Forum

தொலைவு 17  

  RSS

யஷ்தவி
(@yashdhavi)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 43
23/03/2020 11:59 am  

அவன் இருந்த டென்ஷனில் பசியோ தாகமோ அவனுக்கு வரவில்லை. அவள் மட்டுமே அனைத்திற்கும் காரணம் என சிந்தித்தவாறே கண்களை மூடிக் கொண்டு இருந்தான் கார்த்திக். அவனை அறியாமலேயே நித்திராதேவி தழுவிக் கொண்டாள்.

"என்ன கார்த்திக் போடோவையும் தொலைச்சிட்டு, என் நம்பிக்கையையும் உடைச்சிட்டு இப்படி நிம்மதியா தூங்கிட்டு இருக்க?" என அவன் ஹெட் கத்த திடுக்கிட்டு எழுந்தான்.

'கனவா?' என நினைத்து விட்டு கண்களை திறக்க அவனை இருள் சூழ ஆரம்பித்தது. மீண்டும் டைமை பார்க்க, அது 6.30 என காட்டியது.

'இவளோ நேரமாவா தூங்கி இருக்கேன்?' மொபைலை சைலன்ட் மோடில் வைத்தது ஞாபகம் வர அவசரமாக போனைப் பார்த்தான். அதில் அவளிடம் இருந்து 5 missed callகள் வந்து இருந்தது.

'இவ எதுக்கு திரும்ப கோல் பன்னி இருக்கா?' என நினைத்தவனை மொபைலை பார்க்கச் செய்தது அவளின் அழைப்பு.

கோவத்தில் அவள் அழைப்பைத் துண்டித்தான் கார்த்திக். இது சரி வராது என இவனே சித்துவிற்கு அழைத்தான்.
என்று நடந்ததை கூறி முடித்தான் கார்த்திக்.

"அப்போ அவ எதுக்கு திரும்ப கோல் பன்னான்னு நீ கேட்கவே இல்லை அப்படிதானே?" என சித்து கேட்க,

"ஆமாம் மச்சான் அவ கூட மனிஷன் பேச முடியுமா? நா ஏதாவது சொல்ல அவ திருப்பி ஏதாவது சொல்ல நான் கோவத்துல என்னை மறந்து ஏதாவது தப்பா பேசிட்டேன்னா? அதான் வம்பே தேவையில்லன்னு எடுக்க இல்லை" என்றான் கார்த்திக்.

இவன் பேசுவது ஒவ்வொன்றையும் மனதில் குறிப்பெடுத்துக் கொண்டே மனதாலேயே சிரித்தான் சித்து. சித்துவோடு பேசும் போது கூட அவள் கார்த்திக்கிற்கு அழைக்க அதை திரையில் கண்டவன்,

"மச்சான் பாருடா அந்த ராட்சசி தான் கோல் பன்றா. கொஞ்ச நேரம் நான் நிம்மதியா இருந்தா இவளுக்கு பிடிக்காதே" என பொரிந்தான் கார்த்திக்.

"டேய் சிஸ்டர் இத்தன தடவை கோல் பன்றாங்கன்னா ஏதாவது விஷயம் இருக்கும்! அவங்களுக்கு என்ன தலையெழுத்தா சண்டை போட்ட உன் கிட்டவே பேசுறதுக்கு. முதலில் அவங்க கூட பேசு. அதுக்கு அப்பொறமா என் கூட பேசு" என்று விட்டு அழைப்பை துண்டித்தான் சித்து.

"டேய் டேய்" என கார்த்திக் கத்த ஏற்கனவே அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

'எவனுமே நான் சொல்றத கேட்க வேணாம். சே என்ன கொடுமை சரவணா இது?' என பிரேம் ஜியின் ஸ்டைலில் கூறினான் கார்த்திக்.

"கடைசியில் என்ன வடிவேலு மாதிரியே தனியா பொலம்ப வச்சிட்டாளே" என புலம்பினான்.

மீண்டும் அவளிடம் இருந்து அழைப்பு வர ஏகபோக கடுப்பில்,

"இப்போ என்னடி உனக்கு வேணும்? அதான் உன் கூட பேச பிடிக்காமல் தானே போன கட் பன்னிட்டு இருக்கேன். திரும்ப திரும்ப கோல் பன்ற" என கத்தினான்.

எதிர் புறத்தில் இருந்து எந்த பதிலும் வராததால் 'என்ன இந்த நேரம் ஒன்னுக்கு பத்தா பதில் வந்திருக்குமே. ஒரு வேலை லைன் கட் ஆச்சோ' என்று திரையைப் பார்த்தான்.

லைன் கட் ஆகவில்லை என அறிந்த பிறகு எதுக்கு பேசாம இருக்கா? என சிந்தித்தவனை தடை செய்தது அவளின் குரல்.

"என்னடா மத்தவங்க பேசுறத கேட்க மாட்டேன்னு எங்கயாவது சத்தியம் பன்னிருக்கியா என்ன? முதலில் நான் சொல்கிறதை என்னான்னு கேளு?" என இவள் கடுப்புடன் கூறினாள்.

"சொல்லித் தொலை எல்லாம் என் நேரம்" என்றான் கார்த்திக்.

வந்த கோபத்தை அடக்கி விட்டு,

"எதுக்கு உன் ஹெட் கிட்ட திட்டு வாங்கின?" என அவள் கேட்க.

"நான் எதுக்கு உன் கிட்ட சொல்லனும்?" என்றான் காரத்திக். 

"சொல்லுப் பா பிளீஸ்" என கேட்க, நடந்தைக் கூறினான் கார்த்திக்.

"நீ கோபட்டால் என்ன பன்னுவ?" என இவள் கேட்க,

"ஏய் இதை கேட்க தான் எனக்கு போன் பன்னியா?" என இவன் எகிற,

"அடங்குடா!! பாவம் பையன் ரொம்ப பீல் பன்றானே உதவி பன்னலாம்னு நினச்சால், தேவை தான் எனக்கு" என்றாள் அவள். 

"யாரு டி உன் கிட்ட உதவி கேட்டா? நீயே தான் பன்ற" என கத்தினான் கார்த்திக்..

மீண்டும் ஒரு முறை சத்தம் இல்லாமல் போக, போனை பார்த்தவன் லைனில் தான் இருக்கிறாள் என உறுதி செய்துக் கொண்டான்.

இங்கு இவளோ 'கடவுளே தயவு செஞ்சி எனக்கு பொறுமைய தா. இவன் கிட்ட முழுமையா பேசுற வரைக்கும் எனக்கு அந்த பொறுமை வேணும் பிளீஸ்'  என இறைவனிடம் மனறாடிக் கொண்டு இருந்தாள்.

"ஹலோ" என இவன் பேச தன்னிலை அடைந்தவள்

"நான் சொல்கிறதை கொஞ்சம் பொறுமையா கேளு பா" என்றாள் அவள்.

இவனுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. 'இவளுக்கு இவ்வாறு பொறுமையாகவும் பேச தெரியுமா என்று. அவள் கூறுவதை அமைதியாக கேட்போம்' என்று முடிவு எடுத்தான்.

"நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே" என்று அவள் கேட்க,

"கையை தான் எங்கேயாவது அடிப்பேன்" என்று கூறினான்.

"அப்போ நான் பேசின நாள் நீ அதே போல பன்னியா?" என அவள் கேட்க,

"ஆம்" என்றான் கார்த்திக்.

சிறிது நேரம் யோசித்தவள் "அப்போ நிச்சயமா௧ அந்த போட்டோ நீ வச்ச இடத்துக்கு பக்கத்துல கீழே எங்கேயாவது தான் இருக்கும். நீ ஒழுங்கா தேடி பாரு" என அவள் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

அப்போதே அவனுக்கு நினைவு வந்தது தான் இன்னும் தேடிப் பார்க்கவே இல்லை என்று........

 


Quote
Ayesha
 Ayesha
(@Ayesha)
Guest
Joined: 1 week ago
Posts: 3
23/03/2020 12:25 pm  

Story  super 


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: