்ம அவனை கண்டிக்காம விட்டுட்டோம்னா பெரியவனானதும் அவன் யாரையும் மதிக்க மாட்டான். உன் பையனை மரியாதை தெரிஞ்சவனா வளர்க்கணும்னு நான் ஆசைப்படறேன்" என்றாள் அந்த 'உன் பையனை' என்ற வார்த்தையின் அழுத்தத்தை அதிகரித்தவளாய்.

"ஓகே ஓகே! இனிமே மது அம்மா கிட்டவோ அப்பா கிட்டவோ அப்பிடி பிஹேவ் பண்ணமாட்டான். நீ ஏன் இன்னும் அதையே நினைச்சு டென்சனா இருக்க?" என்று கூற நீரஜாட்சி சிறிது சாந்தமடைந்தாள். ரகுநந்தன் "என் ஆத்துக்காரிக்கு தான் எவ்ளோ கோவம் என் மேல" என்று கிண்டலாக மொழிந்தபடி அவளது கன்னத்தை கிள்ள  அவன் கையை தட்டிவிட்டாள் அவள்.

"என்ன ஐயா இன்னைக்கு ரோமியோ கெட்டப்புல சுத்துறாரு?" என்றவளை பார்த்து சிரித்தவன் "தீபாவளினாலே எனக்கு தானா லவ் மூட் வந்துடும் நீருகுட்டி. ஏன் தெரியுமா? இதே தீபாவளி நாள்ல தான் இதே கிருஷ்ணன் சிலை கிட்ட தான் உன்னை பார்த்து எனக்கு காதல் வந்துச்சு. அது மறக்க கூடிய நிகழ்வா?" என்று கண்ணை மூடி ரசனையுடன் கூற நீரஜாட்சி அவன் கூறிய விதத்தில் சிரிப்பை அடக்க முயலாமல் சிரித்துவிட ரகுநந்தன் மனைவியின் சிரிப்பை ரசிக்க ஆரம்பித்தான்.

நீரஜாட்சி சிரித்து முடித்துவிட்டு "இப்பிடி தோட்டத்திலேயே நின்னிட்டிருக்க போறியா? பூஜை பண்ணிட்டு புது டிரஸ் போட வேண்டாமா?" என்று கேட்க ரகுநந்தன் மனைவியுடன் சேர்ந்து வீட்டை நோக்கி நடைபோட்டான்.

வீட்டில் நுழையவும் சீதாலெட்சுமி "வந்துட்டியாடி? நோக்கு தான் நாங்கெல்லாம் வெயிட் பண்ணிண்டிருக்கோம். பத்மா உன் இளைய மாட்டுப்பொண்ணும் வந்துட்டா. நீ பூஜையை ஆரம்பிச்சிடுடிமா" என்று கூற பத்மாவதி சரியென்று பூஜையை ஆரம்பித்தார்.

பூஜை முடிவடைய குடும்பத்தினரிடம் புத்தாடையை அவர் எடுத்து கொடுக்க அவரது மகள்கள், மருமகன்கள், மகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள்  என அனைவரும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர்.

அடுத்து கரோலின், ஜோசப் தம்பதிகளோடு சேர்த்து வர்ஷாவிற்கும் அருணிற்கும் புத்தாடையை கொடுக்க அவர்களும் மறுப்பின்றி வாங்கிக் கொண்டனர்.

மைத்திரேயியும் ஸ்ருதிகீர்த்தியும் புத்தாடைகளை பத்திரப்படுத்தியவர்கள் கரோலினிடம் அவர்களின் கஃபே பற்றி பேச ஆரம்பிக்க நீரஜாட்சியும் கிருஷ்ணஜாட்சியும் புத்தாடை அணிய அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.

கிருஷ்ணஜாட்சி புடவை கட்டிவிட்டு பத்து நிமிடத்தில் தயாராகி விட ஹர்சவர்தனும் ஸ்ரீமதியும் தான் இன்னும் தயாராகாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தனர்.

ஹர்சவர்தன் வேஷ்டி சட்டையுடன் சோஃபாவில் அமர்ந்திருந்தவன் மகளின் கைகளுக்கு அவளது ஆடைக்கு பொருத்தமாக நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருக்க கிருஷ்ணஜாட்சி "உங்க அலும்பு தாங்கலைப்பா! இப்போ இது இல்லைனா என்னாவாம்?" என்று சலித்துக் கொள்ள

ஸ்ரீமதி "மா! நான் பிரின்சஸ் மாதிரி ரெடியாகனும்னா அதுக்கு கொஞ்சம் டைம் ஆக தான் செய்யும். இல்லையாப்பா?" என்று அவளது கைவிரல்களை வண்ணமயமாக்கி கொண்டிருந்த தந்தையை துணைக்கு அழைக்க

கிருஷ்ணஜாட்சி "அப்பாவும் பொண்ணும் எப்பிடியோ போங்க" என்று கூறிவிட்டு தனது கூந்தலை பின்னலிட்டாள். அவள் பின்னலிடும் போதே ஸ்ரீமதிக்கு நெயில் பாலிஷை போட்டு முடித்தவன் "மதிகுட்டி விரலை வாயில வச்சுடக் கூடாது, சரியா?" என்று கவனம் சொல்லி கீழே அனுப்பி வைத்தான்.

அவள் வராண்டாவில் "மது வாடா போகலாம்" என்று கத்திக் கொண்டே மதுசூதனுடன் ஓடுவதைக் கண்டு ரசித்தபடி அறையினுள் நுழைந்தான். மனைவி பேரழகு தேவதையாக ஜொலிக்க அவளிடம் வந்தவன் "எப்போவும் போல என் கிருஷ்ணா அழகி தான்" என்று கூறியவாறு அவள் கன்னத்தில் முத்தமிட கிருஷ்ணஜாட்சி வெட்கப்புன்னகை புரிந்தாள்.

அவன் அவள் சிரிப்பை ரசித்தபடி "அது என்ன எப்போ பார்த்தாலும் நானே கிஸ் பண்ணிண்டிருக்கேன்? இன்னைக்கு நீ என் கன்னத்துல கிஸ் பண்ணுற" என்று கூற கிருஷ்ணஜாட்சி தலையிலடித்துக் கொண்டவள் "ம்ஹூம்! முடியாது" என்று பிடிவாதமாக மறுக்க

ஹர்சவர்தன் "அப்போ உனக்கு இன்னைக்கு தீபாவளி செலிப்ரேசன் எதுவுமே கிடையாது..பிகாஸ் நீ என் கன்னத்துல கிஸ் பண்ணாம நான் நம்ம ரூம் கதவை திறக்கறதா இல்ல" என்று அமர்த்தலாக கூறிவிட்டு சோஃபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

கிருஷ்ணஜாட்சி புடவை தலைப்பை கையால் பாடாய்ப்படுத்த அவன் விடுவேனா என்று பிடிவாதம் பிடித்தவனாய் தான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டு தான் மனைவியுடன் அறையை விட்டு வெளியேறினான்.

அதே நேரம் நீரஜாட்சி புது புடவையை கட்டியவள் எப்போதும் போலவே கொசுவம் சரியாக வராமல் போக ரகுநந்தன் உதவியுடன் அதை கட்டி முடித்தபடியே அவள் தோழி கவிதாவுக்கு போனில் தீபாவளி வாழ்த்து கூறிவிட்டு கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டாள்.

தோற்றத்தில் திருப்தியானவள் ரகுநந்தனுடன் ஏதோ வளவளத்தபடி கீழே வரும் போது ஏதோ போன் வர அதை பேசிவிட்டு  கரோலினிடம் சென்றாள்.

"லின் கம்மிங் மண்டே பேங் மேனேஜர் என்னை வர சொல்லிருக்கார்..அதுக்கு முன்னாடி லோனுக்கு அவர் கேட்ட சில பேப்பர்ஸ் உன் கிட்ட தான் இருக்கு. மறந்துடாம நாளைக்கு கஃபேக்கு கொண்டு வந்துடு. நான் ஆடிட்டரை வேற பார்க்க போகணும்" என்று படபடவென்று அவளிடம் பொறிய கரோலினும் அதற்கு சரியென்று தலையாட்டி வைத்தாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹாலில் நுழைந்த அவளது தாத்தாவின் நண்பரான சேஷன் "நீரஜாவுக்கு இப்போவும் வேலை நியாபகம் தானா?" என்று கேலி செய்ய

நீரஜாட்சி "ஆமா தாத்தா! எங்களுக்கு சோறு போடுற வேலையை நாங்க மறக்க முடியுமா? கிருஷ்ணாவே இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்போ தான் புது பிராஞ்ச் ஓப்பன் பண்ணலாம்ங்கிற முடிவுக்கு வந்துருக்கா. அதான் அவ மனசு மாறுறதுக்கு முன்னாடி லோன் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிக்கணும்னு நானும் லின்னும் தீவிரமா வேலை பார்க்கிறோம்" என்று அவருக்கு பதிலளித்தவள் மறக்காமல்  "தாத்தா போட்டோகிராஃபர் வந்துட்டாரா?" என்று கேட்க சேஷன் தான் கையோடு அழைத்து வந்துவிட்டதாக கூறவும் தான் அவளுக்கு பெரும் நிம்மதி.

ஏனெனில் அன்று குடும்ப உறுப்பினர்கள் அவரவர் நண்பர்கள்  அனைவருடனும் சேர்ந்து ஒன்றாக இருக்கும் புகைப்படம் எடுக்க வேண்டிய நாள். கடந்த ஐந்து வருடங்களாக பட்டாபிராமன் தான் இந்த பழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார். வருடா வருடம் தீபாவளியன்று புத்தாடை உடுத்தி குடும்பத்தார் சகிதம் புகைப்படம் எடுத்து அதை சுவரில் மாட்டி அழகு பார்ப்பதை வழக்கப்படுத்திவிட்டார் அவர்.

சீதாலெட்சுமி அனைவரையும் புகைப்படம் எடுக்க அழைக்க அவரது மூத்த பத்மாவதி ஸ்ரீமதிக்கு சில ஆபரணங்களை அணிவித்து கொண்டிருந்தவர் "கொஞ்சம் இருங்கோம்மா! நான் இவளுக்கு செயின் போட்டு விடறேன்" என்று கூறிவிட்டு பேத்திக்கு அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் அமர்ந்திருந்த வேங்கடநாதன் "பத்மா குழந்தைக்கு இதை பாதுகாப்பா வச்சிருக்க தெரியாதுடி! போட்டோ எடுத்ததும் கழட்டிடு" என்று அறிவுரை வழங்கியபடி ஸ்ரீமதியிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார்

சீதாலெட்சுமி மூத்த மகன், மருமகள் பேத்தியை கவனிக்க ஆரம்பித்தால் மற்ற எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டவராய் தனது இளைய மருமகள் மைதிலியை அழைக்க

அவரோ "இதோ வந்துட்டேன்மா! உங்க இளைய மகனுக்கு சட்டையில மஞ்சள் கொஞ்சம் அதிகமா தடவிட்டாளாம்! அதை சொல்லி அதகளம் பண்ணிண்டிருக்கார்" என்று கூறிவிட்டு கோதண்டராமனிடம் "ஏண்ணா! போட்டோ தானே பிடிக்கப் போறா? சின்னவா கூட உங்களாட்டம் பிடிவாதம் பிடிக்கலை" என்று நொடித்து கொண்டவாறு அவரை ஹாலுக்கு அழைத்து வந்தார்.

அதற்குள் ரகுநந்தனும் நீரஜாட்சியும் இருக்கைகள் , சோஃபாவை புகைப்படம் எடுப்பதற்கு அமர்வதற்காக ஒழுங்குப்படுத்தினர். நீரஜாட்சி மறக்காமல் அவளுடைய பெற்றோர் புகைப்படத்தை அந்த இருக்கைகளின் பின்னணியில் மாட்டி வைத்துவிட்டாள். பின்னர் அனைவரும் ஹாலில் ஒன்று கூடிவிட சோஃபாவின் நடுநாயகமாக பட்டாபிராமனையும் சீதாலெட்சுமியையும் அமரச் சொல்லிவிட்டு அதன் இரு பக்கவாட்டிலும் மாமா மற்றும் மாமிகளை அமரச் சொன்னாள்.

நீரஜாட்சியும் கிருஷ்ணஜாட்சியும் பெரிய இருக்கையின் பின்புறம் நின்று கொள்ள ஹர்சவர்தனும் ரகுநந்தனும் அவரவர் மனைவியின் தோள்களை அணைத்தபடி புன்னகையுடன் நின்றனர்.

பக்கவாட்டு இருக்கையில் ஒரு புறம் ஆதிவராஹன் மனைவி சகிதம் அமர்ந்து கொள்ள அவர்களின் பின்னே வர்ஷாவும் அருணும் நின்று கொண்டனர். விஜயலெட்சுமி பேரனை மடியில் அமர்த்திக் கொண்டார்.

அதே போல மறுபுறம் மெர்லின் அமர்ந்து கொள்ள அவரின் இருக்கையின் பின்புறம் கரோலினும் ஜோசப்பும் நின்று கொண்டனர். பேரக்குழந்தைகளான ஸ்ரீமதி, மதுசூதனன், அர்ஜூன் மற்றும் சஹானா தாத்தா பாட்டிகளின் மடியில் அமர்ந்து கொள்ள சேஷன் பட்டாபிராமனின் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

போட்டோகிராஃபர் "சார் ரெடியா?" என்று கேட்க அனைவரும் புன்னகை பூத்த முகத்துடன் போஸ் கொடுக்க அவர் அந்த அழகிய தருணத்தை புகைப்படக்கருவியில் அடக்கினார். பின்னர் சேஷனிடம் "சார் ஈவினிங் ஸ்டூடியோ பையன் கிட்ட போட்டோ காப்பியை குடுத்து விடுறேன்" என்றபடி அவர் விடைபெற்று கொண்டார்.

போட்டோ எடுத்ததும் அடுத்த நிகழ்வாக அனைவரும் பட்டாசு வெடிப்பதில் மும்முரமாகி விட இரண்டு மணி நேரத்துக்கு ஸ்ரீனிவாசவிலாசத்தில் பட்டாசு சத்தம் மட்டுமே கேட்டது. கிருஷ்ணஜாட்சி, மைத்திரேயி, ஸ்ருதிகீர்த்தி  மூவரும் வேடிக்கை பார்க்க நீரஜாட்சி கரோலினுடனும் வர்ஷாவுடனும் சேர்ந்து பட்டாசை வெடித்துக் கொண்டிருந்தாள். வீட்டின் பெரியவர்கள் குழந்தைகளை கொஞ்சியபடி இளையவர்களின் கொண்டாட்டத்தை நிறைந்த மனதோடு ரசித்துக் கொண்டிருந்தனர்.

நீரஜாட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணஜாட்சியை வெடி வைக்க அழைக்க அவளோ மிரண்டவளாய் மறுத்தாள். சகோதரியின் கையைப் பற்றி பிடிவாதமாக அழைத்துச் சென்றவள் "நான் இருக்கேன் கிருஷ்ணா! பயப்படாம வெடி" என்று கூற

கிருஷ்ணஜாட்சி வாஞ்சையுடன் தங்கையை பார்த்தவள் "உன்னை நம்பாம நான் வேற யாரை நம்ப போறேன் நீரு?" என்று சொன்னபடி வெடியில் ஊதுபத்தியை வைத்துவிட்டு தங்கையின் கையை பிடித்தபடி விலகிக் கொள்ள பட்டாசு படபடவென்று வெடிக்க ஆரம்பித்தது.

ரகுநந்தன் இதைக் கண்டு ஹர்சவர்தனிடம் " பார்றா! மன்னி கூட கிராக்கர்ஸ் வெடிக்க ஆரம்பிச்சிட்டா" என்று கேலி செய்ய இரு சகோதரிகளும் அவனது கேலியை புறம் தள்ளிவிட்டு வெடி வெடிப்பதைக்  கண்டு குழந்தையாய் குதூகலித்தனர்.

அதை ரசித்துக் கொண்டிருந்த பட்டாபிராமனும் சீதாலெட்சுமியும் வழக்கம் போல இந்த சந்தோசத்தை காண  மதுரவாணியும் மதிவாணனும் இல்லையே என்று ஒரு நிமிடம் மனம் வருந்தினாலும் இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரை ஒருவர் பிரியாமல் எல்லா சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து சந்தோசம் துக்கம் இரண்டையும் சரிபாதியாக அனுபவித்தவர்களான தங்களது பேத்திகள் கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் எப்போதும் இதே ஒற்றுமையுடன் இதே சந்தோசத்துடன் வாழ வேண்டும் என்று பரந்தாமனிடம் மனமுருக வேண்டிக் கொண்டனர்.

பெற்றோரை இழந்து ஆதரவு தேடி ஸ்ரீனிவாசவிலாசத்தில் கால் வைத்த அவர்கள் இன்று அதே ஸ்ரீனிவாசவிலாசத்தின் மருமகள்களாக உரிமையோடு வலம் வருவதோடு தங்களது இலட்சியத்துக்கான புதுமுயற்சியில் தோழியோடு சேர்ந்து ஆரம்பித்து விட்டனர்.

இறைவனின் ஆசியோடும், பெரியவர்களின் ஆசிர்வாதத்தாலும் வாழ்க்கைத்துணைகளின் ஆதரவோடும் இனி இந்த இரு சகோதரிகளின் இல்வாழ்விலும், புதிய வேலை முயற்சிகளிலும் அவர்களுக்கு வெற்றியே கிட்டட்டும் என்று நாமும் அவர்களை மனதாற வாழ்த்துவோம்..

🌹🌹🌹இனிதே நிறைவுற்றது🌹🌹🌹

Quote
Posted : 15 Feb 2020 1:20 pm
 Vgl
(@Vgl)
Guest
  • அருமையான கதை,கிருஷ்ண ஜாட்சி,நீரஜாட்சி பெயரில் மட்டும் வித்யாசம் இல்லை, அவர்கள் கதாபாத்திரங்களும் வித்யாசமானவை,அதை அவர்கள் பத்மாவை ஏற்றுக் கொண்ட விதத்திலேயே புரிந்து கொள்ளலாம்.பட்டு ,சீதா ஹர்ஷா,ரகு மைதிலி என்று கதையில் வரும்  அத்தனைகதாபாத்திரங்களும்அருமை நித்யா சிஸ் தினமும் இந்த கதையை எதிர் பார்த்திருந்து படித்தேன், அந்த அளவிற்கு இந்த கதை என்னை ஈர்த்தது, மொத்தத்தில் அழகான குடும்ப கதை.
ReplyQuote
Posted : 15 Feb 2020 2:49 pm
(@nithya-mariappan)
Member Moderator

@Vgl மிக்க நன்றி சிஸ்...அந்த நேம்ஸுக்கு பின்னாடி சில காரணங்கள் இருக்கு..நீரஜாட்சிங்கிறது எங்க பாட்டி வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு மாமியோட நேம்..அவங்கன்னா எனக்கு சின்னவயசுல ரொம்ப பிடிக்கும்..இப்போவும் பாட்டி வீட்டுக்கு போனா அவங்க கிட்ட பேசாம வர்றதே இல்ல...அப்புறம் கிருஷ்ணஜாட்சிங்கிறது நீரஜாட்சிக்கு மேட்சா வைக்கணும்கிறதுக்காக யோசிச்சது..என்னோட ஃப்ரெண்ட் கிருஷ்ணவேணி இந்த கதையை டெவலப் பண்ண, பிராமின்ஸ் ஸ்லாங் ரைட் அப் பண்ண ரொம்ப ஹெல்ப் பண்ணுனா..சோ அவளுக்காக அந்த நேமை செலக்ட் பண்ணுனேன்..கதையை படிச்சு கதையோட பயணம் பண்ணுனதுக்கு மிக்க நன்றி சிஸ்

ReplyQuote
Posted : 15 Feb 2020 6:29 pm
EswariSkumar
(@eswariskumareswariskumar)
New Member
Posted by: @nithya-mariappan

Romba arumaiyana story. Naan vidaama follow panni padicha story la ethuvum onnu.kurippa yenakku oru kutty thangai kedachirukka.Nithi ma melum pala nalla kathigal yezhutha Vazhthukkal 😘😘😘😍😍

ReplyQuote
Posted : 15 Feb 2020 7:01 pm
Krithi
 Krithi
(@Krithi)
Guest

Ending super mam 😀 

ReplyQuote
Posted : 15 Feb 2020 7:44 pm
Jothiru
(@jothiru)
Eminent Member

அருமையானா,  மகிழ்ச்சியானா குடுப்பம் +காதல் கதை♥️♥️♥️, நீரு ரகுவ ரெம்ப மிஸ் பன்னுவேன், மன நிறைவான சந்தோசமான கதை முடிவு, எப்படி சொல்லறதுனே தெரியல கதையின் ஒவ்வரு பதிவும் மிக அருமையா 👌👌👌ஒவ்வரு நாளும் மிஸ் பன்னாம பதிவு 👏👏👏கூடத்தர்கு  மிக்க நன்றி 💕💕💕🙏🙏🙏♥️♥️♥️ 

ReplyQuote
Posted : 15 Feb 2020 8:12 pm
(@nithya-mariappan)
Member Moderator

@Krithi thank you so much sis

ReplyQuote
Posted : 15 Feb 2020 8:40 pm
(@nithya-mariappan)
Member Moderator

@eswariskumareswariskumar thank you akka 🤩 🤩 

ReplyQuote
Posted : 15 Feb 2020 8:42 pm
(@nithya-mariappan)
Member Moderator

@jothiru thank you akka 😍 😍 

ReplyQuote
Posted : 15 Feb 2020 8:44 pm
Nithyamariyappan
 Nithyamariyappan
(@Nithyamariyappan)
Guest

Nithu ma super ma nice story Oru Oru char super fix pani Suma therika vitruka ma nice story ma ... 😊 🤩 😎 

ReplyQuote
Posted : 15 Feb 2020 8:46 pm
Shanthi venkat
 Shanthi venkat
(@Shanthi venkat)
Guest

Superb story 👌👏

Started to read day before yesterday from episode 1 and've finished now. From sharjah.

ReplyQuote
Posted : 16 Feb 2020 1:56 am
 Nithya Mariappan
(@Nithya Mariappan)
Guest

Thank you so much sis😍😍❤🙏

ReplyQuote
Posted : 16 Feb 2020 6:49 am

Leave a reply

Preview 0 Revisions Saved
Share: