Forum

chinnanchiru Kannasaivil - 10  

  RSS

சங்கரேஸ்வரி குருசாமி
(@sankareswari)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 65
10/12/2019 12:03 pm  

சுதியின் அனுமதியின்றி அவளின் அறை கதவினை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த வேந்தன் அவள் நின்ற கோலத்தை கண்டு திகைத்தான்.

கண்ணணுக்காக ஏங்கி காத்திருந்த மீராவை போல் சுவரில் தலை சாய்ந்து ஜன்னல் கம்பியை பற்றி உயிரற்ற ஜடம் போல் நின்றிருந்தாள்.

 

"சுதி..." உருகிய குரலில் அழைத்தவன் அவள் அருகில் வர, சிறு ஓசையிலே யார் குரல் என்பதை அறிந்தவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு திரும்பினாள்.

 

"யாழ் நீங்க எப்படி இங்கே வந்தீங்க..?என்னாச்சு இது அண்ணா ரூம் இல்ல..." திடீரெண்டு அவன் வருகையை எதிர்பாராமல் தடுமாறி உரைக்க,

 

"நான் உன்னை தேடி தான் வந்தேன்..."என்றவன் அவள் அருகில் வந்து நின்றான்.

 

அவன் தனக்கு வெகு அருகில் இருப்பதை உணர்ந்தவள் சற்று பின் நகர, "ஐ லவ் யூ சுதி..."என்றவாறு அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து தோளோடு சேர்த்து அணைத்தான்.

 

என்றும் மாறாத அவன் வாசமும் இதமான அணைப்பும் அவன் சொல்லாமலே யார் என்பதை உணர்த்த, இதுவரை குழம்பிக் கொண்டு இருந்தவள் இப்போது குழப்பம் தீர அவனிடமிருந்து தன் பலம் கொண்டு விலகியவள் அவன் கன்னத்தை பதம் பார்த்தாள்.

 

அவன் அடித்த அடியை சுகமாய் வாங்கியவன், "ஐ ஆம் சாரி சுதி..."என்க, தன் கோபம் தீரும் வரை மாறி மாறி அறைந்தவள் ஓய்ந்து போய் படுக்கையில் அமர்ந்தாள்.

 

"ஏன்டா இப்படி பண்ணுனா நான் எத்தனை தடவை கேட்டேன் நீ யாருன்னு சொல்லிருக்கலாம்ல..."கலங்கியவாறு கத்த,

 

"எனக்கு நீ வேணும்ன்னு நினைச்சேன். நான் யாருன்னு சொன்னா நீ என் கிட்ட கூட வர மாட்டே அதான் சொல்லலை. என்னை மன்னிச்சிரு சுதி என்னால நீ இல்லாம இருக்க முடியாது. நான் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறேன். நீ என்ன சொன்னாலும் செய்யிறேன். ஆனா இனிமே ஒரு நொடி கூட உன்னை விட பிரிய மாட்டேன்..." அவள் முன் மண்டியிட்டு தன் மனதில் இருப்பதை சுதியின் கரம் பற்றி தவிப்புடன் கூறினான்.

 

வெடுக்கென்று தன் கையை எடுத்தவள் அவன் சட்டை காலரை கொத்தாக பற்றி, "அன்னைக்கு ஏன்டா அப்படி பண்ணுனே நான் உன்கிட்ட பேசினா விதம் தப்பு தான் அதுக்காக நீ ச்சே..."என்றவாறு அவனை விட்டு விலகி திரும்பி நிற்க,

 

"அதான் நான் வந்துட்டேன்னே உனக்கு எந்த ப்ராபளம் வரவிடலையே..."

 

"பேசாதே சப்போஸ் நீ வராம இருந்திருந்த இந்த நேரம் நான் உன் முன்னாடி இருந்திருக்க மாட்டேன்டா..." அன்று நடந்த அனைத்தும் கண் முன் தோன்ற அழுகையுடன் மடிய அவளை தன்னோடு தாங்கிக் கொண்டான்.

 

தன் நெஞ்சுக்குள் புதைந்து சாய்ந்து அழும் தன்னவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.

 

"நான் உன் மேல கோபமா இருப்பேன்னு நீயே எப்படி முடிவு பண்ணலாம். இந்த ஒன்றரை வருஷமா உன்னை நினைக்காதே நொடியே இல்ல. நான் அங்கே இருந்த ஒவ்வொரு நிமிஷமும் என் கண்ணு உன்னை மட்டும் தான் தேடிட்டு இருந்தது. ஆனா இப்போ..."என்றவள் எதையோ யோசித்து அவனிடம் இருந்து பதறி விலகினாள்.

 

அவளும் தன்னை விரும்புகிறாள் என்ற தித்திப்பில் இருக்க திடீரெண்டு அவளது விலகலை எதிர்பாரதவன் புரியாமல் விழித்தான்.

 

"நீங்க முதல வெளியே போங்க உங்களை யாரு இங்க வரச் சொன்னா..?ப்ளீஸ் இங்கிருந்து போங்க நான் யாரையும் பார்க்க விரும்பல..."கத்தியவள் அவனுக்கு தன் முகத்தை காட்டாமல் அழுது கொண்டு திரும்பி நிற்க,

 

சிறிது நேரத்திற்கு முன் அவள் தன்னிடம் பேசிய ஒருமை பேச்சு இப்போது யாரிடமோ பேசுவது போல் அவள் பேசிய பேச்சுகள் அனைத்தும் சேர்ந்து கோபத்தை கிளப்ப அவளை இறுகப் பற்றி தன் புறம் இழுத்தான்.

 

"என்னடி நினைச்சிக்கிட்டு இருக்கேன் நீ..?நீயும் உங்க அப்பா மாதிரி வெளியே போடா நாயேன்னு சொல்லுறையா..?உங்க பேச்சை கேட்கணும் எனக்கு ஒரு அவசியமும்மில்லை. இங்கே நான் மட்டும் வரல என் அப்பா,அம்மாவும் வந்திருக்காங்க. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாதுடி இப்போ நீ அவங்க கிட்ட பேசணும் என் கூட வர்ற..."என்றவாறு அவளை இழுக்க,

 

"ப்ளீஸ் யாழ் என்னை விடுங்க நான் வரல..." என்றவள் அவனிடம் இருந்து போராடி விலக முயல,

 

"ஏன்டி என்னை கொல்லுற நான் உயிரோட இருக்கணும் நினைச்சா என் கூட வா..."என்க, அதன் பின் அமைதியாக அவனுடன் செல்ல அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

 

"இப்போ உன் மாமியார்,மாமனார் உன் முன்னாடி தான் இருக்காங்க கூப்பிடு..."

 

"என்னால முடியாது..." தவிப்புடன் கூற,

"கூப்பிடு..." என்றவாறு அவளை தோளோடு சேர்த்து இறுக்க அதிலே அவன் கோபத்தை உணர்ந்தவள், "மாமா..!அத்தை..! " என்றாள்.

 

சுதியின் அழைப்பு அவள் புறம் திரும்பச் செய்ய முதலில் அவள் நிலையை கண்டு திகைத்தவர்கள் பின் பரிதவித்தனர்.

 

அவர்கள் அருகில் அழைத்து வந்த வேந்தன், "அம்மா, அப்பா இவ தன் சுதிகீர்த்தி உங்க மருமக,நான் உங்க கிட்ட முன்னாடியே சொல்லாதது தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க..."என்றவன் தன் பெற்றோரிடம் கெஞ்சும் பார்வையில் மன்னிப்பு வேண்டினான்.

 

அவர்களோ அதை கண்டு தன் செல்ல மகனை முறைத்தவாறு, "இனிமே எங்ககிட்ட நீ எதுவும் பேசாதேடா, ஏன்டா முன்னாடியே சொல்லலை..." கோபத்துடன் கூறினார்.

 

அவளோ அதை தவறாக நினைத்து, "அத்தை அவர் மேல எந்த தப்புமில்லை..."என்க,

 

தன் மகனுக்கு துணை நிற்கும் அவள் செயலை கண்டவர் மனதிற்குள் சந்தோஷப்பட்டாலும் அவள் தந்தை கூறிய சொற்கள் நினைவுக்கு வந்து கலங்கச் செய்தது.

 

"சரி நாங்க கிளம்புறோம்..."என்ற ரத்னா அவள் தலையை வருடி விட அவர்கள் இருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

 

"சம்மந்தி உங்க மருமகளை எப்போ கூட்டிட்டு போறீங்க..." தயங்கி கொண்டு சித்ரா கேட்க, அதை கேட்ட கீர்த்தி முள்ளின் மேல் நிற்பது போன்று தவித்தாள்.

 

வேந்தனின் பெற்றோர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து என்ன சொல்வது என தெரியாமல், "பெத்தவர் விரும்பமில்லாமல் எப்படி..."என்க,

 

தன் தந்தை பேசிய வார்த்தைகள் நிச்சியமாக இவர்களை காயப்படுத்திருக்கும் என்பதை உணர்ந்தவள், "எங்க அப்பா என்ன பேசுனாங்கன்னு எனக்கு தெரியாது ஆனா அது உங்க மனசை ரொம்ப கஷ்டப்படுத்திருக்குன்னு தெரியும். எனக்காக எங்க அப்பாவை மன்னிச்சிருங்க அத்தை ப்ளீஸ்..."கண்ணீருடன் கூற,

 

அவளின் கண்ணீர் அவர்களை உருகச் செய்ய, "என்னமா நீ போய் கண் கலங்கிட்டு, முதல கண்ணை துடை அடுத்த மூகூர்த்தததுல உங்களுக்கு கல்யாணம் சரியா இப்படி அழுதுக்கிட்டு இருக்காதே..."என்க, அங்கிருந்த அனைவரும் சந்தோஷமாக உணர கீர்த்தியோ அதை கேட்டு பெரும் அதிர்ச்சியில் வேந்தனின் கையை இறுக பற்றினாள்.

 

அவள் அதிர்ச்சியை கண்டு மனதிற்குள் ரசித்தவன் அவள் கையை ஆதரவாய் பற்றினான்.

 

அதன் பின் மூவரும் கிளம்ப அதுவரை விடாது தன்னவள் கையை பற்றிக் கொண்டிருந்தவன் இப்போது பிரிக்க அவளது முகம் மாறுவதை கண்டு அழுத்தமாக இறுகப் பற்றினான்.

 

அவள் மனதில் இருப்பதை எப்படி அறிந்தானோ, "அத்தை நான் சுதி கிட்ட கொஞ்சம் பேசணும் அவளை கூட்டிட்டு போகலாம்மா..."என்றவாறு தன் மாமியாரிடம் கேட்க அவரோ என்ன சொல்வது என தெரியாமல் தன் மகனை பார்த்தார்.

 

அவனோ சம்மதம் தெரிவிக்க, "அம்மா,அப்பா வாங்க நான் உங்களை வீட்டுல விடுறேன்..."என்ற அகிலன் வேந்தனின் பெற்றோரை அழைத்துச் செல்ல,அவனோ பார்வையால் தன் நண்பனுக்கு நன்றி கூறி தன்னவளை அழைத்துச் சென்றான்.

 

அவர்கள் அனைவரும் செல்ல அதை கண்ட சித்ரா ஒரு புறம் தன் மகளின் வாழ்க்கையை எண்ணி சந்தோஷமாகவும், மற்றொரு புறம் தன் கணவரின் செய்கையை எண்ணி கலக்கமுடன் அப்படியே சோபாவில் அமர்ந்தார்.

 

அருகிலிருந்த பார்க்குக்கு அவளை அழைத்துச் செல்ல அவனது கையை பற்றிக் கொண்டு அமைதியாக வந்தாள்.

 

ஓர் இடத்தில் அமர வைத்து அவள் அருகில் அமர்ந்தவன், "சுதி இப்போ சொல்லு உன் மனசுல என்ன இருக்கு..?நீ எதை நினைச்சு பயப்பிடுற..? எதுக்காக இப்படி எல்லார் மனசையும் நோகடிக்கிற..?"என்க,

 

"ப்ளீஸ் இந்த கல்யாணம் வேண்டாம் என்னால உங்களுக்கு கஷ்டம் தான். ஏற்கனவே நான் ரொம்ப நொந்துட்டேன் இதுல என்னால உங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கு கஷ்டம் தான்..."

 

"நீ இப்படி சொல்லுவேன்னு தெரிஞ்சி தான் என் அம்மா,அப்பாவை பார்க்க வைச்சேன். அவங்களே சம்மதம் சொல்லிட்டாங்களே அப்பறம் என்னமா உன்னை எதுவும் சொல்லிருவாங்கன்னு நினைக்கிறையா..?"

 

"இல்ல..."

 

"அப்பறம் என்னமா..."

 

"நான் உங்களை பார்க்கணும்..."என்றவாறு அவன் முகத்தை தன் விரலால் வருட,

 

இதயமே பலமடங்கு வலியுடன் துடிதுடிப்பது போல் உணர்ந்தவன் அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவன் துடிப்பின் ஓசை அவளும் அறிய அவன் நெஞ்சில் கை வைத்து மெல்ல வருடினாள்.

 

"சீக்கிரம் நீ என்னை பார்ப்பே அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உனக்கும் இருக்கணும், நீ நாளையில இருந்து ஆபீஸ் வர்றே உன் கூட எப்பவும் நான் துணையா இருப்பேன். என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கிடணும்.  அப்படி உனக்கு சம்மதம்ன்னா நாளைக்கு ஆபீஸ் வர்ற உன்னை முதல் தடவை லண்டல வச்சி பார்த்தே அதே கீர்த்தியா நீ வரணும் ஆசைப்படுறேன்..."என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டில் விட மறுநாளுக்கு காத்திருந்தான்.

 

அன்று இரவு முழுவதும் தவித்தவன் மறுநாள் விடிந்ததும் சீக்கிரமே கிளம்பி அலுவலகம் செல்ல அங்கு எழிலரசனிடம் நடந்த அனைத்தையும் கூறினான்.

 

"என்னடா இது நம்ம எம்.டியா அப்படி பேசுனாரு..? அகிலனை வேற அடிச்சாரா..?"

 

"நம்ம எம்.டி இல்லை அப்போ அவரு சுதியோட அப்பா..."என்றவாறு தன்னவளுக்காக காத்திருக்க அகிலன் மட்டும் வருவதை கண்டான்.

 

சுதி வராதது அவனுக்கு ஏமாற்றத்தை அழிக்க, "டேய் நான் சொல்லுறது முன்னாடி உன்னை யாரு வரச் சொன்னா..? நல்லா அவமானப்பட்டையா..?"என்க,

 

"சாரிடா மச்சான் என்னால உனக்கு அடி..."என்றவன் சிரித்தவாறு அவன் தாடையை பிடித்து திரும்பி பார்க்க,

 

 

"என்னடா நக்கலா..."என்றவாறு அவன் வயிற்றில் குத்த அவர்கள் இருவரின் செய்கையை கண்டு தலையில் அடித்துக் கொண்டு நின்றான் எழிலரசன்.

 

"உங்க ரெண்டு பேருக்கும் வெக்கமே இல்லியா..?அவர் நேத்து அந்த கேள்வி கேட்டுருக்காரு. உன்னை அந்த அடி அடிச்சிருக்காரு நீங்க என்னடானா எதுவும் நடக்காத மாதிரி பேசிட்டு இருக்கீங்க..?"

 

"பெத்தவங்கன்னா அப்படி தான் இருப்பாங்க அதெல்லாம் கொஞ்சம் நாளுல சரியாகிடும்..?சரி வா எழில் வந்து வேலையை பாரு அப்பறம் கல்யாண வேலை வந்துரும் அதை வேற கவனிக்கணும்..."என்ற அகிலன் எழிலை அழைத்துக் கொண்டு செல்ல,

 

அவனோ சந்தோஷமாக அகிலனின் காரினை நோக்கிச் செல்ல அவன் நினைத்தது போலவே அதில் அமர்ந்திருந்தாள் சுதிகீர்த்தி.

 

"வா சுதி..."என்றவன் அவளை அழைக்க,

 

"நான் உங்க கிட்ட பேசணும்..."என்க, அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

 

"அப்பா நேத்து ரொம்ப திட்டிட்டாருன்னு அண்ணன் சொன்னான் எல்லாம் எனக்காக தான் தானே ஐ ஆம் சாரி, நேத்து அப்பா கிட்ட நைட் பேச ட்ரை பண்ணுனேன் அவர் என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல கோபமா இருக்காரு. அண்ணன் என்னடானா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிடிச்சிட்டான். அப்பா இல்லாம எப்படி..." தவிப்புடன் கூற,

 

"என் நண்பன் எது பண்ணுனாலும் அதுல கண்டிப்பா எதாவது ஒரு நன்மை இருக்கும். உங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவாரு. நீ கவலைப்படமா இரு..." என்றவன் அதன் பின் சிறிது நேரம் ஏதேதோ பேசி அவளை சிரிக்க வைக்க,

 

"சரி லேட்டாகிருச்சி வா ஆபீஸ் போகலாம்..."என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு செல்ல அதற்குள்ளாகவே அகிலன் அனைவருக்கும் இவர்கள் திருமணத்தை பற்றி கூறி இருக்க அனைவரும் வாழ்த்தையும் இருவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர்.

 

சுதியை பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் இருந்த தவிப்பு இப்போது இல்லாம போக சந்தோஷமாக மனநிறைவுடன் வாழ்த்து கூறினான் எழிலரசன்.

 

அதன் பின் அவரவர் வேலையை பார்க்கச் செல்ல, "எழில் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்..."என்ற கீர்த்தி சற்று தயங்க,

 

"எதுவும் உதவி வேணுமா மேடம்..?"

 

"ஹ்ம்ம் ஆமா நான் உங்களை இனிமே அண்ணன்னு கூப்பிடட்டா..."

 

"இதை என் கிட்ட கேட்கணும் அவசியமே இல்லை. உங்களுக்கு எப்படி கூப்பிடணும் தோணுதோ அப்படியே கூப்பிடுங்க. நீங்களும் எனக்கு வளர் மாதிரி தான்..."

 

"வளரா அது யாரு என்ன பண்ணுறாங்க..?"

 

"அவ என் தங்கச்சி மகேஸ்வரி ஆர்ட்ஸ் காலேஜில பைனல் இயர் படிக்கிறா..."

 

"நானும் அங்கே தான் பி.ஜி படிச்சேன் அப்போ தான் எனக்கு பார்வை..." கூறி முடிக்கும் முன்னே,

 

"சரி ஓகே எப்போ ட்ரீட் தரப் போறீங்க..?"என்ற எழில் பேச்சை மாற்ற அதன் பின் தோழர்கள் மூவரும் ஏதேதோ பேச, கீர்த்தி மட்டும் எதையோ யோசித்தவாறு நின்றாள்.


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: