Forum

Chinnanchiru Kannasaivil - 6  

  RSS

சங்கரேஸ்வரி குருசாமி
(@sankareswari)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 65
30/11/2019 9:33 am  

பொறுமையின்றி கோபமாக கத்திக் கொண்டிருந்த அகிலனின் முன் என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான் பிரதாப்.

"உன்னை தான் கேட்குறேன் சொல்லு எப்படி நம்ம இந்த கான்ட்ராக் எடுக்க போறோம்ன்னு அந்த கம்பெனிக்கு தெரியும்..?,நம்ம கொடுக்க போற கொட்டேஷனோட மதிப்பு அவனுக்கு எப்படி தெரியும்...?"

"சார் எனக்கு எதுவும் தெரியாது..."

"நீயும் நானும் சேர்ந்து தானே ரெடி பண்ணுனோம். என்னை மீறி அது போகல அப்போ நீ தானே..?"

"சத்தியமா இப்படி ஒரு காரியத்தை நான் என்னைக்கும் செய்ய மாட்டேன் சார்..."

"அப்போ நான் தான் அவன் கிட்ட கொடுத்தேனா..?"

"ஐயோ நான் அப்படி சொல்லலை சார்..."

"இன்னும் ஒன் ஹவர்ல எப்படி அவங்க அந்த டென்டரை எடுத்தாங்கன்னு தெரிஞ்சே ஆகனும் அப்படி மட்டும் தெரியல நீ அடுத்த நிமிஷமே இந்த வேலையை விட்டு போகணும்..."

"சார் ஒன் ஹவர்ல எப்படி..." பயந்து தயங்கி பிரதாப் கூற, அவனை எரித்து விடும் பார்வை பார்த்தான் அகிலன்.

அவனது இந்த உஸ்ன பார்வையில் நடுங்கியவன், "கடவுளே இவர் கிட்ட இருந்து என்னை காப்பாத்தேன்..."மனதிற்குள் நினைத்துக் கொண்டு செல்லவா வேண்டாமா என்ற யோசனையுடன் நின்றான்.

அவன் பையலை பிடித்துக் கொண்டு அப்படியே நிற்பதை கண்ட அகிலன் கோவமாக, "இன்னும் ஏன் இங்கையே.." கத்தி முடிப்பதற்குள் டோரை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் எழிலரசன்.

"அப்பாடா ஒரு வழியா இவர் வந்து காப்பாத்திடாரு...." மனதிற்குள் நினைத்தவாறு எழிலிடம் ஒரு நன்றி பார்வையை வீசி விட்டு அங்கிருந்து வெளியேறினான் பிரதாப்.

அவன் சென்றதும் கோபத்துடன் இருந்த தன் நண்பனை நெருங்கியவன் அருகிலிருந்த நீரினை எடுத்து அவனிடம் நீட்டினான்.

அவனோ அமைதியுடன் அதை வாங்கி பருக, "என்னாச்சு அகில் ஏன் இவ்வளோ கோபம்..."என்றவாறு அவனை அழைத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர வைத்து அவன் அருகில் அமர்ந்தான்.

"ஒரு கவர்மெண்ட் கான்ட்ராக் ஒன்னு நம்ம கையை மீறி அந்த ரீஜென்ட் கார்மெண்ட்ஸ்க்கு போயிருச்சு...இது மட்டும் அப்பாக்கு தெரிஞ்சா அவர் என்னை பத்தி என்ன நினைப்பாரு, அவர் என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்திருக்காரு நான் என்னடானா இப்படி பண்ணி வச்சிருக்கேன்..."

"சரி விடு அகில் இது இல்லைன்னா வேற இதுக்கு போய் இப்படி டென்ஷன்னாகாதே அது உன் உடம்புக்கு தான் கெடுதலு உன் திறமையை பத்தி எம்.டிக்கு நல்லாவே தெரியும்..."

"ஆனா இது பிரதாப்க்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும் நாங்க தான் அந்த கொட்டேஷன் கூட ரெடி பண்ணுனோம். எப்படி எங்களை மீறி போச்சுன்னு தெரியல..."

"போனது போனது தான் அதையே மறுபடியும் யோசிக்காதே வேற வேலைய பாரு..." என்றவாறு அவனது இருக்கையில் அமர வைத்து வெளியேறினான் எழிலரசன்.

எழில் சென்றதுக்கு பிறகே தான் அதிகமாக பிரதாப்பிடம் கோபபட்டதை உணர்ந்தவன் அவனுக்கு அழைத்து மன்னிப்பு வேண்ட அதன் பின்னே சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

தன் இருக்கையில் வந்து அமர்ந்த எழிலின் மனதிலோ அகிலன் கூறிய வார்த்தையே மீண்டும் ஒலிக்க யாரோ ஒருவன் கம்பெனிக்கு துரோகம் செய்வதாய் தோன்ற அதை இப்போதே அறிய முயன்றான்.

பிரதாப்பை அழைத்து கொட்டேஷன் ரெடி பண்ணும் போது நடந்த அனைத்தையும் விசாரித்தவன் அடுத்தநொடி தன் முன்னிருந்த கணினியில் அகிலனின் அனுமதியின்றி அவன் அறையில் இருந்து சிசிடீவி கேமிராவை ஆன் பண்ணினான்.

"சார் எம்.டி ரூமையே செக் பண்ணப் போறீங்களா..?,கொட்டேஷன் என் கையில தானே இருந்தது..."

"எம்.டி ரூம்ல வச்சி தானே நீ ரெடி பண்ணுனா அந்த கொட்டேஷன்.?,அப்போ அங்கிருந்த தான் எடுத்திருக்கணும்..."என்றவனோ அகிலனின் அறையில் நடந்த அனைத்தையும் பூட்டேஜில் தேடினான்.

ஆபீஸ் முடிந்து அனைவரும் கிளம்பும் நேரம் அகிலன் லேப்டாப்பில் எதோ செய்து கொண்டிருக்க அதே நேரம் அவன் அறைக்குள் யாரோ நுழைவது தெரிந்தது.

அவனது பின்புறம் மட்டுமே தெரிய அகிலன் முன் பைலை வைத்து விட்டு முகத்தை சற்று மறுத்துக் கொண்டு செல்வதை கண்டான்.

"யார் இவன், பிரதாப் உன்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியுதா..?"

"சார் இங்க நூறு பேருக்கு மேல வேலை பார்க்குற அதுவும் இல்லாம கார்மெண்ட்ஸ்,டெக்ஸ்சைல்,என்டர்பிரைசஸ்,ஸ்பின்னிங் மில்ல இருந்து அடிக்கடி வருவாங்க இதுல யாருன்னு எனக்கு எப்படி சார் தெரியும்..."

"தெரியாது தெரியாது சொல்லிட்டே இரு இன்னும் கொஞ்சம் நேரத்துல எம்.டி சொன்னது மாதிரி நீ இந்த ஆபீசை விட்டு போக தான் போற..."என்றவன் எழுந்து செல்ல அவன் பின்னே ஓடினான்.

"சார் என்ன நீங்களே இப்படி சொல்லுறீங்க..? எதாவது ஹெல்ப் பண்ணுங்க இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு ஓன் ஹௌவர் முடிய என் வேலை உங்க கைல தான் சார் எதாவது யோசிங்க பாஸ்..." எழிலடம் கெஞ்ச,

அவனது இந்த செய்கையை கண்டு சிரித்தவன், "கவலைப்படாதே நீ போக மாட்டே உன்னை வச்சி தானே நானும் வேந்தன் சாரும் இஷ்டப்பட்ட நேரம் வர முடியும்..." கூறியவாறு அகிலனின் அறைக்குள் நுழைந்தான் எழிலரசன்.

"இப்போ நாம்ம உள்ள போகவே வேண்டாமா...?" யோசித்தவாறு நிற்க, அவனையும் அழைத்துக் கொண்டு சென்றான் எழிலரசன்.

"என்னாச்சு எழில்...?" உள்ளே வந்த இருவரையும் கண்டு அகிலன் கேட்க தான் இதுவரை அறிந்த அனைத்தையும் கூறியவன் அவனிடமே கேட்க,

"ஐயோ நான் யாருன்னு கவனிக்கலையே முக்கியமான மெயில் செக் பண்ணிட்டு இருந்ததால நிமிர்ந்து பார்க்கல..."

"சரி சார் அது யாருன்னு கூடிய சீக்கிரமே கண்டு பிடிச்சிரலாம்..."என்க,

அகிலனின் மனதிலோ பெருங்கோபம் கொழுந்து விட்டு எரிய அவன் கண்களில் இருந்து வரும் அக்னிப்பார்வை அங்கிருந்த இருவரையும் பொசுக்கும் அளவுக்கு செல்ல,அவன் கைகளோ அருகிலிருந்த சுவரில் பதிந்தது.

அவனது செய்கையை கண்டு இருவருமே மிரல அகிலனின் கையில் வழிந்த உதிரத்தை கண்டு பதறிய எழில் அவனருகே நெருங்கினான்.

"பிரதாப் பர்ஸ்ட் ஐடு பாக்ஸ்சை( first aid box) எடுத்துத்தா..."என்ற எழில் அகிலனை அழைத்து சோபாவில் அமர வைத்து பிரதாப் போகச் சென்னான்.

பிராதாப் வெளியே சென்றதும், "லூசாடா நீ எதற்கெடுத்தாலும் கோபம் தான் முதல கோபப்படுறதை நிறுத்து இப்போ வலி யாருக்கு உனக்கு தானே, வா முதல ஹாஸ்பிட்டல் போகலாம்..."என்றவாறு வழிந்து கொண்டிருந்த உதிரத்தை துடைத்து பேண்டேஜ் போட்டு விட அப்போது அதே கோபத்துடனே அமர்ந்திருந்தான் அகிலன்.

"விடுடா என்னை..."என்றவாறு கையை உதறிக் கொண்டு எழுந்து அந்த அறையிலே அங்கும் இங்கும் நடந்தான்.

அவனது சிந்தனை முழுவதும் அன்று நடந்ததிலே இருக்க, அகிலனை பார்த்த முதல் நாளிலிருந்து இதுநாள் வரை எதற்கெடுத்தாலும் பொறுமையின்றி கோபம் கொள்ளும் இந்த குணம் இன்று வரை அப்படியே இருக்க அவனின் செயலை கண்டு கவலையுடன் அமர்ந்திருந்தான் எழிலரசன்.

தன் இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் எதையோ யோசித்தவன் மூளையில் மின்னல் வெட்ட வேகமாக தன் அறையை விட்டு யாரையோ தேடி வெளியேறினான்.

எழிலும் அவன் பின்னேச் செல்ல ஆனந்தின் கேபினின் முன் சென்று நின்றவன், "ஆனந்த்..."என்க,

அவனது இந்த கத்தலில் அங்கிருந்த அனைவருமே ஒரு நொடி அதிர்ந்து எழுந்து நின்றனர்.

"சார்..."என்றவாறு இருக்கையில் இருந்து எழுந்து அவன் முன் வர அவனது கன்னத்தில் இடியென தன் கைகளை பதித்தான்.

அவனது விரல் தடம் அனைத்தும் அவன் கன்னத்தில் பதிந்திருக்க அனைவரின் முன் தன்னை அடித்த அவமானத்தில் நின்றிருந்தான் ஆனந்த்.

"இன்னும் ஒன் ஹௌர்வல உன் ரிசைன்னிங் லெட்டர் உன் கைக்கு வரும் அதுல சைன் பண்ணிட்டு நோட்டீஸ் பிரியர்டு டென் டேஸ் இருந்துட்டு நீ கிளம்பலாம். இதுக்கு அப்பறம் ஒரு நொடி கூட நீ என் முகத்துல முழிக்க கூடாது. பிரதாப் அதுக்கு தேவையான ஏற்பாடை செய்யுங்க..."என்ற அகிலன் அதே கோபத்துடன் செல்ல பலிவாங்கும் வெறியுடன் அகிலனை கண்டவாறு நின்றிருந்தான் ஆனந்த்.

சுதியை அவள் வீட்டில் விட்டு வந்த வேந்தன் அலுவலகத்திற்குள் நுழைய ஒரு வித அமைதியை கண்டவன் எழிலிடம் சென்று விசாரித்தான்.

அவனோ நடந்த அனைத்தையும் கூறியவன், "நம்ம ஆபீஸ் டேட்டா எல்லாம் நமக்கே தெரியாம அகிலன் ரூம்ல கேமரா வச்சு கண்கானிச்சிருக்கான்..."என்க,

"அவனை..."பல்லை கடித்துக் கொண்டு செல்லப் பார்க்க , "வேந்தா விடு அகிலன் ஏற்கனவே தண்டனை கொடுத்துடான். ஆமா கீர்த்தி மேடம் எங்கே..?நீ மட்டும் வந்துருக்கே..?"

"அவங்களை வீட்டுல வீட்டுட்டு வந்துட்டேன்..."என்றவன் தன் அறைக்குச் சென்றான்.

அன்று இரவு அகிலன் தாமதமாக வீட்டிற்குச் செல்ல அவனுக்காக காத்திருந்த சுதிகீர்த்தி தன் தாயிடம் கூறிக் கொண்டு மெல்ல அவள் அறைக்குச் சென்றாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அகிலனை கண்டவர், "என்னாச்சு ஏன் இவ்வளோ நேரம்..? உன் கிட்ட சுதி ஏதோ பேசணும் சொன்னா இப்போ தான் தூங்கப் போனா..?சரி நீ வா வந்து சாப்பிடு..."என்றவர் எழ முயல,

"வேண்டாம்மா எனக்கு பசிக்கல..."என்றவன் தன் தாயின் மடியில் தலை சாய்ந்தான்.

"எழில் எல்லாம் சொன்னான் அவனுக்கு தண்டனை கொடுத்தே சரி நீயும் ஏன்பா தண்டனை வாங்கிக்கிற இப்போ வேதனை யாருக்கு உனக்கு தானே..."என்றவரின் விரல்களோ தன் மகனின் அடிபட்ட கையை வருடிக் கொடுத்தது.

"என்னால என் கோபத்தை கன்ட்ரோல் பண்ணவே முடியல நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன்..."

"அதுக்கு ஒரு வழி இருக்கு..."

"என்னது அது..."

"உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சா சரியாகிடும்..."

"அட போங்கம்மா நீங்க வேற எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லுறீங்க எனக்கு இப்போ அதுல எல்லாம் விருப்பம் இல்ல. பிசினஸ் டிலவப் பண்ணனும், அப்பறம் கீரத்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி தரனும்..."

தன் கனவுகளை கூறிக் கொண்டே போக தன் தாயின் கலக்கத்தை கண்டு நிறுத்தியவன், "அம்மா என்னாச்சு ஏன் அழுகுறீங்க..?"என்றான்.

"எனக்கு கீர்த்தியை நினைச்சா தான் கவலையா இருக்கு கண்ணா அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்..."

"கவலைப்படாதீங்க அம்மா எனக்கு நம்பிக்கை இருக்கு சீக்கிரமே அவளுக்கு கண் பார்வை கிடைக்கும் நல்ல வாழ்க்கையும் கிடைக்கும் நீங்க நிம்மதியா இருங்க, உங்க பையன் எல்லாத்தையும் பார்த்துகிடுவான்..."

"உன் கிட்ட பேசுனா மட்டும் தான் கண்ணா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு போ போய் ரெஸ்ட் எடு. அப்பறம் இந்த கோபத்தை மட்டும் குறைச்சிகோ கண்ணா..."என்றவாறு தன் மகனின் நெற்றியில் இதழ் பதித்து அவன் அறைக்கு அனுப்பி வைத்தார்.

அதே நேரம் இங்கே தன்னவளின் நினைவுகளோடு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் வேந்தன்

அவள் வலியுடன் முகம் சுருங்கி தன் நெஞ்சில் சாய்ந்து மீண்ட ஒரு நொடி தனக்குள் உருவான மாற்றம்,அவள் தனக்கு மட்டும் சொந்தமானவள் என்ற உரிமையை உணர்ந்ததை நினைத்து இதழில் மெல்லிய புன்னகை உதிர்க்க கற்பனையில் அவள் முகம் கண்டான்.

"சுதி சீக்கிரமே உன்னை எனக்கானவளாக்குவேன். கண்டிப்பா என்னை பத்தி தப்பா தான் நினச்சிக்கிட்டு இருப்பே..?  பார்க்கலாம் என்ன நடக்க போகுதுன்னு..."என்றவாறு கனவில் அவள் முகம் கண்டு நித்திரைக்குச் செல்ல முயன்றான்.

அவளை தன்னவளாக தன் அருகில் கொண்டு வர வேண்டும் என நினைத்தவன் அவள் மனதில் என்ன இருக்கிறது. தனக்கும் இடையில் இருக்கும் அகிலனை நட்பையும் அவன் தந்தை தன் மேல் வைத்த நம்பிகையும் மறந்தான்.

மறுநாள் விடியல் கதிரவன் மெல்ல விழி திறந்த அந்த அதிகாலைப் பொழுதில் வளர்மதியின் மொபைல் விடாது ஓசை எழுப்பி கொண்டே இருந்தது.

"அடியேய் வளரு உன் போனு ரொம்ப நேரமா அடிக்குது கொஞ்சம் சீக்கிரம் வாடி..."என்ற கோமதி அவளுக்கான மதிய உணவினை தயார் செய்து கொண்டிருந்தார்.

"அம்மா நான் குளிச்சிட்டு இருக்கேன் ஒரு பைவ் மினிட்ஸ் ஆகும், யாருன்னு பாரும்மா..." பாத்ரூமிற்குள்ளிருந்து குரல் கொடுக்க,

தன் செல்ல மகளை மனதிற்குள் திட்டிக் கொண்டு ஹாலுக்கு வர அதே நேரம் தன் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் எழிலரசன்.

"கண்ணா அந்த போனை எடுத்து யாருன்னு பாருடா அம்மாக்கு வேலை இருக்கு..."என்றவர் மறுபடியும் சமயலறைக்குள் நுழைய சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த தன் தங்கையின் மொபைல் அருகில் சென்றான்.

ஸ்வீட்டி என்று பதிந்திருந்தை பார்த்தவன், "வளரு ஸ்வீட்டின்னு நேம் வருது..." என்றவாறு அதை எடுத்து ஹலோ என்றான்.

"ஹலோ..!ஹலோ..."மறுபடியும் அழைக்க அங்கே இளஞ்செழியன் தன் மொபலை கட் பண்ணினான்.

அதற்குள் வேகமாக வளர்மதி வர, "என்னென்னு தெரியல வளரு அவங்களே கட் பண்ணிட்டாங்க. நான் போய் கிளம்பிட்டு வரேன் வந்து உன்னை விடுறேன்..." என்றவன் தன் அறைக்குள் நுழைய அடக்கி வைச்சிருந்த மூச்சினை வெளியிட்டாள் வளர்மதி.

"இவனை யாரு இப்போ போன் பண்ணச் சொன்னா..?நல்ல வேளை பேசிக் தொலைக்கல எப்படியும் மறுபடியும் போன் பண்ணுவான். காலேஜ் போனதுக்கு அப்பறம் பேசிக்கலாம்..."மனதுக்குள் நினைத்தவாறு மொபைல் ஆப் பண்ணி வைத்து சென்றாள்.

அதன் பின் நேரம் செல்ல கோமதி பரிமாற அண்ணன் தங்கை இருவரும் சேர்ந்து உணவுண்டு கிளம்ப ஆரம்பித்தனர்,

வளர்மதியை அழைத்துக் கொண்டு செல்ல செல்லும் வழியில், "யாரு வளரு காலையில போன் பண்ணுனாங்க..?"என்ற தன் அண்ணனின் திடீர் கேள்வியில் திகைத்து நடுங்கினாள்.

மிரர் வழியாக தன் தங்கையின் முகத்தை கண்டவன், "சொல்லு வளரு உன்னை தான்மா கேட்குறேன்..."என்க,

"அண்ணா.....அது வந்து.... நம்ம வந்தனா தான் அண்ணா..." திக்கி தடுமாறி கூற தன் தோளினை பற்றியிருந்த அவள் கையின் நடுக்கத்தை உணர்ந்தவன் அவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பதை அறிந்தான்.

அதன் பின் அவளிடம் வேறெதும் பேசாமல் அமைதியாக வர அதே நேரம் வளரின் வரவினை எதிர்பார்த்து கல்லூரி வெளியே காத்திருந்தான் இளஞ்செழியன்.


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: