Notifications

பூவோ? புயலோ? காதல்! - 26 Precap  

  RSS

Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 275
11 Nov 2019 12:50 pm  

பூவோ? புயலோ? காதல்! - 26 Precap

'யாரு நா திட்டுவேன்? நீ என்னைய திட்ட விட்டுட்டு சும்மாவா இருப்ப?' என்பது போல் கணவனைப் பார்த்து வைத்தாள் கயற்கண்ணி.

அவள் திட்ட ஆரம்பித்ததை அவன் யுத்தத்தில் முடித்த கதை அவள் அறிந்த கதையாகிற்றே!

"ஏன் சிஸ்டர் எங்களுக்காகக் கஷ்டப்படுறீங்க?" என்று கேள்வியைக் கேட்ட ரித்விக், இருவரின் நினைவையும் தன் பக்கம் திருப்பினான்.

"சிஸ்டருனா தங்கச்சி தானே அண்ணே . தங்கச்சின்னு சொன்ன பொறவு பிரிச்சு பார்க்கலாமா? நீங்க இங்கன இருக்குற வரைக்கும் நாந்தேன் கொண்டு வருவேன். என்னைய தடுக்காதீங்க..." என்று உரிமையுடன் சொன்னாள் கயற்கண்ணி.
❤️❤️❤️

"இப்பயேவா? எதுக்கு ரித்வி, அநாவசியமா அவங்களை வரவைக்கணும்? வேண்டாம்..." என்று உடனே மறுப்பு தெரிவித்தாள் வேதவர்ணா.

"ஏன் வரு? உனக்கு ஹெல்ப்புல்லா இருக்கும் தானே? கீழே விழ முயன்றதில் வந்த பேக் பெயின் இன்னும் இருக்கு. பிரஷரும் குறையலை. இந்த நிலையில் இனி நீ ஆபீஸுக்கு போக முடியாது வரு. வீட்டில் தான் இருந்தாகணும். டெலிவரிக்கு இன்னும் பிப்டின் டேட்ஸ் இருக்கு. எனக்கும் இப்போ உன் கூடவே லீவ் போட முடியாது வரு. டெலிவரி டைம்ல தான் டென்டேட்ஸ் தான் லீவ் போடமுடியும்..." என்றான் ரித்விக்.
❤️❤️❤️

“வெயிட் எ மினிட் மிஸ்டர் ரித்விக்...” என்ற மருத்துவர், வேதாவின் புஜத்தில் ஒரு ஊசியை ஏற்றிவிட்டு, தன் அறைக்கு ரித்விக்கை வரச் சொல்லிவிட்டு, முன்னால் நடந்தார்.

“உங்களுக்கும், உங்க வொய்ப்க்கும் என்ன பிரச்சனை ரித்விக்...” தன் இருக்கையில் அமர்ந்ததும் ஆங்கிலத்தில் தன் கேள்வியைத் தொடங்கினார் மருத்துவர் காயத்ரி.

“பிரச்சனையா? எதைப் பற்றிக் கேட்கிறீங்க டாக்டர். இப்போ என் வொய்ப்க்கு என்னாச்சு? அவள் ஏன் நான் உள்ளே வந்த போது கண் திறவாமல் கிடந்தாள்?” என்று கேட்டான் ரித்விக்.

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: