Forum

தொலைவு 16  

  RSS

யஷ்தவி
(@yashdhavi)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 43
23/03/2020 11:46 am  

'நான் அந்த போடோவை எடுத்தேன். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அன்றைக்கு அந்த ராட்சசி போன் பன்ன கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி, எல்லா போடோவையும் என் டேபலுக்கு மேலே எடுத்து வச்சேன். அப்போ அந்த போடோ எங்கே?' என யோசித்தான்.

'எல்லாமே அவளால் தான். அவ மட்டும் அன்றைக்கு போன் பன்னாமல் இருந்திருந்தால், எல்லாமே சரியா நடந்திருக்கும். சேர் இது வரைக்கும் என் கிட்ட இப்படி பேசினது கிடையாது. அவரு என்ன நம்பி தானே இங்க அனுப்பினாரு. அவரோட நம்பிக்கை, என்னோட இலட்சியம் எல்லாத்தையும் தொலைச்சிட்டு இருக்கேனே. இந்த போடோ தான் என்னோட இலட்சியத்தை அடையிறதுக்கு பிள்ளையார் சுழியே. இப்போ அவரு போடோ இல்லாமல் வர வேணாம்னு சொல்லிட்டாரு ****** எங்கே இருக்குமோ தெரியாதே. திரும்பவும் போடோ எடுக்குறது நடக்காத காரியம். என்ன பன்றது?' என சிந்தித்தான் கார்த்திக்.

கோவத்தில் அன்று அவனுக்கு அழைத்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டான். ஒரு முறை ரிங் சென்று கட் ஆனது. மீண்டும் அழைக்கும் போதே அவள் கட் செய்தாள். இதில் உச்ச கட்ட கோபத்தை அடைந்தவன் மீண்டும் மீண்டும் அழைத்தான். ஒரு கட்டத்தில் அழைப்பை ஏற்றாள் அவள்.

"ஏய் அறிவிருக்கா? இவளோ நேரமா கோல் பன்றேன், ஆன்சர் பன்னாமல் இருக்க இடியட்" என கத்தினான் கார்த்திக்.

"டேய் உன்னால் என் லக்சர் என்னை கிளாஸை விட்டே துரத்திட்டாங்க டா. எத்தனை பேர் முன்னாடி என்ன கேவலமா திட்டி அனுப்பிட்டாங்க டா பன்னாட" என்று இவளும் எகிற வாய்ப்பேச்சு உச்ச கட்டத்தை அடைந்தது.

"ஸ்டொப் இட்" என கத்திவிட்டு, 

"ஒரு பொண்ணு கிட்ட பேசுறோம்னு கொஞ்சமாவது நினைப்பு இருக்கா உனக்கு ?" என்றாள் அவள்.

"ஏய் நீ ஒரு பொண்ணுங்குறதை மறந்து பேசுற, பொண்ணுண்ணா கொஞ்சமாவது அடக்கம் இருக்கனும்" என இவன் எகிறினான்.

அவள், "இன்றைக்கு என்னோட கோலேஜில் இரண்டாவது நாள், நீங்க போன் பன்னதால் என்ன லக்சர் ரொம்ப திட்டிட்டாங்க. அதுவும் எல்லோர் முன்னாடியும். நீயே சொல்லு கோலேஜிற்கு வந்து இரண்டாவது நாளே இப்படி நடந்திருக்கு, இதற்கப்பொறமா அவங்களுக்கு எப்போவுமே என் மேலே வெறுப்போட தான் இருப்பாங்க. அவங்க என்னை கண்டுக்கவே மாட்டாங்க. எல்லோரும் என்னை ஒரு மாதிரியா தான் பார்ப்பாங்க. என்னோட கோலேஜ் லைபையே ஒரு போனாலேயே மாத்திட்டியேப் பா" என அழுகையுடன் முடித்தாள் அவள்.

ஏனோ கார்த்திக்கால் அவள் அழுவதை தாங்கவில்லை. அவன் மனமும் வலித்தது. காரணம் என்ன என்று ஆராயாமல் விட்டுவிட்டான்.

"ஓஓ நீ பெர்ஸ்ட் இயரா? ஆனாலும் உனக்கு கொழுப்பு ஜாஸ்தி தான், என்னமா பேசுற!!!  டு யூ நோ ஒன் திங் உன்னால் என் ஹெட்டோட நம்பிக்கையை இழந்துட்டேன். நீ மட்டும் அன்றைக்கு போன் பன்னாமல் இருந்து இருந்தால் இப்போ எல்லாமே கரெக்ட்டா  நடந்திருக்கும். எதுக்குடி என் லைபில் வந்த?" என இ்ன் பழைய பஞ்சாங்கம் பாடினான்.

இவ்வளவு நேரம் அவன் பேசியதைக் கேட்டு அமைதியாய் இருந்தவள் தான் செய்தது பிழையோ என்று எண்ணி மன்னிப்பு கேட்க நினைத்த போது, இறுதியாக அவன் டி என்று பயன்படுத்தியதில் வெகுண்டு எழுந்தாள்.

"டேய்  உனக்கு எத்தனை தடவை சொல்றது என்ன டீ போட்டு பேசாதன்னு? உனக்கு அங்கே வேலை இல்லன்னா இன்னொரு இடத்துல வேலை கிடைக்கும். என்னால் அப்படி கோலேஜை மாத்த முடியுமா இடியட்???" என இவள் கத்தினாள்.

"என்னது டா வா? ஆமான்டி நான் டி போட்டு தான் பேசுவேன். என்ன சொன்ன ஒரு இடத்துல இல்லன்னா இன்னொரு இடத்துல வேலை கிடைக்குமா? நீ என்ன நினச்சிட்டு இருக்க என் வேலையை பத்தி? என் பேரன்சிடம் எவளோ கஷ்டபட்டு பேர்மிஷன் கேட்டு இந்த வேலைக்கு வந்திருக்கேன் தெரியுமா? எனக்கு அவங்க ஒன் இயர் தான் டைம் கொடுத்திருக்காங்க. அதில் 6 மாசம் போயிருச்சு. எல்லாம் சரியா போயிட்டிருந்தது. உன் போன் வரும் வரைக்கும். இப்போ என்னால் திரும்ப ஆரம்பிச்சி என் இலட்சியத்த அடைய எனக்கு இன்னும் ஒரு வருஷம் தேவை, நான் எப்படி போய் திரும்ப போய் டைம் தாங்கன்னு கேட்பேன்"  என்று பொரிந்து தள்ளினான்.

"எப்படி? வாயல் தான் கேட்கனும்" என இவள் கூற கோபத்தில் உச்ச கட்டத்தை அடைந்த அவன்,

"உன் கிட்ட போய் சொன்னன் பாரு என் புத்தியை செருப்பால் அடிக்கனும் டி" என கத்தி விட்டு அழைப்பைத் துண்டித்தான் கார்த்திக்.

"அடிச்சிக்க அப்போவாவது உனக்கு நல்ல புத்தி வருதான்னு பார்ப்போம்" என முணுமுணுத்தாள்.

டென்ஷனில் அவன் டைமைப் பார்க்க அது 11.40 என காட்டியது. 'இப்போ சித்து கோளஜில் தான் இருப்பான். அவன் கிட்ட பேசவும் முடியாது. அம்மா கிட்ட பேசி அவங்களை டென்ஷன் பன்னவும் முடியாது. என்ன செய்வது'? என்று குழப்பித்தவித்தவன்  அருகிலுள்ள கதிரையை அவன் பக்கம் இழுத்து விட்டு அதில் கால்களை நீட்டி அமர்ந்தான்.

தலையிலுள்ள கேசத்தை கோதிக் கொண்டே இருந்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தித்தான். நேரமும் எதற்காக நான் நிற்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருந்தது. டைமைப் பார்த்தவன் அதில் 3.10 என காட்ட அதிர்ந்தான். இப்போ என்ன பன்னலாம்?  எல்லா வழியுமே மூடி இருக்கே என கண்களை மூடி சிந்தனையை சுழல விட்டான்.

அவன் இருந்த டென்ஷனில் தேடிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தை மூளை அவனுக்கு அறிவுறுத்தவில்லை. அனைத்திற்கும் அவள் மட்டுமே காரணம் என்றது மட்டுமே அவன் மனதில் இருந்தது.

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: