Forum

தொலைவு 4  

  RSS

யஷ்தவி
(@yashdhavi)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 43
26/02/2020 10:45 am  

கல்யாண வீட்டில்,
லக்ஷ்மியை தேடி வந்த வேலன், "அஞ்சலிய கூட்டிட்டு வர கார் அனுப்பியாச்சா?" என்று கேட்க,

"ஆமாங்க நான் அப்போவே நம்ம டிரைவர் பழனிய அனுப்பிட்டேன்க. அஞ்சலிய கூட்டிட்டு வந்திருவான்க" என லக்ஷ்மி கூறி முடியும் போதே கார் வீட்டின் முன்னே வந்து நின்றது.

வாசலில் உற்றார் உறவினர்கள் மணகள் ஜானகி உட்பட அனைவரும் நிறைந்திருந்தனர். சித்துவையும் கௌதமையும் தவிற. யேன்னா நம்ம ஹீரோ தான் flashback ல இருக்கிறாரே.

"அம்மா" என கூச்சலிட்டவாறே தனது அன்னையை கட்டியணைத்தாள் அஞ்சலி என்கின்ற அஞ்சு.

பின் வேலனையும் அணைத்து விட்டு
அவரைப் பார்த்து, "என்னப்பா உங்க செல்ல பொண்ணு வந்திருந்தா, உங்கள தான் முதல்ல கட்டிபுடிச்சிருப்பான்னு நினைக்கிறிங்களா?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லமா. நீயும் என் பொண்ணு தான் மா" என்றார் வேலன்.

"புரியிது அப்பா, நான் அம்மா செல்லம், அவ அப்பா செல்லம், அக்கா நம்ம எல்லாரோட செல்லம். இல்லக்கா?" என்று ஜானுவை பார்த்து அஞ்சலி கேட்க

"ஆமாம்" என்று கண்கள் கலங்க கூறினாள் ஜானகி.

"மீனா போய் ஆரத்தி தட்ட எடுத்திட்டு வா. என தனது அதிகாரத்தொனியில் வேலைக்காரியிடம் கூறினார்" வனஜா.

வனஜா வேலனின் தங்கை. கணவனை இழந்தவர். அவரும் அவருடைய மகன் விநயும் இங்கே தான் இருக்கிறார்கள். விநய் சென்னையில் தங்கி 3 வருடங்களாக பிரபலமான ஒரு IT company ல் வேலை பார்க்கிறான். அவனது அயராத உழைப்பினாலும் நேர்மையான குணத்தாலும் தற்போது உயர் பதவியில் இருக்கிறான்.

"அத்தை எப்படி இருக்கிங்க?" என அஞ்சு கேட்க

"நான் நல்லா இருக்கன் மா" என்றார் வனஜா.

லக்ஷ்மி ஆரத்தி தட்டை வாங்கி ஆரத்தி எடுக்க போகும் போது

"அஞ்சு, அம்மா கொஞ்சம் பொறுங்க, உங்க எல்லாருக்கும் ஒரு surprise இருக்கு" என்று கூற மற்றவர்கள் என்னவென்று கேட்க,

"one minute" என்று தான் வந்த காரின் கதவை திறந்து விட்டள். காரிலிருந்து சிரித்த முகத்துடன் கீழிறங்கினாள் சஞ்சனா எனகின்ற சஞ்சு.

"அப்பா" என்று ஓடிச்சென்று வேலனைக் கட்டியணைத்தாள்.

அனைவரின் கண்களும் கண்ணீரால் நிரம்பியதோடு, அகமும், முகமும் மலர்ந்தது. பின் லக்ஷ்மியிடம் சென்று அவரையும் கட்டியணைத்தாள்.

"Sorry மா அப்பா என் hero நீ என் heroine அதோட movies ல மொதல்ல hero வ தானே காட்டுவாங்க. அதுக்கு அப்பொறம் தானே heroine அ காட்டுவாங்க. அதான் அந்த வழியை Follow பன்னன்" என்று கூறிவிட்டு கண்ணடித்தாள் சஞ்சு.

அப்பாடா ஒரு வழியா சமாளிச்சுட்டன் என மனதில் நினைத்துக் கொண்டாள்.

இதைக் கேட்ட அஞ்சு, "serial அ எப்பவுமே heroine முதல்ல காட்டிட்டு அப்பொறமா தானே hero வ காட்டுவாங்க. So நான் அந்த வழியை Follow பன்னன்" என்று கூறினாள்.

சஞ்சுவைப் பார்த்துக் கொண்டே மனதில் நாங்களும் சமாளிச்சிட்டமில்ல என்றாள்.

"Well done டி" என சஞ்சு கண்ணால் பாராட்ட தனது நன்றியையும் கண்களாளேயே கூறினாள் அஞ்சு.

இருவரும் ஒரே வயதுடையவர்கள் ; இரட்டையர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்து இருந்தனர் அதீத அன்பும் அவர்கள் இடையே இருந்தது.

இதற்கு ஜானு "என்னென்ன காரணம் கண்டுபிடிச்சி சமாளிக்கிறிங்க டி, இரண்டு பேருமே எதிர்காலத்தில பொழச்சிப்பிங்க" என்றாள்.

"இல்லக்கா இவ என்ன Copy பன்னி தான் சொன்னா அதனால இத ஏத்துக்க முடியாது" என்று சஞ்சு கூற,

அஞ்சு அதற்கு பதில் கொடுக்க ஆரம்பிக்கும் போது, லக்ஷ்மி "வந்த உடனே ஆரம்பிச்சிட்டிங்களா? வீட்டுக்குள்ள போய் உங்க சண்டைய continue பன்னுங்க" என்றார்.

"மத்த அம்மாங்க சண்டைய நிறுத்துங்கன்னு சொல்லுவாங்க நீ என்னடான்னா வீட்டுக்குள்ள போய் சண்டபோடுங்கன்னு சொல்ற உன்னை மாதிரி ஒரு அம்மா ஒரு குடும்பத்துக்கு இருந்தா போதும், அந்த குடும்பம் ரொம்ப நல்லா இருக்கும்" என அஞ்சு கூற அனைவரும் சிரித்துவிட்டனர்..

"வலவலன்னு பேசாம அம்மா ஆரத்தி எடுக்க போறாங்க இல்ல அதுக்கு ஒழுங்கா நில்லு" என சஞ்சு கூறிவிட்டு நல்ல பிள்ளைப் போல் நின்று விட்டாள்.

அஞ்சுவோ ஒன்றும் பேசாமல் சஞ்சுவை முறைத்துக் கொண்டு நின்றாள். அனைவரும் இதைக் கண்டு புன்னகைத்தனர். ஆரத்தியும் எடுக்கப்பட்டது.

சஞ்சுவிடம் வேலன்,"நீ தான் முக்கியமான exam இருக்கு அதுக்கு படிக்கனும் வரமுடியாதுன்னு சொன்னியே?" என தனது கவலையை மறைத்துக் கொண்டு கேட்டார்.

பெண்களினால் ஆண்களின் உணர்வுகளை அவர்களின் பேச்சின் தொனியைக் கொண்டே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களால் அது இயலாத காரியம்.

சஞ்சுவும் தன் தந்தை தான் வராததால் எவ்வளவு வேதனைப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்துக்கொண்டு "அது வந்து அப்பா.." எனக் கூற வருவதற்குள்,

அஞ்சு இடையில் புகுந்து "அவ வர மாட்டேன்னு தான் சொன்னா நான் தான், நீ வராவிட்டால் நானும் போக மாட்டேன்னு மிரட்டி கூட்டிட்டு வந்தேன்" என்றாள் அஞ்சு.

"உனக்கு இங்க exam க்கு படிக்க முடியுமா?" என வேலன் கேட்க

சஞ்சு, "ஆமா அப்பா நான் படிக்கிறேன்" என்றாள்.

அஞ்சு, "கிழிச்சா இவ இந்த கல்யாண வீட்டில படிக்க, நினைக்கவே comedy ஆ இருக்கு" என மனதில் நினைத்துக் கொண்டாள்.

"அப்பா கல்யாணம் முடிந்து one weak க்கு அப்பொறம் தான் இவளுக்கு exam என உண்மையைப் போட்டு உடைத்தாள்" அஞ்சு.

இதைக்கேட்டு அனைவரும் ஒருமித்து சஞ்சுவைப் பார்க்க,

சஞ்சுவோ அஞ்சுவைப் பார்த்து "இப்படி என்ன மாட்டி விட்டுட்டியேடி, முதல்ல இவங்கள சமாளிச்சிட்டு வரேன் அதுக்கப்பொறம் ஒனக்கு இருக்கு கச்சேரி" என இரகசியமாக இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.

"அதை அப்பொறம் பாத்துக்கலாம் முதல்ல இவங்கள சமாளி" என மெதுவாகக் கூறிவிட்டு சிரித்தாள் அஞ்சு.

"அங்க என்ன குசுகுசுன்னு பேசுறிங்க?" என வனஜா கேட்க இருவரும் இழித்து வைத்தனர்.

"பதில் சொல்லு சஞ்சு" என ஜானு கேட்க,

"இல்லை நிறைய படிக்க இருக்கு" என கூறி ஒரு வழியாக சமாளித்தாள்.

சரியென்று அனைவரும் வாசல் பக்கம் திரும்பி வீட்டினுள் நுழைய,

அஞ்சு, "இல்லப்பா இவ" என கூறும் போதே சஞ்சு அவளின் வாயை தன் கையால் மூடி அஞ்சுவை வீட்டீனுள் அழைத்து இல்லை இழுத்துச் சென்றாள்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஜோடிக் கண்கள் குரோதத்தால் நிறைந்திருந்தன. இவர்கள் நடத்தும் சிறு பிள்ளைத்தனத்தை பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்கச் சென்றனர்.சஞ்சு அவளறைக்குச் செல்லும் போது சஞ்சுவின் கையை பிடித்து அஞ்சு அவளின் அறக்குள் இழுத்தாள். இருவரின் அறையும் அடுத்தடுத்து இருந்ததால் அஞ்சுவிற்கு இது இலகுவாக இருந்தது.

அஞ்சு, "யேன்டீ என்ன அங்க பேச விடல்ல? நீ 2nd year ல starting period ல தானே இருக்க, உனக்கு எப்புடி நிறைய படிக்க இருக்கும்? நீ தான் exam க்கு முன்னாடியே படிச்சு வச்சிருவியே" என கேட்க

அதற்கு சஞ்சு, "நீ வேற faculty நான் வேற faculty உனக்கு எப்படி தெரியும் என் subjects பத்தி, இவளோ எல்லாத்தையும் படிக்கிறது ஈசின்னு நெனச்சிட்டு இருக்கியா? போடி படிக்கிறவங்களுக்கு இல்லையா தெரியும் அதோட அரும? "என்று கூறிவிட்டு கடைக் கண்ணால் அஞ்சுவைப் பார்த்தாள்.

அஞ்சுவோ கோபத்தின் உச்சியில் இருந்தாள் "hello மெடம் நானும்
2nd year starting period ல தான் இருக்கேன்,அதை மறந்திறாத" என்றாள்.

பின் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தின் பின் இருவரும் சத்தமாக சிரித்தனர்.

அஞ்சு,"உனக்கு இந்த டெரர் மூஞ்சி செட்டே ஆகுதில்ல சஞ்சு" என கூற

அதற்கு சஞ்சு, "நான் எத்தனை தடவை சொல்லி இருப்பேன், நான் serious ஆ பேசும் போது சிரிக்காதன்னு, கேக்குறியா நீ" என்றாள்.

"உனக்கு இதெல்லாம் செட் ஆகாது டி" என்று அஞ்சு சஞ்சுவை ஆரத்தழுவிக் கொண்டாள்.

இனி flashback......
காலையில் ரம்யா சித்துவிற்காக சித்துவின் சுப்பிராதத்தை பாடிக் கொண்டு இருந்தார்.இது தான் அது; "சித்து எந்திரிடா டைம் ஆச்சு, இன்னக்கி உன் பொறந்த நாள் இன்னக்காவது சீக்கிரமா எந்திரிச்சு ரெடியாகுடா என் தங்கம் இல்ல" என கிட்சனில் இருந்தவாறே கெஞ்சிக் கொண்டிருக்க,

நம்ம சித்து யாரு? அம்மா முகத்தில தான் முழிப்பேன். அதுவும் பிறந்த நாளதுவுமா என்று கண்களை மூடி உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தான்.

இவனது தலைக் கேசத்தை வருடவும் "அம்மா" என்று கண்களைத் திறந்தான்.

அங்கு இருந்ததோ அவனின் தந்தை.

"அப்பா அம்மா எங்க?" என கேட்க,

"யேன்டா என் முகத்துல காலையிலயே முழிக்க கூடாதா?" எனக் கேட்டார்.

"அப்படி இல்லப்பா இத்தனை வருஷமா பொறந்த நாளக்கி அம்மா முகத்துல தானே முழிப்பன் அதான்" என்றான் சித்து.

"அதனால தான் இன்னக்கி வரைக்கும் அம்மா புள்ளயாவே மட்டும் இருந்திருக்க" என்று கூற,

"அப்போ வேற யாரா இருந்திருக்கனும்" என சித்து கேட்க

"ஒரு பொண்ணுக்கு" என அவர் கூறி முடியும் முன்னரே..

"என்னது ஒரு பொண்ணுக்கு அப்பாவாவா? என்ன பா! ஒரு அப்பா பேசுறது போலவா பேசுற? உனக்கே இது அடுக்குமா? யேன்தான் உன் புத்தி இப்பிடியெல்லாம் போகுதோ? இரு அம்மா கிட்ட சொல்றன்"என்று கூற

"அடச் சீ நிறுத்து, யேன்டா யேன், நான் இன்னும் சொல்லி முடிக்கவே இல்லையேடா?? அப்பப்பா என்னாமா பேசுற? நீ மட்டும் போதும் டா எனக்கும் என் பொன்டாட்டிக்கும் பிரச்சனய இழுத்து வைக்க"என்றார்.

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சித்து,"Sorry பா நான் ஏதோ" எனகூறி முடியும் முன்,

"போதும் டா நான் சொல்ல வாரத முதல்ல கேளுடா" என்றார் சித்துவின் தந்தை.

"ஒரு பொண்ணுக்கு காதலனா இருக்கனும்னு சொல்ல வந்தன்டா" என்றார்.

சித்து இதைக் கேட்டு முழித்துக் கொண்டிருந்தான்.

"என் முகத்துல தானே இந்த வருஷம் முழிச்சிருக்க, பாரு என்ன மாதிரியே உனக்குள்ள இருக்கிற ரோமியோவும் வெளியேறிவிடும், காதலும் வந்து விடும், நான் சொல்வது நடக்குதா இல்லையான்னு பாரு" என்றார்.

"அட போங்கப்பா எனக்கு மனசுக்கு புடிச்ச மாதரி ஒரு பொண்ணாவது அவ என் வாழ்க்கையில வாரதாவது" என்று கூறி விட்டு குளியலறையை நோக்கிச் சென்றான்.

"Wait and watch my son" என்று விட்டு அவர் கீழிறங்கிச் சென்றார்.

அவன் தயாராகி கீழே வந்தவடன், "சித்து இன்னக்கி கோயில்ல உன் பேர்ல பூஜை பன்றோம். அதனால கோயிலுக்கு போயிட்டு போடா" என்றார் ரம்யா அவனது வாயில் இட்லியை திணித்த படி.

"அம்மா நீ சொல்றதுக்காக தான் ஒவ்வொரு வெள்ளியும் கோயிலுக்கு போறன் இன்னக்கி எதுக்கு மா? நீங்களே பாத்துக்கொங்க, அதோட இன்னக்கி தான் first year students எல்லாருக்கும் முதல் நாள். So நான் கட்டாயம் அங்க இருக்கனும் மா"என சித்து கூற

"அம்மாக்காக இதைக் கூட பன்னமாட்டியாடா?" என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

"சரிமா. இப்பிடி முகத்த தூக்கி வச்சே என்ன மடக்கிறு" என்றுவிட்டு தண்ணீரையும் அருந்திவிட்டு சிட்டாய்ப் பறந்தான் கோயிலை நோக்கி

தன் தேவதையை அங்கு தான் சந்திக்கப்போகிறோம் என்பதை அறியாமல்.........

 

 

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: