Forum

Notifications

காதலின் உன்னதம்..  

  RSS

(@10)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 1
15/12/2019 10:31 am  

காதலின் உன்னதம்
################

ஹாய் பொண்டாட்டி ....எங்கிருக்க?
கூப்பிட்டு கிட்டே வந்தான் அருண்....மனைவிஅகிலா சோபாவில் அமர்ந்திருந்த பார்த்து அருகில் அமர்ந்தவன் மனைவி முகம் வாடி இருப்பதை கண்டு மனதில் வருத்தப்பட்டான் ....

அருண் அகிலா காதலித்து பெற்றோர்கள் எதிரிப்பில் கல்யாணம் செய்தவர்கள்...

சோகத்தில் முழுகிருந்த அகிலா அருணை பார்த்தவுடன் முகத்தை மகழ்ச்சியாக மாற்றி ...ஹாய் புருஷா...
கொஞ்சினாள்...

மனைவியின் முகம் மாறியதை ஒரு நொடியில் உணர்ந்தவன்...என்னடா...
ஏன் ஒரு மாதிரி இருக்க ...இல்லப்பா ஒன்றும் இல்லை ...நல்லதான் இருக்கேன்...உனக்கு காபியா டீயா எது வேணும் கேட்டு எழுந்தாள்.....இப்ப எதும் வேண்டாம் உட்காரு என்று அருகில் இழுத்து உட்கார வைத்தான்...

இப்ப மாசமா இருக்க இந்த மாதிரி நேரத்தில் மனதை ஏன் கஷ்ட படுத்திகிற...எது இருந்தாலும் சொல்லும்மா. ...

அவன் தோள் சாய்ந்தவள்...
அது அது நான் சொன்ன கோபபட கூடாது ஒக்கேயா...ம்ம் சொல்லும்மா உன் மேல் ஏன் கோபபட போறேன் ...

இப்ப நான் மாசமா இருக்கேன்ல ...இப்ப நாம் குழந்தையை பற்றி எவ்வளவு கனவு காண்கிறோம் ...பொண்ணா பையனா,
என்ன பெயர் வைக்கனும், குழந்தை யார் முகஜாடையில் இருக்கும்,அவங்களுக்கு என்ன பிடிக்கும் அவங்கள எந்த படிப்பு படிக்க வைக்கலாம் ..எது எல்லாம் கத்துக் கொடுக்கலாம், ஆயிரம் கனவு காண்கிறோம் ......

ஆமாடா உண்மை தானே ....நமக்கே நமக்கான ஒரு குழந்தை வருவது நம் காதலின் சின்னம் தானே ....நான் உன் மேலும் நீ என் மேலும் வைத்த காதல் பொக்கிஷம் தான் நம் குழந்தை ......

அருண் சொல்ல அவன் முகத்தை காதலா பார்த்த அகிலா...ம்ம்ம்...என்று அவன் தோளில் சாய்ந்தவள்.....இதே மாதிரி தானே நம் அம்மா வயிற்றில் இருக்கும் போது அம்மாவும் அப்பாவும் கனவு
கண்டு இருப்பார்கள் ....

இதை கேட்ட அருண் ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் மனைவி தோளில் சாய்த்து தட்டி கொடுத்தான் ...

சிறு நிமிடங்கள் ஒன்றும் பேசமல் இருந்த அருண் ...உண்மைடா....புரிது.....நம் காதலின் வேகத்தில் அவர்களிடம் நம்மை பற்றி நம் காதல் பற்றி புரிய வைத்து அவர்களுக்கு புரியர வரைக்கும் வெயிட் பண்ணிருக்கலாம்.....பரவயில்லை விடுமா...மனதை அலட்டிக்காதே....

இந்தமாதிரி டைமில நீ கவலை படாதே...மனது நிம்மதியா இருந்தா தான் உனக்கு நம் குழந்தைக்கும் நல்லது...

நாளை நாம் இருவரும் நம் பெற்றோர்களிடம் போய் மன்னிப்பு கேப்போம்....கண்டிப்பா சமாதானம் ஆயிருவாங்க....எப்படி தெரியுமா? அவர்கள் நம் மேல் வைத்த பாசம் உன்னதமானது .... அதுநால மன்னித்து ஏற்று கொள்வார்கள்....நம் குழந்தை பிறக்கும் போது அருகில் பாட்டி தாத்தா எல்லாம் சொந்தமும் இருக்கும்....ஒக்கே...

கணவன் சொல்வதை கேட்ட அகிலா எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டு
காதலை கண்ணில் காட்டி தோளில் சாய்ந்தாள்....மனைவியின் காதலை கண்ணில் கண்டவன் கன்னத்தில் முத்தமிட்டு இறுக அனைத்து கொண்டான்.........

சசி ஜெகநாதன் ....😊

இது முதல் தடவை நான் எழுதும் சிறுகதை.....எல்லாருக்கும் பிடிச்சிருக்கா....😍


Quote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
15/12/2019 3:51 pm  

சூப்பர் சிஸ்..

நல்லா இருக்கு🙂❤️


ReplyQuote
(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 323
15/12/2019 7:58 pm  

cuteaana kutty love story 😍 😍 😍 

super sis 😍 🤩 🤗 


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: