Notifications

வஞ்சிக்கொடியின் வசீகரனே - 19 Precap  

  RSS

Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 275
30 May 2019 5:05 pm  

வஞ்சிக்கொடியின் வசீகரனே - 19 Precap

“ஒரு பெண்ணைத் தப்பா தான் பார்க்க தோணுச்சுனா அது எப்படி ட்ரஸ் பண்ணினாலும் தப்பா தான் பார்ப்பாங்க. சேலை காட்டினா கை சைட் ஓரம் எதுவும் தெரியாதா? சுடிதார் போட்டா துப்பாட்டா விலகாதானு கண்ணு தேட சொல்லும். அது எல்லாம் கண்ணியமான உடை தானே? அதிலும் விலகலை தேடினா அப்படித் தேடுறவன் தான் தப்பு! நீங்க போடுற உடைல தப்பு இல்லை. இதே தான் எல்லா ட்ரஸ்க்கும் பொருந்தும்.

இதே நான் உன்கிட்ட அப்படித் தேடினா அது உரிமை! அதுவும் உனக்குப் பிடிக்காத பட்சத்தில் மனைவியைக் கூட அப்படிப் பார்க்கிறது தப்பு தான்!
***
"பொண்டாட்டிக்கு விளக்கம் சொல்லறதை விட அப்படி என்ன முக்கியமான வேலை பார்க்க போறீங்க?" அவனின் கிண்டலை கேட்டு முறைத்துக் கொண்டே கேட்டாள்.

"அப்போ பொண்டாட்டிக்கு விளக்கம் சொல்றது தான் முக்கியமான வேலையா?"

"பின்ன? அது தான் பர்ஸ்ட். அதுவரைக்கும் மத்ததுக்கெல்லாம் ரெஸ்ட்...!"

"ரைமிங்கு? உனக்கு நக்கல் தாண்டி...!" என்றவன் அவளின் அருகில் சென்று கன்னத்தில் செல்லமாகக் கடித்து வைத்தான்.
**
மதிய உணவிற்குக் கடந்த வாரம் முழுவதும் இருவரும் சேர்ந்தே தான் சென்று கொண்டிருந்தனர்.

அன்று மதியமும் கணவன் அழைக்கவும் அலுவலக உணவகத்திற்குச் சென்ற பூர்ணா அங்கிருந்தவர்களைப் பார்த்து முகத்தைச் சுருக்கினாள்.

இன்று கணவனுடன் அவனின் நண்பர்கள் நால்வரும் அமர்ந்திருந்தனர்.

***

எபி நாளை...


Quote
(@rajeswari-d)
New Member
Joined: 9 months ago
Posts: 2
30 May 2019 5:25 pm  

super pa'


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: