இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Register with us by filling out the form below.
You need to log in to create posts and topics.

தொலைவு 50

மற்றவர்கள் சஞ்சு அனுபவித்த கஷ்டத்தை எண்ணி கண்ணீர் வடித்தனர். சித்து அவள் அருகில் சென்று அமர்ந்து கைகளை பிடித்து மானசீகமாக மன்னிப்பு கேட்டான். சித்து ஒரு முடிவு எடுத்து எழுந்து நண்பர்கள் அருகில் வந்தான்.

"மச்சான் இதுக்கு மேலேயும் அம்மு கஷ்டபட கூடாது டா. அவ அவளோட காதலை விட என் காதல் மேலே அதிகம் நம்பிக்கை வச்சிருக்கா. அதை நான் காப்பத்தனும் டா. என்ன நடந்தாலும் சரி குறிச்ச தேதியில் எனக்கும் அம்முவுக்கும் நிச்சயமா கல்யாணம் நடக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை. பட் எந்த காரணம் கொண்டும் ஜானகிக்கும், அம்முவிற்கும் எங்க எல்லோருக்கும் உண்மை தெரியும் அப்படின்றது தெரிய கூடாது. முக்கியமா ஜானகிக்கு நம்ம மேலே எந்த சந்தேகமும் வர கூடாது.

நான் அம்முவை கல்யாணம் பன்கிற வரைக்கும் அவள் என் கண்பார்வைக்கு உள்ள தான் இருக்கனும். ஆனால், அது எப்படின்னு தான் தெரியல்லை. அவளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் நாம வொச் பன்னனும். இப்போ நாம எல்லாரும் அம்மு கூட எப்படி இருக்கமோ அதே போல கல்யாணம் வரைக்கும் இருக்கனும். யாரும் அவ கூட பேச வேணாம். இப்போ இவளை கல்யாணம் பன்றதுக்கு என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு" என்றான் சித்து.

மற்றவர்கள் "என்ன?" என்க, தன் திட்டம் முழுவதையும் கூறினான் நம் அம்முவின் தரண்.

"நாம மட்டும் எல்லாதையும் சரியா செஞ்சோம்னா நம்ம மேலே யாருக்கும் டவுட் வராது. கல்யாணமும் நல்ல படியா நடக்கும். திரும்பவும் சொல்றேன் எல்லாரும் ஜாக்கரதையா இருக்கனும். ஜானகி கிட்ட ரொம்ப ஜாக்கரதையாக இருக்கனும்" என்றான்.

சக்தி "சித்து நீ சொல்கிறது சரி தான் பட் சஞ்சுவை நினைத்தால் தான் பயமா இருக்கு, உன் கையில் தான் நம்ம பிளேனோட 60% இருக்கு. சொ கவனமா இரு" என்றான்.

"சஞ்சுவைப் பற்றி கவலை பட வேண்டாம்" என்றான் சித்து புன்னகைத்துக் கொண்டே.

"டோன்ட் வொரி  சித்து நாங்க எல்லோரும் உனக்கு சபோர்டா இருக்கோம்" என்றாள் ரியா.

அஞ்சு "என் சஞ்சுவிற்கு நல்ல வாழ்க்கை அமைய நீங்க என்ன சொன்னாலும் நான் பண்ண தயாராக இருக்கேன்" என்றாள்.

ஷாலு "சித்தார்த் நீங்க சஞ்சு கூடவே எப்படி இருக்க முடியும்? அவ தான் மாமா வீட்டில் இருக்காளே" என்று கேட்க,

"எனக்கு அந்த கடவுள் மேலே நம்பிக்கை இருக்கு. எனக்கு சரியான ஒரு வழியை காட்டுவாறுன்னு" என்றான் உறுதியாக.

அப்போது கோயிலின் மணி அடித்தது.

அம்முவைச் சென்று சக்தி எழுப்பினான். சஞ்சு "சக்தி நான் எப்போ இங்க தூங்கினேன்" என்று வினவ,

"நான் ஷானு கூட பேச போனேன், அதான் உன்னை இங்க தூங்க வச்சேன்" என்றான் சமாளிக்கும் விதமாக. அவளும் நம்பி, அவனுடன் சென்றாள்.

மற்றவர்கள் வழமைப் போல் நடந்துக் கொண்டனர்.

கார்த்திக் "சித்து இன்னும் இரண்டு நாளில் நீயும் குடும்பஸ்தனாக போற" என்று கூற சஞ்சு தலைவலிப்பதாக கூறி வீட்டிற்குச் சென்றாள். மற்றவர்கள் மௌனமாக சிரித்தனர்.

மற்றவர்களும் தாம் என்ன செய்ய வேண்டும் என்று பேசி, தத்தமது வீட்டை அடைந்தனர். அஞ்சுவின் வீட்டில் ஆண்கள் பகல் உணவை உண்ணும் போது வேலன்,

"மாப்பிள்ளை கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு, நம்ம சொந்தக்காரங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்க. அது மட்டும் இல்லை பொண்ணும், மாப்பிள்ளையும் பார்த்துக்கக் கூடாது. நீங்க தப்பா நினைக்காமல் என் அண்ணன் வீட்டில் தங்கிக்கிறிங்களா? "என்று தயங்கிக் கேட்டார்.

இதைக் கேட்டு மனதில் குத்தாட்டம் போட்டு, கடவுளுக்கு நன்றியும் சொன்னான் நம் நாயகன்.

"சரி மாமா" என்றான்.

"உங்களுக்கும், உங்க பிரன்சுக்கும் அங்கே எந்த குறையும் இருக்காது" என்றார்.

காவ்யா "அங்கிள் இன்னக்கே கிளம்பனுமா?" என்று கேட்க,

"ஆமா மா" என்றார் தயங்கியே.

நண்பர்களுக்கு ஏகக் குஷி.

"சரி அங்கிள், நீங்க யோசிக்காதிங்க. நாங்க யாரும் எதையும் தப்பா நினைச்சுக்க மாட்டோம்" என்றாள் இந்து.

சிறிது நேரத்தில் சஞ்சு இருக்கும் வீட்டிற்குச் செல்ல அனைவரும் தயாராகி வந்தனர். ஜானகியோ எதுவும் செய்ய முடியாத நிலையில் கோபமாக அனைவரையும் பார்த்தாள். இந்து, ரியா அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தனர். கார்த்திக்கிற்கு மாத்திரம் தன்னவளை விட்டு தூரமாகச் செல்வது கடினமாக இருந்தது. சித்து அஞ்சலியிடம் இங்கு நடப்பவற்றை தெரிந்துக் கொள்வதற்காக அஞ்சலியை இங்கு தங்கக் கூறியதால் அவளை அங்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்று வருந்தினான் கார்த்திக்.

அஞ்சலியே அவர்களை அமுதாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல, சித்து மாப்பிள்ளை என்பதால் அமோக வரவேற்பு கிடைத்தது. உள்ளே தத்தமது அறைகளுக்குச் சென்று பொருட்களை வைத்து, சக்தியைக் காணச் சென்றனர். சக்தியின் மடியில் சஞ்சு படுத்து கதை பேசிக் கொண்டு இருந்தாள்.

"ஷாலு என்னை எதுக்கு இப்போ முறைக்குற? உன் ஆளுக்கு ரொமேன்ஸ் பன்ன தெரியல்லன்னா நான் என்ன பன்னுவேன்" என்றாள் சஞ்சு அப்பாவியாக.

"நீ என் ஆள் மடியில் படுத்துட்டு இருந்தன்னா அவன் எப்படி டி வருவான்?" என்றாள் ஷாலு.

"நான் மட்டும் அவன் மடியில் படுக்கல்லன்னா இவரு உன் கூட குடும்பம் நடத்தி பத்தே மாசத்துல கையில் குழந்தையோட வந்து நிக்க வச்சிருவான் பாரு" என்றாள் சஞ்சு சலித்துக் கொண்டே.

"யேன்டி உன் அன்னி கிட்ட தான் பேசுற, அது ஞாபகம் இருக்கா டி"  என்று ஷாலு கேட்டாள்.

"அட போ ஷாலு உனக்கு இவளோ மரியாதை கொடுக்குறதே பெரிசு" என்றாள் சஞ்சு.

"எதுக்கு சஞ்சனா நீங்க சக்தியோட மடியில் எப்போவும் படுத்திருக்கிங்க?" என்று இந்து வந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் வந்தனர்.

அவள் சிரித்து அவனை இடுப்போடு கட்டிக் கொண்டு,

"இவன் மடியில் படுத்தால் என் அம்மா மடியில் படுத்த மாதரி ஒரு பீல்" என்றாள் சக்தியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே.

ரியா "உங்க அம்மா தான் வீட்டில் இருக்காங்களே" என்றாள்.

சஞ்சு எதுவும் பேசாமல் எழுந்துச் செல்ல "சஞ்சு என்ன நடந்தாலும் தைரியமா பேஸ் பன்னனும்னு நீ தானே சொன்ன. இப்போ நீயே பயந்து போற" என்றான் சக்தி.

அவள் அப்போதும் அமைதியாக இருக்க, "சஞ்சனா இங்கே வந்து உட்காரு" என்ற சக்தியின் அதட்டலில் வந்து அமர்ந்தாள்.

சக்தி "கேள்விக்கு பதில் சொல்லு" என்றான்.

அவனை அவள் பாவமாக பார்க்க, அவன் கண்களாலே பதில் கூறு என்றான். அவள் கூற ஆரம்பிக்க அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தது. அஞ்சலிக்கு சக்தி கண்களால் சைகை காட்ட அவள் அருகில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி. பின் அவள் கைகளுடன் சஞ்சுவின் கைகளை கோர்க்க, சஞ்சு அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

சக்தி "சஞ்சுவும் அஞ்சுவும் டிவின்ஸ் இல்லை. இவங்க இரண்டு பேரோட அம்மா, அப்பா இரண்டு பேருமே வேறு வேறு ஆளுங்க" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

யஷ்தவி.

Pls update next soon I'm waiting 😕