Chinnanchiru Kannasaivil - 9  

  RSS

சங்கரேஸ்வரி குருசாமி
(@sankareswari)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 65
8 Dec 2019 11:32 am  

தோழர்கள் மூவரும் என்ன பேசுவது எதற்காக ரெஸ்டாரெண்ட் வந்தோம் என்று கூட தெரியாது யோசனையுடன் அமர்ந்திருந்தனர்.

 

இவர்களின் அமைதி நீடித்துக் கொண்டிருக்க அமைதியை வெறுத்த யாழ்வேந்தன் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.

 

"இப்போ என்னாச்சு எதுக்கு இந்த அமைதி..? எழிலு உனக்கு அகில் பி.ஏவா இருக்க பிடிக்கலையா..? டேய் அகில் நீ ஏன்டா ரெண்டு நாளா ஏதோ வாழ்க்கையே பறிபோன மாதிரி சுத்திட்டு இருக்கே..?"என்று யாழ்வேந்தன் தன் பேச்சினை துவங்க,

 

"எனக்கு கீர்த்தியை நினைச்சா ரொம்ப கவலையா இருக்குடா..?"

 

அவன் கீர்த்தியின் பெயரை ஆரம்பித்ததும் இருவரும் ஒரே போல், "ஏன் என்னாச்சு அவங்களுக்கு..."என்றனர்.

 

கிராமத்தில் இருந்து வந்தது அவர்கள் கேட்டது அவளின் செய்கை என அனைத்தையும் கூற, "முடியலடா கத்துறா மார்னிங் கூட நான் பார்க்கணும் போனா சின்னப் பிள்ள மாதிரி எல்லாத்தையும் தூக்கி எரியிற யாரையும் விட மாட்டிக்கா, பேச மாட்டிக்கா, இப்படியே விட்ட அவளுக்கு எதுவும் ஆகிருமோன்னு எதுவும் பண்ணிக்குவளோ நினைச்சா பயம்மா இருக்கு..." கலகத்துடன் கூற அதை கேட்டு இருவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

 

"போதும்டா நீங்க பார்த்ததும் என் சுதியை என்கிட்டே கொடுத்திடுங்க. அவளை நான் என் கண்ணுக்குள்ள வச்சி  பார்த்துகிடுவேன். அவ என் உசுருடா..." அவள் படும் துயரத்தை கண் முன் கண்டது போல் வேதனையுடன் யாழ்வேந்தன் கூற,

 

 

அடுத்தநொடி அது ரெஸ்டாரெண்ட் என்று கூட பாராமல் அவன் கழுத்தை நெறித்தான் அகிலன்.

 

"என்னடா சொன்னே அவ உன் சுதியா..?இதுக்கு அப்பறம் அவ பேரை கூட நீ சொல்ல கூடாது..."என்றவாறு தன் உயிர்த் தோழன் என்று பாராமல் அவனின் கழுத்தை நெறிக்க இருவரையும் போராடி விலக்கினான் எழிலரசன்.

 

அவன் கூறியது தனக்கு அதிர்ச்சி தான் என்றாலும் அவர்களின் சண்டையை கண்டவன், "டேய் அகில் என்னடா இது விடு முதல இது ரெஸ்டாரெண்ட் வா நம்ம இங்கே இருந்து போகலாம்..."என்ற எழிலரசன் இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

 

அருகில் இருந்த பார்க்குக்கு அழைத்துச் செல்ல இருவரும் கோபத்துடன் ஒவ்வொரு புறமாக திரும்பிக் கொண்டு நிற்க நடுவில் நின்றிருந்தான் எழிலரசன்.

 

"டேய் வேந்தா என்னது இது கீர்த்தி நம்ம அகிலனோட தங்கச்சிடா உன்னால எப்படி இப்படி..."

 

"அவ அகிலனோட தங்கச்சின்னு தெரியுறதுக்கு முன்னாடியே நான் அவளை விரும்ப ஆரம்பிடிச்சேன்.  அவ என் சுதி எனக்கு மட்டும் சொந்தம் இதுக்கு மேல அவ கஷ்டப்படுறதை பார்த்துட்டு என்னால கண்டுக்காம இருக்க முடியாது..." தன் மனதில் இருப்பதை சொல்லிக் கொண்டே போனான்.

 

ஆனால் அகிலனின் மனதிலோ அன்று அவன் தந்தை கூறிய சொல்லே ஒலிக்க என்ன செய்வது என தெரியாமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

 

அவன் அருகில் சென்று அமர்ந்த வேந்தன், "அகில் ப்ளீஸ் என்னை மன்னிச்சிருடா நான் பண்ணது தப்பு தான் நான் அவளை பார்த்ததும் உன் கிட்ட சொல்லிருக்கணும். என்னால சொல்ல முடியாத நிலைமை..."என்றதும்,

 

அகிலன் மனமோ கீர்த்தி தன்னிடம் அடிக்கடி வேந்தனை பற்றி பேசுவதை நினைத்தது.

 

"கீர்த்தியும் உன்னை விரும்பிறாளா..?"

 

அவனது இந்த தீடிர் கேள்வியில் தடுமாறியவன் அமைதியாக இருக்க, "உன்னை தான் கேட்குறேன் சொல்லு வேந்தா நான் எந்த நம்பிக்கையில என் அப்பா கிட்ட உன் காதலை சொல்ல முடியும்..."என்க,

 

எதை பற்றியும் யோசிக்காமல் பட்டென்று, "அவளும் என்னை விரும்பிறா.." என்றான்.

 

"கீர்த்தி உன்னை விரும்பிறாளா..! ஒரு வார்த்தை கூட யார்கிட்டையும் இதை பத்தி சொன்னது கிடையாது நீ எப்போ கீர்த்தியை பார்த்தே..? நீங்க எப்போ ரெண்டு பேரும் விரும்ப ஆரம்பிடிச்சீங்க..?"

 

"ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே..."

 

"அப்போ நீ அவளை லண்டனை வச்சி மீட் பண்ணிக்ருகையா..?அதான் கீர்த்தி உன் வாய்ஸ் கேட்டது மாதிரி இருக்குன்னு சொன்னாலா..? டேய் நீ உண்மையிலே என் மச்சான்னாக போறையா..?எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா...? என்னை மன்னிச்சிருடா கோபத்துல அப்படி பண்ணிட்டேன்..."என்றவாறு சந்தோஷ மிகுதியில் தன் நண்பனை கட்டிக் கொண்டு கத்த,

 

அதை கண்ட எழிலுக்கு கீர்த்தியை வாழ்க்கையை பற்றி தன் மனதில் இதுவரை அழுத்திக் கொண்டிருந்த பாரம் நீங்க நிம்மதியாக உணர்ந்தான்.

 

"டேய் போதும்டா இப்படி கட்டி பிடிச்சிக்கிட்டு இருந்தா பார்க்குறவங்க எல்லாம் தப்பா நினைக்கப் போறாங்க..." சிரித்துக் கொண்டு எழில் கூற  அவன் கூறியதில் அங்கு நடந்து சென்றவர்கள் அனைவரும் அவர்களை விசித்திரமாக கண்டனர்.

 

விடிந்ததிலிருந்து ஏதோ யோசனையுடன் அமைதியாக இருந்த தன் மகனின் அருகில் வந்து அமர்ந்தார் சித்ராதேவி.

 

"என்னாச்சு கண்ணா ஏன் ஒரு மாதிரியா இருக்கே..?ஆபீஸ் கிளம்பலையா..?உடம்பு எதுவும் சரியில்லையா..?"என்றவாறு அவன் நெற்றி கழுத்தை தொட்டுப் பார்க்க,

 

"ஒன்னுமில்லைம்மா அப்பா கிளம்பிட்டாரா..?"

 

"கிளம்பிட்டு இருக்காரு..."

 

"அம்மா நான் ஒரு முக்கியமான விசியம் சொல்லணும் நம்ம கீர்த்தியோட வாழ்க்கையை பத்தி..."

 

"ஏதா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுடா எனக்கு என்னமோ நீ யோசிக்கிறதை பார்த்தா பயம்மா இருக்கு..."

 

"அம்மா எல்லாம் நல்ல விசியம் தான் நீங்க பதறாதீங்க நான் எடுத்த முடிவுக்கு அப்பா சம்மதிப்பாறான்னு நினைச்சா தான் பயமா இருக்கு..."

 

"உன் தங்கச்சிக்கு உன் மேல எல்லா உரிமையும் இருக்கு நீ அவ வாழ்கையில என்ன பண்ணுனாலும் அது நல்லதா தான் இருக்கும். அம்மா உன்கூட துணையா இருப்பேன். என்னைக்கும் இது நான் உனக்கு கொடுக்குற வாக்கு..."

 

"தேங்க்ஸ்ம்மா..."என்க,

 

"என்ன அம்மாவும் பையனும் ஏதோ பேசிட்டு இருக்கீங்க போல, என்ன அகில் ஆபீஸ் கிளம்பலையா..?"

 

"அப்பா அது வந்து..." எப்படி சொல்லுவது என தெரியாமல் தயங்க,

 

"சொல்லு அகில். சித்ரா சாப்பாடு எடுத்து வை..."என்றவர் திரும்ப யாழ்வேந்தன் தன் பெற்றோருடன் நுழைவதை கண்டார்.

 

தன் தந்தையின் பார்வை சென்ற இடத்தை பார்த்த அகில் அதிர்ந்து நிற்க, "இவனை யாரு இப்போ வரச் சொன்னா..?கடவுளே எதுவும் பிரச்சனை வரக் கூடாது..." தவிப்புடன் மனதிற்குள் நினைத்தவன் அவர்களை வரவேற்றான்.

 

"வாங்க அப்பா,வாங்க அம்மா..."என்ற அகிலன் தன் பெற்றோரை பார்க்க சித்ராதேவி புன்னைகையுடன் முன் வந்து அவர்களை வரவேற்றார்.

 

"வாங்க அண்ணா,உட்காருங்க அண்ணி உட்காருங்க மூணு பேரும் கனகா எல்லாருக்கும் டீ கொண்டு வா..." அவரின் இந்த உரிமையான பேச்சில் தயக்கமாக தன் மகனுடன் வந்தவர்கள் இப்போது சற்று நிம்மதியாக உணர்ந்தனர்.

 

சுதி படும் துன்பத்தை கேட்டவன் அவளை தன் அணைப்புகுள்ளே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருக்க எதை பற்றியும் யோசிக்காமல் தன் பெற்றோரிடம் கூட கூறாமல் அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

 

இங்கு வந்ததிருக்கு பிறகே இதுவரை யோசிக்காதே சில விசியங்கள் தோன்ற அவன் பார்வையோ ஜெயபிரகாஷின் மேல் சில நொடி படிந்து மீண்டது.

 

இப்போது என்ன செய்வது எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல் யோசிக்க, "என்ன வேந்தன் எதுவும் விசேஷமா அப்பா அம்மா எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கே..."என்ற ஜெயபிரகாஷ் அங்கிருந்த சோபாவில் அமர,

 

"நான் ஒரு முக்கியமான விசியம் சொல்லணும் சார் உங்ககிட்ட..." தைரியமாக அவரிடம் கூறினாலும் மனதிற்குள்ளோ, "கடவுளே என்னால என் அப்பா அம்மா அவமானப்பட கூடாது..." நினைத்துக்கொண்டு விசியத்தை கூற ஆரம்பித்தான்.

 

"அப்பா அவங்கள நான் தான் வரச் சொன்னேன் நம்ம கீர்த்தியை பார்க்கணும் சொன்னாங்க அதான் வேந்தனை கூட்டிட்டு வரச் சொன்னேன்..." குறுக்கே வந்து அகிலன் யாரும் அறியா வண்ணம் வேந்தனை கண்டு முறைத்தவாறு கூற, அங்கிருந்த அனைவரின் பார்வையையும் சந்தேகமாக இருவரையும் கண்டது.

 

ரத்னா,திருமுருகன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, "அம்மா கீர்த்தியை கொஞ்சம் கூட்டிட்டு வாங்க..." கெஞ்சும் பார்வையில் அகிலன் அழைக்க,

 

 

தன் மகனின் பேசும் பேச்சில் ஏதோ ஒரு முடிவில் இருக்கிறான் என்பதை உணர்ந்த சித்ரா கணவனை காண அவரோ கோபத்துடன் நின்றிருந்தான்.

 

"அம்மா போங்கம்மா ப்ளீஸ்..."

 

"என்னப்பா இது அவ தான் வர மட்டாளே..?" அமைதியாக அவனுக்கு கேட்கும் குரலில் கூறியவர் தன் மகனுக்காக அவளை அழைக்கச் செல்ல அதுவரை அமைதியாக இருந்தவர், "சித்ரா நில்லு...."என்று வீடே அதிரும் அளவுக்கு கத்தினார்.

 

அவரது கத்தலில் வேந்தனின் பெற்றோர் இருவரும் எழுந்து நிற்க முதல் முறையாக எதை பற்றியும் யோசிக்காமல் தான் எடுத்த முடிவினை நினைத்து கலக்கம் தோன்ற அதை சமாளிக்கும் தைரியத்துடன் நின்றான் யாழ்வேந்தன்.

 

"அகில் என்ன இது இங்கே என்ன நடக்குது..? நீ மனசுல என்ன நினச்சிக்கிட்டு இருக்கே..? இவங்க வந்ததுக்கான உண்மையான காரணத்தைச் சொல்லு..."

 

"அப்பா அது வந்து நம்ம கீர்த்தியை பொண்ணு கேட்டு..."கூறி முடிப்பதற்குள் அவன் கண்ணம் செவ்வென சிவந்தது.

 

"என்னங்க என்ன இது தோளுக்கு மேல வளர்ந்த பையனை அடிச்சிக்கிட்டு..." குறுக்கே வந்து அவரை தடுக்க,

 

"நீ விடு சித்ரா பெத்த அப்பன் நான் உயிரோட இருக்கும் போது எனக்கு தெரியாம என் பொண்ணு வாழ்க்கையை பார்க்க நினைக்கானா இவன், நம்ம தகுதி,அந்தஸ்து எங்கே..?இங்கே நிக்கிறானே இவனோட தகுதி எங்கே..?இவனுக்கு என் பொண்ணு கேட்குதா..? இவன் எல்லாம் இந்த வீட்டு படியேறி என் பொண்னை கேட்குற அவளுக்கு இடம் கொடுத்து வச்சது யாரு இதோ நிக்கிறானே உன் பையன் இவன் தானே..." கோவமாக பல்லை கடித்துக் கொண்டு கத்தியவர் அகிலனை மறுபடியும் போட்டு அடிக்க,

 

தன் தந்தை தன்னை அடித்ததை கூட பெரிதாக நினைக்காதவன் தனக்கும் கீர்த்திக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல் கூறியது,தகுதி அந்தஸ்து பார்த்து பேசிய அனைத்தும் கேட்டவன் கோபமாக முதல் முறையாக தன் தந்தையை எதிர்த்து நின்றான்.

 

தன்னை அடிக்க வந்த தன் தந்தையின் கையை பிடித்து தடுத்தவன், "இப்போ என்ன சொன்னேங்க தகுதி,தகாதரம்,அந்தஸ்து இதெல்லாம் உங்க கிட்ட இருக்கப் போய் தான் எங்கே அம்மா உங்களுக்கு கட்டிக் கொடுத்தாங்களா..? சரி எங்க தாத்தா சொத்து தரலைன்னா இப்போ இந்த தகுதிக்கு இப்போ வந்துருப்பீங்களா..? சரி அதையும் விடுங்க அன்னைக்கு உங்க சொந்த ஊருல இருந்து ஒருத்தவங்கள வந்தாங்காலே வீட்டுல கேட்டுட்டு முடிவு சொல்லுறோம்னு எவ்வளோ நாசுக்கா வேண்டாம் சொல்லிட்டு போன்னாங்க அவங்க கிட்ட போய் மறுபடியும் பொண்ணு கேட்டீங்க பாருங்க அப்போ எங்கே போச்சு உங்க அந்தஸ்து..." தன் மனதில் இருப்பதை சொல்லிக் கொண்டு போக,

 

"டேய் என்னடா இது அவர் உங்க நல்லதுக்கு..."

 

"அம்மா நீங்க கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க. அவ இப்போ கல்யாணம் வேணும்ன்னு கேட்டாலா..? சரி உங்க பொண்ணு மேல ரொம்ப அக்கறை இருக்குள்ள அப்போ ஏன் அவளை உங்க கூட வச்சிகாம ஒவ்வொரு ஊருக்கா அனுப்புனீங்க..? பாசமா எங்கே ரெண்டு பேர் கிட்ட ஒரு வார்த்தையாவது பேசிருப்பீங்களா..? எங்களுக்காக என்ன செஞ்சீங்க இதுவரை, ரெண்டு நாளுக்கு முன்னாடி கீர்த்தி ட்ரீட்மெண்ட் பத்தி பேச ஹாஸ்பிட்டல் போகணும் சொன்னீங்களே போனீங்களா..? இன்னும் எவ்வளோ சம்பாதிக்கணும் நினைக்கிறீங்களோ சம்பாதிச்சிக்கோங்க நீங்க இருக்குற வரைக்கும் நீங்க சொன்ன தகுதி,அந்தஸ்து உங்க கூட வரும்,ஆனா நாங்க யாரும் உங்க கூட இருக்க மாட்டோம், எங்களுக்கு நீங்க சொன்ன தகுதி தேவையில்லை,பாசம் அரவனைப்பு,சொந்த பந்தம் தான் வேணும்..." மூச்சு வாங்க தன் மனதில் இருந்த அனைத்தையும் கூறியவன் விண்டோவின் அருகில் சென்று வெளிப்புறம் அமைதியான இயற்கையை வேடிக்கை பார்த்தவாறு நின்றான் அகிலன்.

 

இப்போது என்ன செய்வது என தெரியாமல் ரத்னா,திருமுருகன் இருவரும் தன் மகனை பார்க்க, அவனோ எதை பற்றியும் யோசிக்காமல் சுதியின் அறை நோக்கி சென்றான்.

 

அவன் செல்வதை பார்த்த ஜெயபிரகாஷ் அவனை தடுக்கப் போக குறுக்கே வந்து நின்றார் சித்ராதேவி.

 

"சித்ரா எவனோ ஒருத்தன் நம்ம பொண்ணு ரூமுக்கு போறான்..."

 

"என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும் நினைக்கேன். ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்குறேன் இதுல நீங்க தலையிடாதீங்க..." இரு கை எடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க கேட்க,

 

"ச்சே என்னமோ பண்ணித் தொலைங்க..." கோபமாக கத்தியவர் தன் கையில் வைத்திருந்த கோர்ட்டை வீசி எரிந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

 

அவர் சென்றதும் வேந்தனின் பெற்றோரின் அருகில் வந்த சித்ரா, "என்னை மன்னிச்சிருங்க அவர் பேசினது தப்பு, நீங்க மனசுல எதுவும் நினைச்சிக்காதீங்க..?" என்றவர் அதன் பின் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க,

 

"எல்லா அப்பனுக்கு வர்ற நியமான கோபம் தான்ம்மா என்ன எங்கே பையன் கொஞ்சம் முன்னாடியே சொல்லிருந்தா நாங்க இங்கே வந்து நின்னுருக்க மாட்டோம், நாங்க வந்தது தப்பு தான் நீங்க தான் எங்களை மன்னிக்கணும்,வா ரத்னா கிளம்பலாம்..."என்றவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டுச் செல்ல,

 

"ஒரு நிமிஷம் நில்லுங்க அப்பா..."என்ற அகிலன் அவர் முன் வந்தான்.

 

அவரோ எதுவும் சொல்லாம அமைதியாக நிற்க, "தயவு செய்து உங்க மருமகளை கூட்டிட்டு போயிருங்க எனக்கு என் பிரெண்டோட லைப் ரொம்ப முக்கியம் அவனுக்கு கீர்த்தி இல்லாம இருக்க முடியாது. என் பிரெண்ட்டும் என் தங்கச்சியும் சேர்ந்து வாழனும் நினைக்கிறேன்,நான் வேன்னும்னா உங்க காலுல கூட விழுகுறேன்..."என்றவன் அவர் காலில் விழ போக,

 

"ஐயோ கண்ணா என்னப்பா இதெல்லாம் நீயும் என் பையன் மாதிரி தான் நீ போய் என் காலுல விழுந்துகிட்டு இப்போ சொல்லுறேன் உன் தங்கச்சி தான் எங்கே வீட்டு மருமக..."

 

"ரொம்ப நன்றிப்பா..."

 

"இருக்கட்டும்ப்பா எல்லா ஏற்பாடு பண்ண ஆரம்பிக்கலாம்..."என்க,

 

அதே நேரம், "மாமா..!,அத்தை..!" என்ற சுதியின் குரல் வந்த திசையை பார்த்து திரும்ப அவளை தோளோடு அணைத்தவாறு வேந்தன் அழைத்து வர அவள் நிலையை கண்டு இருவரும் திகைத்து அதிர்ச்சியுடன் நின்றனர்.


Ezhilanbu liked
Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: