Forum

தொலைவு 5  

  RSS

யஷ்தவி
(@yashdhavi)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 45
27/02/2020 10:28 am  

சித்து வீட்டை விட்டு வெளியேறியவுடன்; சித்துவின் தந்தை,

"இப்பிடி பாவமா முகத்த வச்சிக்கிட்டதால் தானே நானும் ஏமாந்து போயிட்டேன், என்னா லுக்கு என்னை கட்டி போட்டு வக்கிறதே உன்னோட குழந்தை முகம் தான்" எனக் கூற

தனது சிவந்த கன்னங்களை காட்டாமல் " சீ போங்க கல்யாண வயசில் பிள்ளைய வச்சிட்டு பேசுகிற பேச்சப் பாரு " எனக் கூறிக்கொண்டே சமயலறைக்குள் புகுந்துக் கொண்டார் ரம்யா. சித்துவின் தந்தையும் சிரித்து விட்டு office செல்ல தயாரானார்.

கோயிலுக்கு செல்லும் போது கைப்பேசி அழைக்கவே வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, திரையைப் பார்த்த உடனேயே அழைப்பை ஏற்றான் சித்து.

அழைத்தவன் " மச்சி சொரி டா, போன்ல சார்ஜ் இல்லை டா அதான் நைட் கோல் பன்ன முடியல்லை. Once again i'm really sorry டா anyways wish ur happy birthday " எனப் பேசிக்கொண்டே போக சித்துவோ அமைதியாய் இருந்தான்.

" அதான் sorry சொல்லிட்டேனே, உனக்கே தெரியும் என்னோட தொழிலைப் பத்தி, எந்த நேரம் எந்த காட்டில் இருப்பேன்னு எனக்கே தெரியாது. இராத்திரி விஷ் பன்னனுங்குறதுக்காக சிக்னல் கிடைக்குற இடத்துக்கே வந்துருக்கேன்டா. நீயே என்ன புரிஞ்சிக்கல்லன்னா எப்படி டா? " எனக் கவலை தோய்ந்த குரலில் கூற, சித்துவோ சிரித்து விட்டான்.

" காரத்திக், என்னடா பயந்திட்டியா? நீ என்னோட best friend சின்ன வயசிலிருந்தே ஒன்னா தானே படிச்சோம். என்ன நீ photography பன்னனும் போனாய். நான் engineering பன்னனும் இங்கே இருக்கேன். ஆனாலும் நான் எப்போவுமே உன்னோட தோஸ்து டா. ஒரு நாளில் நடக்கிறதை எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்டுத் தானே டா தூங்கவே போவன். நான் உன்னை புரிஞ்சிக்காமல் இருப்பேனாடா? என்ன கொஞ்சம் கவலையா இருந்தது. நீ இன்னும் wish பன்ன இல்லை என்று. இப்போ அதுவும் இல்லை and thanks மச்சி" என்றான் சித்து.

இருவரும் நெடுதூரத் தொலைவில் இருந்தாலும் அவர்களிடையே இருந்த நட்பு, அன்பு புரிந்துணர்வும் அதிகரித்ததே தவிர குறையவே இல்லை. சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தனர்.

கார்த்திக் AV Construction ஓனர் ராகவன் சந்தியா தம்பதியினரின் ஒரே வாரிசு. சித்துவையும், காரத்திக்கையும் போலவே அவர்களின் தந்தையும் பள்ளிக் காலத்து நண்பர்கள். அதே போல ரம்யாவும், சந்தியாவும் சகோதரிகளாகவே இருந்தனர். சித்துவும் கோயிலை அடைந்தான்.

சிவனின் முன்னால் கண்களை மூடிக்கொண்டு தனது பெற்றோருக்காக கடவுளிடம் கைகூப்பி வேண்டிக் கொண்டு இருந்தான். திடீரென்று ஏதோ ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி அவனுள்ளே எழுந்தது. அவனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து.மனதினுள் ஆயிரமாயிரம் உணர்வுகள் தோன்றின. அவனது வாழ்நாளிலே தோன்றாத சந்தோஷமும் நிம்மதியும் அவனுள் எழுந்தது.

இத்தனை நாட்களாய் பொறுமையாக இருந்ததிற்கு பலனாக, தனக்கு உரிமையான பொக்கிஷம் ஒன்று தன்னருகில் இருப்பதாக உணர்ந்தான். மெதுவாக கண்களைத் திறந்தான், அவன் முன்னே அண்ணளவாக 5 அடி உயரத்தில் அவனது தேவதை கண்களை மூடி நின்றிருந்தாள்.

ஆனால் அவனால் அவளின் முகத்தைப் பார்க்காமல் கண்களை மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்தது. ஏனென்றால், அவளின் மூக்கினை மறைக்கும் உயரம் வரையான உயரமுள்ள ஒரு சிறுவன் அவள் முன்னே நின்றிருந்தான்.

அவன் காதல்வயப்பட்ட மனமோ இவள் என்னவள் எனக் கூறிக்கொண்டிருக்க, மூளையோ,

"டேய் கொஞ்சமாவது அறிவிருக்கா? மத்த எல்லா பொண்ணுங்களையும் விட இவ உனக்கு special ஆக இருக்கா ஒகே டா. பொண்ணுங்க கூட குளோசாக பழகியே இல்லாத உனக்கு, கண்டதும் காதல் ஓவரா இல்லை?" எனக் கேட்க,

காதல் மனமோ "இல்லை அவ என்னவள்" எனக்கூறி மூளையை அடக்கி அதில் வெற்றியும் பெற்றது.

இவன் கண்களோ கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்த தன் தேவதையின் கண்களை விட்டு அகலவில்லை. ஐயர் அவன் நெற்றியில் திருநீரை பூசும் போதே தன்னிலையை அடைந்தான்.

"இவளோ நேரமா பேசிட்டு இருக்கேன் தம்பி. எங்கே பார்த்துட்டு இருக்கிங்க?" என ஐயர் கேட்க,

"sorry சாமி" என கூறிவிட்டு தன் தேவதையின் பக்கம் திரும்பினான்.

ஆனால் அவனுடைய தேவதை அங்கு இருக்கவில்லை. ஒரு வித பதட்டத்துடன் அங்குமிங்கும் தேடினான். அப்போது தூரத்திலே அவன் தேவதை சென்றுக் கொண்டிருந்தாள். அவனால் அப்போதும் கூட அவளது முகத்தைக் காண முடயவில்லை. இடை வரை நீண்டிருந்த கூந்தலை ஒரு சிறிய கிளிப் மூலம் அடக்கி வைத்திருந்ததையும், அவள் அணிந்த சுடிதாரையும் தவிர வேறெதையும் காணவில்லை.

'என்னக் கொடுமைடா இது? அவ முகத்த கூட பார்க்க இல்லை. அப்பா நீ நெஜமாவே லக்கி தான். நீ சொன்ன மாதிரியே என் தேவதையை கண்டுட்டேன். உனக்கு ஏதாவது டீரிட் கொடுக்கனுமே என்ன பன்னலாம்?' என யோசித்தான்.

வண்டியை செலுத்தும் போது அவனுடைய தேவதையின் கண்கள் அவன் முன்னே வந்து இம்சித்தது. 'எப்படி இருந்த என்னை இப்பிடி மாத்திட்டாளே இந்த குள்ள கத்திரிக்கா' என புன்னகைத்துக் கொண்டே சென்றான்.

மீண்டும் அவளை எப்போது காண்போம் என்ற கவலையும் அவனுள்ளே எழுந்தது. இந்த நினைவுகளில் அவன் சரியாக college சென்றடைந்தது அதிசயமே.

அங்கே அவனைச்சுற்றி பெண்கள் நிறைந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்தனர். ஆனால் அவனோ எதையும் கவனிக்காது தன் தேவதையின் நினைவிலேயே இருந்தான்.

பெண்கள் அவர்களுக்குள்ளேயே  "என்னடி இவன் கிட்ட விஷ் பன்னால்  ரிப்ளை பன்னாமல் சிரிச்சிட்டே இருக்கான்."

"நாம hand shake பன்றதுக்கு கையை கொடுத்தால் கூட இவன் பேசாமல் சிரிச்சிட்டு இருக்கான்."

"ஒரு நாளும் சித்து மத்தவங்களை hurt பன்ற மாதரி நடந்துக்க மாட்டானே" எனக் கூற மற்றவர்களும் இதற்கு ஆமோதிப்பதாய் தலையசைத்தனர்.

இதனைப் பார்த்த அவன் நண்பர்களும் இவ்விடத்தை நோக்கி வந்தனர். அப்போதும் கூட அவன் தன் தேவதையின் நினைவிலிருந்து மீளவில்லை.

சிரித்துக் கொண்டே "எல்லோரும் விஷ் பன்னியாச்சில்ல, போங்க போய் அவங்கவங்க வேலையை பாருங்க" என்றான் ரவி ஏகபோகக் குஷியில்.

முகில் கடுப்பில், "எதுக்குடா இப்போ சிரிச்சிட்டு இருக்க?" என்றான்.

அதற்கு ரவி, "சித்து பிறந்த நாள் அன்று மட்டும் தான் பொண்ணுங்க விஷ் பன்னுவாங்க என்பதற்காக பொண்ணுங்களை அவன் பக்கத்தில் விடுவான். அவளுங்களும் அவனை சுத்தி நின்னு வழிஞ்சிட்டே பேசுவாங்க. அப்போ எனக்கு செம்மயா கடுப்பாகும். என் கிட்ட ஒருத்தியும் பேசல்லன்னு. ஆனால் இன்னக்கி இவன் கூட அவளுங்களால ஒன்னுமே பேச முடியல்லை. அனை நினைச்சு தான்" என்றான்.

"டேய் உன்க்கே இந்த காரணம் கேவலமா தோனல்ல?" என ஆகாஷ் கேட்க

"இல்லை மச்சான்" என்றான் ரவி.

"இவனை வச்சிக்கிட்டு நாங்க படுகிற பாடு இருக்கே ஐயோ முடியல்லைடா சாமி" என்றான் விகி.

"ஆமா நீ எந்த கோட்டையை பிடிக்க இவளோ யோசிச்சிட்டு இருக்க?" என கௌதமை பார்த்து முகில் கேட்டான்.

"இல்லை மச்சான், இவன் சித்து கூட பொண்ணுங்க கொஞ்சம் பேசினதுக்கே இவளோ பொறாமை பட்றான்னா நீங்க committed ஆ இருக்கிறிங்களே இவனுக்கு எவளோ வயித்தெறிச்சலா இருந்திருக்கும்?" என ரவியை மாட்டி விட

"யேன்டா" என பார்வையாலேயே கௌதமை பார்த்து ரவி கேட்டான்.

"இந்து என் கூட காலையில் நல்லா தான்டா பேசுவா ஆனா வீட்டுக்கு போகும் போது எப்போவுமே சண்டயோட தான் போவம்" என ஆகாஷ் கூற

"நா எப்போவுமே காவ்யா கூட சாப்பிடும் போது விக்கும் டா அதுக்கு அவளை தவிர வேற யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு என் கூட சம்பந்தமே இல்லாமல் சண்டை போடுவாடா" என்று விகியும் கூறினான்.

முகில் "ஆமான்டா ரியா, ஒரு நாளையில் என்கூட ஆகக் குறைந்தது 2 தடவையவாது சும்மா சண்டை போடுவா மச்சி அப்போ எனக்கு யேன்னு புரியல்லை. இப்போ புரியிது.( ரவியை பார்த்து) இவன் வயித்தெரிச்சல் தான்டா இவளோ பிரச்சனக்கும் காரணம்" என்று விட்டு ரவியை நோக்கி சென்று மூவரும் சேர்ந்து அவனை புரட்டி எடுத்தனர்.

இதை பார்த்து சிரித்துக் கொண்டே கௌதம் சித்துவை பார்க்க அவனோ தன் தேவதையின் நினைவிலிருந்து மீளாமல் இருந்தான். 'இவளோ சத்தமா இவனுங்க ரவியை பிரட்டி எடுக்குறானுங்க இவன் என்ன சம்பந்தமே இல்லாத ரியெக்ஷ்ன குடுக்குறான்' என்று சித்துவின் அருகில் சென்றான் கௌதம்.

சித்துவை பல முறை அழைத்து பதில் இல்லாமல் போக மற்றவர்களை கூப்பிட்டான். அவர்களோ ரவியை அடிப்பதிலேயே குறியாய் இருந்தனர்.

"நிறுத்துங்கடா"

" டேய் நிறுத்துங்கடா" என கௌதம் கத்தினான்.

அப்போது தான் நால்வரும் கௌதமை பார்த்தனர்.

"உனக்கு என்னடா பிரச்சனை? பாரு இவனை அடிக்க முடியாமல் போயிருச்சு" என்றனர் சலித்துக் கொண்டே.

"என்ன இவனுங்க கிட்ட இருந்து காப்பாத்தினதுக்கு thanks மச்சி. நீ தான் உண்மையான நண்பன்னு proof பன்னிட்ட டா" என்றான் ரவி சந்தோஷமாக.

"டேய் நான் சொல்கிறதை முதலில் கேளுங்க அப்பொறமா நானும் சேர்ந்தே ரவியை அடிக்கிறேன்" என்று கௌதம் கூற ரவி பாவமாக பார்த்தான்.

"Sorry மச்சான் உன்னை பார்க்க இப்போ நேரம் இல்லை டா" என ரவியைப் பார்த்துக் கூறிவிட்டு,

"அங்கே சித்துவ பாருங்கடா" என்றான் கௌதம்.

ரவியோ மனதிலே 'உச்சகட்ட அவமானம் டா' நினைத்துக் கொண்டே அவனும் சித்துவைப் பார்த்தான்.

"ஆமா டா இவன் எதுக்கு சிரிச்சிட்டே இருக்கான்? ஒரு வேலை பிறந்த நாள் அதுவுமா தலையில் அடிபட்டிச்சோ" என ரவி கூற மற்றவர்கள் இவனை முறைத்தனர்.

மீண்டும் அவனை "சித்து" என அழைக்க எந்த மாற்றமும் இல்லை. முகில் சித்துவின் அருகில் சென்று அவனது தோளை உலுக்கினான். அப்போதே நிகழ்காலத்திற்கு வந்தவன்

"என்னாச்சுடா? நீங்க எல்லோரும் கோயிலுக்கே வர மாட்டிங்க இன்னக்கி அதிசயமா வந்து இருக்கிங்க?" என்றான் சித்து ஒன்றும் அறியாதவனாய்.

"ரவி சொன்னது போலவே இவனுக்கு தலையில் தான் அடிபட்டு இருக்கு" என்றான் ஆகாஷ். கௌதமும், முகிலும் அவனை முறைக்க,

விகி" பின்ன என்னடா collage க்கு வந்துட்டு கோயிலுக்கு நாங்க வந்திருக்கம்னு லூசு மாதிரி பேசுறான்" என்றான்.

அனைவரும் சித்துவைப் பார்க்க , சித்து "நான் எப்போடா collage வந்தேன்" என்றான்.

"விட்டா இவன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல விஜய் சேதுபதி பேசுற மாதிரியே பேசுவான் வா போகலாம்" என்றான் கௌதம்.

"டேய்" என மற்றவர்கள் கூற,

"நீ தெரிஞ்சு தான் பேசுறியா? இல்லை தெரியாமல் பேசுறியா?" என்றான் விகி்.

"இல்லை டா நான் பைக்கில் ஏறினது ஞாபகம் இருக்கு அதுக்கப்பொறம் என் தேவதையோட கண்ணு என் முன்னாடி வந்தது, வேற எதுவுமே ஞாபகம் இல்லடா" என்றான் சித்து.

"என்ன தேவதையா?" என மற்றவர்கள் கோரசாகவே கேட்டனர்.

"ஆமாடா" என சித்து அசடு வழிந்தான்.

"ரொம்ப வழியிது தொடச்சிக்க" என்றான் ஆகாஷ்.

விகி, "இது வெக்கமா" என்று கேட்க

"போங்கடா" என்றான் சித்து.

"பொண்ணுங்க என்றாலே 10 அடி தள்ளி நிக்கிற நம ஹீரோ பொண்ணுங்க போலவே வெட்கபடுறானே. காலக் கொடுமடா" என்றான் கௌதம்.

அவர்கள் இவ்வாறு கூறியதும் சித்து, விகி ரவி முகிலைப் பார்க்க அவர்கள் ஒரு சேர "த்தூ.." என்றனர்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ சித்துவை தவிர மற்ற அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஒரு நிலைக்கு மேல் சித்து பொறுக்க முடியாமல் "நிறுத்துங்கடா" என கத்தினான்.

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: