Forum

தொலைவு 18  

  RSS

யஷ்தவி
(@yashdhavi)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 43
24/03/2020 11:45 am  

இன்னும் தேடிப் பார்க்கவே இல்லையே என தன்னையே நொந்துக் கொண்டான் கார்த்திக். அங்குமிங்கும் தேடியவனுக்கு போடோ கிடைக்காமல் போக  அவன் போடோக்களை வைத்திருந்த டேபள் அருகில் சென்றான். கீழே குனிந்து தேடிப் பார்த்தவனுக்கு உயிரே மீண்டும் கிடைத்தது போல இருந்தது. ஏனெனில் அங்கு தான் போடோ இருந்தது.

உடனேயே தனது ஹெட்டிற்கு அழைத்து விடயத்தைக் கூறினான். அவர் உடனேயே அதை பெக்சில் அனுப்புமாறு கூறிவிட்டு, இதே போன்று இனி கவனியீனமாக இருக்க வேண்டாம் என்றும் நாளையே இங்கு வருமாறும், மேலும் பல அறிவுரைகளை வழங்கி விட்டு அழைப்பைத் துண்டித்தார். அவை அனைத்தையும் அமைதியாக கேட்டு விட்டு பெக்சில் போட்டோவையும் அனுப்பி விட்டு நிம்மதியாக அமர்ந்தான்.

'அவளுக்கு தேங்ஸ் சொல்லுவமா?  வேணாமா?' என நினைத்தவனிடம்,

'கண்டிப்பா நன்றி சொல்லுடா' என ஒரு மனம் கூற,

'அவ என்ன பெரிய உதவி பன்னி கிழிச்சா?' என மற்றய ஈகோ மனம் கேட்க,

'அவ சொன்னதால் தானே நீ தேடின இல்லை என்றால் நீ தேடி இருப்பியா?' என நல்ல மனம் அவனுக்கு எடுத்துரைத்தது.

'கொஞ்ச நேரம் கழிச்சு சரி நான் தேடி இருப்பேன்' என ஈகோ மனம் கூறியது.

'சின்ன ஒரு உதவி செஞ்சாலும் நாம அவங்களுக்கு நன்றி சொல்லனும். அவங்க சின்னவங்களா இருந்தாலும் சரி பெரியவங்களா இருந்தாலும் சரி. இது தானே உங்க அம்மா உனக்கு சொல்லி கொடுத்தாங்க. அதை நீ மீறினால் உங்க அம்மா உன்னை ஒழுங்கான பையனாக வளர்க்வில்லை என அர்த்தம்' என்று ஒருமனம் கூற அதை ஆமோதித்து, ஈகோ மனதை அடக்கினான் கார்த்திக்.

அவளிற்கு அழைப்பை ஏற்படுத்தி அவளிற்கு, நன்றியை கூற அவளோ விக்கித்து நின்று விட்டாள்.

'இவன் நன்றி கூட சொல்லுவானா?' என்று.

'ஹலோ லைனில் இருக்கியா பாப்பா?' என இவன் கேட்க,

தன்னை சமன் செய்துக் கொண்டவள், "என்னது பாப்பாவா?" என அவள் கேட்க,

"ஆமா" என்றான் கார்த்திக் கூலாக.(தெறி பாப்பா bgm)

"இப்போ எதுக்கு பாப்பான்னு சொல்ற?" என அவள் கடுப்புடன் கேட்க,

"உன் பேர் தெரியாது, எனக்கு தேவையும் இல்லை. அதோடு நீ ரொம்ப சின்னா பொண்ணா இருக்க அதனால் தான்" என்றான்.

அவளோ அமைதியாக இருக்க, அவனே தொடர்ந்தான்.

"நீ கோலேஜில் நடந்திற்கு வருத்தப் படாத, அவங்க நல்ல விதமா உன்னை திரும்பி பார்க்க வைக்கிறது உன் கையில் தான் இருக்கு" என்றான் கார்த்திக்.

"என்ன சொல்ற? எனக்கு புரியல்லை" என்றாள் அவள்.

"உன் கோவத்தையும் உன் வெறியையும் உன் படிப்புல காட்டு. எல்லாவற்றிலும் முன்னாடி வா அப்போ நீ எடுத்த கெட்ட பெயர் காற்றோட காற்றாகிடும். இப்போ நான் என்ன சொல்றன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அன்ட் என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளு. நீ என் கனவை திருப்பி அடையிறதிற்கு உதவி பன்னி இருக்க" என்றான் கார்த்திக்.

"ஒகே தேங்ஸ் டா.  என்ன செய்யனும் புரியாமல் இருந்த எனக்கு இப்போ தெளிவை தந்திருக்க பாய் என்ட் குட் நைட்" என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

இவள் டா என்று பேசியும் கோபப்படாமல் புன்னகைத்து விட்டு மொபைலை வைத்தான். அது ஏன் என்றும் அவன் ஆராயவில்லை.

அப்போது எங்கிருந்தோ, "டேய் தடிமாடே என்னையும் கொஞ்சம் கவனி டா" என அலறும் சத்தம் கேட்டது.

எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தவன், அவனது வயிறே அலறியது என்று கண்டுக் கொண்டான். அப்போதே அவனுக்கு நினைவு வந்தது, தான் இன்னும் காலையோ, மதியமோ உண்ணவில்லை என்று. உணவை உட்கொண்ட பின் சித்துவிற்கு அழைத்தான்.

"மச்சான் என்னடா சிஸ்டர் கூட பேசினியா?" என சித்து கேட்க, ஆமான்டா என்று விட்டு நடந்த அனைத்தையும் கூறினான் கார்த்திக்.

"டேய் நீ எதுக்கு அவளை திட்டின?" என சித்து கேட்க,

"நா அவளோ சொல்லியும் அவ ஆரம்பத்துல புரிஞ்சிக்காமல் பேசினா அதான்" என்றான்.

"சரி அப்போ நீ எதுக்கு உன் பேரன்ஸ் உனக்கு டைம் கொடுத்ததைப் பற்றி அவ கிட்ட சொன்ன?" என சித்து கேட்டான்.

"இப்போ நீ என்ன சொல்ல நினைக்கிற சித்து?" என காரத்திக் கேட்க,

"நீ எதுக்கு அவ உன்னை புரிஞ்சிக்கனும்னு நினைத்தாய்? அவள கஷ்டபடுத்திருவோம்னு எதுக்கு மொபைலை எடுக்க இல்லை? உன் பேரன்சை பற்றி எதுக்கு சொன்னாய்? எல்லாவற்றிற்கும் ஒரே பதில் நீ அவ கிட்ட உன் உரிமையை எடுத்துக்க நினைக்கிற டா" என்றான் சித்து.

காரத்திக்,"என்னடா உழருற?" என்று கேட்க 

"உழற இல்லை டா உண்மையை சொன்னேன். அவ கஷ்டபடுகிறது போல பேச கூடாது, அவளுக்கு உன்னை பற்றி புரிய வைக்கனும், அவளோட படிப்ப ஒழுங்கா கன்டினியூ பன்னும் நினைக்கிற டா" என்றான் சித்து.

"சரி இப்போ அதுக்கு என்னடா?" என காரத்திக் கேட்க,

"நீ அவளை உன்னை அறியாமல் காதலிக்கிறாய்" என கூறினான் சித்து.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மச்சான்" என அவன் தடுமாற, 

"மச்சி நீ தனியா௧ இருந்து யோசி" என்றான் சித்து.

"அது சரி டா நீ என்னமோ மனசு சரியில்லைன்னு சொன்ன என்ன ஆச்சு டா?" என்று கார்த்திக் கேட்க, சித்து அமைதியாக இருந்தான்.

 

Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: