அத்தியாயம் 1  

  RSS

Sivaranjani
(@sivaranjani)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 5
4 Dec 2019 7:00 pm  

முன்னுரை:

தொலைவில் இருந்தும் தொலைந்தேன் உன்னில்_  இதில் இரு கதைகள் மாறி மாறி வரும். இரண்டு கதைகளும்  இணையும் புள்ளிதான்  கதையின்  கரு.சுவாரஸ்யமாக உணர்வீர்கள்  என்று நம்புகிறேன்!!!  நன்றிகள்..... 

அவனது டைரிக்  குறிப்பிலிருந்து....

என் வாழ்வின் வானவில்லாய்  வந்தவளே!

இவ்வுலகம் காணா நிறங்களும் உன்னில்  கண்டு  களித்திருந்தேன்!

ஆனால் தற்போதோ இருளின் நிறம்  மட்டுமே சுமக்கிறது  என் நாட்கள்!

**************************

     நான் மகிழினி.பெயருக்கு ஏற்றார் போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வலம் வருவேன். பிறரையும் என்னால் இயன்றவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வேன்.

    ஆனால் எல்லாம் அவனைப்  பார்க்கும்வரைதான்! ஏன்தான் அவனைப் பார்த்தேன் என்று நித்தமும் வருந்துகிறேன்.

   அவனைப் பார்த்த நொடி  முதல், இன்று வரை, மகிழ்ச்சி என்பதன் பொருளே மறந்து  போய்விடும் என்பதுபோல்தான் மிகுந்த வேதனையுடன் கரைந்து  சிதைகிறது என் காலங்கள்!

   அதுவும் என் பிறந்தநாளிலா அவனைக் காண வேண்டும்!!!

ஆம்! அன்று என் பிறந்த தினம்! நள்ளிரவு 12 மணி முதல், உறவினர்கள் நண்பர்கள்,முகம் தெரியாத முகநூல் நண்பர்கள் அனைவரும் என்னை வாழ்த்து  மழையில் நனைத்து திக்குமுக்காடச் செய்திருந்தனர்!!

நானும் மகிழ்ச்சியில் திளைத்தவாறே,என் மாணவர்களிடம் பெறப்போகும் வாழ்த்தினை எண்ணித் துள்ளலான மனநிலையுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன்.

  சற்றே ஆள்நடமாட்டம் குறைவானதொரு இடத்தில்,எங்கிருந்து வந்தானோ,திடீரென ஒருவன் என் முன்னே வந்து நின்றான்.

  நான் எதுவும் யோசிக்கும் முன்,என் வலக்கரத்தினை அவன் இரு கரங்களிலும் பற்றினான்.

  நான் அரண்டு விழித்து என் கையினை உருவிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து சுதாரிக்கும் முன், ’மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே! ப்ளீஸ்! பயப்படாத! நான் வம்பு பண்ண வரல; வாழ்த்து சொல்லத்தான் வந்தேன்!’ என்று கூறினான்.

  நான் சற்றே ஆசுவாசத்துடனும், இன்னும் தெளியாத பயத்துடனும், பெரும் குழப்பத்துடனும் அவனை நோக்கினேன். அப்போதுதான் அவன் முகம் நோக்கினேன்.

  அவனோ, இன்னுமே என் கரத்தினை விடாமல்,என் கண்ணோடு கண் நோக்கி,எப்போவும் இந்தக் கண்ல இருந்து துக்கத்தோட அடையாளமா கண்ணீர் வரக்கூடாது! எப்போவும் இதே போல ஹாப்பியா இருக்கணும்; நிம்மதியா இருக்கணும்; மே காட் ப்லெஸ் யூ!’ இவ்வாறு கூறி, என் தலையில் பட்டும் படாமல் கை வைத்து வாழ்த்திவிட்டு, விடுவிடுவென வேகமாக திரும்பிப் பாராமல் சென்றுவிட்டான்.

  நான் திக் பிரமை பிடித்தது போல் விழித்து சுதாரிப்பதற்குள், அங்கே வேகமாக ஒரு பைக் வர, அதில் ஏறிச் சென்றுவிட்டான்.

  நான் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை; யாரென்றே தெரியவில்லை; சற்றும் பரிச்சயம் இருப்பதாகத் தோன்றவில்லை!

  ஆனால் இந்நிகழ்வுக்குப் பின்தான் நான் அவனால் வெகுவாக பாதிக்கப்பட்டேன்….

****************************************************

   சாக்ஷி முதுகலை இரண்டாமாண்டு இயற்பியல் பயிலும் மாணவி.

  அன்று வகுப்பில் அவர்களின் ஹெச்.ஓ.டி.க்வாண்டம் மெக்கானிக்ஸை அப்படியே உருக்கி மாணவர்களின் மூளையில் ஊற்றிவிடும் உத்வேகத்துடன் அதி தீவிரமாக விரிவுரை ஆற்றிக் கொண்டிருந்தார்.

  மாணவர்களோ பரிதாபமாக உறக்கத்துடனும் அவரின் விரிவுரையுடனும் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தனர்.  இதில் சாக்ஷி வேறு இடையிடையே சந்தேகங்கள் எழுப்பி, அனைவரின் கொலை வெறிக்கு உரம் தூவியபடி இருந்தாள்.

   அவ்வாறு அவள் மும்முரமாக உரம் தூவிக் கொண்டிருந்த சமயம்,இவர்களின் வகுப்பறை வாசலில் ஒருவன் வந்து நின்றான்.

  “ எக்ஸ்யூஸ்மி சார்! ஸாரி டு டிஸ்டர்ப் யூ. மிஸ்.சாக்ஷி இங்க இருக்காங்களா?”

  “  எஸ். நீங்க?”

   “  ஐம் சிவப்ரியன்…”

  “  ஓஹ்! சாக்ஷி அப்பா கால் பண்ணிசொன்னார்! நீங்கதான் அந்த சிவப்ரியனா?”

   “  ஆமா சார். இது என்னோட விசிட்டிங் கார்ட். நான் அவங்களை கூட்டிட்டு போலாமா? இல்ல, அவங்க அப்பாவை  ஃபோன்ல பேச சொல்லவா சார்?”

   “ இட்ஸ் ஓகே.நீங்க கூட்டிட்டுப்  போங்க.”

  அவளின் குழம்பிய முகத்தினைப் பார்த்தவன் சொன்னான்,

   “ டென்சன் ஆகாம வாங்க சாக்ஷி. நல்ல விஷயமாத்தான் கூப்ட்ருக்காங்க!”

  ஹெச்.ஓ.டி. பார்க்காத சமயத்தில் சிவப்பிரியனை நோக்கி ஒரு பெரிய கும்பிடு போட்டான் ஒரு மாணவன்.

  ஐந்து நிமிடமாவது ஆசுவாசம் கிடைத்ததே என்ற நிம்மதியுடன்  பெருமூச்சு விட்டனர் மாணவர்கள்.

  “யார்டி இது?, கருப்பா இருந்தாலும் கலையா இருக்கான்டி”  என்ற கேள்வியும்,

  “  அப்டியே கூட்டிட்டு போய்ட்டா நல்லா இருக்கும்! “  என்ற கிண்டலும் ரகசியமாய் அரங்கேற,

    “  உங்களைலாம் வந்து வச்சிக்கிறேன், ஹேய் மது,ஒழுங்கா கிளாஸ் கவனிச்சு வை,ஈவினிங் கால்  பண்றேன்”  என்றவாறே அவள் புறப்பட்டாள்.

   ஒருபுறம் தொல்லை விட்டது என்று மகிழ்ந்தாலும், மறுபுறம் நம்மை இவ்வாறு அழைத்துச் செல்ல யாரும் வருவதில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு விட்டனர் அனைவரும்.

  சாக்ஷியின் உயிர்த் தோழி மது  ஏகமாக முறைத்து வழி அனுப்பினாள். அவள் வெளியில் வந்ததும்,அவன் கைபேசியினைக் காதில் வைத்தவாறு வேகமாக நடந்தான்.

   சாக்ஷியோ, ” ஹெலோ சார்!  யார் நீங்க?என்னை நீங்க ஏன் வந்து கூட்டிட்டுப் போறீங்க?”  என்றவாறே பின்தொடர்ந்தாள்.

“ உங்க வீட்ல இருந்து வர முடில. அதான் என்னை அனுப்பினாங்க. நான் உங்க அப்பா பிரண்டோட பையன்.” சிவா

    அவள் குழப்ப பாவத்துடனேயே அவனை நோக்கவே,

“ இந்தாங்க உங்க மாமா பேசறார்”  என்று கைபேசியை வழங்கினான்.

  “ ஹலோ”

  “ ஹலோ சஷி நான்  மாமா பேசறேன். நான் உங்க காலேஜ்  வாசல்லதான்  நிக்கறேன். எனக்கு கால்ல சுளுக்குடா, ட்ரைவ் செய்ய முடில;  சரியா நடக்க முடில. அதான் சிவாவை  அனுப்பினேன். நீ வாடா! போகும்போது பேசிக்கலாம்”

  “ மாமா நீங்க எப்போ வந்தீங்க?அக்கா,பாப்பாலாம் வந்திருக்காங்களா?”

  “ஆமாடா நீ வாயேன்,பேசிக்கலாம் “

“சரி மாமா”

  இவள் அவனிடம் கைபேசியைக் கொடுத்த உடன்,

    “ஏங்க! உங்களுக்கு  வாழ்க்கைல லட்சியம் கனவுலாம் இல்லையா?”     சிவா 

  “ ஏன் கேக்குறீங்க?”  சஷி

“ இல்ல, ரொம்ப குட்டிப் பொண்ணாத் தெரியறீங்க! அதுக்குள்ள  கல்யாணம் பண்ணிக்க போறீங்களேன்னு கேட்டேன்! “   சிவா

“ நான் எப்போங்க உங்ககிட்ட என் கல்யாண இன்விடேஷன் குடுத்தேன்?”    சஷி

“அதான் பொண்ணு பார்க்க வர்றாங்கள்ல,சீக்கிரமே குடுப்பீங்க”  சிவா 

“வாட்ட்ட்ட்?”  சஷி

“அதுக்குதானே உங்களை கூட்டிட்டு போறோம். நீங்க குடுக்கற அதிர்ச்சியப் பார்த்தா உங்களுக்கே தெரியாதோ?” சிவா

அவளால் இதனை ஜீரணிக்கவே இயலவில்லை. எத்தனை தூரம் கெஞ்சியிருப்பாள், இப்போது திருமணம் வேண்டாம் என்று. அப்போதெல்லாம்,

“சும்மா ப்ரொஃபைல் பார்க்கறோம், எல்லாம் செட் ஆக டைம் எடுக்கும்ல, அப்டி ஏதாச்சும் செட் ஆனா, உன்னைக் கேட்டுட்டு, உனக்குப்  பிடிச்சா மட்டும்தான்  கல்யாணம் “

என்று கூறிவிட்டு, தற்போது இவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் எத்தனை பெரிய ஏற்பாட்டினை செய்துள்ளனர்.

அவர்கள் சமூகத்தில் பெண் பார்ப்பது என்பது, ஏறக்குறைய திருமணம் முடிவு செய்வதுதான்.

யாரோ முகம் தெரியாத மூன்றாமவனுக்குத் தெரிந்துள்ளது கூட தனக்குத் தெரியவில்லையே என்று, தன் வீட்டார் மேல் ஆத்திரமும்,கோபமும்,அழுகையும் பொத்துக்கொண்டு வந்தது.

ஆனால் அவன் முன்பு எதையும் காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை.

  “எக்ஸ்க்யூஸ் மீ!  எனக்கு கால் வருது,ஒன் செக்”  என்று கூறி பையினைக் குடைந்துகொண்டே நகரப் பார்த்தாள்.

  “நான் பேசுறது பிடிக்கலைன்னா ஸ்ட்ரைட்டா  சொல்லுங்க. அதுக்கு ஏங்க இல்லாத ஃபோன்லாம் தேடறீங்க?”

   “போன் இல்லனு யார் சொன்னது?”

   “உங்க அப்பாதான். நீங்க ஃபோன் மறந்து வச்சிட்டு வந்திருக்கீங்க. அதான் உங்ககிட்ட பேச முடிலனு சொன்னார் “

இப்பொழுது என்ன கூறுவது என்று புரியாமல் ‘ஙே’ என விழித்தாள்.

    அவனோ சிரித்தவாறே,”சரி சரி ரொம்ப முழிக்காதீங்க, கண்ணு கீழ விழுந்திறப் போகுது!” என்று ஓட்டினான்

“ எல்லாம் என் நேரம், எவன் எவனோ என்னைக் கிண்டல் செய்றான். ஃபர்ஸ்ட் டைம் பார்க்குற முன்னப் பின்ன தெரியாத பொண்ணுகிட்ட எப்படி எவன் எவனோ என்னைக் கிண்டல் செய்றான். ஃபர்ஸ்ட் டைம் பார்க்குற முன்னப் பின்ன தெரியாத பொண்ணுகிட்ட எப்படி பேசுறான்?!. கொஞ்சம் கூட இங்கிதமே இல்ல! “  என்று மனதுள் அவனுக்கு அர்ச்சனை செய்தவாறு  தன் நிலையினை நொந்துகொண்டே வந்தாள்.

இவளின் முகபாவங்களைக் கண்ட  அவன்,

“ என்னங்க என்னைத் திட்டி முடிச்சிட்டீங்களா?” என்றான்.அவள் அதிர்ந்து பார்க்கவே,

  “ என்னங்க ஆனா ஊனா அதிர்ச்சியப் போட்றீங்க. சரி அதெல்லாம் போகட்டும். உங்ககிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன்”

“என்னது?”

“  ஒன்னே ஒன்னு “ என்று கூறிச் சிரித்தான்.

அவள் சற்றே திரும்பிக்கொண்டு, ” மரண மொக்கை! ஆண்டவா!  இவன்கிட்ட இருந்து என்னைக்  காப்பாத்து!”  என்று மைன்ட் வாய்ஸில்   வேண்டிக்கொண்டாள் .

“என்னங்க? மைன்ட் வாய்சா?” என்று அவன் கேட்கவே அதிர்ந்து  நோக்கினாள்.

என்னங்க நீங்க? ஆனா ஊனா அதிரிச்சியப்  போடறீங்க !  ஏதோ டென்ஷனா   தெரிஞ்சீங்க,அதான் ஜோக் அடிச்சா சிரிப்பீங்களேன்னு பார்த்தேன்”

“இனிமேல் கொஞ்சம் சொல்லிட்டு ஜோக் அடிங்க.நானும் சிரிக்க ட்ரை பண்றேன்.”

“சரி அவமானம் அக்செப்டட்! ஜோக்ஸ் அப்பார்ட், உங்களுக்கு ஒரு ஃப்ரீஅட்வைஸ் குடுக்குறேன். கேட்டா கேளுங்க, கேக்காட்டா போங்க! “

“வேணாம்ன்னா விடவா போறீங்க?”

“ எக்சாக்ட்லி! சொல்லியே தீருவேன்”

“  சரி சொல்லுங்க “(சொல்லித் தொலையும் மோட்)

“ க்யூட்டியா இருக்கீங்க”
அவள் முறைத்தாள்.
“சாரி,சாரி டங் ஸ்லிப் ஆயிருச்சு. குட்டியா இருக்கீங்க. இப்போப் போயி கல்யாணம் பண்ணி, ஏன் இஸ்திரிப் பொட்டி ஆகுறீங்க?நான் வரும்போது சார் கிட்ட டவுட்லாம் கேட்டுட்டு இருந்தீங்க.படிப்ஸ் போல. சோ நல்லாப் படிச்சு சைன்டிஸ்ட் ஆயி, நாட்டுக்கு சேவை பண்ணுங்க.என்ன நான் சொல்றது?”

“இப்போ நான் சொல்றத நீங்க கேளுங்க. ஃப்ரீ அட்வைஸ். கேட்டாக்  கேளுங்க. கேக்காட்டாப் போங்க. அடுத்தவங்க பர்சனல் விஷயத்துல மூக்கை நுழைக்காதீங்க. அது மேனர்ஸ் இல்ல. என்ன நான் சொல்றது ?”
என்று இவள் புருவம் உயர்த்திக் கேட்க, அவனோ ஒரு குறுகுறுப்பான ரசனையை ஒளித்து வைத்த குறுஞ்சிரிப்பொன்றை சிந்தி தலையாட்டி பொம்மை போன்ற தலையசைப்பைத் தந்துவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகவே நடந்தான்!

( நெருங்குவேன் )

 


Ezhilanbu liked
Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: