Forum

Chinnanchiru Kannasaivil - 8  

  RSS

சங்கரேஸ்வரி குருசாமி
(@sankareswari)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 65
06/12/2019 3:33 pm  

நாட்கள் இரவு பகல் பாராது சென்று கொண்டிருக்க இளஞ்செழியன் மும்பை சென்று இரண்டு வாரங்களாக அவன் நினைப்புடன் அமர்ந்திருந்த வளர்மதியின் அருகில் வந்து அமர்ந்தாள் வந்தனா.

 

"என்னாச்சு வளரு செழியன் இன்னைக்கு கால் பண்ணலையா...?"

 

"இப்போ தான் பேசுனேன் இந்த வீக்கெண்ட் வரேன்னு சொன்னான் ஆனா இப்போ நான் நெக்ஸ்ட் வீக் வரேன்னு சொல்லுறான்..."

 

"ஓ அதுக்கு தான் அமைதியா இருக்கையா..?"

 

"அன்னைக்கு ஈவினிங் மட்டும் அண்ணன் வராம இருந்திருந்த நான் இளாவை பார்த்திருப்பேன். நான் உன் கூட பேசணும்ன்னு எவ்வளோ ஆசையா கூப்பிட்டான் ஆனா என்னால தான் போக முடியல..."

 

"சரி விடு வளரு. இது நம்ம பைனல் இயர் இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு. முதல ப்ராஜெக்ட் வொர்க் முடிப்போம் வா..."என்றவள் அவளை அழைத்துக் கொண்டு செல்ல,

 

ஒவ்வொரு நொடியில் இளாவின் நினைவிலிருந்து தன்னை கலைத்து படிப்பை நினைவிற்கு கொண்டு வரும் தன் தோழியை செயல் கண்டு மனதிற்குள் நன்றி கூறியவள் அவளுடன் கிளாஸிற்குள் நுழைந்தாள்.

 

அதே நேரம் இங்கே தன்னை சுற்றி ஒரு வலையை பிண்ணிக் கொண்டு அதற்குள்ளே முடங்கிக் கிடந்தாள் சுதிகீர்த்தி.

 

அறையினுள்ளே அடைந்து கிடைக்கும் தன் மகளை கண்டு வருந்திய சித்ரா தன் கணவனிடமும்,மகனிடமும் புலம்பித் தவித்தார்.

 

"அம்மா அவ தனியா இருக்கணும் ஆசைப்படுறா விடுங்கம்மா அப்படியே இருக்கட்டும்..."

 

"ஆமா சித்ரா அகிலன் சொல்லுறதும் சரி தான் நீ ஏன் அவளை தொந்தரவு பண்ணுற..?அவ விருப்பப்படி இருக்க விடு..."

 

"நான் சொல்லுறது உங்களுக்கு புரியலையா..?அவ ரூமை விட்டு வெளியே கூட வர மாட்டிக்கா. யார் கிட்டையும் பேச மாட்டிக்கா அவளுக்கு சாப்பாடு கொடுக்க கெஞ்சுறேன். அப்பவும் கடமைக்கு தான் சாப்பிடுறா..?என்ன பிரச்சனைன்னு கேட்ட அமைதியா இருக்கா இப்போ கூட நம்ம கூட சேர்ந்து சாப்பிட கூப்பிட்டேன் எனக்கு வேண்டாம் நான் வரல சொல்லி கத்துறா..? கோபப்படுற எரிஞ்சி விழுகுறா..?எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இது எல்லாத்தைக்கும் காரணம் நீங்க தான். அவ ஒழுங்கா உங்க அம்மா வீட்டுலையே இருந்திருப்பா அவளை பிடிச்சி படிக்க அங்கே இங்கே அனுப்பி வைச்சி இப்போ கடைசியா வீட்டுக்குள்ள முடங்க வச்சிடீங்க. இப்போ சந்தோஷமா..?" தன் மனதில் இருந்ததை கொட்டித் தீர்க்க,

 

"சொல்லி முடிச்சிட்டையா சித்ரா இல்ல இன்னும் எதுவும் இருக்கா..?அப்படியே இருந்தாலும் நைட் பேசிக்கலாம். எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அகில் சீக்கிரம் வா..."என்றவர் எழுந்துச் செல்ல அவர் பின்னே பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றான் அகிலன்.

 

"டேய் அகில் சாப்பிட்டு போடா..."என்க, அவனே அதற்கு முன்னே வீட்டை விட்டு மின்னல் வேகத்தில் வெளியேறினான்.

 

"இப்படி பறந்து பறந்து உழைக்கிறது எதுக்கு சந்தோஷமா ஒரு வாய் சாப்பிட தானே..?  இங்கே அதை கூட செய்ய விடமா இப்படி இழுத்துட்டு போறாரு பெத்த பையனை..."புலம்பியவாறு சமயலைறைக்குள் நுழைந்தார் சித்ரா தேவி.

 

"அகில்..."

 

"ஹ்ம்ம் சொல்லுங்கப்பா..." சாலையில் பார்வை இருந்தாலும் செவி தந்தையின் புறம் இருந்தது.

 

"சுதி பத்தி டாக்டர் கிட்ட கொஞ்சம் பேசணும் ஈவினிங் ஹாஸ்பிட்டல் போகணும் மறந்துறாதே..?"

 

"ஹ்ம்ம் ஓகேப்பா..."

 

"ஆபீஸ்ல என்ன நடக்குது ஒரு வேலை சுதியை யாராவது எதுவும் சொல்லிட்டாங்களா..?"

 

"தெரியலப்பா நான் இருக்குற நேரம் எந்த பிரச்சனையும் வரல நான் வேணும்னா வேந்தன்,எழில் கிட்ட கேட்குறேன்..."

 

"இல்ல கேட்க வேண்டாம்,ஸ்பின்னிங் மில் கார்மெண்ட்ஸ் எல்லாம் ரவுண்ட்ஸ் போனியா..?"

 

"இல்லப்பா ஆபீஸ் வொர்க் கொஞ்சம் அதிகம் வேந்தனும், சுதியும் போய்ட்டு வந்தாங்க. வேந்தன் எல்லா அகௌன்ட்ஸ்சும் செக் பண்ணி என்கிட்ட காட்டிட்டான்..."

 

 

"அவங்க ரெண்டு பேரும் போனாங்களா..?"

 

"ஹ்ம்ம் ஆமாப்பா நான் தான் அனுப்புனேன்..."

 

"சரி இனிமே இப்படி பண்ணாதே..."

 

அதுவரை அவர் கேட்ட அனைத்திற்க்கும் பதில் கூறியவன் இப்போது குழப்பத்துடன் காரினை டெக்ஸ்டையில் முன் நிறுத்த அதிலிருந்து இறங்கினார் ஜெயபிரகாஷ்.

 

"அப்பா ஒரு நிமிஷம் இனிமே இப்படி பண்ணாதேன்னு சொன்னீங்களா..?எதுக்கு அப்படி சொன்னேங்க...?" மனதுக்குள் வேந்தனையும்,சுதியையும் அனுப்பியதை நினைத்து கேட்க,

 

"ரவுண்ட்ஸ் போறது உன்னோட வேலை அது அவன் வேலை இல்ல இனிமே இப்படி பண்ணாதே..."என்றதும் தான் நிம்மதியாக உணர்ந்தான்.

 

"சரிப்பா நான் கிளம்புறேன்..."என்றவன் திரும்பச் செல்ல,

 

"ஒரு நிமிஷம் அகில்..."

 

"என்னப்பா..." தன் தந்தையின் அருகில் வர,

 

"வேந்தன்,எழில் ரெண்டு பேரும் ஆபீஸ் ஸ்டாப் தான் அதை மறந்திடாதே வெளியே மட்டும் நீங்க பிரெண்ட்ஸ் அவ்வளோ தான் நீ ரொம்ப இடம் கொடுக்காதே..? அவங்க ரெண்டு பேரும் எப்போ வராங்கன்னு போறங்கன்னு எனக்கு தெரியாது நினைச்சியா..?"

 

"இல்லப்பா நான் தான் அவங்களுக்கு வெளி வேலை..." கூறி முடிப்பதற்குள் தன் தந்தையின் முறைப்பை கண்டவன், "சாரிப்பா இனிமே இப்படி பண்ண மாட்டேன். நான் கிளம்புறேன்..."என்றவனோ தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

 

வழக்கம் போல் புயல் வேகத்தில் அலுவலகத்திற்குள் நுழைய அடுத்தநொடி அவன் முன் நின்றான் பிரதாப்.

 

"இன்னும் யாரெல்லாம் ஆபீஸ் வரல..?"

 

"எல்லார் வந்துட்டாங்க சார்..."

 

"சரி டென் ஒ கிளாக் மீட்டிங் எல்லாரையும் ரெடியா இருக்க சொல்லு..."என்றவன் தன் வேலையை பார்க்க அவனது கோபம் அறிந்த பிரதாப் எதுவும் கேட்காமல் அமைதியாக வெளியேறினான்.

 

அவன் கூறியது போல் பத்து மணிக்கு அனைவரும் தயாராக இருக்க, அவன் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றான்.

 

"சிட் ப்ளீஸ். நான் இந்த கம்பனி டிவலெப்மென்ட்டாக எல்லாத்தையும் மாத்த போறேன். இதுல யாருக்கு விரும்பமோ அவங்க இருக்கலாம் மத்தவங்க பேப்பர் போட்டு போய்ட்டே இருக்கலாம். ஆபீஸ் ஓபனிங் டைம் இனிமே நயன் ஒ கிளாக் கிடையாது, எய்ட் ஒ கிளாக் அதே மாதிரி குளோசிங் டைம் ஈவினிங் சிக்ஸ் ஒ கிளாக்,வொர்கிங் ஹவர்ஸ் யாரும் வெளியே போகணும்னா அதுக்கு என் பெர்மிசன் இருக்கணும். அப்பறம் வேந்தன் நீங்க இனிமே பேக்டரி அக்கவுன்ட்ஸ் செக் பண்ண வேண்டாம். ஆபீஸ் வொர்க் மட்டும் போதும் உங்களுக்கு இனிமே அதையெல்லாம் பிரதாப் நீங்க தான் பார்த்துக்கணும். ஸ்பினிங் மில் மேனேஜர் இனிமே நீங்க தான், எழில் நீங்க தான் எனக்கு பி.ஏ நான் எங்கே போனாலும் நீங்க வரணும்..."தன் மனதில் இருந்த அனைத்தையும் கூறி முடித்தான்.

 

ஒரு சிலருக்கு அவன் கூறியதில் சந்தோஷம் இருக்க,வேந்தன் எழில் இருவருக்கும் அவன் எதற்காக இந்த முடிவை எடுத்தான் என்ற யோசனையில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக வெளியேறினர்.

 

சில நாட்களாக சுதி அலுவலகம் வராதது வேறு இருவரின் மனதை கலங்கச் செய்ய அதை எப்படி அகிலனிடம் கேட்பது என்ற யோசனையிலே சுற்றி வந்தனர்.

 

அவர்கள் யோசனையை கலைப்பது போல் அவர்கள் அருகில் வந்த பிரதாப், "வேந்தன் சார்,எழில் சார் உங்க ரெண்டு பேருக்கும் நான் மேனேஜர் ஆகுறதுல விரும்பம்மில்லையா..?ஏன் சைலெண்டா இருக்கீங்க..?"என்க,

 

"ஐயோ அப்படியெல்லாம் இல்ல பிரதாப் இது வேற யோசனை,ஆல் தி பெஸ்ட் பார் யுவர் நியூ ஜாப்..."என்றவாறு இருவரும் விலகிச் செல்ல தன் அறைக்குச் சென்ற அகிலன் அதை கேட்க அவர்கள் அமைதி அவனையும் ஏதோ செய்தது.

 

மூவரும் அந்த அலுவலகத்திற்குள்ளே சுற்றி வந்தாலும் தேவைக்கு மட்டும் பேசிக் கொண்டு இருக்க, தங்கள் நட்புக்குள் விரிசல் வருவதை போல் உணர்ந்தனர்.

 

தன் நிறுவனத்திற்கு வந்த ஜெயபிரகாஷ் அகிலனின் பி.ஏவாக எழில் இருந்தாலும் சிறு துளி நட்பு கூட இப்போது அவர்களுக்கு நடுவில் இல்லாதை கண்டார்.

 

தன் சொந்த ஊரில் இருந்து சிலர் வந்திருப்பதாக சித்ராவிடம் இருந்து அழைப்பு வர, "அகில் வா நாம்ம வீட்டுக்கு போகலாம்..? எழில் நீங்க ஆபீஸ்சை கவனிச்சிக்கோங்க..." என்றவர் தன் மகனை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

"அகில்..."

 

"சொல்லுங்கப்பா..."

 

"அப்பா ஏதாவது தப்பா சொன்னதா நினைக்கிறையா..? நான் உங்க பிரெண்ட்ஸ்ஷிப்ல விரிசல் வரணும்ன்னு நினைக்கல..?"

 

"என்னப்பா இப்படியெல்லாம் பேசுறீங்க என்மேல தப்பு இருக்கப் போய் தான் தானே நீங்க சொல்லுறீங்க நான் தான் என்னை மாத்திக்கணும். சாரிப்பா..."

 

"கார்மெண்ட்ஸ் மேனேஜர் என்கிட்ட..."என்று ஏதோ சொல்ல வர,

 

"அப்பா வீட்டுக்கு யார் வந்துருக்கா..?"

 

"கிராமத்துல இருந்து வந்துருக்காங்காலம் வீட்டுக்கு போனா தான் தெரியும்..."என்க,அதன் பின் இருவரும் எதுவும் பேசாமல் வீட்டிற்குச் சென்றனர்.

 

"அடடா வாங்க சித்தப்பா,வாங்க மாப்பிள்ளை என்ன கொளுந்தனாரு எல்லாரும் எப்படி இருக்கீங்க..?" மலர்ந்த முகத்துடன் தன் சொந்த ஊர் மக்களை விசாரித்தவாறு அவர்கள் அருகில் அமர்ந்தார் ஜெயபிரகாஷ்.

 

"சித்ரா எல்லாருக்கும் குடிக்க மோர் கொண்டு வா..."

 

"அதெல்லாம் நான் வந்ததும் மருமக கொடுத்துட்டா,நீ தான் லேட்டா வந்துருக்கே..." என்ற நாராயணமூர்த்தி அகிலனின் புறம் திரும்பினார்.

 

"ஆட ராஜாவாட்டம் வளர்ந்துடையே கண்ணா..."என்க,

 

"என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா..."என்றவன் அவர் காலில் விழிந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.

 

"முருகன் சித்தப்பா,பெருமாள் மாமா ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்களா..?"

 

"நல்லாயிருக்கோம் அகிலா வந்து உட்காரு..."என்க,அவர்கள் அருகில் சென்று அமர்ந்தான்.

 

முதலில் தன் பெற்றோரின் நலம் விசாரித்த ஜெயபிரகாஷ் ஊரில் நடக்கும் விசியங்கள், விவசாயம் என்று பொதுவாக பேச அவர்கள் பேசுவதை கேட்டவாறு அமர்ந்திருந்தான் அகிலன்.

 

"இந்த வருஷம் நம்ம ஐயனர் கோவில் கட்டலாம் இருக்கோம். உங்க அப்பா தான் உன்னை பார்த்துட்டு வரச் சொன்னாரு..."

"ரொம்ப நல்ல செய்தி சித்தப்பா சிறப்பா பண்ணிரலாம் ஒரு நிமிஷம்..."என்றவர் தன் அறைக்குச் செல்ல அடுத்தநொடி தன் மனைவியுடன் வெளியே வந்தார்.

 

"இந்தாங்க சித்தப்பா..."என்றவர் ஒரு தட்டில் பழம்,வெத்தலை பாக்கு வைத்து அதில் மேல் சில இராண்டாயிரம் கட்டுகள் வைத்து தர அதை சந்தோஷமாக வாங்கிக் கொள்ள தம்பதியராய் அவர் காலில் விழிந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

 

"சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்..."என்ற சித்ரா தேவி அனைவரையும் அழைக்க,

 

"ஒரு நிமிஷம் நாங்க இன்னொரு முக்கியமான விசியத்தை பத்தி பேசணும். ஐயா கிட்ட பேசுனதுக்கு உன் கிட்ட பேச சொன்னாரு..."என்று நாராயணமூர்த்தி மற்ற இருவரையும் பார்த்தவாறு பேச ஆரம்பிக்க,

 

"சொல்லுங்க சித்தப்பா..."

 

"அது வந்து நம்ம பெருமாளோட பையனுக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கோம். அதான் நம்ம பாப்பாவை கேட்கலாம் வந்தோம் பையன் நல்லா படிச்சிருக்கான்,ஒரு கெட்ட பழக்கம் இல்ல. நல்ல வசதி நீ என்ன சொல்லுறப்பா,ஆமா எங்கே நான் வந்ததுல இருந்து பாப்பாவையே காணும் சித்ரா எங்கம்மா என் பேத்தி..?"

 

"சித்தப்பா எனக்கு இதுல சந்தோஷம் தான் அவ ரூம்ல தான் இருக்கா ஆனா நம்ம கீர்த்திக்கு..."என்று இழுக்க,

 

"சித்ரா போம்மா போய் நீ பாபாப்வை கூட்டிட்டு வா. அவளை பார்த்து ரொம்ப நாளாச்சு. நான் வந்தது அவளுக்கு தெரியாதா ஏன் என்னை பார்க்க வரல. கீர்த்தி பாப்பா நான் மூர்த்தி தாத்தா வந்துருக்கேன்..."என்று சற்று உரைக்க அழைக்க,

"மாமா நான் போய் கூட்டிட்டு வரேன் நீங்க உட்காருங்க..."என்றவர் தன் மகள் அறை நோக்கிச் சென்றனர்.

 

அதன் பின் பெரியவர்கள் அனைவரும் பேச, "அப்போ உனக்கு சம்மதம்ன்னா இன்னைக்கே வெத்தலை பாக்கு மாத்திக்கலாம்..."என்றவர் பேத்தியின் வருகைக்காக சந்தோஷமாக காத்திருக்க,அகிலன் ஜெயபிரகாஷ் இருவரும் தவிப்புடன் காத்திருந்தனர்.

 

நேரம் செல்ல கீர்த்தியை தோளோடு அணைத்தவாறு சித்ரா அழைத்து வர, "வா தாயி எப்படி இருக்கே கண்ணு..."என்றவாறு அவள் தலையை வருடிக் கொடுக்க அமைதியாக நின்றாள்.

 

அவளது அமைதி அங்கிருந்த அனைவரையும் யோசிக்க வைக்க, "சித்தப்பா கீர்த்திக்கு ஒரு விபத்துல பார்வை போச்சு..." தயங்கிக் கொண்டு கூற,

 

"ஐயோ ஐயனாரப்பா என் பேத்திக்கு இப்படி ஒரு குறையை கொடுத்துட்டையே..?" கலங்கியவாறு புலம்பினார்.

 

அதன் பின் மேலும் புலம்பியவாறு ஏதேதோ சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள் சுதிகீர்த்தி.

 

"சரிப்பா எங்களுக்கு பஸ்க்கு நேரமாச்சு நாங்க கிளம்புறோம். வா முருகா பெருமாளு நாம்ம கிளம்பலாம்..."

 

"ரெண்டு நாலு தங்கிட்டு போகலாம்ல சித்தப்பா..."

 

"இருக்கட்டும்ப்பா ஊருல நாத்து வேற நடணும் போய்ட்டு வரோம்..."

 

"சரி பார்த்துட்டு போய்ட்டு வாங்க அகில் நீ போய் விட்டு வா..."

 

"சரிப்பா..."

 

அவர்கள் அனைவரும் எழுந்துச் செல்ல, "என்ன மன்னிச்சிரு பிரகாஷ் வீட்டுல எல்லார் கிட்டயும் சம்மதம்மான்னு கேட்டுட்டு சொல்லுறோம்..."என்றவர் அவர் பதிலுக்கு காத்திருக்காமல் சென்றனர்.

 

"நாங்களே போய்க்குறோம்..."என்க டிரைவரை அழைத்து அவர்களை வழியனுப்பி வைத்து வீட்டிக்குள் நுழைய வீடு இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்தனர்.

 

"நான் உயிரோட இருக்கணும்மா இல்ல இருக்க கூடாதா..? எனக்கு கண் தான் இல்ல காது நல்லா தான் கேட்குது. அவங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்..."

 

"ஐயோ கீர்த்தி நாங்களா கல்யாணம் பேச்சி ஆரம்பிக்கல அவங்க தான்ம்மா..."

 

"பேசாதீங்க யாரும். இனிமே யாராவது என்னை பார்க்க வந்தாங்க என் கிட்ட பேசணும் சொன்னாங்கன்னு மட்டும் சொன்னேங்கனா நான் உயிரோட இருக்குற கடைசி நாள் அது தான்..."கோபமாக கத்தியவள் தட்டு தடுமாறி அறைக்குள் நுழைய, என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் அவரவர் அறைக்குள் முடங்கினர்.


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: