இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Register with us by filling out the form below.
You need to log in to create posts and topics.

ஒளி 21

கையில் தாளையும் பேனாவையும் எடுத்தவன் ஒரு பத்திரிகையில கொடுத்த "விதவை" தலைப்பை பற்றி கவிதைகளை யோசிக்கலானான்,.....

" என்னடா பண்ற ? " தியாகு கேட்க
" மச்சி இந்த பத்திரிகையில ஒரு தலைப்பு ல கவிதை கேட்டிருக்காங்க அதான் எழுத போறேன்.."

" என்னாத.."
" கவிதை மச்சி."

" நீயாடா ? ."

" என்னா மச்சி நான் எல்லாம் எழுத கூடாதா ? என்னால எழுத முடியாதா ? சொல்லு மச்சி "

" எழுதுமச்சி கண்ட நாயெல்லாம் எழுதுகிறது(அவனைதான்)  அவனையே பார்த்து சொல்லி விட்டு நீ எழுதகூடாதாயென்ன எழுது எழுது." அவனை முறைத்தவன் யோசித்தான்.

" என்ன டாபிக் மச்சி."

" விதவை மச்சி.."
" உனக்குனே வருவானுங்களாடா "தியாகு கேட்க "

" பாரு மச்சி நம்மல புரட்சி மோட்லே வச்சிருக்காங்க. " என்றான்.

தலையில் அடித்தவன் அவன் வேலையை பார்க்க சென்றான்.

இங்கோ இருவரும் வீட்டிற்கு வர,தேவ்விடம் சொல்லிவைத்தாள் கோயிலில் நடந்தை பற்றி வாய் திறக்காதே என்று கூறி வந்தாள்..நம் தேவ் தான் ஓட்ட வாய் ஆயிற்றே.

இருவரும் உள்ளே." ப்பே" என்று கத்த இருவரும் பயந்தனர்.பேய் முழி முழித்தனர்.

" ஹாஹா அக்கா பயந்துடியா ? நாங்கதான்.." என்று கத்தினர்.அவர்களது சித்தாப்பாக்களின் பசங்கள்.

" ஆமாடா பேயே பயந்துண்டே,இப்படியாட பயமூற்றுவேள்." தேவ் கூற

" ஹாஹா பயந்தாங்கோழி." என்று அவன் கூறினான்.

சூரியநாரயாணனனுக்கு இரண்டு தம்பிகள்  ஒரு அக்கா..அக்காவிற்கு(மாலதி)
இரண்டுமகன்கள்.( ஹரிநாராயணன் மற்றும் வெங்கடநாராயணன்) மாலதியின் கணவன் கேசவன்..கேசவன் திருப்பூரில் பிரபலமான துணிகடை வைத்திருக்கிறார்.ஹரி நாராயணன் அதை பார்த்துக்கொண்டுருக்கிறான்.
ஹரிநாரயாணன் மனைவி யாழினி வீட்டரசி.வெங்கட் டாக்டர் படித்துக்கொண்டிருக்கிறான்,.காயூ இவனுக்கும் ஒரே வயது.

முதல் தம்பி சந்திர நாராயணன் மனைவி லட்சுமி ஒரு மகன்(அஸ்வந்த் நாராயணன்) ஒரு மகள் (அஸ்விதா நாராயணன் ) சந்திர நாராயணனும் டாக்டர் தான்.பெங்களூரில் பெரிய மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.வீட்டரசிதான் லட்சுமி அஸ்வந்த்  ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.அஸ்விதா ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.

இரண்டாவது தம்பி (சங்கர நாராயணன்) மனைவி அனிதா ஒரே மகன்( யஷ்வந்த் நாராயணன்)  யஷ்வந்த் lkg தான் படிக்கிறான்.

அழகான குடும்பம் தான் சரஸ்வதி பாட்டி தேர்வாச்சே,தப்பாகுமா.
அனைவரும் இந்த காலத்திற்கு ஏற்றார்போல் வாழ்பவர்கள்.மருமகனும் மருமகளும் சரஸ்  பாட்டிக்கு கிடைத்த வரன்கள்.இதில் வாய் நீழுவதோ மாலதி மட்டும் தான்.அவர்தான் பழயை பஞ்சாகங்கம் பேசுபவர்.ஜாதகத்தையும் நம்பி வாழ்பவர்.

" ஹேய் வந்த் செல்லம்  விதா குட்டி எப்ப வந்தீங்க என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே.

" கீழே அவளது சேலை பிடித்து இழுதான் யஷ்வந்து.அவள் காண..தூக்கு என்பதுபோல நின்றவனை தூக்கினாள்.யஷ் கூட்டி முத்தம் வைத்தாள் கண்ணத்தில்.

" எப்படா வந்தீங்க... " தேவ் கேட்க
" இப்ப தான்கா வந்தோம். " விதா கூற...உள்ளே வந்தாள் அவர்களோடே எல்லாரையும் வரவேற்று நலம் பாசம் எல்லாம் கொட்டி முடித்தனர்.

" என்னடா காயூ வேலைக்கு போறியாமா ? "  என்று கேட்டார் சந்திரபா " ஆமாம் பா போயிட்டுருக்கேன்."

" எப்படிடா இருக்கு ?"
" நல்லா போகுதுப்பா,நல்ல மனுசங்க அங்க எல்லாருமே.."

" சரிடாம எப்பையும் சிரிந்துண்டே சந்தோசமா இருடா." சரிபா...

" தேவ் உனக்கு எப்படி இருக்கு காலேஜ்..." இப்போ சங்கர்பா கேட்க..

" போப்பா அதெல்லாம் காலேஜா ?நல்லாவே இல்லை, என்றாள். ஏன்டா ?" " எப்ப பாரு படிபடி சொல்லிண்டே இருக்கானுங்க பா.பள்ளி தான் அப்படினா கல்லூரியும் அப்படிதான் இருக்கு...டெஸ்ட் வைக்கிறாங்க பா,டெஸ்ட் நோட்தான் இல்லை.யூனிபார்ம் இல்லை இருந்திருந்தா அது பள்ளியே தான்."

" நீ படத்துல வர மாதிரி தான் காலேஜ் நினைச்சுட்டு போயிருப்ப தேவ்,அவங்க வகுப்பறையே காட்டமாட்டானுங்க.வெளிய உட்காரது புக் எடுத்துட்டு போறதாகவே காட்டிருப்பாங்க நீயும் அப்படிதானு நினைச்சுருப்ப சரியா "  லட்சுமி கூற

" லட்சுமா நீ சரியா சொன்ன.அவ அந்த நினைப்பில காலேஜ் வர " காயூ கூற

அவர்களை முறைக்க... " எதுக்குபா தேவ் கலாய்கிறீங்க..இதுல எங்க தப்பு என்ன இருக்கு சினிமாகாரன் காமித்தால் அதற்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்.அவன் இப்படிதான் காலேஜ்னு அபட்டமா சொல்லிருக்கனும்.அப்படி சொல்லாம மேலோட்டாம சொன்னா.பாவம் குழந்தை ஏமாந்துட்டு." என்றார் அ" அப்படி சொல்லு அனி மா. " அவளை . கட்டிக்கொண்டாள் தேவ்.

பாட்டி வந்தவள்.தேவ்வை அடித்தார்." மேய்கிறது எருமை இதுலா பெருமை வேற " அவர் கூற
" என்ன இந்த அப்பாவி ஜிவன கலாய்கிறீங்க....எனக்கும் காலம் வரும் நானும் கலாய்பேன்.."
" ஆமா சரஸ் உன் மூத்த பொண்ண காணவில்லை "

" வருவா டி.நாளைக்கு "
" ஒ வரட்டும் வரட்டும்.."

" அக்கா, வாக்கா வெளிய போலாம் எங்கையாவது வெளிய போலாம்." என்றனர்.

" ஆமா நம்ம யஷ்குட்டிக்கு நாளைக்கு பிறந்தநாள் அவனுக்காக சாப்பிங்போலாம் என்று அன்று முழுவதும் குடும்பமே அலைந்தது பின்மாலை ஆகிட.

வந்து, விதா, தேவ்,காயூ நால்வரும் பீச்சிற்க்கு வந்தனர்.

ஆடை தழுவிச்செல்லும் உப்புக்காற்றும்
தென்றல் தான் பிடித்தவருடன்  கைபிடித்து நடக்கையில் ,சிலரின் நினைவை பிடித்து நடக்கையில்,சிலரை மறக்க நினைத்து நடக்கையில் தோள் தரும் தோழனே அக்கடல்.அடித்து முந்திச்செல்ல அலைகளுக்கு யார்தான் போட்டிகளிட்டனரோ கரைத்தொட்டு கடலுள்ளே செல்கிறதே.

கடலலை காற்று அவளின் கனத்த மனதையும் கனமில்லாது இறகாக்கியது..சிறிது நேரம் அவர்களுடன் கடலில் கரையில் அலைகளுடன் விளையாடினாள்.

அவள் பாதம் தீண்ட முந்தும் அலைகளைவிட கரைமண்ணே அவளின் பாதம் சேர்ந்து கர்வம் கொண்டது..

பின் அவர்கள் விளையாட வேடிக்கை பார்த்து வந்து மணலில் அமர,நினைவு கொக்கி ஒன்று இதயத்தில் மாட்டியது.இன்று ஜானி கூறியது அதையே யோசித்தாள்.

தன்னருகில் ஒருநபர் அமர்வதை கூட கவனிக்காது யோசனை கலைத்தான்சக்தி.

" அப்படி என்ன யோசனை மாமி  " என்று கேட்க.அவள் சற்று பயந்தே விட்டாள்." ஹேய் நான் தான் ரிலாக்ஸ்"  சக்தி கூற

" நீங்களா சாமி நான் யாரோ நினைத்துடேன்."

" என்ன யோசனை மாமி நான் வந்தது கூட தெரியாம."

" அப்படிலாம் எதுவுமில்லை சாமி...சும்மா கடலை பார்த்தேன்.

" நம்பிடேன்  " 

நன்றி.

எதுக்கு ?,

நம்பினதுக்கு.." பார்ரா...
ஆமா யாரோட வந்த நீ.."  அவன் கேட்டிட

" நானா இதோ விளையாடுதுங்கள அவங்க கூட தான்  " தேவ் விதா வந்தை காட்டினாள்.

" ஆமா நீங்க ? "

" நான் விக்னேஷ்ஷோட தான் வந்தேன் காதலிய பார்த்ததும் பிரண்டா கழட்டிவிட்டான்.அதான் இங்க கொஞ்சம் காத்துவாங்களாமேன்னு."

" நீங்களும் காதலித்திருந்தா இப்ப தனியா வர வந்திருக்க மாட்டிங்கள தனியா உட்கார்ந்து இருக்கவும் மாட்டிங்க..."

" நான் தனியா தான் வந்தேன்.ஆன உன்கூட தானே உட்கார்ந்து இருக்கேன் "
மெல்லியதாய் சிரித்தாள்..

" கடற்கரை காதலர்களுக்கு மட்டுமா என்ன?"

" சரிதான் " என்று தலையை ஆட்டினாள்.அப்போது அவளை பார்த்தவன் அவளுக்கேற்றார் போல் அழகான சல்வாரில் ஷாலை அழகாய் வயிற்றுக்கு மேல்வரை பெரியதாய் விரித்திருத்தாள்,தன் ஜடையை முன்னாள் போட்டிருக்க அது அவள் மடியை  துயில் கொண்டிருக்க.காற்றில் முன்னால் சிறு கண்களை தாண்டி கண்ணத்தை தொடும் முடிகள்,அழகாய் யாரும் ஈர்க்கும் வண்ணமிருந்தது.

" சேலையில பெரிய பொண்ணாட்டம்.இருந்த இப்ப சல்வாரில் சின்ன பொண்ணா இருக்க "  அதற்கு மெல்லியதாய் சிரித்தாள்.அந்த சிரிப்பை பதியவைத்துக்கொண்டான் " நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலசாமி."

அது...

" சொல்ல இஷ்டமில்லைன்னா விடுங்க  " 
" இல்லை சொல்லுகிறேன்."

" என் அக்கா ஸ்வாதி கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு...இரண்டு வருசத்துக்கு முன்னாடி கணவர் இறந்துடார்.அதனால் அவ எங்கவீட்டுல தான் இருக்கா.அவளுக்கு எங்களை தவிர யாரையும் தெரியாது.மாப்பிள்ளை சொந்தம் சொல்லிக்க யாருமில்லை.அதுனால யாருமில்லை . எங்களோடுதான் இருக்கிறாள்.
நான் கல்யாணம் பண்ணிகிட்டு வந்தா. என் மனைவி என் அக்காவையும் அவன் பொண்ணையும் ஏத்துபான்னு என்ன நிச்சயம்.பொதுவா கல்யாணம் ஆன  பெண்கள் தனி குடித்தனம் சொல்லி அம்மாவையும் அப்பாவையும் பிரிச்சு தனியால கூட்டிட்டு போறாங்க இதுல அக்கா இருந்தா அவ்வளவு தான் அதான் பண்ணிக்கலை  " 

" எல்லா பெண்களும் அப்படிதானா ? சாமி " என்றாள்.

" இல்லை. ஆனால் பயம்..."

" நீங்கள் பார்க்கிற பெண்களிடத்தில் இந்த கண்டிசனை முன்வைத்தால்,யாரு சரின்னு சொல்லுகிறார்களோ கல்யாணம் செய்யுங்கள்..."

" சரிதான்.ஆன,சரின்னு சொல்லிட்டு பின்னாடி மாறிவிட்டார்களா என்ன பண்ண... "
" அவ்வாறு சூழ்நிலை வரமா நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.."

" இது நல்லாருக்கே..
ஏன் உங்களுக்கு தெரிய வேண்டாமா வீட்டில் எவ்வாறு எல்லாரையும் பொறுத்துக்கொண்டு போக வேண்டும் என்று .அப்படி சொல்லி கொடுத்து வளர்க்க வில்லையா..ஏன் குடும்பத்தை பிரிக்கிறீங்க.." என்று சக்தியின் ஆதங்கத்தை வைத்தான்..

" வீட்டிற்கு வர பெண் இது தான் வீடு தன் சொந்தம் பந்தம் தான் அன்னை தந்தை போலவே எண்ணினால் எதற்கு பிரிவும் சரி முதியோர் இல்லம் ஏன் இருக்க போகிறது.... "