Forum

அத்தியாயம் : 11  

  RSS

சங்கரேஸ்வரி குருசாமி
(@sankareswari)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 65
05/01/2020 11:55 am  

மண்டபம் முழுவதும் ஆட்கள் நிறைந்திருக்க ஐயர் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்க அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான் இளஞ்செழியன்.

ரத்னா,திருமுருகன் இருவரும் ஜோடியாக நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருக்க,அகிலனோ பரபரப்புடன் பறந்து கொண்டிருந்தான்.

தன் மகளின் வற்புறுத்துதலுக்காக மனமேயில்லாமல் வந்த ஜெயபிரகாஷ் தனக்கும் இந்த திருமணத்திற்கும் சம்மந்தமே இல்லாதது போல் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அவரின் செயலை கண்ட சித்ரா கவலையுடன் அவர் அருகில் வர, "என்னங்க நம்ம பொண்ணு கல்யாணம் நீங்க என்னடானா யாரோ மாதிரி உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க போங்க போய் கெஸ்ட்டை கவனிங்க,சொந்தகாரங்க வேற வந்துருக்காங்க எழுந்திருங்க..."யாருக்கும் கேட்காமல் அமைதியாக கூறியவர் அவரை எழுப்பி விட,

"ஏய் நீங்க எல்லாம் என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க..? என் பொண்ணு கல்யாணம் மாளிகையில நடக்கணும் நீங்க என்னடானா இப்படி சின்ன கட்டடத்துல வச்சி நடத்துறீங்கா..?இதுல என்னையும் வேற வர வச்சிட்டீங்க..." முகத்தை சுழித்துக் கொண்டு சுற்றுபுறம் பார்த்தவாறு கூறினார்.

"ஏன் இவ்வளோ ஆசைப்படுற நீங்களே இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது தானே..?"

தன் மனைவியை முறைத்தவர் எதுவும் சொல்லாமல் விலகி செல்ல தன் மகள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

அதே நேரம் எழிலரசன் தன் தங்கையுடன் மண்டபத்திற்கு நுழைய அவர்களை வாசலிலே எதிர் கொண்ட ரத்னா இன்முகத்துடன் வரவேற்றார்.

"வாம்மா நல்லா இருக்கையா..? அம்மா கூட்டிட்டு வரலையா எழில்..?"

"இல்லம்மா அம்மா நீங்க மட்டும் போய்ட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க..."

"சரி, நீ வாம்மா நாம்ம உள்ளே போகலாம்..."என்றவர் அவளை அழைத்துச் செல்ல எழிலோ திருமுருகனுடன் சேர்ந்து வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான்.

"உன் பேர் என்னமா..?"

"வளர்மதி..."

"நேத்து நைட் வந்துருக்கலாம்ல சரி வா என் மருமகளை காட்டுறேன்..."என்றவர் மணப்பெண் அறை நோக்கி செல்ல, ஐயருக்கு உதவி செய்து கொண்டிருந்தாலும் செழியனின் பார்வை ஒவ்வொரு நொடியும் வாசல் புறம் மட்டுமே இருந்தது.

தன் தாயுடன் பேசியவாறு உள்ளே நுழைந்த தன்னவளை கண்டு மெய் மறந்து நின்றான்.

அவளை இதற்கு முன் புடைவையில் பார்த்திருந்தாலும் ஏனோ இப்போது பச்சை பட்டில் தேவைதையாய் ஜொலிக்க தன்னிலை மறந்து ரசிக்க ஐயரோ அவன் கவனத்தை கலைத்தார்.

"கொஞ்சம் அந்த சந்தனத்தை எடுத்துக் கொடுங்க..."என்க,

"இந்தாங்க ஐயரு..."என்றவன் வேகமாக எடுத்து கொடுத்து மனையை விட்டு இறங்கி அவளை நோக்கி செல்ல, குறுக்கே வந்து நின்றான் அகிலன்.

"டேய் செழியா உங்க அண்ணன் மாலையை எங்கே வச்சே..? வா வந்து எடுத்துக் கொடு..."என்றவன் அவனை இழுத்துச் செல்ல,

"அண்ணா அது அவன் ரூம் கபோர்டல தான் இருக்கு நீங்க போய் பாருங்க எனக்கு முக்கியமான வேலை இருக்கு..."என்றவன் அவள் அறைக்குள் நுழைவதற்குள் செல்ல முயன்றாள்.

மணமகள் அறைக்குள் அருகில் நெருங்க தன் தாயின் முன் அவளை அழைக்கவும் முடியாது இப்போது என்ன செய்வது என தெரியாமல் யோசித்தவாறு நின்றவன், "ஏலே முருகா அந்த டெக்கரேசன் எல்லாம் சீக்கிரம் ரெடி பண்ணு..."என்க, அவன் குரல் செவியில் விழுந்த மறுநொடி திரும்பி பார்த்தாள் வளர்மதி.

ஒரு மாதத்திற்கு அவனை கண்டவள் மனமோ ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள துடிக்க, "என்னமா நின்னுட்டே வா போகலாம்..."என்றவர் அவளை அழைத்துச் செல்ல பார்வையால் அவனிடம் விடை பெற்றாள்.

சுதியை அலங்காரம் செய்ய அவள் அருகில் சித்ரா நிற்க அங்கிருந்த சேரில் அதிகாரமாய் அமர்ந்திருந்தார் இராஜேஸ்வரி (ஜெயபிரகாஷ் தாய்).

"அம்மாடி மருமகளே நேத்து நான் ஊருல இருந்து வரும் போது கொண்டு வந்த நம்ம பரம்பரை நகையெல்லாம் என் பேத்திக்கு போட்டு விடு..."

"ஹ்ம்ம் சரி அத்தை..."என்றவர் அவர் கூறியதை செய்ய,வளர்மதியுடன் உள்ளே நுழைந்தார் ரத்னா.

"அட வா ரத்னா ஆமா யாரு இந்த பொண்ணு..?"

"என் பொண்ணு மாதிரி நம்ம எழிலரசனோட தங்கச்சி..." என்றவர் வளர்மதியை நோக்கி, "இவங்க தான் கீர்த்தியோட பாட்டி..." என்றார்.

அழகாய் சிறு புன்னகை உதிர்த்த வளர்மதி அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவளை வாழ்த்தியவர், "உன் பேரென்னம்மா...?" என்க,

"அவங்க பேர் வளர்மதி..."என்ற சுதிகீர்த்தி புன்னகை முகமாக குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள்.

"சரிம்மா நீ கீர்த்தி கூட பேசிட்டு இரு,எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..."என்ற ரத்னா வெளியே செல்ல, "நில்லுங்க சம்மந்தி நானும் வரேன்..."என்றவாறு அவருடன் சித்ராதேவியும் சென்றார்.

"எழில் அண்ணா தான் உன்ன பத்தி சொன்னாங்க, நீ மகேஸ்வரி ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் படிக்கிறையா,நானும் அங்கே தான் படிச்சேன் என்ன பார்த்துருக்கையா..? செவன் மந்த் முன்னாடி அங்கே நடந்த தீ விபத்துல என் பார்வை போச்சு..."

"சரி நல்ல நேரம் அதை ஏன் பேசிட்டு சீக்கிரம் ரெடி பண்ணுங்க என் பேத்தியை..."என்ற இராஜேஸ்வரி பாட்டி அருகில் இருந்த பியூட்டிசனிடம் கூறினார்.

அதன் பின் வளர்மதியும் பியூட்டிசனுக்கு உதவி செய்து சுதியை அலங்கரிக்க, சிறு முகசுழிப்பு கூட முகத்தில் இல்லாமல் புன்னைகை முகமாக,அமைதியாக பண்புடன் பெரியவர்களுக்கு மரியாதையை கொடுத்து பேசும் வளர்மதியை கண்டவாறு இராஜேஸ்வரி பாட்டி.

அதே நேரம் வெளியே ஐயர் மணமக்களை அழைத்து வர சொல்ல,அகிலனும் எழிலும் சென்று வேந்தனை அழைத்து வந்து மனையில் அமர வைத்தனர்.

மணமகளை அழைத்து வர சொல்ல தன்னவளில் வருகைக்காக ஆவலாய மனையில் அமர்ந்து காத்திருந்தான் யாழ்வேந்தன்.

வளர்மதி கீர்த்தியை அழைத்து வர இளஞ்செழியனின் பார்வையோ இம்மியும் நகராது மதியையே பார்க்க,வேந்தனின் பார்வையோ கீர்த்தியின் மீது இருந்தது.

இளாவின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்த மதி முகம் சிவக்க வெகட்கத்துடன் தலை குனிந்து கீர்த்தியை அழைத்து வர அதை கண்ட இராஜேஸ்வரி பாட்டிக்கு யார் மணப்பெண் என்றே ஒரு நொடி குழம்ப ஆரம்பித்தார்.

அதன் பின் கீர்த்தியை மனையில் அமர வைத்து மதி நகர்ந்து செல்ல அவள் கை பிடித்து தடித்து தன் அருகில் நிறுத்துக் கொண்டார் ரத்னா.

"எங்கே போற இங்கயே நில்லு,நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தி தான்..."என்க, அதை கேட்டு எல்லையில்லா சந்தோஷத்தில் மிதந்தாள் வளர்மதி.

"அம்மா தெரிஞ்சி சொல்லுதா..?தெரியாம சொல்லுதா..? எப்படியோ சரியா சொன்னதே அதே போதும்..." மனதிற்குள் நினைத்த செழியன் மதியை பார்த்து கண்ணடிக்க,அவன் பார்வையை தவிர்த்து தலை குனிந்தாள்.

ஐயர் திருமாங்கல்யத்தை எடுத்து தர அதை வாங்கிய வேந்தன் தன்னவளில் சங்கு கழுத்தில் முதல் முடிச்சை போட்டவன் அடித்த முடிச்சை போட போக, "ஒரு நிமிஷம் நில்லு கண்ணா..."என்ற ரத்னா, "அம்மாடி வளரு நீ வந்து இந்த ரெண்டு முடிச்சையும் போடு..."என்றார்.

"நானா நான் எதுக்கு..."

"பொண்ணோட நாத்தனார் தான் போடனும் நீ வேந்தனுக்கு தங்கச்சி மாதிரி தானே அதான் உன்ன போட சொல்லுறேன்..."

அங்கிருந்த அனைவரும் அதற்கு ஒத்துக் கொள்ள அவள் பார்வையோ இளாவை கெஞ்சுதலுடன் பார்க்க அவனோ முறைத்தவாறு நின்றான்.

"வளரு என் தயங்குற கட்டு..."எழில் கூற சரி என்றவள் நாத்தனார் முறைக்கு மற்ற இரண்டு முடிச்சிட,அனைவரும் அர்ச்சதை தூவ பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் வேந்தன் மற்றும் கீர்த்தியின் வாழ்க்கை இனிதே ஆரம்பமானது.

"என் அண்ணனை அண்ணனேன்னு சொல்லாதே மதி..."அடிக்கடி கூறும் இளாவின் சொல் இப்போது ஒலிக்க தன்னையே நொந்தவாறு முடிச்சிட்டு நிமிர்ந்த மதி இளாவை காண அவனோ கோவத்துடன் விலகி சென்றான்.

அதன் பின் அகிலன் வேந்தனின் கரம் பற்றி தன் மைத்துணன்,தங்கை இருவரும் அழைத்துக் கொண்டு அக்கினியை மூன்று முறை வலம் வந்து தன் அண்ணனின் கடமையை முடித்தான்.

மூத்தவர்களாக நாராயணன்,இராஜேஷ்வரி இருவரிடமும் முதலில் ஆசிர்வாதம் வாங்க,அதன் மற்ற அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினர்.

வந்தவர்கள் அனைவரும் பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்த தன்னவளின் கரம் பற்றி அதை சந்தோஷமாக நன்றி கூறி வாங்கிக் கொள்ள அவன் குரலில் இருந்த மகிழ்ச்சியை மட்டுமே கீர்த்தியால் உணர முடிந்தது.

கீர்த்தியின் முகத்தின் இருந்த கவலையை அறிந்தவன் அவளை தோளோடு அணைத்து, "கொஞ்சம் சிரி பொண்டாட்டி அப்பறம் நம்ம கல்யாண ஆல்பத்தை பார்த்து கோவப்பட கூடாது..."என்றவன் பின் மெல்ல ஏதேதோ பேச மெல்ல புன்னகைக்க ஆரம்பித்தாள்.

அதன் பின் வந்தவர்கள் உணவு உன்ன செல்ல, "வளரு வா நீ வந்து சாப்பிடு நான் உன்ன வீட்டுல விட்டுட்டு வந்துறேன்..."என்ற எழில் தன் தங்கையை அழைத்துக் கொண்டு உணவு உண்ணும் இடத்திற்கு சென்றான்.

அவளை பந்தியில் அமர வைத்து இளா,அகிலன் இருவருக்கும் பரிமாறிக் கொண்டிருக்க அவர்களுக்கு உதவி செய்ய சென்றான்.

வேலையாட்கள் அனைவரும் பரிமாற அவர்களுடன் தன் மகன் வேலைக்காரன் போல் வேலை செய்வதை கண்ட ஜெயபிரகாஷ் அவனை கண்டு முறைத்தவாறு யாரிடமும் சொல்லாமல் தன் வீட்டுக்குச் சென்றார்.

அவனோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சந்தோஷமாக வேலை செய்ய அவன் கம்பெனி ஸ்டாப் அனைவரும் அவன் செய்கையை கண்டு வியந்தனர்.

பறிமாறியவாறு மதியின் அருகில் இளா வர அவனை கண்டவள், "ஐ ஆம் சாரி இளா..."என்றாள்.

அவனோ அதை கண்டு கொள்ளாமல் விலகி செல்ல மனமேயில்லாமல் சிறிது உண்டு விட்டு முதல் ஆளாக எழுந்து சென்றாள்.

வாஷ்ரூம் சென்று திரும்பி வெளியே வர தன் முன் நின்ற இளாவை கண்டவள் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள அதன் பின்னே நிம்மதியாக உணர்ந்தாள்.

"சாரி இளா அத்தை அப்படி சொல்லுவங்கன்னு நான் நினைக்கல..."

"பரவாயில்லை விடு சரி நாளைக்கு ஈவினிங் நான் கிளம்புறோம்,மார்னிங் நம்ம வழக்கமா மீட் பண்ணுற பார்க்குக்கு வந்துரு..."என்றவன் வெளியேற தன் அண்ணனை நோக்கி சென்றாள்.

அதன் பின் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப வாசலில் நின்றிருந்த இளாவிடம் பார்வையால் விடை பெற்றாள் வளர்மதி.

விருந்தினர் அனைவரும் வாழ்த்து கூறி கிளம்ப ஆரம்பிக்க ரத்னா,திருமுருகன் அருகில் வந்த சித்ரா, "சம்மந்தி நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு போகலாம் வாங்க..."என்க,

அவர்களோ எதையோ நினைத்து வர தயங்க தன் மகன் செய்த செயலை நினைத்த இராஜேஷ்வரி பாட்டி, "மருமகளே எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு போகலாம்,எப்படியும் விருந்துக்கு உன் பொண்ணு வர தானே போறா,இப்பவே ரெம்ப நேரமாச்சு இன்னும் புகுந்த வீட்டுல வேற சடங்கு செய்யணும்..." தன் மருமகளிடம் கூறினார்.

மணமக்கள் இருவரையும் வேந்தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு செல்ல இதுவரை அறியாத புது சொந்தங்கள்,புது இடம் அனைத்தையும் உணர்ந்த சுதிகீர்த்தி தன்னவனின் கரம் பற்றி வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.

செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் செய்ய ஒவ்வொரு நொடியும் அவளுக்கு துணை நின்று வேந்தன் காக்க, மறுபுறம் அவளை எண்ணி குறை கூறும் சொந்தகளின் ஒரு விதமான பேச்சிலிருந்து காத்தனர் ரத்னா,திருமுருகன்.

வந்த விருந்தினர் அனைவரும் மாலை நேரமே கிளம்பி செல்ல,கீர்த்தியின் குடும்பமும் கிளம்ப ஆரம்பித்தனர்.

இருள் சூழ கீர்த்தியை அலங்கரித்த சித்ராதேவி அவளுக்கு அறிவுரை கூற, "கவலைபாடதீங்க சம்மந்தி கீர்த்தியை என் பொண்ணு மாதிரி பார்த்துகிடுவேன் அவளுக்கு இந்த வீட்டுல எந்த குறையும் இருக்காது..."என்றவாறு ரத்னா வர,

"எனக்கும் தெரியும் சம்மந்தி நீங்க அவளை நல்லா பார்த்துக்குவீங்க இருந்தாலும் பெத்தவங்க முறைக்கு அவளுக்கு அறிவுரை சொல்லணும்ல..."

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, "அம்மா வாங்க கிளம்பலாம்..."என்ற அகிலனின் குரலை கேட்டு வெளியே வந்தனர்.

அதன் பின் அனைவரும் கிளம்ப சிறிது நேரம் தன் மருமகளிடம் பேசிய ரத்னா அவளை அழைத்துக் கொண்டு வேந்தனின் அறை நோக்கி செல்ல,அதே நேரம் தன்னவளில் வருகைக்காக ஆவலாய் காத்திருந்தான்.

தன் தாய் அழைத்து வருவது கண்டவன் அவர்கள் அருகில் வந்து, "நீங்க போய் ரெஸ்ட் எடுங்கம்மா..."என்றவன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

டோரை லாக் செய்தவன் அவளை படுக்கையில் அமர வைக்க அவன் கையை இறுக பற்றியவள் தோளில் தலை சாய்ந்தாள்.

"என்னாச்சும்மா அசைதியா இருக்கா..?,ரெஸ்ட் எடுக்குறையா..?"

அவளோ மறுப்பாய் தலை அசைக்க, "அப்போ உன் மனசுல என்ன இருக்கு..." என்றவாறு அவள் தோளோடு அணைத்திருந்த கையை மெல்ல இறக்கி இடையில் அழுத்தி அவள் கவனத்தை கலைக்க முயன்றாள்.

தன் மேனியில் எல்லை மீறும் அவன் பரிசத்தால் அது தந்த வெம்மையில் அவன் நெஞ்சில் வைத்திருந்த முகத்தை இன்னும் அவனோடு சேர்ந்து அழுத்த...

"இப்படியே உன்னோட இந்த முகத்தை பார்த்துகிட்டே என் வாழ்கை முழுக்க கடைசி நிமிஷம் வரைக்கும் உன் கூட வாழனும் சுதி ..."என்றவாறு அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள அவனது இந்த செய்கையில் தடுமாறியவள் பின் அவன் நெஞ்சில் தன் முகத்தை புதைத்தாள்.

"உனக்கு இதுக்கு சம்மதம்மா..?" அவள் விருப்பத்தை அறிய நினைக்க,

அவளோ பதில் கூறாது அவன் நெஞ்சில் இன்னும் அழுத்தி புதைய அதை சம்மதமாக நினைத்தான்.

அவளை இழுத்து படுக்கையில் போட்டு அவள் மேல் படர்ந்தவன் கைகளை நகர விடாதவாறு இறுக்கமாக பற்றியவன் இமைக்காமல் அவளது விழிகளை பார்க்க அவன் பார்வை வீச்சின் தாக்கத்தை உணர்ந்தவள் தன் முகத்தை திரும்ப முயல அவள் செவ்விதழை சிறை செய்தான்.

அவள் இதழ் தேனை பருகி தன் தாகம் தீர்த்தவன் முகம் முழுவதும் முத்தமிட்டு தன் தவிப்பை உணர்த்தி கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் வாசத்தை நுகர்ந்தான்.

"சுதி..." கிறக்கமாய் அழைத்து அவள் காதுமடல் தீண்டி,கன்னத்தில் புதைந்து,மெல்ல மெல்ல அவள் இதழில் தொலைந்து போனான்.

அவன் சிகைக்குள் கை கோர்த்து வருட அவள் மத்தியில் தொலைந்து போய் அவளை முழுவதும் ஆட்கொள்ள துடிக்க,அவளும் அவனுக்கு இசைந்து கொடுக்க அவன் இதழ்கள் அவள் மேனியில் தீண்டும் வெம்மையில் அவளும் மெல்லமெல்ல உருக ஆரம்பித்தாள்.

அவள் பெண்மையை முழுவதும் உணர்ந்து தன் வசப்படுத்தி கொண்டு அவள் தேவையை பூர்த்தி செய்து கூடல் முடிந்த பின் விட்டு விலகியவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு இதமாக நெற்றியில் இதழ் பதித்து தன்னோடு சேர்த்து அணைத்தான்.

அவன் வெற்று மார்பில் முத்தமிட்டு முகம் புதைக்க அவனது கைகளோ அவள் மேனியில் மறுபடியும் வலம் வர வெட்கத்தில் நெளிந்தவளை பார்த்தவன் அவள் இடையோடு சேர்த்து அணைத்துக் கொள்ள நீண்ட நாள்களுக்கு பிறகு இருவரும் நிம்மதியாக தங்கள் கவலைகளை மறந்து உறங்கினர்.


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: