Forum

Chinnanchiru kannasaivil - 7  

  RSS

சங்கரேஸ்வரி குருசாமி
(@sankareswari)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 65
02/12/2019 10:31 am  

வளர்மதியின் வரவிற்காக கல்லூரி வெளியே காத்துக் கொண்டிருந்த செழியன் அவள் அண்ணனுடன் வருவதை கண்டும் கண்டுகொள்ளாதவாறு தன் மொபலை நோண்டிக் கொண்டு பைக்கின் மேல் அமர்ந்திருந்தான்.

 

இளஞ்செழியனை கண்ட வளர்மதி பயத்துடன் இருக்க அவனின் முன் வந்து தன் பைக்கை நிறுத்தினான் எழிலரசன்.

 

"என்ன செழியா இங்கே நிக்கிறா..?" என்க,தன் அண்ணனின் பின்னிருந்து இறங்கினாள் வளர்மதி.

 

"என் பிரெண்டோட தம்பி இந்த காலேஜில தான் படிக்கான் அவனுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா அண்ணா..?"என்றவாறு பணிவுடன் எழிலின் முன் நின்று கேட்க,

 

"நல்லா இருக்கேன்டா. சரி வளரு நீ போ நான் ஈவினிங் வரேன்..."என்க சரி என்றவாறு உள்ளே நுழைந்தாள் வளர்மதி.

 

"அப்பறம் உன் வேலையெல்லாம் எப்படி போகுது அப்பா,அம்மா எப்படி இருக்காங்க..?பார்த்து ரொம்ப நாள்ளாச்சு இந்த வீக்கென்ட் உங்க வீட்டுக்கு வரேன் சரியா..."

 

"ஹ்ம்ம் சரி அண்ணா நீங்க போங்க உங்களுக்கு ஆபீஸ்க்கு லேட்டாகிருச்சுல நான் அவனை பார்த்துட்டு கிளம்புறேன்..."

 

"இல்ல பரவாயில்லை நான் வேணும்னா இருக்குறேன் அவன் வந்ததும் போறேன்..."

 

"நீங்க போங்க அண்ணா நான் பார்த்துகிடுறேன்..."என்றவன் அதன் பின் ஏதேதோ சொல்லி எழிலை அனுப்பி வைத்தான்.

 

எழிலரசன் சென்றதும் மதிக்கு குறிஞ்செய்தி அனுப்ப அடுத்த நொடி கோபத்துடன் அவனின் முன் நின்றாள் வளர்மதி.

 

"இளா உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன் எனக்கு போன் பண்ணாதேன்னு. ஏன்டா இப்படி என் உயிரை வாங்குறே..? இன்னைக்கு மட்டும் அண்ணணுக்கு தெரிஞ்சா என்னை காலேஜிற்கே அனுப்பிருக்க மாட்டாங்க. எனக்கு என் காதலை விட படிப்பு தான் முக்கியம். இனிமே நீ மட்டும் இப்படி பண்ணுனா நான் உன்னை பார்க்குறது இதுதான் கடைசியா இருக்கும் சொல்லிட்டேன்..." படபடவென்று பொரிந்து விட்டுச் செல்ல,

 

"மதி இனிமே நீயே என்னை பார்க்கணும் ஆசைப்பட்டாலும் என்னால இனிமே உன்னை பார்க்கவே முடியாது..."என்க, அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியுடன் வேகமாய் திரும்பினாள்.

 

"என்னாச்சு இளா, நீ என்ன சொல்லுற..?"என்றவாறு அவன் அருகில் வர,

 

"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா நம்ம வெளியே போகலாம்..."என்றவனோ அவளின் கரம் பற்றி அழைத்தான்.

 

"ஏதா இருந்தாலும் இப்படியே சொல்லு எனக்கு இன்னைக்கு பிராக்டிக்கல் இருக்கு..."என்றவாறு அவனிடமிருந்து தன் கையை பிரிக்க,

 

"எனக்கு மும்பைக்கு ட்ரான்ஸ்பர் ஆகிருச்சி நாளைக்கே கிளம்பணும். இனிமே உன்னை பார்க்க முடியாது..." என்றவனோ தவிப்புடன் விடாது அவள் கையை இறுக பற்றினான்.

 

பற்றியிருந்த அவன் கையின் அழுத்தத்திலே அவன் தவிப்பை உணர்ந்தவள் விழிகளில் கண்ணீர் வடிய அப்படியே நின்றாள்.

 

எப்போதும் தன்னை ஈர்க்கும் அவளது வசிகரிக்கும் சின்னஞ்சிறு விழி இன்று கலங்கியது.

 

தன் நெஞ்சோடு அவளை அழைத்துக் கொண்டு ஆறுதல் கூற மனம் ஏங்க, பொது இடம் கருதி அமைதியாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.

 

"மதி நான் கிளம்பணும் நாளைக்கு..."

 

"திடீருன்னு இப்படி சொல்லுற என்னை விட்டு என்னைக்கும் பிரிய மாட்டேன்னு தானே சொன்னே..? இப்போ நீயும் என்னை விட்டுப் போறையா..?" அழுது கொண்டு வளர்மதி கூற,

 

"நான் விரும்பி இதை கேட்கல கொஞ்சம் நாளு தான் மறுபடியும் இங்கையே வந்துருவேன். உன்னை விட்டு எங்கையும் போக மாட்டேன்..."

 

"நீ கண்டிப்பா போகணும்மா எனக்கு ரொம்ப பயமாயிருக்கு ப்ளீஸ் போகாதே இளா..."

 

"சாரி மதி நான் போய் தான் ஆகனும் அடிக்கடி வரேன் சரியா. எனக்கு இன்னைக்கு முழுக்க உன் கூடவே இருக்கணும் ஆசையா இருக்கு அதான் உனக்கு கால் பண்ணுனேன். ப்ளீஸ் வாயேன் எங்கையாவது போகலாம்..." அவள் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு ஏக்கத்துடன் கூறினான்.

 

அதே நேரம் அவர்கள் அருகில் வந்த வந்தனா, "மதி சீக்கிரம் வா எக்ஸாம் இருக்கு லேட்டாகுது. நீங்க அப்பறம் பேசிக்கோங்க..."என்றவாறு மதியை அழைத்துக் கொண்டு செல்ல முயல,அவளோ நகராது அப்படியே நின்றாள்.

 

"இளா..."அவளும் ஏக்கத்துடன் அழைக்க,

 

"சரி நீ போ மதி ஈவினிங் மீட் பண்ணலாம். எக்ஸாம் நல்லா எழுது ஆல் தி பெஸ்ட்..."கலகத்துடன் அவளை அனுப்பி வைக்க அதை கண்ட வந்தனாவிற்கே மனம் கலங்கியது.

 

தான் இங்கிருந்தால் அவள் கிளம்ப மாட்டாள் என்பதை அறிந்தவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல மதியை அழைத்துக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்.

 

"மதி என்னாச்சு ஏன் உன் கண் கலங்கிருக்கு உங்களுக்குள்ள எதாவது பிரச்சனையா..?"

 

"வந்தனா..." அழுகையுடன் அவளை அனைத்துக் கொள்ள அவளை சிறிது நேரம் அழ விட்டு அமைதியாக இருந்தாள்.

 

"இளாவை ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்களாம். இனிமே என்னால அவனை பார்க்க முடியாது..."

 

"ஏய் லூசாடி நீ எதுக்கு எடுத்தாலும் இப்படி அழுகுறதை நிறுத்து அவன் என்ன அங்கையே இருக்க போறான். அடிக்கடி வருவான் அவனை பார்க்கணும் தோணுதா வீடியோ கால் பண்ணு. இதுக்கு போய் அழுதுகிட்டு வா எக்ஸாம்க்கு டைம்மாச்சு..." என்ற வந்தனா அவளை அழைத்துக் கொண்டு செல்ல ஏனோ உள்ளுக்குள் பெரும் பயம் ஒன்று அவளை அலைகழித்தது.

 

எப்போது ஈவினிங் வரும் அவனை காண்போம் என்ற தவிப்பில் அன்றைய நாளை கடக்க முயல அவள் கண்ட ஒவ்வொரு திசையிலும் இளாவின் முகமே நியாபகம் வந்தது.

 

முதல் நாள் அவனை கண்ட போது தன்னையும் அறியாமல் அவன் கூறிய பொய்யை நம்பியது,மறுநாள் தன் அண்ணனுடன் தன்னை கண்டதற்கு பின் மன்னிப்பு வேண்டி தன்னுடன் பழகிய விதம்,அவனது குறும்புச் செயல் தன்னிடம் காதலை சொல்லிய தருணம்.இந்த கல்லூரியில் தங்கள் இருவரும் சந்தோஷமாக கழித்த நினைவுகள் அனைத்தும் வந்து சேர துடித்துக் கொண்டிருந்தாள்.

 

அகிலன் அன்று வெளியே சென்றிருக்க அவன் இருக்கையில் அமர்ந்திருந்தாள் சுதிகீர்த்தி.

 

"மே ஐ கமின் சார்..."என் கேட்டவாறு டோரை தட்டிக் கொண்டு ஆனந்த் வர அங்கே அமர்ந்திருந்த கீர்த்தியை கண்டான்.

 

"மேடம் சார் இல்லையா..?" பணிவாய் கேட்க,

 

"இல்ல அண்ணா வெளியே போயிருக்காங்க கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்க. என்ன சொல்லணும் சொல்லுங்க நான் சொல்லிறேன்..."

 

"ஒன்னுமில்லை மேடம் நான் சார் வந்ததும் வரேன்..."என்றவன் செல்ல முயல.

 

"பரவாயில்லை என் கிட்ட சொல்லுங்க நான் கால் பண்ணி அண்ணா கிட்ட சொல்லிறேன்..."

 

"இல்ல மேடம் ஒரு பேப்பர்ஸ்ல சைன் பண்ணனும் அதை வாங்க தான் வந்தேன் உங்களால தான் அதை பண்ண முடியாதுல. உங்களுக்கு பார்வை இல்லியே..." என்றவன் இன்னும் ஏதேதோ சொல்ல,

 

ஆனந்த் மனதில் அகிலன் தன்னன அடித்து அவமானப்படுத்தியதை மட்டுமே இப்போது நினைவில் இருக்க குரோதத்துடன் கூற, அவன் கூறியதை கேட்டவள் கண் கலங்கியவாறு அப்படியே இருக்கையில் அமர்ந்தாள்.

 

அவளை கண்டு சந்தோஷமாக திரும்ப அடுத்தநொடி தன் கன்னத்தை பற்றிக் கொண்டு நின்றான் ஆனந்த்.

 

திடீரெண்டு கேட்ட ஓசையில் கலங்கிக் கொண்டு இருந்த கீர்த்தி எழுந்து நிற்க, "இதுக்கு அப்பறம் ஏதாவது சுதி கிட்ட பேசுனா நீ உயிரோட இருக்குற கடைசி நாள் இது தாண்டா,கெட் அவுட்..."என்று யாழ்வேந்தன் கத்த அவனை பார்த்து முறைத்தவாறு வெளியேறினான் ஆனந்த்.

 

"சாரி சுதிம்மா அவன் ஏதோ தெரியாம பேசிட்டான் இனிமே உன் முன்னாடியே வர மாட்டான் நீ இதை நினைச்சி பீல் பண்ணாதே சரியா..."என்ற வேந்தன் அவள் அருகில் நெருங்கி, பின் எதையோ நினைத்து விலகி நின்றான்.

 

அவன் தனக்கு ஆறுதல் கூறியவாறு தன்னை நெருங்கியது பின் விலகி நின்றது அனைத்தையும் உணர்ந்தவள் மனதில் பெருங் குழப்பம் வந்து சென்றது.

 

அவன் வெளியே செல்ல முயல்வதை காலடி ஓசையில் மூலம் அறிந்தவள், "ஒரு நிமிஷம் இப்போ நடந்ததை அண்ணா கிட்ட சொல்ல வேண்டாம் பிளீஸ்..."என்க,

 

"நீ என்கிட்ட கெஞ்சணும் அவசியமே இல்லை நீ எப்படி சொன்னாலும் உன் பேச்சுக்கு நான் மறுப்பு சொல்ல மாட்டேன்..."கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

 

அவன் சென்றதும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவளுக்கு மனம் முழுவதும் ஆனந்த் சொன்னதே ஒலிக்க சற்று பின் சாய்ந்து விழி மூடினாள். நேரம் சென்று கொண்டிருக்க மொபைல் ஓசையில் கலைந்தவள் மெல்ல எழுந்து தேடி அதை எடுத்தாள்.

 

"ஹலோ கீர்த்தி நான் சத்யா பேசுறேன் எப்படி இருக்கே...?"என்று அவள் தோழி கேட்க,

 

தன் உயிர்த் தோழியின் குரலை கேட்ட அடுத்தநொடி தன் மனதில் இருந்த கவலை அனைத்தையும் கொட்டி தீர்த்தாள்.

 

"சத்யா நான் இப்போ ரொம்ப பலகீனமாகிட்டேன் என்னால முடியல நான் எல்லாதைக்கும் பாரமா இருக்கேன்னு தோணுது இதுக்கு அன்னைக்கே அந்த கடவுள் என்னை காப்பாத்தாம கொன்னுருக்கலாம் கொஞ்சம் நாளுல என் வீட்டுல இருக்குறவங்க கூட என்னை மறந்திருப்பாங்க. ஆனா இப்போ.."என அழுது கொண்டே புலம்ப,

 

அதே நேரம் சீக்கிரம் வீட்டிற்குச் செல்வதற்கு அகிலனிடம் கேட்க உள்ளே நுழைந்த எழிலரசன் அவள் கூறிய அனைத்தையும் கேட்டவாறு நின்றான்.

 

அவள் இப்போது அனுபவிக்கும் இந்த கொடிய வலிக்கு தானும் ஒரு காரணமோ என்ற நினைப்பில் தவித்தவன் அப்படியே அமைதியாக வெளியேறினான்.

 

சில நாட்களாக சந்தோஷமாக இருந்த தன் மகள் இன்று கவலையுடன் வீட்டிற்குள் நுழைய அவளை கண்ட அந்தநொடியே அதை உணர்ந்தார் சித்ராதேவி.

 

"கனகா எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வை..."என்று வேலைகாரியை கூறியவர் தன் மகளை அழைத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்றார்.

 

"கீர்த்தி நீ போய் பிரெஸ் ஆகிட்டு வா அப்பறம் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்..."என்க,சரி என்றவாறு தன் தாய் எடுத்துக் கொடுத்த உடைகளை வாங்கிக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

 

"இவளுக்கு என்னாச்சு ஏன் எதையோ நினைச்சிகிட்டு இருக்கா..? ஒரு வேலை ஆபீஸ்ல யாரும் எதாவது சொல்லிருப்பாங்களா அப்படின்னா என்கிட்ட அகிலன் சொல்லிருப்பானே..?" தன் மனதை போட்டு குழப்பிக் கொண்டு இருக்க சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள் சுதிகீர்த்தி.

 

"கீர்த்திம்மா என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கே..?"கேட்டவாறு அவள் கூந்தலை பின்னலிட,

 

"ஒன்னுமில்லைம்மா..."என்றவனில் குரலில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அறிந்த சித்ரா அவளாகவே கூறட்டும் என்று நினைத்து அவளை அழைத்துக் கொண்டுச் சென்றார்.

 

இரவு தாமதமாக வீட்டுக்குள் வந்த யாழ்வேந்தன் வாசலில் அமர்ந்திருந்த தன் பெற்றோரை கண்டான்.

 

"என்னாச்சு என் ரெண்டு பேரும் வெளியே உட்கார்ந்திருக்கீங்க..? சாப்பிட்டீங்களா..? செழியா எங்கே நாளைக்கு கிளம்ப தேவையான ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டானா..?"

 

"ஹ்ம்ம் எல்லாம் ரெடி பண்ணிட்டான் நல்லா காத்தடிச்சது அதான் கொஞ்சம் நேரம் வெளியே உட்கார்ந்திருக்கலாம் நினைச்சோம். அவன் இல்லாம எப்படி தான் இருக்கவோ..."

 

"ஐயோ அம்மா அவன் எங்கே போக போறான் பக்கத்துல தான் இருப்பான் உங்களுக்கு எப்பயெல்லாம் அவனை பார்க்கணும் தோணுதோ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க. அடுத்த நிமிஷமே அவனை என் செல்ல அம்மா முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டுவேன்..."என்றவாறு தன் தாயின் தாடையை பிடித்து கெஞ்சியவாறு அவர் மடியில் தலை சாய்ந்தான்.

 

"இன்னைக்கு என்னப்பா ரொம்ப நேரமாச்சி. சரி வா அம்மா சாப்பாடு எடுத்து வைக்கேன். எழுந்திரு..."

 

"அது இருக்கட்டும் நான் அப்பறம் சாப்பிடுறேன். உங்க ரெண்டு பேரும் கிட்டையும் ஒரு முக்கியமான விசியம் சொல்லனும்..."

 

"என்னப்பா சொல்லனும் சொல்லு..."

 

"நான் என்ன பண்ணுனாலும் அது சரியா இருக்கும்ன்னு நீங்க நம்புறீங்களா..?"

 

"ஹ்ம்ம் கண்டிப்பா நம்புறோம்ப்பா அப்படி என்ன செய்யப் போறே..?"

 

"எனக்கு இது போதும் சந்தோஷமான காரியத்தை தான் செய்ய போறேன். சாப்பாடு எதுவும் வேண்டாம்..."என்றவன் மனதிற்குள் தன் முடிவினை எண்ணி சந்தோஷமாக விசிலடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

 

அவனது மனம் முழுவதும் தன்னவளில் நினைப்புடன் இருக்க இதை எதையும் அறியாத கீர்த்தியோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.


Deepika liked
Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: