Forum

தொலைவு 6  

  RSS

யஷ்தவி
(@yashdhavi)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 45
28/02/2020 12:31 pm  

சித்து கத்தும் போதே அவ்விடத்திற்கு காவ்யா, ரியா, இந்து வந்தனர்.

"சித்து என்னாச்சு?" என இந்து கேட்க,

"இல்லை டி அவன் அவனோட தேவதையைப் பார்த்தனாம்" என்று கூறி விட்டு மீண்டும் சிரித்தனர் அவனது ஐந்து நண்பர்களும்.

"போதும் டா என்னால் தாங்க முடியல்லை" என உடைந்த குரலில் கூறினான் சித்து.

இதை பார்த்து விட்டு "இதுல என்ன காமடி இருக்கு சும்மா சிரிச்சிட்டு இருக்கிங்க?" என சற்று கடுப்பாகவே மற்றவர்களைப் பார்த்துக் கேட்டாள் இந்து.

 

"நேத்து ராத்திரியே முகில் இவன் கிட்ட , அவனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணை பார்த்தால் என்ன பன்னுவன்னு கேட்டதற்கு, காதலும் வராது, எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணும் வர மாட்டான்னு சொல்லிட்டு , இப்போ ஒரு பொண்ண பார்த்து என்னோட தேவதைன்னு வந்து சொல்றான். இதுக்கு சிரிக்காமல் வேறென்ன பன்னுவாங்க?" என விகி கேட்டான்.

 

அனைவரும் அமைதியாக இருக்க, சிறிது நேரத்தின் பின்,

காவ்யா "மனசுன்னு சொல்கிறது எப்போ மாறும்னு யாருக்கும் சொல்ல முடியாது. அதுவும் காதல் விடயத்தில் சொல்லவே முடியாது. காதல் எப்போ எந்த நேரம் யாரு மேலே வரும்னு யாருக்கும் தெரியாது. அப்படி ஒருத்தர் மேல காதல் வந்ததுன்னா அந்த மனசை யாருக்காகவும் மாத்த முடியாது" என்று உணர்வு பூர்வமாக பேச மற்றவர்கள் அமைதியாய் கேட்டனர்.

 

ரியா, "இவன் இதுவரைக்கும் எந்த பொண்ணு கூடவும் நெருங்கி பழகினதும் இல்லை. எந்த பொண்ணையும் பிடிச்சிருக்குன்னு சொன்னதும் இல்லை. இன்னக்கி ஒரு பொண்ணை பார்த்திருக்கான். அவங்களை பிடிச்சிருக்கு. இதை நாங்க பிரன்சுன்னு தானே நமக்கிட்ட சொல்றான். அப்போ நாம தான் அவனோட உணர்வுகளை புரிஞ்சுகிட்டு அதுக்கு மதிப்பு கொடுக்கனும்." என்றாள்.

அனைவரும் அவர்கள் கூறுவதை புரிந்துக் கொண்டனர்.

 

"சொரி மச்சி நாங்க தப்பு பன்னிடோம் டா" என அனைவரும் சித்துவிடம் மன்னிப்பு கேட்டனர்.

"டேய் இந்த சென்டிமென்ட் எல்லாம் செட் ஆக இல்லை டா" என கூறிவிட்டு சிரித்தான் சித்து.

"நண்பேன்டா" என அனைவரும் ஒருசேரக் கூற, இதைக் கண்டு அவர்களது தலைவிகள் மனமாற புன்னகைத்து விட்டு 'இவர்களுடைய நட்பு என்றுமே மாறக் கூடாது' என்றும் பிராத்தித்தனர்.

"சரிடா இப்போ சொல்லு. அந்த பொண்ணு எப்படி இருந்தா? அவளை எங்கே எப்போ பார்த்த? பெயர் ஏதாவது தெரியுமா?" என கேள்விகளை தொடுத்துக் கொண்டு சென்றது நண்பர் கூட்டம்.

 

"பொறுமை பொறுமை பொறுமை பொறுமையோ பொறுமை" என்று சின்சானின் ஸ்டைலில் சித்து கூற மற்றவர்கள் இவனை முறைத்தனர்.

"எதுக்கு இவளோ அவசரபடுறிங்க?" என கூறிவிட்டு அவனே தொடர்ந்தான். மற்றவர்கள் ஆவலாய் கேட்க,

"நான் அவளை கோயிலில் தான் பார்த்தேன். நா அவளோட கண்ணை மட்டும் தான் பார்த்தேன், முகத்தை பார்க்கவே இல்லை" எனக் கூற அனைவரும் ருத்ரமூர்த்தியாக நின்றனர்.

"டேய் இதுக்கு தான் இவளோ பில்டப் பன்னியா" என ரவி எரிச்சலுடன் கேட்டான்.

 

"எனக்கு வருகிற கோவத்துக்கு இவனை நான் அடிச்சிருவன். கண்ணை மட்டும் பார்த்துட்டு அவளை அவனோட தேவதைன்னு சொல்றான்" என்று கடுப்புடன் கூறினான் முகில்.

"கொஞ்சம் பொறுங்க டா அவன் என்ன சொல்ல வாரான்னு முதலில் கேட்போம். நீ சொல்லு சித்து யேன் அவ முகத்த நீ பார்க்க இல்லை?" என இந்து கேட்க,

அச்சிறுவன் நின்றிருந்த முறையைப் பற்றி கூறினான் சித்து.

"வேறு எதையுமே நீ பார்க்க இல்லையா?" என காவ்யா கேட்டாள்.

 

"ஏய்" என அனைவரும் கோரசாக காவ்யாவை பார்தத்துக் கத்தினர்.

"அட எருமைகளா!!! நான் கேட்டது ஏதாவது அடையாளம் இருந்ததான்னு? நீங்க எல்லாரும் ரொம்ப கெட்டு போய்டிங்க டா. எப்போப் பாரு டபுல் மீனிங்கில் பேசிக்கிட்டு" என்றாள் சற்று காட்டமாக.

"எப்படி இந்த முகத்தில் மரு, உதட்டில் மச்சம் இப்படி ஏதாவதுன்னா" என்று நக்கலாக கேட்டான் விகி.

"காவ்யா நெஜமாவே அதை தான் கேட்டியா?" எனஆகாஷ் கேட்க,

"நெஜமாடா! கௌதம் மேல சத்தியமா" என்றாள் காவ்யா.

 

"அம்மா தாயே என்ன விட்டுடு. நான் இன்னும் என் வாழ்க்கையில் எந்த சுகத்தையுமே அனுபவிக்க இல்லை. ஒரு பொண்ண சரி கெரெக்ட் பன்ன இல்லை. என்ன இழுக்காத மா, நீ வேணுன்னா உன் ஆள் மேலே சத்தியம் பன்னிக்க" என்றான் கௌதம்.

விகி, "அப்போ நா எல்லா சுகத்தையும் அனுபவிச்சிட்டன்னு சொல்றியா?" என கேட்டுவிட்டு

'ஒரு முத்தம் கொடுங்குறதுக்கு நான் படும்பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த லட்சணத்துல எல்லாத்தையும் அனுபவிச்சிட்டனாம்' என மெதுவாக முணுமுணுத்தான்.

 

இது காவ்யாவிற்கு தெளிவாகவே கேட்டது. அவள் அவனை பார்வையாலேயே எரித்தாள்.

"உங்க ரொமேன்சை அப்பொறம் பாருங்க. இப்போ சித்துவோட பஞ்சாயத்த பாருங்க டா" என்றான் ரவி.

"காதல் பார்வைக்கும் இந்த ஜான்ஸி ராணியோட கொடூர பார்வைக்கும் வித்தியாசம் தெரியாதவனா இருக்கானே!!! கடவுளே அவனுக்கு நல்ல புத்தியை கொடு" என விகி மைன்ட் வொயிசில் பேசிக் கொண்டான்.

"அவனுக்கு நல்ல புத்தியை கொடுன்னு கேக்குறத விட்டுட்டு உனக்கு கேளுடா" என்றான் சித்து.

 

'நான் மைன்ட் வொயிசில் நினச்சது இவனுக்கு எப்படி தெரியும்?' என மிகப் பெரிய ஆராய்ச்சியில் இருந்தான்.

'எனக்கு எப்படி தெரியும் என யோசிக்கிறியா?' என சித்து கேட்க பூம்பூம் மாடு போல தலையை ஆட்டினான்.

"அட மட சாம்பராணியே மைன்ட் வொய்சின்னு நினச்சு வெளிப்படையாகவே பேசுற" என கூற மற்றவர்களோ அடுத்து நடக்கப்போவதை எண்ணி விழுந்து விழுந்து சிரித்தனர்.

அதாங்க நம்ம காவ்யா பத்ரகாளியாய் மாறி விகியை விரட்டி விரட்டி அடித்தாள்.

 

ஒரு வழியாய் அடித்துக் களைப்பானவள் மீண்டும் தனது எரிக்கும் பார்வையிலேயே விகியை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"பாவம் மச்சான் நீ உன் வாய் தான் உனக்கு சனி" என ரவி கூற மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

"டேய் அந்த பஞ்சாயத்தை விட்டுட்டு சித்துவோட பஞ்சாயத்துக்கு வாங்கடா" என்றான் முகில்.

சித்துவே ஆரம்பித்தான். "காவ்யா நீ கேட்டது போல. நான் அவளோட நீண்ட கூந்தலையும், அவள் அணிந்திருந்த சுடிதாரையுய் பார்த்தேன்" என சித்து கூறினான் சிரித்த முகமாக.

 

இதைக் கேட்டு அனைவரும் சித்துவை முறத்தனர்.

"எதுக்குடா என்னை எல்லோரும் அப்படி பார்க்குறிங்க? நான் இருக்கிற அளவிற்கு அவளை இந்த அளவு பார்த்ததே பெரிது" என்றான் நம ஹீரோ.

"அவ எப்போ வந்தான்னு எனக்கு தெரியாது. ஆனா என் முன்னாடி வந்ததும், என்னென்னவோ எனக்குள்ள நடந்திச்சு அதை என்னால் வார்த்தயால் சொல்ல முடியாது. பிறகு நான் கண்ண திறந்தேன் அவ மட்டும் தான் எனக்கு தெரிஞ்சா" என்றான்.

 

"புதுசா பைரவா படம் பார்த்தியாடா?" என ரவி இடையில் புகுந்து கேட்க,

"அவன் இப்போ தான் பீலிங்சோட பேசுறான் அதை கெடுக்க பார்குறியேடா" என்று காவ்யா, ரியா, இந்து ரவியை அடித்தனர்.

இதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க சித்துவே மீண்டும் தொடர்ந்தான்.

"அவளோட கண்ணு என் கிட்ட பேசினது போலவே தோனுச்சு. அப்போ அவ கண்ணு என்கிட்ட நா உனக்கு சொந்தம்னு சொல்லிச்சு. சாமி கும்பிடும் போது அவ கண்மனி அங்குமிங்கும் அசைந்தது. அது என் நெஞ்சில் ஆழமாக பதிஞ்சிருச்சு டா. அவ என் தேவதை டா" என உணர்வுபூர்வமாக பேசினான்.

 

மற்றவர்கள் அவனை வியப்பாய் பாரக்க,

"நானா இப்படியெல்லாம் பேசுறன்னு எனக்கே என்ன நினச்சா ஷொக்காக தான் இருக்கு. என்னை இப்படி எல்லாம் பேச வச்சிட்டாலே இந்த குள்ளகத்தரிக்கா" என சிரித்தான். அவனின் சிரிப்பில் கூட வித்தியாசம் இருப்பதாய் தோன்றியது அவர்களுக்கு.

"தேவதைன்னு சொல்றியே அவ என்ன அவளோ அழகா? அவளோ கலரா டா?" என ரவி கேட்டான்.

"இல்லை டா நான் தேவதைன்னு சொன்னது அத வச்சி கிடையாது. அவளோட முகத்தை பார்க்காமலேயே நா உனக்கு சொந்தமானவன்னு சொன்னது அவளோட கண்கள். எனக்கும் காதல் வரும்னு புரிய வச்சாது அவை. எனக்குள்ள இருக்குற ஆண்மகனை தட்டி எழுப்பினது அவ டா. என்னோட மீதி வாழ்கை அவளுக்காக தான்னு தோண வச்சதும் அவ தான். அதனால் அவ என்னோட தேவதை டா" என்றான்.

"அவள சந்தோஷமா௧ கண்தில் ஒரு சொட்டு கண்ணீர் வராமல் பார்த்துப்பேன்" என்றான் சித்து.

பிற் காலத்தில் அவளுடைய கண்ணீருக்கும் கஷ்டங்களுக்கும் தனே காரணமாக அமைவோம் என்று அறியாமல்.........

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: